Friday, 7 February 2014

புலிவால் - திரைவிமர்சனம்..!



விமல், அனன்யா, சூரி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மேனனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வருகின்றனர்.

மறுமுனையில் பெரிய தொழிலதிபரான பிரசன்னா, அவருடைய கம்பெனியில் வேலை செய்யும் ஓவியாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறார். பெண்களை ஏமாற்றி திரியும் பிரச்சன்னாவின் குணாதிசயம் தெரியாமலேயே அவருடன் நெருங்கி பழகி வருகிறார் ஓவியா.

இந்நிலையில், பிரசன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்றனர். அதன்படி இனியாவை பேசி முடிக்கின்றனர். இந்த வேளையில் ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்து அவளுடன் நெருக்கமாக இருக்கிறார் பிரசன்னா. இதை தன்னுடைய செல்போனில் படம் பிடித்தும் வைத்துக் கொள்கிறார்.

பின்னர், ஓவியாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இனியாவைப் பார்க்கச் செல்கிறார் பிரசன்னா. அப்போது டிரைவர் மூலமாக பிரசன்னாவுக்கு இனியாவுடன் நிச்சயதார்த்தம் ஆன விஷயம் ஓவியாவுக்கு தெரியவர, பிரசன்னாவை போனில் அழைக்கிறாள். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறும் அவள், தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இருவருக்குமுள்ள உறவை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறாள்.

பயந்துபோன பிரசன்னா ஓவியாவை சந்திக்க விரைந்து வருகிறான். இருவரும் காபி ஷாப்பில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இறுதியில் பிரசன்னா, ஓவியாவிடம் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை காண்பிக்க அதன்பிறகு அமைதியாகிறார் ஓவியா. பிரசன்னாவிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்றுவிடுகிறார்.

பிரசன்னாவும் கோபத்தில் எழுந்துபோக, அவருடைய செல்போன் அங்கேயே விழுந்துவிடுகிறது. இந்நிலையில், அங்கு வரும் விமல் அந்த செல்போனை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஓவியாவும், பிரசன்னாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் அந்த செல்போனில் இருப்பதால் அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிரமாக தேடி வருகிறார் பிரசன்னா. இறுதியில், விமல்தான் அதை எடுத்தவர் என்று தெரியவர, விமலும் அதைக் கொடுக்க வருவதாகக் கூறிவிட்டு, கமலா தியேட்டருக்கு வருகிறார்.

 ஆனால், பிரசன்னாவிடம் அதைக் கொடுக்காமலேயே திரும்பி விடுகிறார்.
ஒரு கட்டத்தில் செல்போனில் சார்ஜ் இறங்கிவிட, அதை சார்ஜ் செய்வதற்காக தன்னுடைய நண்பன் கடைக்கு செல்கிறார் விமல். அங்கு தனது நண்பனிடம் செல்போனை கொடுக்கிறார். அவர் செல்போனில் இருக்கும் வீடியோவை பார்த்து, அதை யூடியூப்பில் அப்லோடு செய்துவிடுகிறார். இதனால் அவமானம் தாங்க முடியாத ஓவியா தற்கொலைக்கு முயல்கிறார். பிரசன்னாவின் திருமணமும் தடைபட்டு விடுகிறது.

இறுதியில் ஓவியாவும், பிரசன்னாவும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

விமல் வழக்கம்போல் எல்லா படங்களிலும் வருவதுபோல் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் வலம் வருகிறார். இவரது முகபாவணையை பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு சலிப்படைந்து விட்டது. இனிமேலாவது இவரது நடிப்பை மாற்றிக் கொண்டால் ரசிக்கலாம். அந்த அளவுக்கு இந்த படத்தில் சொதப்பியிருக்கிறார்.

பிரசன்னா தன்னுடைய கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார். ஓவியா, இனியா, அனன்யா என படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், இவர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. அனைவருடைய கதாபாத்திரத்தையும் வீணடித்திருக்கிறார்கள். ஓவியாவை கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சூரி, தம்பி ராமையா என காமெடி ஜாம்பவான்கள் இருந்தும் படத்தில் காமெடிக்கு பஞ்சமே. மொபைலில் வரும் பஞ்ச் டயலாக்குகளையே காமெடி என்ற பெயரில் பேசி சூரி கடுப்பேத்தியிருக்கிறார். வழக்கம்போல், இவர் தனி டிராக்கில் காமெடி செய்திருந்தாலாவது ரசித்திருக்கலாம்.

