Friday, 28 February 2014

நயன்தாராவுக்கும் காஜல் அகர்வாலுக்கும் உச்சக்கட்டத்தில் சண்டை..?



நயன்தாராவுக்கும் காஜல் அகர்வாலுக்கும் சண்டை உச்சக்கட்டத்தில் நிற்பதாக கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சு. இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நண்பேன்டா படத்தை நயன்தாரா தட்டிப் பறித்ததுதான். இவருக்கு முன்பு அப்படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் வாங்கியிருந்தவர் காஜல்தான்.

கடைசி நேரத்தில் அவர் கழற்றிவிடப்பட்டதற்கு என்ன காரணம் என்று புரிந்து கொள்ள முடியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கான விடை அரசல் புரசலாக தெரிந்து விட்டது. அதுவும் உதயநிதி வாயிலிருந்தே. எங்கேயோ இதற்காக அவர் விளக்கம் கொடுக்கப் போய், அது மெல்ல கசிந்து நம் காதுவரை நீண்டு விட்டது.

பொதுவாக உதயநிதி ஷை டைப். 100 க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நிற்க, அவர்களுக்கு முன்னால் அவர் நடிப்பதே பெரிய விஷயம். அதற்கு அவர் தன்னை ட்யூன் செய்வதற்குள் இரண்டு படங்கள் திரைக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. எல்லாரும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் போது நடிப்பது பெரிய விஷயம்.

 இந்த நேரத்தில் தமிழ் தெரியாத நடிகையை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவருக்கும் பிராம்ப்டிங் கொடுத்தால் இவர் எங்கே தனக்கு கொடுக்கப்பட்ட டயலாக்கை உருப்படியாக பேசி நடிப்பது? இந்த அவஸ்தை அவருக்கு முதல் படமான ஓ.கே ஓ.கே வில் இருந்ததாம். கஷ்டப்பட்டு டயலாக்கை மனப்பாடம் செய்து கொண்டு வந்து கேமிரா முன்பு நின்றால் ஹன்சிகாவுக்கு ஓங்கி பிராம்ப்டிங் கொடுப்பார்களாம். அதில் இவர் தனது டயலாக்கை மறந்துவிடுவாராம்.

ஆனால் இது கதிர்வேலன் காதல் படத்தில் அந்த அவஸ்தையே அவருக்கு இல்லையாம். காரணம்? நயன்தாராவுக்கு மிக அருமையாக தமிழ் பேச தெரியும். எவ்வித இடையூறும் இல்லாமல் நடித்தாராம் உதயநிதி. படப்பிடிப்பு ஓ.கே.ஓ.கே வுக்கு எடுத்துக் கொண்டது போல இழுக்காமல் சுருக்கென முடிந்ததற்கு காரணமும் நயன்தாராவின் தமிழ்தானாம். இப்படி ஒரு அருமையான நடிகையை, அதுவும் தமிழ் தெரிந்த நடிகையை பக்கத்தில் வைத்துக் கொண்டு எதற்காக தமிழே தெரியாத காஜலையும் ஹன்சிகாவையும் வைத்துக் கொண்டு போராட வேண்டும் என்று நினைத்தாராம் உதயநிதி.

ஆக உதயநிதி படத்தில் காஜல் நடிக்காமல் போனதற்கு காரணம், தமிழ்தானே தவிர, உதயநிதி அல்ல. வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ்.

0 comments:

Post a Comment