Thursday, 13 February 2014

ஓட்டலில் மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பனை...!



ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஒரு ஓட்டலில் மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பயங்கரமான செயலில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அனம்பிரா என்ற இடத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில், மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு 2 மனித தலைகளை கலர் பேப்பரில் அழகாக சுற்றி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஓட்டலில் மனித சதைகளை வெட்டி வறுத்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஏ.கே.47 உள்பட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

 அத்துடன் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சம்பந்தப்பட்ட அந்த ஓட்டலில் மனித இறைச்சி என்று கூறியே மிக மிக அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். அதை வாடிக்கையாளர்கள் வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஓட்டல் மெனுவில், மனித தலை ரோஸ்ட் என்பதையும் சேர்த்துள்ளனர் என்றனர்.

ஓட்டலில் சாப்பிட சென்ற பாதிரியார் ஒருவர் தனது அனுபவத்தை கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த ஓட்டலில் சாப்பிட சென்றேன். அங்கு பரிமாறப்பட்ட இறைச்சியை சாப்பிட்டேன். அதற்கு அதிகபட்சமாக பில் போட்டனர். அப்போதுதான் நான் சாப்பிட்டது மனித மாமிசம் என்று தெரிந்தது.

அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டேன். நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. மனித மாமிசத்தை மனிதர்களே விற்கிறார்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்றார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நயனை கைவிடாத காதலர் தினம்..!



காதலர்கள் கைவிட்டாலும் காதலர் தினம் நயன்தாராவை கைவிடவில்லை.ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கும் படம் இது கதிர்வேலன் காதல். இதில் நயன்தாரா ஹீரோயின். இப்படம் காதலர் தினமான நாளை முதல் திரைக்கு வருகிறது. அதேபோல் சிம்புவுடன் நயன்தாரா நடித்து வரும் படம் இது நம்ம ஆளு.

இப்படத்தின் முன்னோட்ட காட்சியும் 14ம் தேதி வெளியிடப்படுகிறது. காதலர்கள் கைவிட்டாலும் காதலர் தினத்தன்று நயன்தாரா நடித்துள்ள 1 படம் பிளஸ் ஒரு படத்தின் முன்னோட்டம் வெளியாவதால் சந்தோஷமாக இருக்கிறாராம். இது நயன்தாராவின் ரசிகர்களுக்கு டிரிபிள் விருந்தாக அமைந்திருக்கிறது. காதலர்கள் கைவிட்டாலும் சினிமா அவரை கைவிடவில்லை என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

பாலு மகேந்திரா - ஓர் சகாப்தம்..!



தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

இவரது மரணம் திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தனது திரையுலக பயணத்தை ஒரு ஒளிப்பதிவாளராக 1972ம் ஆண்டு ஆரம்பித்த பாலு மகேந்திரா, 42 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் அவர் பெற்ற விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். அவை அனைத்துமே தமிழ் சினிமாவுக்கு மகுடம் சூடுபவையாக அமைந்தன.

மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மறுபடியும், சதி லீலாவதி என தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா.
தனது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா தான்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான தலைமுறைகள் படம், மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இவரது இயக்கத்தில் உருவான படங்கள்

கோகிலா

அழியாத கோலங்கள்
 
மூடுபனி

மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)

ஓலங்கள் (மலையாளம்)

நீரக்ஷ்னா (தெலுங்கு)

சத்மா (ஹிந்தி)

ஊமை குயில்

மூன்றாம் பிறை

நீங்கள் கேட்டவை

உன் கண்ணில் நீர் வழிந்தால்

யாத்ரா

ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)

இரட்டை வால் குருவி

வீடு

சந்தியாராகம்

வண்ண வண்ண பூக்கள்

பூந்தேன் அருவி சுவன்னு

சக்ர வியூகம்

மறுபடியும்

சதி லீலாவதி

அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)