செல்போன் என்பது இப்போது எல்லோருடைய வாழ்க்கையிலும் அன்றாட தேவையான ஒன்றாக மாறிவிட்டது. அதை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவை இயக்குனர் இப்படத்தில் சொல்லியிருக்கிறார். இந்த கதையை சொல்ல 15 நிமிட காட்சிகளே போதுமானது. ஆனால், 2 மணி நேரம் படத்தை ஓட்டுவதற்காக காட்சிகளை இழுஇழுவென்று வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். இயக்குனர் சொல்ல வந்த விஷயம் நல்லதாக இருந்தாலும் அதை ரசிக்கும்படியாக வைப்பதில் கோட்டை விட்டிருக்கிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். போஜன் கே.தினேஷ் ஒளிப்பதிவு படத்திற்கு சிறிது வலு சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘புலிவால்’ மொட்ட வால்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க எந்த திட்டமும் இல்லை..!



சென்ற ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவில் 88.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

இதையடுத்து மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மூன்று முறை உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் தங்கத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்தது.

அரசின் இந்த நடவடிக்கைகளால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது 50 பில்லியன் டாலராக குறைந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிதி அமைச்சகத்திற்கு தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த நிதியாண்டின் (மார்ச்) இறுதிக்குள் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடப்பு கணக்கு பற்றாக்குறை இப்போது இருக்கும் அளவில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைப்பது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என நிதித்துறை இணை மந்திரி ஜெ.டி. சீலம் மக்களவையில் தெரிவித்தார்.

டிரெண்ட் மாறிய காமெடி இயக்குனர்...!



கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களுக்கு பல படங்களில் காமெடி காட்சிகள் எழுதியவர் எஸ்.பி.ராஜ்குமார். அவர் இயக்கும் புதிய படம் பாக்கணும் போல இருக்கு.

இதுபற்றி அவர் கூறியதாவது: காமெடி காட்சிகள் என்னை பெரிய அளவில் பேச வைத்திருந்தாலும் விஜய் நடித்த சுறா படத்தை இயக்கிய போது இன்னும் அதிகளவில் என்னை அடையாளம் காட்டிக் கொள்ள முடிந்தது. பொன்மனம், என் புருசன் குழந்தை மாதிரி, கார்மேகம் ஆகிய படங்களையும் இயக்கினேன்.

 கவுண்டமணி, செந்தில், வடிவேலு என 3 பேருக்கும் காமெடி எழுதிய போது வெவ்வேறு பாணியை பின்பற்ற வேண்டி இருந்தது. இப்போது வரும் படங்களில் காமெடி டிரெண்ட் முற்றிலும் மாறிவிட்டது.

அதை மனதில் நிறுத்தித் தான் பாக்கணும் போல இருக்கு படத்தின் ஸ்கிரிப்ட் அமைத்திருக்கிறேன். லைட்டா ஒரு காதல் வெயிட்டா ஒரு காமெடி என்ற பாணியில் இது படமாகி உள்ளது.

 பரதன் ஹீரோ. கீத்திகா ஹீரோயின். சூரி, கஞ்சா கருப்பு பிளாக் பாண்டி, முத்துக்காளை, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருள்தேவ் இசையில் பவதாரிணி, ஹரிஹரன், கார்த்தி, சைந்தவி 6 பாடல்கள் பாடி உள்ளனர். துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

சூது கவ்வும் குழுவின் அடுத்த படம் ‘தெகிடி’ -மினி ஆல்பம்..!



புதுமுக இயக்குனர்களை வைத்து பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார்.

இந்த இரண்டு படங்களும் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் படங்கள் வெற்றி பெற்று மக்களிடையே பேசப்பட்டது.இதையடுத்து இவர் தற்போது ‘தெகிடி’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

சூது கவ்வும் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தினேஷ், எடிட்டராக வேலை செய்த லியோ ஜான் பால் மற்றும் நடிகர் அசோக் செல்வன் ஆகியோர் இந்த படத்தில் இணைகின்றனர்.

அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக நடித்தவர். இவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க பி.ரமேஷ் இயக்குகிறார்.

சூர்யா மீது கோபமா..? சமந்தா ஷாக்..!



என்னைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள் என்று ஆவேசமாக கூறினார் சமந்தா. சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார் சமந்தா. தோல் அலர்ஜியால் பாதிப்பு, படங்களில் இருந்து நீக்கம், சித்தார்த்துடன் காதல், டோலிவுட் நடிகர் மகேஷ்பாபு பட போஸ்டர் விவகாரத்தில் தலையிட்டு கண்டனம் தெரிவித்தது என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

அதே பாணியில் சூர்யாவுடன் நடிக்கும் அஞ்சான் படம் தொடர்பாகவும் அவரை பற்றி இணையதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்பட்டதில் சமந்தாவின் படங்கள் இடம் பெறவில்லை. இதையடுத்து அவர் கோபம் அடைந்து பேசி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசு பரவியது. இதையறிந்த சமந்தா ஷாக் ஆனார்.

