Thursday, 20 February 2014

பாலு மகேந்திரா இல்லாவிட்டால் நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன் – பாலா



பாலு மகேந்திரா போன்ற ஒருவரிடம் மட்டும் நான் சிக்கியிருக்காவிட்டால், நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன் என்று இயக்குநர் பாலா கூறியுள்ளார்.

தன்னை பாலு மகேந்திராவின் மூத்த பிள்ளை என்று எப்போதும் கூறுபவர் பாலா. பாலு மகேந்திராவும் கூட அப்படித்தான் கூறிப் பெருமை கொள்வார்.

இந்த நிலையில் பாலுமகேந்திரா குறித்த தனது நினைவுகளை ஆனந்த விகடன் மூலமாக தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பாலா – உருக்கமாக.

ஞானத் தகப்பன் விடைபெற்றுவிட்டான். ´அப்புக்குட்டி அப்புக்குட்டி´ எனக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குருநாதன்.

பாலுமகேந்திரா என்கிற ஒருவர் மட்டும் இல்லையென்றால், நானெல்லாம் 10, 15 வருடங்களுக்கு முன்பே செத்துப்போயிருப்பேன்.

மூர்க்கனாகத் திரிந்தவனை மனுஷனாக்கியதே அவர்தான். தன் வீட்டில் தங்கவைத்து, கெட்டவை திருத்தி, நல்லவை காட்டி, சோறு போட்டுத் தொழில் கற்றுக்கொடுத்தவர்.

25 வருட உறவு இது.

எனக்கும் அவருக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டைதான். ´ஆறு மாசத்துக்கு ஒரு சண்டை போடலேன்னா, உனக்குத் தூக்கம் வராதுல்லடா´ என்பார்.

அகிலாம்மா என் தாய். எங்கள் சண்டைக்குள் ஒரு நாளும் வரமாட்டார். சாருடன் முறைத்துக்கொண்டு திரிந்தாலும் அகிலாம்மாவைப் பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடியாது.

ஐந்து படங்கள் சாரிடம் அசிஸ்டென்டாக வேலை பார்த்திருக்கிறேன்.

அவருக்கே தெரியாமல் அவரிடம் வேலைக்குச் சேர்ந்தவன் நான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடைசி அசிஸ்டென்ட். படிப்படியாக படம் படமாக வளர்த்து இணை இயக்குநர் ஆக்கி அழகு பார்த்தவர்

படம் பண்ண விரும்பிக் கிளம்பியபோதுகூட, விட்டுவிட மனம் இல்லாமல் பிடிவாதம் பிடித்தவர்.
என்று குறிப்பிட்டார் இயக்குனர் பாலா.

இது கதிர் வேலன் காதல் - உதயநிதி..!



ஆஞ்சநேய பக்தரான ஹீரோவுக்கு பூக்கும் காதல், தடை தாண்டி வெல்லும் கதை. காதல் திருமணம் செய்த அக்கா சாயா சிங், மாமாவிடம் கோபம் கொண்டு சொந்த வீட்டுக்கு வருகிறார். மாமாவை சமாதானம் செய்ய, கோவை செல்கிறார் ஹீரோ.

அவர் வீட்டுக்கு எதிரில் இருக்கும் நயன்தாராவின் அழகில் மயங்க, அங்கேயே டேரா போடுகிறார். விரட்டி விரட்டி காதலிக்கிறார். பிறகு முளைக்கிறது புதுப் புது சிக்கல்கள். நண்பன் உதவியுடன் காதலையும் காதலியையும் ஹீரோ எப்படி ஜெயிக்கிறார் என்பதை பாதி காமெடி மீதி சென்டிமென்ட் என சொல்லியிருக்கிறார்கள்.

ஆஞ்சநேய பக்தராக உதயநிதி. அப்படியென்ன அழகி என்று நயன்தாராவை பார்த்ததும் காதலில் விழுவது, அவருக்காகப் பின் தொடர்வது, அப்பாவுக்கு பயப்படுவது என உதயநிதி நடிப்பில் நல்ல முன்னேற்றம். நடனத்திலும் அசத்துகிறார். சந்தானத்துடன் காமெடி ஏரியாவிலும் கலக்குகிறார். படத்தை மொத்தமாக ஆக்கிரமித்து கொள்கிறது நயன்தாராவின் அழகு. அவரது சின்ன அசைவுகள் கூட ரசிக்க வைக்கிறது. மோதலில் ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் காதலுக்குள் விழும் அவரது கேரக்டரைசேஷன் அருமை.