ராமன் அப்துல்லா

ஜூலி கணபதி

அது ஒரு கனாக்காலம்

தலைமுறைகள்


தேசிய விருதுகள்

சிறந்த ஒளியமைப்பிற்கான தேசிய விருது 

கோகிலா(கன்னடம்) — 1978

மூன்றாம் பிறை(தமிழ்) — 1983

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது 

வீடு(தமிழ்) — 1988

சந்தியா ராகம்(தமிழ்) —1990

வண்ண வண்ண பூக்கள்(தமிழ்) —1992


மாநில அரசு விருதுகள்

சிறந்த ஒளியமைப்பிற்கான மாநில அரசு விருது 


நெல்லு(1974) — கேரள அரசு

பிரயாணம்(1975) — கேரள அரசு

சிறந்த திரைக்கதைக்கான மாநில அரசு விருது 

கோகிலா(1977) — கர்நாடக அரசு


நந்தி விருதுகள் 

சிறந்த ஒளியமைப்பிற்கான நந்தி விருது
 

மனவூரி பண்டவலு(1978)

நிரீக்சனா(1982)


ஃபில்ம்பேர் விருதுகள்

சிறந்த இயக்குனர் 


மூன்றாம் பிறை(தமிழ்) —1983

ஒலங்கல்(மலையாளம்) —1983

வீடு(தமிழ்) — 1988

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள்.
சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன.

ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது, இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவர் மட்டும் தான்.


புகழ் சூட்டும் உதவி இயக்குனர்கள்

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர்.

சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

இவர் தவிர ராம், வெற்றி மாறன், சீமான், சுகா போன்றவர்களும் பாலு மகேந்திராவின் உதவியாளர்கள் தான்.

வங்கித் துறையில் வெளியேறும் விகிதம் அதிகரிக்கும்..!


 தனியார் வங்கிகள் அதிக அளவில் வரத் தொடங்கினால் வங்கிப் பணியாளர்கள் பணியிலிருந்து வெளியேறும் விகிதம் அதிகரிக்கும் என்று தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் தனியார் வங்கிகள் அதிகம் தொடங்கப்பட்டால், பொதுத்துறை வங்கிகளிலிருந்து வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சேவைத்துறையைச் சேர்ந்த கெல்லி சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு லைசென்ஸ் வழங்கப்பட்டால், வங்கித்துறையில் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் 18 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மோடியின் 10 கட்டளைகள்..? அடி பணிந்தது அமெரிக்கா..!



மாநில முதல்வரை அமெரிக்க தூதர் சந்திப்பது சகஜம். தொழில் முதலீடு பற்றி பேசுவார்கள். மனித உரிமை, மத சுதந்திரம் பற்றியும் பேசலாம். மோடியை நான்சி பவல் நாளை சந்திக்கும்போது இதெல்லாம் பேசப்போவதில்லை. மாட்டேன், முடியாது என மோடி கூறிவிட்டார்.

குஜராத் கலவரத்தை ஒடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்பது மோடி மீதான ஒரு குற்றச்சாட்டு. அதன் பேரில் அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது. அங்கு நிறைய குஜராத்திகள் இருந்தும் மோடியால் போக முடியாத நிலை. இது தனிப்பட்ட வகையில் அவருக்கு அவமானம்தான். இதற்கிடையில்தான் அமெரிக்காவை பழி தீர்த்துக் கொள்ளும் விதமாக நரேந்திர மோடி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை ஆமதாபாத் வரவழைத்து சந்தித்து பேசியிருக்கிறார்.

முன்னதாக மோடி போட்ட கட்டளைகள் என்னவென்று தெரியுமா?.

1.டெல்லியில் தூதரை சந்திக்க மாட்டேன். அவர்தான் என்னை சந்திக்க ஆமதாபாத் வர வேண்டும்.

2.என்னை சந்திக்க போவதாக மத்திய அரசிடம் தெரிவித்து அமெரிக்கா அனுமதி பெற வேண்டும்.

3.அதை ஊடகங்கள் மூலம் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.

4.மாநில பிரச்னைகள் எதை பற்றியும் தூதர் என்னிடம் கேட்கக்கூடாது.

5.மத சுதந்திரம், கலவரம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் தொடர்பாக பேசக்கூடாது.