இதுபற்றி அவர் கூறும்போது, சமீபத்தில் அஞ்சான் படம் சம்பந்தமாக நான் கோபம் அடைந்ததாக கிசுகிசுக்கள் வெளிவருகிறது. அது யாரோ கிளப்பிவிடும் வதந்திதான். எந்தவொரு விஷயம்பற்றி நான் பேட்டி அளித்தாலும் அதுதொடர்பாக எனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துவிடுவேன். அஞ்சான் பற்றி நான் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. டுவிட்டரிலும் அதுபற்றி குறிப்பிடவில்லை என்றார்.

இது தொடரக் கூடாது டாக்டர்..! - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!



ஒரு மருத்துவ நண்பரையும் அவருடைய மனைவியையும் சமீபத்தில் சந்தித்தேன். பாலி தீவுக்குச் சென்று வந்ததாகவும் செலவை ஒரு மருந்துத் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்கள்.

இப்போதெல்லாம் இதுதானே வழக்கம்?” என்று அந்த மருத்துவர் உணர்ச்சி ஏதுமில்லாமல் தெரிவித்தார். “அந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த நிறுவனம் இப்படி மருத்துவர் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா அனுப்பிவைக்கிறது” என்றார். அந்த நிறுவனத்தின் பெயர் என்ன என்று நான் கேட்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் ‘கிளாக்ஸோ ஸ்மித்கிளைன்’ நிறுவனம் இப்படிப்பட்ட ஊக்குவிப்புகளை வழங்காது என்று எதிர்பார்க்கலாம்.

தங்களுடைய நிறுவனங்களின் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய ஊக்குவிப்புகளை நிறுத்திவிடப்போவதாக அது அறிவித்திருக்கிறது. இந்தத் துறையிலேயே மிகப் பெரிய நிறுவனம் ஒன்றிடமிருந்து இப்படியோர் எண்ணம் வெளிப்பட்டிருப்பதை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் ஆர்வத்தில் தொழில் தர்மத்துக்கு மீறிய வகையில் செயல்படுகின்றன என்று பல்வேறு அரசுகளும் நெறியாளர்களும் கூறிவரும் நிலையில் இந்தச் செய்தி வரவேற்கத் தக்கது.

தங்களுடைய மருந்துகளையே பரிந்துரைக்குமாறு (சட்டம் அனுமதிக்காத வழிகளில்) மருத்துவர்களைத் தூண்டியது, மருந்துகளைச் சாப்பிடுவதற்கு முன்னர் நோயாளி கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களைத் தெரிவிக்காமல் விட்டது, விலை அறிக்கையில் தவறான பட்டியல் வரச் செய்தது ஆகிய குற்றங்களுக்காக அமெரிக்க அரசுக்கு கடந்த ஆண்டு சுமார் ரூ. 1,800 கோடியை அபராதமாகச் செலுத்தியது ‘கிளாக்ஸோ ஸ்மித்கிளைன்’ நிறுவனம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள மருந்து நிறுவனங்களான ‘கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் ஃபைசர்’, ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’, ‘அஸ்ட்ராஜெனகா’, ‘மெர்க்’, ‘எலி லில்லி அண்ட் அல்லர்ஜன்’ போன்றவை 1,300 கோடி அமெரிக்க டாலர்களை இப்படி அபராதமாகச் செலுத்தியுள்ளன. தங்களுடைய நிறுவன மருந்துகளைத் தவறான வழிகளில் சந்தைப்படுத்த முற்பட்டது, டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுத்து விற்பனையைக் கூட்ட முயற்சித்தது என்ற குற்றச்சாட்டுகள் இவற்றின் மீது கூறப்பட்டன.

இந்தியாவில் என்ன நிலை?

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான இந்த மறைமுகக் கூட்டுகுறித்துப் பல ஆண்டுகளாக இங்கே விவாதம் நடைபெற்றுவருகிறது. ‘கட்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு 1995-ல் மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மருத்துவர்கள் எழுதித்தந்த 2,000-க்கும் மேற்பட்ட பரிந்துரைச் சீட்டுகளைத் திரட்டி ஆராய்ந்தது. நோயாளிகளுக்கு அந்தச் சமயத்தில் பலன் அளிக்காத மருந்துகள், உடல் பலம் பெறுவதற்கான டானிக்குகள், உடல் நிலையை மீண்டும் பழையபடிக்குக் கொண்டுவருவதற்கான சத்து மருந்துகள், உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் மருந்துகள், வைட்டமின் கூட்டு மாத்திரைகள் என்று தேவையில்லாமலே பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

2010-ல் அசாமிலும் சத்தீஸ்கரிலும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் வேறுவிதமான ஆய்வுகளை அதே நிறுவனம் மேற்கொண்டது. நுகர்வோரில் 20% பேர் மட்டுமே அரசுப் பொது மருத்துவமனைகளிலிருந்து மருந்து – மாத்திரைகளைப் பெற்றனர். இந்த மருத்துவமனைகளில் பணிபுரிந்த மருத்துவர்களே, தனியார் மருந்துக் கடைகளில் மட்டுமே விற்கப்படும் விலையுயர்ந்த மருந்து-மாத்திரைகளை அரசு மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்திருந்தனர். அவற்றை வெளியேதான் வாங்க முடியும்.

