கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை வரும் மார்ச் மாதம் 15ம் தேதி மிக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரும் என கௌதம் மேனன் உறுதியாக கூறிவருகிறார்.
சமீப காலமாக வந்த படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்த அஜீத்தை கௌதம் மேனன் முற்றிலும் மாற்றுவதற்கு தயாராகிவிட்டார். சுமார் 10 கிலோ அஜீத்தின் எடையை குறைத்து இளமையான தோற்றத்தை ஏற்படுத்த தற்போது தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறார் கௌதம் மேனன்.
ஹாலிவுட் மேக்கப்மேன்கள் அஜீத்தின் தோற்றத்தை முடிவு செய்கிறார்கள். இந்த படத்தில் அஜீத்தின் கேரக்டர் இளமையானது என்பதால் மேக்கப்பின் உதவி மட்டுமின்றி உண்மையிலேயே அஜீத்தை இளமையாக மாற்ற கௌதம் மேனன் முடிவு செய்திருக்கிறார்.
இந்த படத்திற்கு ஹீரோயின் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அனுஷ்காவிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பிரபல ஹிந்தி நடிகையிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மேலும் மங்காத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் அர்ஜூன் நடித்தது போன்று இந்த படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல நடிகரை நடிக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு என்றும், ஆனால் கௌதம் மேனன் பின்னர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் தெரிகிறது. சிம்புவை வைத்து கௌதம் மேனன் ஏற்கனவே ஒரு படம் எடுத்துக்கொண்டிருப்பதால் இதிலும் சிம்புவை நடிக்க வைத்தால் அதே ஸ்டைல்தான் இந்த படத்திலும் கிடைக்கும் என்பதால் சிம்புவை தவிர்த்தாராம் கௌதம் மேனன்.
அந்த பிரபல நடிகர் யார் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறார் கௌதம் மேனன்.
0 comments:
Post a Comment