6.பிரதமர் ஆனதும் என்னென்ன செய்யப் போகிறேன் என்பதை கேட்கலாம்.

7.இந்தியாவுடன் உறவை பலப்படுக்திக் கொள்ள அமெரிக்கா என்னென்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்கலாம்.

8. கலவரத்தில் எனக்கு பங்கில்லை என்று கோர்ட் தீர்ப்புகள் கூறியிருப்பதை அமெரிக்கா வெளிப்படையாக எற்றுக் கொள்ளவேண்டும்.

9.மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மூன்றாவது முறையாக முதலமைச்சரான தலைவரை அவமதித்தது தவறு என்று அமெரிக்கா ஒப்புக் கொள்ள வேண்டும்.

10. நூற்று முப்பது கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக எழுச்சி பெறும் மோடியிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு பத்து கட்டளைகளை மோடி பிறப்பித்துள்ளதாக தூதரக வட்டாரங்களில் பரபரப்பாக பேச்சு ஓடுகிறது. அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்ட பிறகுதான் நாளைய சந்திப்புக்கு மோடி நேரம் கொடுத்தார் என்கிறார்கள்.

அமெரிக்காவை பின்பற்றி மோடியை பிளாக்-லிஸ்ட் செய்த இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் போன்றவை ஏற்கனவே சமரசம் செய்துகொண்டுவிட்டன.

விந்தைகள் புரியும் நானோ தொழில்நுட்பம்..!



 நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி டெக்ஸ்டைல், வாட்டர் பூரூப், பெயிண்ட் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுப்பட்டிருக்கும் வதோதராவில் சேர்ந்த ஜைடெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் ரங்கா சென்னை வந்திருந்தபோது அவருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலிருந்து..

உங்களை பற்றி..?

நாகபுரியில் இருக்கும் என்.ஐ.டி. யில் கெமிக்கல் என்ஜீனியரிங் படித்தேன். அதன் பிறகு பாலிமர் சயின்ஸில் அமெரிக்காவில் இருக் கும் லிஹைய் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். பிறகு அமெரிக்கவில் இருக்கும் ஒரு நிறுவனத்திலே சில ஆண்டுகள் வேலை செய்தேன். 1987-ம் ஆண்டு இந்தியா வந்து சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

இப்போதே யாரும் தொழில் துவங்க தயாராக இல்லை. அது மட்டும் இல்லாமல் நீங்கள் அமெரிக் காவில் செய்யும் வேலையை விட்டு இந்தியாவுக்கு வர காரணம் என்ன?

என் குடும்பம் பிஸினஸ் குடும்பம். நானே இந்தியா வர தயங்கினால் வேறு யார் இங்கு வந்து தொழில் துவங்க முடியும் என்பதால் இந்தியாவுக்கு வந்தேன்.

நானோ டெக்னாலஜி பற்றி சாதாரண மக்களுக்கு புரியும்படி சொல்லுங்களேன்..?

ஒரு பொருளின் தடிமன் 1 முதல் 100 நானோ மீட்டருக்குள் இருப்பதைதான் நானோ டெக்னா லஜி என்று அறிவியல் ஏற்றுக்கொள் கிறது. ஒரு வேளை 100 நானோ மீட்டருக்கு மேல் செல்லும்பட்சத் தில் அது மைக்ரோடெக்னாலஜி என்று சொல்லுவார்கள்.

கடந்த 30, 40 வருடங்களுக்கு மேல் இந்த தொழில்நுட்பம் இருந் தாலும் சமீபகாலமாகதான் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

எவ்வாறு பயன்படுத்த முடியும்..?

சாலைகள் அமைக்க நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் சாலைகளின் ஆயுள் அதிகரிக்கும். நாங்கள் கொடுக்கும் பொருள்களைப் பயன் படுத்துவதன் சாலைகளின் தரம் அதிகரிக்கும். சுமார் 15 ஆண்டுகள் வரை சாலைகள் தரமானதாக இருக்கும். இந்தச் சாலைகள் மழை பெய்தாலும் பாதிப்படையாது. அதே போல டெக்ஸ்டைல் துறை, சொகுசு வாகனங்களுக்கு தயாராகும் ஏர்பேக் ஆகியவற்றுக்கு இந்தத் தொழில்நுட்பம் பயன்படும்.