மருந்து – மாத்திரை ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். தங்களுடைய நிறுவனம் தயாரிக்கும் மருந்து, மாத்திரைகளில் உள்ள மருந்துப் பொருள்கள் என்ன, அவை எந்தெந்த நோய்களுக்குப் பலன் தரும் என்ற தகவலையும் மருந்து, மாத்திரைகளின் பெயர்களை வர்த்தகப் பெயருடனும் நினைவுபடுத்துவது முதல் வகை. இதில் தவறும் ஆபத்தும் இல்லை. அடுத்தது, தங்களுடைய மருந்துகளையே பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்திச் சிறு பரிசுகளையும் ஊக்குவிப்புகளையும் தருவது. அடுத்தது, ரொக்கமாகவோ, வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் போலவோ அதிக அளவில் பணப் பயன்களை அளித்துத் தங்களுடைய விற்பனையைக் கூட்டுவது.

மருந்து விற்பனை நிறுவனங்களிடமிருந்து பரிசுகளையோ ரொக்கத்தையோ பெறுவது சட்டப்படி குற்றம் என்பதே இந்திய நிலை என்றாலும் இந்தச் சட்டப்படி மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது அபூர்வத்திலும் அபூர்வம். அடுத்தபடியாக, மருத்துவர்களுக்கு பணப்பயன் தரும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க நேரடிக் கட்டுப்பாடு ஏதும் அரசுக்குக் கிடையாது. அரசின் மருந்தியல் துறை கடந்த ஆண்டு வழிகாட்டு நெறிகளை வகுத்தது. ஆனால், அவை தனியார் மருந்து நிறுவனங்கள் சுயமாகக் கடைப்பிடிப்பதற்கானவையே தவிர சட்டப்பூர்வமானவை அல்ல.

சுயக் கட்டுப்பாடு

மத்திய மருந்து தரப்படுத்தல் கட்டுப்பாட்டு நிறுவனம் (சி.டி.எஸ்.சி.ஓ.) மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கைகளில் கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டது என்று சுகாதாரம், குடும்ப நலனுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவே கூறியுள்ளது. மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறாமலும், பல்வேறு நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுத்து அவற்றின் விளைவுகளைப் பதிவுசெய்து ஆய்வு செய்யாமலும் மருந்துகளுக்கு ஒப்புதல் தந்ததாக சி.டி.எஸ்.சி.ஓ. மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. யார் கட்டுப்படுத்த வேண்டுமோ அவர்களே தங்களுடைய கடமையைச் செய்யவில்லை என்பதே இதன் சாரம்.

இப்போதைக்கு இவற்றைத் தவிர்க்க ஒரே வழி, விற்பனைக்காக முறைகேடுகளில் ஈடுபடுவதாக மருந்து நிறுவனங்கள்மீது குற்றச்சாட்டுகள் எழுவதால் அந்தந்த நிறுவனங்களே சுயக்கட்டுப்பாடுகள் மூலம் தங்களுடைய நடவடிக்கைகளைச் சட்டத்துக்குள்பட்டுத் திருத்திக்கொள்வதுதான்.

1980-களில், “சவூதி அரேபியாவில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டுகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்” என்று அரசு அறிவித்த உடனேயே, தேவையற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பது 40% அளவுக்குக் குறைந்துவிட்டனவாம்!

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு..!


'இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது.

பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.

10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.

வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து. விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும்!''

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்..? - கண்ணதாசன் சொன்ன உண்மைகள்..!



திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் இப்போதும் சுவாரஸ்யத்தை தருகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
mgr-kannadasan
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

சமந்தா பொள்ளாச்சி to கொல்கத்தாவா...?




தெலுங்கு படத்திற்காக பொள்ளாச்சி சென்றுள்ளாராம் சமந்தா.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள சமந்தாவுக்கு, இன்னும் அப்படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் துவங்கவில்லையாம்.

ஆனால், தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்துக் கொண்டிருக்கும் ‘ரபாஸா’ தெலுங்கு படத்திற்காக நம்மூர் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் காட்சி படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா ஆடியுள்ளார்.

