Sunday, 23 February 2014

வாட்ஸ் அப்பை போல இருக்கும் வேற சில அப்ஸ்கள்...!



இன்றைக்கு டெக் உலகம் அதிகம் பேசிக் கொண்டிருப்பது வாட்ஸ் அப்பை பேஸ்புக் 1 இலட்சம் கோடிக்கு வாங்கியதை பற்றி தாங்க.

சரிங்க இந்த வாட்ஸ் அப்பை விடுத்து வேற என்னலாம் இதேமாதிரி சேவைகளை வழங்கிவருதுன்னு பாக்கலாமாங்க.

இதில் வருபவற்றை பெருமாபாலும் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேங்க இதோ அவைகள்...

லைன் 

இதில் நீங்கள் ஒரு முறை ரிஜிஸ்டர் செய்தால் போதும்ங் உலகில் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக கால் செய்யலாம் நீங்கள்

பேஸ்புக் மெசன்ஜர்

 இது பேஸ்புக்கால் வழங்கப்படும் சேவைதாங்க

ஸ்கைப்

இது உலகம் முழுவதும் இலவச வீடியோ கால் செய்ய பயன்படும் அப்ளிகேஷன்ங்க

கிக்

 இது மெசேஜ் அனுப்ப பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்ங்க

வைபர்

 இது கால் மற்றும் மெசேஜ் அனுப்ப பயன்படுத்தும் அப்ளிகேஷன்ங்க...

சமையலில் செய்யக்கூடாதவை…! செய்ய வேண்டியவை….!





சமையலில் செய்யக்கூடாதவை…


* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.


* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.


* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.


* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.



* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.



* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.


* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.


* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.


* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.


* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.


* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக
காயக்கூடாது.


* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.




செய்ய வேண்டியவை….


* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.


* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.


* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.


* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.


*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.


* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.


* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.


* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.


* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.


*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்

டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்..!



டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!



டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.


Soft Data Cable


USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.

இந்த அப்ளிகேசனை(software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.


Download Link – தரவிறக்கச்சுட்டி


Install Soft Data Cable ( http://goo.gl/0jbJaz )


மேற்கண்ட இணைப்பின் வழிச்சென்று உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்போனில் இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவிடுங்கள்.

அடுத்து அந்த பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள் கணினி, டேப்ளட் பிசி, மொபைல் போன்ற சாதனங்களுடன் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

இதன் மூலம் எந்த ஒரு கம்பி இணைப்பு இல்லாமலேயே, கணினிக்கும், மொபைலுக்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் வேண்டிய தகவல்பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.


இந்த அப்ளிகேஷனின் பயன்கள்: (ஆங்கிலத்தில்)


BENEFITS WITH SOFTWARE DATA CABLE
The fewer cables to carry the better
The computer doesn’t need to have drivers it does need installed
Send photos, music, videos, apps etc. to other phones, tablets or TV anytime, anywhere
Auto-sync photos and other important files to computer or cloud storage (on a daily, weekly basis to backup data)
Extend mobile storage space without any cost

கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம்....?




கணவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌சில பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் மனை‌வி‌க்கு‌‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். ஆனா‌ல் பெரு‌ம்பாலான மனை‌விகளு‌க்கு‌, த‌ங்களது கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம் எ‌ன்று ஒ‌ன்று இரு‌க்குமானா‌ல் அது எதுவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று உ‌ங்களா‌ல் க‌ணி‌க்க முடியுமா?

தாய்க்குப் பின் தாரம் எ‌‌ன்று ஒரு பழமொ‌ழி உ‌ள்ளது. இதனை ச‌ரியாக உண‌ர்‌ந்தா‌ல் இ‌ந்த தவறு ச‌ரிசெ‌ய்ய‌ப்படு‌ம். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா பிள்ளையாக இருக்கிறார் என்பதுதான்.

பெ‌ற்று, ‌வள‌ர்‌த்து ஆளா‌க்‌கிய தாயை ம‌தி‌ப்பதோ, அவரது சொ‌ல்படி நட‌ப்பதோ ந‌ல்ல ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல், ‌திருமணமா‌கி த‌ன்னை ந‌ம்‌பி வ‌ந்த பெ‌ண்ணு‌க்கு‌ம் அ‌ந்த அள‌வி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் தர வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது. பொதுவாக எதை‌ச் செ‌‌ய்தாலு‌ம் அ‌ம்மா‌வி‌ன் அனும‌தியை‌ப் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்களு‌க்கு‌ம் அவரது சொ‌ல்படிதா‌ன் நட‌ப்பே‌ன் எ‌ன்று ‌நீ‌ங்‌க‌ள் ‌நினை‌த்தா‌ல் உ‌ங்களு‌க்கு சுயபு‌த்‌தி‌யி‌ல்லை எ‌ன்று மனை‌வி ‌நினை‌க்க வே‌ண்டி வரு‌ம்.