இப்போது வீடுகளுக்கான வாட்டர் புரூப் மேல் தளத்துக்கு மட்டுமே போடப்படுகிறது. அதற்கே அதிகம் செலாகிறது. இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்டர் புரூப் அமைக்கும் போது செலவு குறையும். வீடு முழுவதையும் குறைந்த செலவில் தண்ணீரி லிருந்து பாதுகாக்க முடியும்.

அடுத்து எந்த துறைகளில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறீர்கள்.?

விரைவில் பெயின்ட் தொழிற் சாலை அமைக்க இருக்கிறோம். அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஏற்கெனவே முன்னணி நிறுவனங்கள் இருக்கும் போது புதிதாக பெயின்ட் நிறுவனம் ஆரம்பிக்கும் போது அதிக செலவு ஆகுமே? கூடவே மார்க்கெட்டின் செலவுகள் வேறு?

பெயின்ட் தயாரிப்பதற்கான அனைத்து மூலப்பொருட்களையும் நாங்களே தயாரிப்பதால், எங்களால் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். செலவுகளையும் குறைக்க முடியும்.

4650 ரூபாய்க்கு லேப்டாப் வடிவில் டேப்ளட்..!



மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஃபன்புக் பி 280 – Funbook P280 என்ற ஒரு புது வகை 7 இன்ச் டேப்ளட்டை அறிமுகபடுத்தியுள்ளது.

இதன் முக்கிய சாராம்சம் – ஆன்ட்ராயிட் ஜெல்லிபீன் 4.2 சாஃப்ட்வேர் – 1கிகாக்ர்ட்ஸ் பிராசஸர் ARM Cortex A8 processor 512 Mபி ரேம் டிடிஆர் 3, முன்னாள் கேமரா 0.3 பிக்ஸல் – 4 ஜிபி உள் மெமரி – 32 ஜிவரை எஸ்டி கார்டில் உயர்த்தி கொள்ளலாம் – 250 மணி நேரம் பேட்டரி தாங்குமாம்………

வைஃபை இருந்தாலும் – யு எஸ் பி டாங்கிள் மூலம் டேட்டா கார்டை சொருகி கொள்ள முடியும் அது போக லெதர் கேஸ் கீ போர்ட் என்று கூட வருவதால் ஒரு லேப்டாப் போல காரியங்களை செய்ய முடியும்…… ஹவ் இஸ் இட்…….AVAILABLE FROM TODAY

தொடர்ந்து டி வி பார்த்தாலோ அல்லது ஷிப்ட் மாறி வேலை பார்த்தாலே சர்க்கரை நோய் வரும்!



பெண்கள் அதிகநேரம் உட்கார்ந்த நிலையிலே “டிவி’ நிகழ்ச்சிகளை பார்ப்பதால், இன்சுலின் சமச்சீரின்மை ஏற்படுகிறது.

இது சர்க்கரை நோய் உருவாக காரணமாகிறது. கொழுப்பைக் கரைக்கும் என்சைம் உற்பத்தி குறைகிறது. தினமும் 5 மணிநேரத்திற்கு மேல் “டிவி’ பார்ப்பவர்களுக்கு, 5 ஆண்டுகள் ஆயுள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஷிப்ட் வேலை செய்யும் கூட போது சர்க்கரை நோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில், ‘பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.

இந்நிலையில் ஒரு மனிதனின் உணவுத் திட்டம், தூக்கம் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ச்சியாக இல்லாமல் அடிக்கடி மாறும் போதும் உடலை கண்டிப்பாக சர்க்கரை நோய் தாக்குமாம். இப்படியெல்லாம் யார்தான் புரோகிராம் செய்ததோ தெரியாது, நம் உடல் எனும் சிஸ்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரப்பதும், அதற்கான பணிகளை செய்வதும் வழக்கம் போல் நேரம் தவறாமல் நடந்து வருகிறது.