தங்கள் ஊருக்கு சமந்தா வந்ததால், ஏ.ஆர்.முருகதாஸ் & விஜய் கூட்டணியில் உருவாகும் படத்திற்காகதான் சமந்தா வந்துள்ளார் என நினைத்து அவரைப் பார்ப்பதற்காக ‘இளையதளபதி’யின் ரசிகர்கள் உட்பட பலரும் கூடிவிட்டார்களாம்.

தமன் இசையமைக்கும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக ப்ரணிதாவும் நடிக்கிறார்.

சர்வ வல்லமை படைத்தவையா பாரம்பரிய மருத்துவம்..?



 சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத முறையை மூடநம்பிக்கைகளாக சித்தரிக்கின்றேனோ என புருவத்தை உயர்த்த வேண்டாம். கண்டிப்பாக அவ்வாறு கூற வரவில்லை. அவற்றைத் தாண்டி, அந்தக் கட்டுரையை ஏற்பதில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன.

ஹோமியோபதி (பாரம்பரிய) மருத்துவமா?

இந்திய அரசாங்கத்தின் ஆயுள் துறையின் (Department of AYUSH) கீழ் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், உனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவமுறைகள் அடங்குகின்றன. இதன் அடிப்படையிலேயே கட்டுரையாளர் ஹோமியோபதியையும் பாரம்பரிய மருத்துவமாக எடுத்துக்கொள்கிறார் என்றாலும், ஹோமியோபதி முறையானது 1796 ஆம் ஆண்டு சாமுவேல் ஹேனிமேன் எனும் ஜெர்மானிய மருத்துவரால் 'கண்டுபிடிக்கப்பட்டது' என்பது குறிப்பிடத்தக்கது.

ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (like cures like) என்ற கோட்பாட்டின்படி இயங்கும் ஹோமியோபதியை அறிவியல் உலகம் முறையான மருத்துவமாக ஏற்கவில்லை. பல மேற்கத்திய நாடுகளில் ஹோமியோபதி ஒரு முறைப்படுத்தப்பட்ட மருத்துவமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருந்தா? வெறும் சர்க்கரை உருண்டையா?

ஹோமியோபதி மருந்தின் வீரியத் தன்மையை ஓர் உதாரணம் கொண்டு விளக்கினால் இவ்வாறு கூறலாம்: ஒரு பெரிய நீச்சல்குளத்தில் ஒருதுளி மருந்தை விட்டு கலக்கி, அந்த நீரில் இருந்து ஒரு துளி நீரை எடுத்து சர்க்கரை உருண்டையில் இட்டால், என்ன வீரியம் இருக்குமோ அதற்கு ஒப்பானதுதான் ஹோமியோபதி மருந்து. மேலும், அந்த ஒரு துளி மருந்து கலக்கப்பட்ட நீச்சல் குள நீரில் இருந்து ஒரு துளி நீரை எடுத்து அந்த நீச்சல் குளத்தைவிட பத்து மடங்கு பெரிய ஏரியில் கலக்கி, அதிலிருந்து ஒரு சொட்டு நீரை எடுத்து ஒரு சர்க்கரை உருண்டையில் கலக்கினால் கிடைக்கும் மருந்து, ஹோமியோபதி விதியின்படி, முந்தைய மருந்தைவிட பன்மடங்கு வீரியமிக்கதாக கருதப்படுகிறது. நீருக்கு ஞாபக சக்தி இருப்பதாகவும், மருந்தினை நீர்க்க செய்வதினால் 'ஆதார சக்தி' வலுப்பெறுவதாகவும் நம்பப்படுவதே இதற்கு காரணம். வேதியியல் விதிகளின்படி இவ்வாறு பலமுறை நீர்க்கச் செய்தபின் கிடைக்கும் நீரில் அசல் மருந்தின் ஓரிரு மூலக்கூறுகள் கூட மிஞ்சாது என நிறுவப்பட்டுள்ளன.

மருந்துப்போலிகளை (Placebo) விட ஹோமியோபதி மருந்துகள் அதிக நிவாரணங்களை தந்ததாக இதுவரை வெற்றிகரமாக நிறுவப்படவில்லை.

சிறப்பம்சங்கள்?


இம்மருத்துவ முறைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது என்றபோதும், இவற்றுக்குரிய பொதுவான சிறப்புகள் பல: பக்கவிளைவுகள் அற்றவை; நோயின் விளைவுகளை மட்டும் குணப்படுத்தாமல் நோயை வேரோடு போக்கி முழுமையாகக் குணப்படுத்துபவை; அன்றாட உணவுகள், மூலிகைகள் மூலமாகவும் எளிய உடற்பயிற்சிகள் வழியாகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பவை; உடலை மட்டுமோ உடலின் தனி உறுப்பை மட்டுமோ கவனத்தில் கொள்ளாமல், ஒவ்வோர் உறுப்பும் ஒட்டுமொத்த உடலின் பாகம் என்னும் முழுமை உணர்வைக் கொண்டவை; மனம்பற்றிய அறிதலையும் செய்து மருந்துகளைத் தேர்பவை.

