லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக முடிவெடுத்துள்ள சித்தி விரைவில் சூரியத் தொலைக்காட்சியை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
சித்தி மூலம் சேனலில் நுழைந்த அவர் படிப்படியாக ப்ரைம் டைமில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்.
நாட்டாமை கணவரின் கட்சி ஆளுங்கட்சியை ஆதரித்த போதும் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்தவில்லை சூரியச் சேனல்.
லோக்சபா தேர்தலில் தற்போது 40 தொகுதிகளிலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக நாட்டாமை அறிவித்துவிட்டார்.
சித்தியும் அவருடன் சுற்றுப்பயணம் செய்யப் போகிறாராம். இதனால் சூரியச் சேனலில் சித்தி நிறுவனத்தின் சார்பில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியல்கள் நிறுத்தப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
மனைவி பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் அதற்கு ஈடாக ரூ 50 கோடி வேண்டும் என்று இலை தரப்பிடம் நாட்டாமை கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எதற்கு அவ்வளவுப் பணம் என்று கேட்டதற்கு, மனைவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், சூரிய டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களையும் நிறுத்தி விடுவார்கள்.
அதனால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும். அதை ஈடு செய்யும் விதமாக, பணம் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு தலைமையோ இலை டிவியில ப்ரைம் டைம் ஸ்லாட் தருகிறோம் என்று கூறியதாகவும், சூரிய டிவி அளவுக்கு இலை டிவியில் டிஆர்பி ரேட்டிங் கிடையாது.
அதனால, பணமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டாராம் நாட்டாமை. அதற்கு அதிமுக தலைமையோ பார்க்கலாம் என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டாராம்.
சூரிய டிவிக்கும் சித்திக்கும் இடையே கிட்டத்தட்ட 15 வருடத்திற்கும் மேலாகவே நட்பு உள்ளது.
தொழில் வேறு அரசியல் வேறு என்று முடிவு செய்வார்களா? அல்லது சீரியல்களை உடனடியாக நிறுத்தி விடுவார்களா? என்பது போகப் போகத் தெரியும்.
0 comments:
Post a Comment