புறச்சூழலுக்கு ஏற்ப தன் சிஸ்டத்தை மாற்றிக் கொள்வது மற்றும் நோய் தாக்குதலுக்கு ஏற்ப எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது என தன் வேலையை மிகவும் அறிவுப் பூர்வமாக உடல் தனக்குத் தானே செய்து கொள்கிறது.

உயிர்ச்சங்கிலியில் ஒரு கன்னி அறுந்தாலும் அது இயற்கையின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்கும். ஒரு உயிரினம் அழிக்கப்படும் போது அதற்கான விலையை இந்த சமூகம் கொடுக்கத் தவறுவதில்லை. இதே போல் தான் உடலும்.

கணினியில் வைரஸ் தொற்று ஏற்பட்டால் செயல் இழக்கிறது. தான் சேமித்து வைத்ததை எல்லாம் தொலைத்து விடுகிறது. கணினியால் தனக்குத் தானே ஆன்ட்டி வைரஸை உற்பத்தி செய்து கொள்ளத் தெரியாது. ஆனால் உடலுக்குத் தெரியும்.

உடலுக்கான செயல்பாடுகள் நேர் கோட்டில் இருந்தால் தான் இடையில் வரும் தடைகளை முன் கூட்டியே அனுமானித்து அதனால் தடுக்க முடியும். அடிக்கடி பாதையை மாற்றிக் கொண்டே இருப்பது போல் உணவு, தூக்கம் மற்றும் அன்றாட செயல்பாடுகளுக்கான நேரம் ஷிப்ட் முறையில் மாறும் போது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை உடல் சந்திக்கிறது என்கிறார் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்கள்

இது குறித்து,”அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஷிப்ட் வேலை செய்யும் போது சர்க்கரை நோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை கூடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் பகலில் வேலை மறு வாரம் இரவுப் பணி என மாறும் போது சர்க்கரை நோய் தாக்கும். மாதத்திற்கு 4 நாட்கள் வரை இரவு ஷிப் வேலை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

தூங்கும் நேரம் மாறும் போதும் இரவு நேரத்தில் கண் விழித்து வேலை பார்க்கும் போதும் ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் இன்சுலின் ஹார்மோன் வேலை செய்வது குறைகிறது. தூக்கம் கெடும் போது அதிக பசியைத் தூண்டுகிறது. இதன் காரணமாக அதிக உணவு எடுத்துக் கொள்வதால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது.



பகல் மற்றும் இரவு ஷிப்ட் என வேலை மாறுவதால் குறித்த நேரத்துக்கு உடற்பயிற்சி செய்ய முடியாது. இரவு நேர வேலையால் உடற்பயிற்சி பாதிப்பதுடன் தூக்கம் கெட்டு மனக்குழப்பத்துக்கு ஆளாக நேரிடும்.

பகலில் வேலை பார்ப்பவர்கள் மாலை நேர ஷிப்ட் பார்க்கும் போது பெரிய பாதிப்பு ஏற்படாது. எனவே பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஒரே ஷிப்ட் வேலை பார்ப்பது போல் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஷிப்ட் வேலை பார்க்கும் சூழல் அமைந்து விட்டால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது.

நடந்து கொண்டே வேலை பார்க்க வேண்டும். டீ, காபி, பிஸ்கட் ஆகியவற்றை தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். வேலை நேரத்தில் டென்சன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்,” என்கிறார்கள்.

இதை யார் கேட்பது.....?



அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர்.

அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர். அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார்.

அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது. சரி, கீழே இறங்கி விட்டோமே ஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து “டீ எவ்வளவு’ என கேட்டேன். “பதினைந்து ருபாய்’ என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர். உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன்.

அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின் தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்’ என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன்.

சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். “உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே” என்று நான் துவங்க… தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர். சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார். “இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’ என்றார்…

அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே… உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே. ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?…

இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள்.

அறுவகைச் சுவைகளில் உள்ள ஆரோக்கியம்?



காரம்: 

உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


கசப்பு:

 உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.


இனிப்பு:

 உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.