மேற்கூறிய அம்சங்கள் அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளனவா என்பது பெரும் சந்தேகமே. இன்னும் சொல்லப்போனால், பக்க விளைவுகள் அற்றவை, நோயை வேரோடு போக்கவல்லவை என்பதற்கெல்லாம் எதிரான ஆதாரங்கள் உள்ளன. 1990 மற்றும் 2004இல் நடந்த இருவேறு ஆய்வுகள் ஆயுர்வேத மருந்துகளில் 20 முதல் 40% மருந்துகளில் அபாய அளவுகளில் பாதரசமும் ஈயமும் (mercury and lead) இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டன. முடக்கு வாதம் (rhumetoid arthritis) மற்றும் இதய குழலி நோய் (cardiovascular disease) ஆகியவற்றிற்கு ஆயுர்வேத முறை பெரிய முன்னேற்றத்தை செய்யவில்லை என நிறுவப்பட்டுள்ளது.

மேலும், ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை சித்தாந்தங்களான தோஷ பிராகிருதி, பஞ்சகர்மா, ரசாயன முறை போன்றவை சிகிச்சை மற்றும் நிவாரணத்தில் ஆற்றும் பங்கினை அறிவியல் பூர்வமாக நிறுவ முயற்சிகள் பெரிதாக எடுக்கப்படவில்லை என்ற நியாயமான குற்றசாட்டும் உள்ளது.

சிக்குன் குனியா?

உலக சுகாதார அமைப்பு சிக்குன் குனியா நோய்க்கு மருத்துவம் ஏதும் இல்லை என்று கூறுகிறது. ஆனால், அந்தக் கட்டுரையிலோ சிக்குன் குனியா காய்ச்சலைக் குணமாக்கவும், குணமான பின் பல நாட்கள் நீடித்த மூட்டுவலி, சோர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் இம்மருத்துவ சிகிச்சைகள் பெரிதும் உதவி செய்தன என கட்டுரையாளர் கூறுகிறார். மேலும் அரசின் நிதி ஒதுக்கீட்டு அறிக்கையில், அரசும் இம்மருத்துவ முறைகளின் சிறப்பையும் அவை பயன்பட்ட விதத்தையும் வியந்து குறிப்பிட்டுள்ளது என கூறுகிறார்.

கொசுக்களை ஒழிப்பதில், சுகாதாரத்தை பேணுவதில் கவனம் செலுத்த இயலாத அரசு, அவசர கால மருத்துவ நிலைகளை சமாளிக்க பெரிய திட்டங்கள் இல்லாத அரசு மற்றும் சுகாதார துறைகள் சிக்குன் குனியா பரவும் காலங்களில் ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களின் பின் ஒளிந்துகொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.

உலக சுகாதார அமைப்பின்படி சிக்குன் குனியா தானாக குணமடைந்து விடும் நோய் என்றும், சில நேரங்களில் மூட்டு வலிகள் நீடிக்கும் என்றும், மருத்துவம் வலிகளை போக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறது. நோய்க்கான மூலம் கொசுக்களிலிருந்து பரவும் RNA வகை வைரஸ்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹோமியோபதி உண்மையிலயே நோயை குணப்படுத்தியது என்றால் எவ்வாறு இந்த RNA வைரஸ்களை உடலில் ஹோமியோபதி மருந்துகள் கட்டுப்படுத்தின எனும் ஆய்வுகள் அரசின் வசம் உள்ளனவா? நோய் பரவல், அளிக்கப்பட சிகிச்சை மற்றும் நிவாரணம் பற்றிய விரிவான புள்ளிவிவரங்களாவது இருக்கின்றனவா என்பதும் கேள்விக்குரியது.

மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை

சித்தா, ஆயுர்வேதா மற்றும் உனானி மருத்துவமுறைகளில் நன்மைகள் இருந்தாலும், மருந்து தயாரிக்கும் முறைகளில் அரசு முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் விநியோகம், விற்பனை ஆகியவற்றில் முறையான மேற்பார்வையை அமல்படுத்துவதிலும் பெரும் சவால்கள் உள்ளன. மேலும், மருத்துவமுறைகள் மற்றும் மருந்து தயாரித்தல் ஆகியவற்றில் முறையான அறிவியல் அடித்தளம் அமைப்பதிலும் பெரும் சவால்கள் உள்ளன. பாரம்பரிய மருத்துவ பாடத்திட்டங்களை வகுப்பதிலும், மருத்துவப்படிப்பை ஒழுங்குபடுத்துவதிலும் பெரும் குளறுபடிகள் நீடிக்கின்றன.