மேலு‌ம், உ‌ங்க‌ள் இருவரு‌க்கு‌ள் ‌இரு‌க்கு‌ம் ‌சில ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ளு‌ம், தா‌ய்‌க்கு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ல், ஒரு சுத‌ந்‌திர மன‌ப்பா‌ன்மையை உ‌ங்க‌ள் மனை‌வி இழ‌க்க வே‌ண்டி வரு‌ம்.

எனவே, எது ச‌ரி, எது தவறு எ‌ன்று முடிவெடு‌த்து அதனை உ‌ங்க‌ள் தா‌யி‌ன் கவன‌த்‌தி‌ற்கு‌ம் கொ‌ண்டு வ‌ந்து ‌நீ‌ங்க‌ள் செ‌ய்வ‌தி‌ல் தவ‌றி‌ல்லை.

ச‌ரி இ‌ப்படி ஒரு ஆ‌ண், தனது தா‌யி‌ன் பே‌ச்சை‌க் கே‌ட்டு நட‌ப்பதை ‌விரு‌ம்பாத பெண், எதிர் காலத்தில் தன்னுடைய மகன் அம்மா பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசை‌ப்படுவதையு‌ம் நா‌ம் பா‌ர்‌க்க முடி‌கிறது. பெற்றோர் மீது பாசமுள்ள கணவர்தான், மனைவி மீதும் பாசமாக இருப்பார் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

‌திருமணமானது‌ம் எ‌ல்லாமே மனை‌வியாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது‌ம் தவறு, உ‌ங்களது அ‌‌ன்பு, அ‌க்கறை போ‌ன்றவை தா‌ன், ஒரு ஆணு‌க்கு தா‌ய் செ‌ய்ய வே‌ண்டிய கடமைக‌ளி‌ல் ‌சி‌றிது தள‌ர்வை ஏ‌ற்படு‌த்துமே‌த் த‌விர, ‌அ‌திகார‌ம் அ‌ல்ல. எ‌‌ந்த‌ப் பெ‌ண்ணு‌ம் தனது கணவரை தா‌யை ‌வி‌ட்டு‌ப் ‌பி‌ரி‌த்து கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் இழ‌ப்பது உ‌ங்க‌ள் கணவ‌ரி‌ன் அ‌‌ன்பை‌த்தா‌ன். எனவே எதையு‌ம் உ‌ங்களது அ‌ன்பாலு‌ம், அ‌க்கறையாலு‌ம் ச‌ரி செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

அழகாகக் கோபப்படுங்கள்..!





பெரும்பாலும் காரணம் இல்லாமல் கோபம் வருவது இல்லை; ஆனால், மிக அரிதாகத்தான் அது நியாயமான காரணத்துக்காக வருகிறது - பெஞ்சமின் ஃபிராங்கிளின் வாரத்தை இது. ஆக, கோபம் என்பது மீண்டும் மீண்டும் ஓர் எதிர்மறை எண்ணமே என்பது தெளிவாகிறது. எண்ணங்கள் இல்லாமல் மனித மனம் கிடையாது. ஆகவே, கோபப்படுங்கள்; ஆனால், அதற்கு ஆட்படாதீர்கள். அதாவது அழகாகக் கோபப்படுங்கள்.


உளவியல் துறையில் கோபத்தை நிர்வகிக்க (Anger management) பயிற்சி அளிப்பதற்காகவே சிறப்பு வல்லுநர்கள் இருக்கிறர்கள். இவர்களிடம் பெரும் நிறுவனத்தின் உரிமையாளர்களும் உயர் அதிகாரிகளும் தங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக நிறுவத்தினரிடம் கோபப்படாமல் நடந்துகொள்வது எப்படி? அல்லது எந்த விகிதாச்சாரங்களில் கோபப்பட வேண்டும் என்கிற பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.


கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்; ஆனால், அதை வெளியேற்றும் விதங்களை, விகிதாச்சாரங்களை மாற்றி அமையுங்கள். அப்போதுதான் அக்கோபத்துக்கான பலன் கிடைக்கும். அல்லது குறைந்தபட்சம் அதனால் நேரும் எதிர்மறை விளைவுகள் தவிர்க்கப்படும். அதற்கு சில உபயோகமான யுக்திகளையும் சொல்லித்தருகிறது உளவியல்.


கோபம் ஒற்றை உணர்வு அல்ல. ஒரு கோபம் இன்னொன்றை, இன்னொன்று மற்றொன்றை என அது ஒரு சங்கிலித் தொடர்போல உருவாகிறது. அமைதியான குளத்தில் கல்லெறிவதுபோது ஏற்படும் அலைகள் போன்றது கோபம். ஒருமுறை கல் எறிவதுடன் நிறுத்திக்கொண்டால் அதுவாக அடங்கிவிடும். திரும்பத் திரும்ப கல் எறிந்தால் அடங்கவே அடங்காது. எனவே, கோபப்படும் வகையில் ஒரு நிகழ்வு நடந்த பின்பு திரும்பவும் அதையே நினைக்காதீர்கள். நினைக்க, நினைக்க கோபம் தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு பல்கிப் பெருகும்.


அப்படியும் அந்நிகழ்வை மறக்க முடியவில்லையா? உடனே கிளம்புங்கள் உல்லாசச் சுற்றுலாவுக்கு. ஆனால், இந்தச் சுற்றுலாவுக்கு பைசா செலவு கிடையாது. பஸ் பிடிக்கவும் தேவையில்லை. இது மன வெளியில் மேற்கொள்ளப்படும் பயணம் (Mental tour). உங்கள் குழந்தையின் முதல் முத்தமோ காதலியின் கன்னங்களோ உங்களின் சந்தோஷத் தருணங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.


கோபம் வருகையில் ஒரு செய்முறை. கண்ணாடி முன்பு நின்று கோபப்படுங்கள். உங்கள் முக பாவனைகளைப் பாருங்கள். ஒன்று, பயந்து பதறி விடுவீர்கள். இல்லை, அது பயங்கர காமெடியாக இருக்கும். சிரித்துவிடுவீர்கள். போயே போச்சு கோபம்!


நிகழ்வு நடந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பிவிடுங்கள். ஆனால், நண்பருடன் அல்ல, தனியாக. ஏனெனில் உடன் வருபவர் உங்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் கோபத்துக்கு எண்ணைய் வார்க்கலாம்.


கோபம் வருகையில் ஜோராக ஒரு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். தண்டால் எடுப்பது, பளு தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிடித்தமான விளையாட்டுகளை விளையாடலாம். இதுபோன்ற சமயங்களில் கோபத்தின் காரணமாக வெளியேறும் மனச்சோர்வுக்கான ஹார்மோன்கள் குறைந்து, மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் சுரக்கத் தொடங்கும்.


தாமதப்படுத்துங்கள். கோப உணர்வைக் காட்டத் துடிப்பதில் நீங்கள் காட்டும் ஒரு நிமிடத் தாமதம்கூட உங்கள் வாழ்வின் போக்கையே மாற்றக்கூடும். இதை நிருபிக்கப் பெரியதாக அறிவியல் ஆய்வுகள் ஏதும் தேவையில்லை. அடுத்த முறை யார் மீதேனும் உங்களுக்கு கடும் கோபம் ஏற்படுகையில் உடனடியாக அவரை மனதுக்குள் திட்டுங்கள். ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, முடிந்தால் மனவெளிப் பயணம் போய்விட்டு அவரை அழைத்துத் திட்டுங்கள். கோபம் பாதியாகக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.


எதிராளியின் இடத்தில் நின்று யோசியுங்கள். சமானியர்களும் மகான்களாகும் வாய்ப்பு இது. அடிப்படை மனிதப் பண்பு, மனித நேயம் இது. ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது எதிராளியின் இடத்தில் நின்று சிந்திக்கும்போது ஒன்று அவரது செய்கையின் நியாயம் புரியும். நீங்களும் அதுபோல் நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வரும். காணாமல் போகும் கோபம். அல்லது எதிராளியின் தவறு பிடிபடும். மன்னிப்பு எதிராளிக்கு மட்டுமல்ல; உங்களுக்கே அது ஓர் அருமருந்து. மன்னியுங்கள்!

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்..!




வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது.

நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து விடும். அதில் பி12-ம் அடங்கும். இதனால் ஆரம்பகட்டத்திலிருந்தே பி12 அதிகம் அடங்கியுள்ள மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவமாக இருந்தால், இவற்றிற்கு நிகரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.



கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர இருப்பதில்லை. அதனால் 30 வயதிற்குள்ளயே கால்ஷியம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளுங்கள்.

அப்படி இல்லையென்றாலும் கூட காலம் தாழ்த்திவிடாமல் கீரை வகைகள், பச்சைப் பூக்கோசு, அக்ரூட், சூடை மீன், நகர மீன், பரட்டை கீரை மற்றும் கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பு இல்லாத பால் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



மீன் வகைகள் நமது உணவில் மீன் வகைகளை நன்றாக சேர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த அமிலம் நமது உடலில் சுரப்பதில்லை. நகர, கிழங்கான், சூடை போன்ற கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகளான நீர்ப்பாசி, இறால் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.




பழங்கள் பழங்களில் உள்ள அதிகளவிலான சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்தையும் தருவதால் அவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலநிலையிலும் பல பழங்கள் எளிதில் நமக்கு கிடைக்கின்றன. பழங்கள் எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவர்கள் இனிப்பு அதிகம் சேர்க்க கூடாது. ஆனால் பழங்களில் உள்ள இனிப்பு அவர்களின் சர்க்கரை அளவை பாதிப்பதில்லை.



பழச்சாறுகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். அவர்களால் கடின உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது. நமது உடலில் உணவுகளின் எளிதான செரிமானத்திற்கும், சிறந்த நீறேற்றியாகவும் பழச்சாறு பயன்படுகிறது. மேலும் நமது உடலால் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது பழச்சாறு.



முழு தானிய வகைகள் முழு தானிய உணவுகளான கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கைகுத்தல் அரிசி போன்றவை நமது உடலில் பசியை தூண்டி, சர்க்கரை அளவில் நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

நாம் அனைவரும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை விடுத்து, முழு தானிய வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவை உங்கள் பசியை சீராகி சர்க்கரையை மெதுவாக உங்கள் உடலில் சேர்க்கும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணுவதை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவில் அபரிமிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்..!



கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்..!




               பரம எதிரியின் வாயாலும் பாராட்டு பெற வேண்டும். அதுதான் நாம் மாறியதற்கான அடையாளம்.


துரோகியையும் அன்னை யாகக் காண்பதுதான் ஆத்ம ஞானமாகும்.

நமது ஆழ்மனதில் மறைந்துள்ள ஆன்மாவை வெளிக்கொண்டு வரவே நமக்கு துரோகம் செய்கிறார் கள். இதைப் புரிந்து கொள்வது பூரண ஞானம்.

எதிரி நம் வாழ்வைச் சிறப்பாக்கும் சிற்பி என்று உணர்ந்தால், அவர் நமக்கு எதிரியில்லை; ஆன்மிகத் தோழன்.


தன்னுடைய குறைகளை மட்டும் திருத்திக் கொள்பவருக்கு யாராலும் தொந்தரவு வராது. லட்சியத்தோடு வாழ்பவர்கள் இறைவனை சுலபமாக நெருங்கிவிட முடியும். சராசரி மனிதனாக இருக்கும் வரைதான் பிரச்சினை வரும். சமூகப் பழக்கங்களை விட்டு விலகி இறைப்பண்புகளை ஏற்றுக் கொண்டால் இன்பம் மட்டுமே உண்டு.


இழந்தது எவ்வளவு பெரியதானாலும்- எவ்வளவு நாள் கடந்ததானாலும் பிரார்த்தனை அதனைப் பெற்றுத் தரும்.


வீட்டில் சுத்தம் இருந்தால்- நல்ல பழக்கங்கள் இருந்தால் தீய சக்திகள் வரவே முடியாது.


எவரின் மனம் அவருக்கு அடங்குகிறதோ அவர் தெய்வத்தைவிட உயர்ந்தவர்.

நாள்தோறும் தண்ணீர், மின்சாரம், நேரம் விரயமாவதைத் தவிர்க்க வேண்டும். அருள் விரயமாவதன் ரகசியம் இதுவே. பேசும்போது 100 வார்த்தைகளில் 90 வார்த்தைகளைத் தவிர்க்கலாம். அளவோடும் கனிவாகவும் பேசினால் முன்னேற்றத் திற்கு வேண்டிய சக்தியைச் சேமித்து உயரலாம்.