தனது நண்பன் சுந்தர் பற்றி ஹீரோ சொன்னதை நம்பாமல் பேசிவிட்டு பிறகு அதை நினைத்து உருகும்போது பீல் பண்ண வைக்கிறார். நடிக்க அதிக வாய்ப்பில்லை என்றாலும் கிடைத்தவரை சரியாகச் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் அவருக்கான காஸ்ட்யூம்ஸ் ரகளையாக இருக்கிறது. இந்தப் படத்திலும் ஹீரோவுக்கு நண்பனாக சந்தானம்.

அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும், சிதறுகிறது சிரிப்பு. நடை சாத்துன பிறகு கோயிலுக்கு போகக் கூப்பிடறதும் கடை சாத்துன பிறகு கட்டிங் அடிக்க கூப்பிடறதும் உன் வழக்கம்டா, புண்ணாக்கு வேணுன்னா எருமையா இருக்கணும். பொண்ணு வேணும்னா பொறுமையா இருக்கணும் என்பது போன்ற சந்தானம் பிராண்ட் காமெடி ரசிக்க வைக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்காவாக சாயா சிங். அந்தப் பெண்ணை பார்த்திராதடா. காதலிச்சிராதடா என்று உசுப்பேற்றியே காதலிக்கத் தூண்டும் கேரக்டர். அவருடைய கணவனாக வரும் பரத் ரெட்டி, அம்மாவாக வரும் சரண்யா, அப்பா நரேன், நண்பன் முருகதாஸ், கொடூரமாக பார்க்கும் சுந்தர் ராமு, ஜெயப்பிரகாஷ், நயன்தாராவின் தோழியாக வருபவர் என அனைவரும் சிறப்பான தேர்வு. சின்ன சின்ன இடங்களில் கவனிக்க வைக்கும் இயக்குனர், திரைக்கதையை இன்னும் அழுத்தமாக அமைத்திருக்கலாம். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பாடல் காட்சிகளில் வெளிநாட்டு குளிர்ச்சியைத் தருகிறது பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு.

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான சில டிப்ஸ்..!




சலூனுக்குச் சென்று அல்லது விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி அக்குள் முடிகளை எடுக்கும் முயற்சியில் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். முடியை எடுக்க உதவும் கிரீம்களின் விலையும், மற்ற இடங்களுக்கு சென்று அதை எடுக்க ஆகும் செலவுகளும் மிகவும் உயர்நது விட்டன.

ஆனால் இப்பொழுது, நாம் வீட்டிலிருந்த படியே அதிகம் செலவு செய்யாமல், கருமைத் தோற்றத்தைத் தரும் அக்குளில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும். இதை செய்யும் முறையை நாம் கீழ் காணும் பகுதியில் பார்க்கலாம். உங்களுடைய அக்குளில் உள்ள முடிகளை ஆபத்தில்லாமல் நீக்கும் வகையில் இயற்கையான கலவைகளை இப்பொழுது உங்களால் பெற முடியும். இதற்கு தேவையான பொருட்களை சரியான அளவுகளில் எடுத்து பயன்படுத்தினால் தான் நமக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான வழிமுறைகள்:


  •  இரண்டு கோப்பை சர்க்கரை, ¼ கப் தண்ணீர், ¼ கப் தேன், மற்றும் ¼ கப் புதிய எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு செப்பரேட்டரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அந்த சாஸ்பேன் அல்லது செப்பரேட்டரை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். குறைந்த நெருப்பில் இதை கொதிக்க செய்யுங்கள். இதை ஏறத்தாழ அரை மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். அப்போது இதன் நிறம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திற்கு மாறி விடுகின்றது. 246 டிகிரி வரும் வரை கொதிக்க விடுங்கள். இப்போது அந்தப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து அறை வெப்பநிலையில் வைத்து குளிரச் செய்யுங்கள்.
  • உங்கள் அக்குள் பகுதியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் கழுவியதும் நன்கு துடைத்து உலர வைத்து வியர்வை வராத அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குழந்தைகள் பயன்படுத்தும் பவுடரை அங்கு போடுங்கள். இது இவ்விடத்தில் உள்ள எஞ்சிய ஈரத்தையும் எண்ணை பதத்தையும் உறிந்து கொள்ளும்.
  • இப்போது இயற்கையாக செய்யப்பட்ட இந்த மெழுகு கலவையை ஒரு ஸ்பூன் அல்லது கைகளை வைத்தே அக்குளில் தடவ வேண்டும். ஒரு வேளை நீங்கள் இதை முதல் முறையாக பயன்படுத்தினால் உங்கள் உடம்பில் ஒரு சிறிய பகுதியில் முதலில் பயன்படுத்தி பாருங்கள். இவை எந்த விதத்திலாவது அலர்ஜியை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது. முடி உள்ள கையின் மேல் பகுதி அல்லது கால் ஆகிய இடங்களில் இதை பயன்படுத்தி எவ்வாறு செய்வது என்று உறுதியாக கற்றுக் கொண்டு பின்னர் அக்குளில் பயன்படுத்தி தேவையற்ற முடியை எடுக்க முயலுங்கள். இது எந்தவிதமான அலர்ஜியையும் ஏற்படுத்தவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், இந்த கலவையை உங்களுடைய அக்குளில் தைரியமாக தடவலாம்.
  • அக்குளில் தடவிய கலவையை சிறிது நேரம் கழித்து அடுத்த கையை வைத்து எடுங்கள். ஆதை எடுக்கும் போது அக்குளின் தோலை மிக உறுதியாக இழுத்து பிடிக்க வேண்டும். அப்போது தான் வலி ஏற்படாது. விரைவாக அங்கு ஒட்டியிருக்கும் மெழுகு போன்ற கலவையை பிடுங்கி எடுக்க வேண்டும். இவ்வாறு அழுத்தமாக இழுக்கும் போது தான் அந்த இடத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.
  •  அனைத்து முடியையும் எடுத்த பிறகு மெழுகு கலவை ஏதேனும் மீதமிருந்தால் அதை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கழுவி விட வேண்டும். இந்த காரியத்தை செய்த பின் நல்ல மாய்ஸ்ட்ரைஸரை பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் தோலை மிருதுவாகவும் மற்றும் மென்மையாகவும் வைக்கும்.
இந்த மெழுகு போன்ற இயற்கையான கலவையை குளிர்ந்த இடத்தில் வைத்து, எப்போதெல்லாம் முடியை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இதை எடுத்து பயன்படுத்த முடியும்.

இதை உங்கள் கால், கைகள் மற்றும் அக்குள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம்.

இதனை செய்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்து நெடுநாட்களுக்கு பயன்படுத்தலாம்.

விஜய்யை பக்காவாக மாற்றிய‌ முருகதாஸ்...!



ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய், இதுவரை தான் நடிக்காத புதிய பாணிக்கு மாற்றியிருக்கிறார்.
சமீப காலங்களாக முன்னணி நாயகர்கள் சிலர் கெட்டப் சேஞ்ச் என்று உடலை வருத்திக் கொள்வது அல்லது ஹேர் ஸ்டைல் மாற்றிக் கொண்டு தன்னை வித்தியாசப்படுத்திக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், மங்காத்தா தொடங்கி வீரம் வரைக்கும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்து அசத்தியிருந்தார் தல அஜித்.

இதையடுத்து கௌதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில், தனக்கு சீரியல் கில்லர் கதாபாத்திரம் என்பதால் தனது தோற்றத்தையும், இதுவரை இல்லாத அளவிற்கு தனது ஹேர் ஸ்டைலையும் அதிரடியாக மாற்றி வருகிறார் அஜித்.

இவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் விஜய்யும் தனது ஹேர் ஸ்டைலை இதுவரை தான் நடிக்காத புதிய பாணிக்கு மாற்றியிருக்கிறார்.

அப்படத்தில் இரண்டு வேடம் என்பதால் அழகிய தமிழ் மகனைப் போன்று சாதாரணமாக இல்லாமல், தன்னை முற்றிலுமாக வேறுபடுத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக உடற்கட்டு மட்டுமின்றி, ஹேர் ஸ்டைலை அதிக வித்தியாசப் படுத்திக் காட்டுகிறாராம்.

முன்னதாக, பாலிவுட்டில் இருந்து ஒரு ஹேர் டிரஸ்ஸரை வரவைத்து அவர் கொடுத்த சில கருத்துக்களைக் கொண்டு விஜய்யை பக்காவாக மாற்றியிருக்கிறார் முருகதாஸ்.

தற்போது முதல் கெட்டப்பில் நடித்து வரும் விஜய், அடுத்து இன்னொரு கெட்டப்பிற்காகவும் வேறொரு பாணியில் ஹேர் ஸ்டைலை மாற்றி நடிக்கிறாராம்.