இறுதியாக, சித்த மருத்துவத்தின் 'உணவே மருந்து' எனும் கோட்பாட்டை விட சிறந்த உடல்நலம் பேணும் முறை இருக்கமுடியாது என்பது மறுப்பதற்கில்லை. ஆயுர்வேதத்திலும் உடல்நலத்தை பேணும் பல மூலிகை மற்றும் மருத்துவ முறைகள் இருக்கின்றன என்பதும் உண்மை. இவற்றோடு முறையான உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவை நல்ல உடல் மற்றும் மன நலத்திற்கு அடிப்படை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த மருத்துவ முறைகளில் மேற்கூறிய சிக்கல்கள் களையப்படாத வரையிலும், இம்முறைகளை முழுவதும் அறிவியல் பூர்வமாக அணுகாத வரையிலும், இவற்றை முழுமையான மாற்று மருத்துவ முறைகளாக முன்வைப்பதில் பெரும் அபாயம் இருக்கின்றன.

கேள்வி கேட்காமல் மக்கள் இம்முறைகளை பின்பற்றுவது அரசிற்கும் தன் கடமைகளில் இருந்து பின்வாங்க வசதியாக போய்விடும். பல ஆண்டுகளாக இயங்கிவரும் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தொடர்ந்து மந்தநிலையில் இயங்கவும் இது வாய்ப்பளித்து விடும். அதுவரை, உடல்நலம் சார்ந்த நமது பார்வையை முற்றிலுமாக ஆங்கில மருத்துவத்தில் இருந்து பாரம்பரிய முறைக்கு திருப்புவோம் என்பது போன்ற அறைகூவல்கள் விடுப்பதில் இருந்து தவிர்த்தல் நலம்.

ஸ்ரீகாந்தின் நம்பியாருக்கு U/A சான்றிதழ்..!



ரீகாந்த், சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் நம்பியார் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

தெலுங்கின் மிகச் சிறந்த இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் உதவி இயக்குனரான கணேஷ் இயக்கியிருக்கும் இப்படம் சயின்ஸ் பிக்சன் வகையைச் சார்ந்தது. கோல்டன் பிரைடே பிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரித்துவருகிறது.

விஜய் ஏண்டனி இசையமைத்திருக்கும் இப்படத்தில் சந்தானம் முதல்முறையாக ஒரு பாடல் பாடியுள்ளார். ஸ்ரீகாந்தின் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இப்படம் மார்ச் மாதத்தில் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வதி, ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் மாதத்தில்
துவங்கின.

ஸ்ரீகாந்த் தற்பொழுது ஓம் சாந்தி ஓம் மற்றும் எதிரி எண் 3 ஆகிய படங்களிலும் நடித்துவருகிறார்.

பொதுத்துறை வங்கிகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை ஸ்ட்ரைக்..!



எஸ்பிஐ போல அனைத்து வங்கிகளிலும் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் ஏற்ற கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11 தேதிகளில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 13-ஆம் தேதி நடக்கவுள்ளது.

வெகுநாட்களாக சொல்லி வந்த இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க , கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து சமாதானம் பேசுமாறு இந்திய வங்கிகள் அமைப்புக்கு தலைமை தொழிலாளர் ஆணையர் பி.கே சன்வாரியா உத்தரவிட்டார். ஆனால் இந்த சந்திப்பில், 10 சதவித உயர்வு என்ற முந்தைய சலுகை உயர்த்தப்படாததால் கூட்டமைப்பு நிர்வாகிகள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

முன்னதாக ஜனவரி 20-21 தேதிகளில்தான் இந்த வேலை நிறுத்தம் நடப்பதாக இருந்தது. அதனால் வங்கிகள் அமைப்பு, ஊதிய உயர்வை 5 சதவீதம் உயர்த்தி 9.5 சதவிதம் உயர்வு வழங்குவதாகவும், மேலும் உயர்த்துவோம் என்றும் உத்தரவாதம் அளித்தது. ஆனால் ஜனவரி மாதம் நடந்த சந்திப்பில் வெறும் 0.5 சதவிதம் மட்டுமே உயர்த்தப்பட்டது.

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஏறக்குறைய 30 சதவிதம் ஊதிய உயர்வு கோரியிருந்த வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இதனால் ஏமாற்றமடைந்தனர். இந்த ஊதிய உயர்வு நவம்பர் 2012-ல் இருந்து நிலுவையில் உள்ளது. தற்போது, இந்தியாவில் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இதில் 8 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

‘சிக்ஸ் பேக்’ அதர்வா..!