குறைந்த பட்ச கடனாக இருந்தாலும் மறக்காமல் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் வரவேண்டிய பணம் வராது. எதிர்பார்த்த வாய்ப்புகளும் தடைப்படும்.


தேவையற்ற பொருட்களை வீட்டிலோ அலுவலகத்திலோ முடக்கி வைக்கக் கூடாது. இது வாழ்வின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். கடும் நோய்களுக்கும் கடன் தொல்லைகளுக்கும் இதுவே காரணம். அடுத்தவர் கண்ணோட்டத் தையும் சரி என ஏற்கும் மனப்பான்மை வரவேண்டும். மனம் உயர இதுவே சிறந்த வழி.


குறித்த நேரத்தில் செயல்படும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். முறையாகத் திட்டமிட்டு, எந்தச் செயலையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுச் செய்யும் பழக்கம் வெற்றியை மட்டும் கொடுக்கும்.

பொறுத்துக்கொள்ள முடியாத இடத்தில் எல்லாம் பூரண மௌனத்தைக் கடைப்பிடித்து வெற்றி காண வேண்டும். வேண்டிய வரம் உடனே பெற இது சிறந்த முறை.


உங்கள் குரலைத் தாழ்த்தி, எதிரில் உள்ளவருக்கு மட்டும் கேட்கும் அளவுக்குப் பேசுவது உயர்ந்த குணம். தற்செயலாகக் காதில் விழுவதும், கண் முன்னால் நடப்பதும் தற்செயலானவை அல்ல. அது நம் வாழ்வில் நடக்கப் போகும் அறிகுறிகளாகும். நாம் விழிப்பாக இருந்தால் அவை நற்பலன்களாக முடியும்.

தினமும் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

அதற்குத் தியானம் உதவியாக இருக்கும். வளர்ச்சி வேண்டு மெனில் பேசும் பேச்சுக்களின் தரத்தை நாளுக்கு நாள் உயர்த்த வேண்டும். நமது நடவடிக்கைகள் யாவும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும்.

தவறு என்று தெரிந்ததும் அதைச் செய்ய மறுப்பவருக்கு வருமானத் தட்டுப்பாடு வராது. அதிர்ஷ்டம் வேண்டும் என்ற ஆர்வம் தீவிரமானால் அதிர்ஷ்டம் அரை நிமிடம்கூட காத்திருக்காது.


யார்மீது கோபம் வந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுவிடுங்கள். கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்டுவிடுவது கருமத்தைக் கரைக்க உதவும்.

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்கும் வழிகள்..!



பருக்களை கிள்ளுவதால் வடுக்கள் தோன்றுகிறது. பருக்கள் காய்ந்ததும் அதை பிய்த்து எறியும் போது, அந்தப் பகுதியில் கருமை படர்ந்து தழும்பாகி விடுகிறது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கு இங்கே நான் சொல்லப் போகும் சிகிச்சைகளை செய்து பாருங்கள்.

கருமை நீங்கி, முகம் பொலிவாகிவிடும். கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு,கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளுங்கள். தினமும் குளித்து முடித்ததும், இந்தப் பவுடரை முகத்தில் பூசி நன்றாக தேய்த்துக் கழுவுங்கள்.

கோரைக்கிழங்கு, முகத்தில் இருக்கும் அநாவசிய முடிகளை அகற்றும், பூலான் கிழங்கும், கஸ்தூரி மஞ்சளும் தோலை மிருதுவாக்கி, வடுக்களை மறைய செய்யும்.

* இன்னொரு சிகிச்சை.... சர்க்கரை 1 டீஸ்பூன், ஜாதிக்காய் பவுடர் அரை டீஸ்பூன்.... லவங்க பவுடர் - அரை டீஸ்பூன், சந்தனம் 1 டீஸ்பூன்... இவற்றை ஏடு இல்லாத தயிரில் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். கன்னத்தில் ஏற்பட்ட பள்ளத்தின் மீது வைத்து பக்கவாட்டாக சுற்றி 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர... முகம் குளிர்ச்சியாகி, பள்ளம் விழுந்த இடம் நாளாவட்டத்தில் சமமாகிவிடும்.

* மூன்றாவது வழி... பசுமஞ்சள் கிழங்கு 1, வேப்பந்தளிர் கொஞ்சம் - இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கப் போகும்முன் முகத்தை கழுவி, இந்த விழுதை வடுக்களை மூடுவது போல் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை மறைந்து தோல் மிருதுவாகும். அடுத்ததாக ஆவி பிடிப்பதும் வடுக்களையும், கரும்புள்ளிகளையும் போக்கும். ஆவி பிடிக்கும் போது தினமும் அதில் வேப்ப இலை, வெட்டி வேர், எலுமிச்சம்பழ சாறு, துளசி இலை ஆகியவற்றில் தினமும் ஏதாவது ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும்.