புளிப்பு: 

இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.


துவர்ப்பு: 

இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


உப்பு: 

ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது

சரோஜினி நாயுடு - வாழ்க்கை வரலாறு



சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார். சரோஜினி நாயுடு அவர்கள்,  இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் (உத்தரப்பிரதேச மாநிலத்தின்) முதல் பெண் மாநில ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பிறந்தநாளே, ‘மகளிர் தினமாக’ இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவராகத் திகழும் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி அறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: பிப்ரவரி 13, 1879

பிறப்பிடம்: ஹைதராபாத்

இறப்பு: மார்ச் 2, 1949

தொழில்: கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பேச்சாளர், ஆளுநர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சரோஜினி நாயுடு அவர்கள், ஹைதெராபாத்தில், ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிப்ரவரி 13, 1879 அன்று பிறந்தார். அவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஒரு விஞ்ஞானி, கல்வியாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். அவர் ஹைதெராபாத்திலுள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனராவார். சரோஜினி நாயுடு அவர்களின், தாயார் பரத சுந்தரி தேவி ஒரு பெண் கவிஞர் ஆவார், மேலும், அவர் பெங்காலியில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். எட்டு உடன்பிறப்புகளில் மூத்தவராகப் பிறந்தார், சரோஜினி நாயுடு அவர்கள். அவரது சகோதரர்களுள் ஒருவரான பிரேந்திரநாத் ஒரு புரட்சியாளர். அவரது மற்றொரு சகோதரரான ஹரிந்திரநாத் ஒரு கவிஞர், நாடகக் கலைஞர், மற்றும் நடிகர் ஆவார்.

ஆரம்ப கால கல்வி

சரோஜினி நாயுடு அவர்கள், இளமையிலிருந்தே ஒரு அறிவுக்கூர்மை மிக்க மாணவியாக இருந்தார். அவர் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மற்றும் பாரசீக மொழிகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். அவர் தனது பன்னிரண்டு வயதில், சென்னை பல்கலைக்கழகத்தின் மெட்ரிக் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்று தேசிய புகழ் பெற்றார். அவரது தந்தை, அவரை ஒரு கணிதமேதையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ ஆக்க விரும்பினார். ஆனால் சரோஜினி நாயுடு அவர்களுக்குக் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே, அவர் ஆங்கில கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

கவிதைகள் மீது பற்று 

சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பில் சிறிது இடைவெளி விட்டு, பல்வேறு புத்தகங்களைப் படித்தார். பல கவிதைகள் எழுதிய அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஹைதெராபாத் நிஜாம், வெளிநாடு சென்று அவர் படிக்க உதவித்தொகையும் வழங்கினார். தனது 16 வது வயதில், அவர் இங்கிலாந்து சென்று, லண்டனிலுள்ள கிங் கல்லூரி படித்தார். பின்னர், கேம்பிரிட்ஜிலுள்ள கிர்டன் கல்லூரியில் கல்விப் பயின்றார்.  அங்கு அவர், அவரது சமகால புகழ்பெற்ற மேதைகளான ‘ஆர்தர் சைமன்’ என்பவரையும், எட்மண்ட் காஸ் என்பவரையும் சந்தித்தார். காஸ் அவர்கள், சரோஜினி நாயுடு அவர்களின் கவிதைகளில் இந்தியாவின் கருப்பொருள்களான – பெரிய மலைகள், ஆறுகள், கோயில்கள், சமூக சூழல், போன்றவற்றை ஒட்டியே எழுதுமாறு அவருக்கு அறிவுரைக் கூறினார். அவர் தற்கால இந்திய வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளைத் தனது கவிதைகளில் சித்தரித்தார். சரோஜினி நாயுடு அவர்களுடைய படைப்புகளான “தி கோல்டன் த்ரேஷோல்டு (1905)”, “தி பார்ட் ஆஃப் டைம் (1912)”,  மற்றும் “தி ப்ரோகேன் விங் (1912)” இந்திய மற்றும் ஆங்கில வாசகர்களை ஈர்த்தது.