ஈட்டி படத்திற்காக சிக்ஸ் பேக் அவதாரம் எடுத்துள்ளாராம் அதர்வா.

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் மாடர்ன் பையனாக நடித்து, ‘பரதேசி’ படத்தில் இயக்குனர் பாலாவால் பட்டை தீட்டப்பட்டவர் நடிகர் அதர்வா.

தற்போது இரும்புக்குதிரை படத்தில் பைக் ரேஸராகவும், ஈட்டி படத்தில் தடகள வீரராகவும் நடித்து வருகிறார்.‘ஈட்டி’ படத்தின் ஸ்போர்ட்ஸ் மேன் கேரக்டருக்காக தன் உடம்பை எஃகு போல் இறுக்கமாக்கி ‘6 பேக்ஸ்’ வைக்கிறாராம் அதர்வா.

சூர்யா, விஷால், பரத் ஆகியோரைப்போல் அதர்வாவின் சிக்ஸ் பேக்’ கெட்-அப்பும் பெரிதும் பேசப்படுமாம்.

மீகாமன் படத்துக்காக பிரம்மாண்ட சண்டை காட்சி..!



ராஜாராணி, ஆரம்பம் வெற்றி பிறகு ஆர்யாவின் சினிமா கிராப் சற்று உயர்ந்து கொண்ட போகிறது .

தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் மீகாமன் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கும் ஆர்யா, இதுவரை காணாத ஒரு கதாபாத்திரத்தில் வருவர் என்று தெரிவித்து உள்ளனர்.

இப்படத்தை பொறுத்து வரை பட்ஜெட்டை பற்றி கவலை படாமல் தாராளம் கட்டி வருகிறார் ஹிதேஷ் ஜபக்,சமிபத்தில் இப் படத்துக்காக பின்னிமில்லில் பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றை படம்மாக்கி உள்ளனர்

இயக்குனர் இப் படத்தை பற்றி பேசுகையில், கொன்றை வேந்தன் செய்யுளில் வரும் வார்த்தை தான் மீகாமன். தமிழ் படத்தை எடுக்கும் நான் தலைப்பும் தமிழிலே இருக்க ஆசைப்படறேன். கதைக்களம் கோவா, குஜராத், சென்னை என்று படம் பயணிக்கிறது.

இது ஒரு அக்ஷன் திரில்லர் கதை. ஒரு மனிதனின் விளையாட்டு என்று கூட இந்த கதையை சொல்லலாம். ஒரு மனிதன் ஒரு காரியத்தை கையில் எப்படி எடுத்து, எப்படி முடிக்கிறான் என்பதை மிகசிறப்பாக கதை ஆக்கியுள்ளேன்.

இதற்காக ஆர்யாவின் லுக்கை கொஞ்சம் மாற்றம் செய்ய இருக்கிறேன்படத்திற்கு ஒளிப்பதிவு-சதீஷ். இசை-தமன். முதல் ஷெடியுலில் ஹீரோயின்இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்தார்.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..!

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..!


இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...? ...
உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.

மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது. நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.

 வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது. நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..

ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.

முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

பெண்களே உஷார்..! எச்சரிக்கையாக இருங்கள்..!

பெண்களே உஷார்..!

Rohypnol மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..!

Rohypnol என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால்,சிறிதுநேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்;

இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில் இருக்க நேரிடுமாம்;

பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாதாம்;

அதைவிட கொடுமை அந்த பெண் எப்போதுமே கருவுறமுடியாமல் போய்விடுமாம்;

தொடர்ந்து கொடுக்கப்பட்டால் இதற்கு அடிமை ஆகநேரிடுமாம்;

மேலும் பல பக்கவிளைவுகள் உண்டு என்கின்றனர்;

இதேபோல நிறைய வல்லுறவுக்கு வழிவகுக்கும் மருந்துகள் இருக்கின்றன;

அவற்றில் இந்த ரோஹைப்னால் எளிதில் கிடைக்கக்கூடியது;

எனவே, பெண்களே, நீங்கள் இரவுநேரக் கொண்டாட்டங்களுக்குச் செல்லாதவர்களாக இருந்தாலும் எப்போதாவது தனியாக ஒரு இடத்திற்குச் செல்லநேரலாம்;

அல்லது வேறு எதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு நம்பிக்கையானவர் மூலம் வேறுயாராவது கொடுத்துவிடலாம்,

மூடிய புட்டிகளிலும் ஊசியால் செலுத்தப்பட்டிருக்கலாம்;

சுவையும் இருக்காது;

எனவே வெளியிடங்களில் எச்சரிக்கையாக இருங்கள்..