ஆவி பிடித்து முடிந்ததும் ஐஸ் பேக் வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்கலாம்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா..?



கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு இயல்பான குழந்தைகளைப் போன்றே காது கேட்கும். கருவளர்ச்சியின் போது கருவின் 3-வது வாரத்திலேயே காதின் மொட்டு உருவாக்கம் நடைபெறுகிறது.

ஏழாவது வாரத்தில் புறச்செவி( வெளியில் இருக்கும் காது உறுப்புகள்) உருவாகிறது.

மேலும் மூன்று, நான்கு மாதங்களில் குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் உருவாகி வளர்ச்சியடையத் தொடங்குகின்றன.

இதனால் கருவில் இருக்கும் குழந்தை தனது தாயின் குரலையும், தந்தையின் குரலையும் கருவிலேயே கேட்டுக் கொள்கின்றன.

இதனால் பிறந்தவுடன் தனது தாய், தந்தையரை எளிதாக உணர்ந்துக் கொள்கின்றன.

நிறைமாத கர்ப்பிணியின் அருகில் அதிக சத்தங்களை உண்டாக்குவது (தீபாவளியின்போது வெடி ஓசை எழுப்பினால்) கருப்பையிலுள்ள குழந்தையை அதிர்ச்சிக்கு உள்ளாகிறது என்பது அனுபவ உண்மை.

டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த கோதுமை பழக்கஞ்சி..!



தேவையானவை:

கோதுமை மாவு - 2 டீஸ்பூன்,
பால் - ஒரு கப்,
பனங்கற்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்,
வாழைப்பழம், ஆப்பிள் - தலா ஒரு துண்டு,
கமலா ஆரஞ்சு சுளைகள் - 4.

செய்முறை:

* கால் டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

* பழங்களை விதை நீக்கி மிக்ஸியில் மசிக்கவும்.

* மீதமுள்ள பாலை நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.

* இத்துடன் கரைத்த மாவு, பழக் கூழ், பனங்கற்கண்டு, சேர்த்துக் கலக்கி பருகக் கொடுக்கவும்.

முதலிரவும் இனிக்கும். முழு வாழ்க்கையும் இனிக்கும் - இதைப் படித்தால்..!



முதலிரவு எல்லா பெண்களுக்கும் சுவையான அனுபவமாக அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு சூடுபட்ட அவஸ்தையை தோற்றுவித்துவிடுகிறது. முதலிரவு என்பது பெண்களுக்கு வலியும் வேதனையும் தரக்கூடியது என்ற சிந்தனை பெண்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

இதுபோல பல பெண்கள் வேண்டாத விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது புதிய வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிவிடும். அதனால் மகளை திருமணத்திற்கு தயார் செய்யும் பெற்றோர், முதலில் அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கணிக்கவேண்டும்.

அதில் அஜாக்கிரதையுடன் நடந்துகொண்டால் அதுவே அவளது குடும்ப வாழ்க்கையை புதைகுழிக்குள் தள்ளிவிடும். திருமணத்துக்கு முன்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டாலும் அதை மனதில் இருந்து தூக்கிப் போட்டு விட்டு இனி வரும் வாழ்க்கையை நேர்மையாக வாழும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தவறுகள் யாரும் தெரிந்து செய்வதில்லை. அதை தாண்டி வர பழகிக்கொள்ள வேண்டும். தான் ஒரு நேர்மையான நல்ல மனைவி என்று பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலிரவில் வேண்டாத விஷயங்களை கணவரிடம் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

ஒருவேளை அது கடைசிகாலம் வரை தீர்க்க முடியாத சிக்கலை உருவாக்கிவிடும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் வாட்டி வதைத்து கசப்பாக்கி விட அனுமதித்துவிடக் பெண்கள் மனதளவில் நன்றாக தயாராகி, முந்தைய தவறுகள், குழப்பங்கள், பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு தெளிவான சிந்தனையோடு, உறுதியான ஒழுக்கத்தோடு வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கவேண்டும்.

அவ்வாறு செய்தால் முதலிரவும் இனிக்கும். முழு வாழ்க்கையும் இனிக்கும்.