காதல் மற்றும் இல்லற வாழ்க்கை

சரோஜினி நாயுடு அவர்கள், தனது பதினைந்தாவது வயதில், டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரை சந்தித்தார். அவரைக் காதலிக்கவும் தொடங்கினார். தொழில்ரீதியாக அவர் ஒரு மருத்துவராக இருந்த அவர் ஒரு அல்லாத பிராமணர். 19வது வயதில் சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பினை முடித்த பின்னர், உள் சாதி திருமணம் அனுமதிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில், அவர் டாக்டர் கோவிந்தராஜுலுவைத் திருமணம் செய்து கொண்டார். அது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருந்தாலும், சரோஜினியின் தந்தை அவரது முயற்சிக்கு முழுவதுமாக ஆதரவு தெரிவித்தார். சரோஜினி நாயுடு அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மணவாழ்வு அமைந்தது. அதன் அடையாளமாக அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் ஜெயசூர்யா,  பத்மஜ், ரந்தீர், மற்றும் லீலாமணி.

இந்திய தேசிய இயக்கத்தில் சரோஜினியின் பங்கு

1905ல், வங்க பிரிவினை எழுந்ததைத் தொடர்ந்து சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். இதன் மூலமாக, அவருக்கு கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநா தாகூர், முஹம்மது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசுவாமி ஐயர், காந்திஜி மற்றும் ஜவகர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்தியப் பெண்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்தெழச் செய்தார். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, அவர் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் இந்திய பெண்களுக்கான சுயமரியாதையை, அவர்களுக்குள் மீண்டும் கொண்டு வந்தார்.

சரோஜினி ஆற்றிய பணிகள்

சரோஜினி நாயுடு அவர்கள், ஜுலை 1919 ஆம் ஆண்டு, இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதராக நியமிக்கப்பட்டார். ஜுலை 1920ல் இந்தியா திரும்பினார். 1919 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசாங்கம், ‘விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதும்’ சட்டமான ‘ரௌலெட் சட்டத்தினைப்’ பிறப்பித்தது. இச்சட்டத்தை எதிர்த்துப் போராடும் விதமாக, மோகன் தாஸ் காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இவ்வியக்கத்தில் பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.

1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினி நாயுடுவும் ஒருவராவார்.

சரோஜினி நாயுடு அவர்கள், 1925ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவரையே சேரும்.

1925ல், சரோஜினி நாயுடு அவர்கள், கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார். சட்டமறுப்பு இயக்கத்தில், ஒரு முக்கிய பங்காற்றிய சரோஜினி அவர்கள், காந்திஜி மற்றும் பிற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். 1942ல்,  நடந்த “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது சரோஜினி நாயுடு அவர்கள், மீண்டும் கைது செய்யப்பட்டார். காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போது அவருக்கு, காந்திஜியுடன் ஒரு அன்பான உறவு ஏற்பட்டதால், காந்திஜி அவரை செல்லமாக “மிக்கி மவுஸ்” என்றே அழைத்தார்.

ஆகஸ்ட் 15,  1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு அவர்கள், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார். இவர் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’ என்ற பெருமையத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.

இறப்பு

சரோஜினி நாயுடு அவர்கள், மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.

காலவரிசை

1879: பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டில், ஹைதெராபாத்தில் ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.

1905:  வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.

1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார்.

1925: சிறையில் அடைக்கப்பட்டார்.

1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

1942: “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது, மீண்டும் கைது செய்யப்பட்டார்.

1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.

1949: மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.

மலையில் தேன் எடுக்கும் தனுஷ்..!



வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்றதை ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

தனுஷ்-வெற்றிமாறன் இணைந்தாலே வெற்றி தான் என்ற ரசிகர்களின் எண்ணத்தைப் போலவே ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற திரைப்படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் திரைப்படத்தில் மலை உச்சியில் தேன் எடுக்கும் தொழில் புரியும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் தனுஷ்.

வழக்கு என் 18/9, ஆதலால் லாதல் செய்வீர் திரைப்படங்களில் நடித்த மணிஷா யாதவ் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.