Saturday, 22 March 2014

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள் - உங்களுக்காக...!




உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.

ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

பார்லி :

தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.

கத்திரிக்காய் :

கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ் :

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஓட்ஸ் :

ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை :

பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

சோயா பொருட்கள் :

சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பூண்டு :

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

வெண்டைக்காய் :

கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ரெட் ஒயின் :

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

பீன்ஸ் :

அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

மார்கரைன் :

இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

அவகேடோ :

இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

உடலை வலுவாக்கும் மூங்கில் நெல் (Bamboo Rice) - என்ன புதுசா இருக்கா..?


உடலை வலுவாக்கும் மூங்கில் நெல் (Bamboo Rice)


மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள்.

முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன.

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.

மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அந்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.

உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை.

அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தைப் பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குத்தான் படையெடுக்கும்.

அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும். இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கு.

அஜித் இந்த விஷயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது..!




அஜித் இந்த விஷயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது!

விஜயகாந்த் நடிகராக இருந்த காலத்தில், ஐந்தாயிரம் ரூபாய் தையல் மிஷின் வழங்குவதை ஐம்பதாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்வார்.

எத்தனை லட்சம் உதவி செய்தாலும் வெளியே தெரியாமல் ரகசியமாக செய்வார் – ரஜினிகாந்த்.

 இளம் தலைமுறை நடிகர்களில் விஜய், விஜயகாந்த் மாதிரி.

எந்தவொரு உதவிகளைச் செய்தாலும் ஊரைக்கூட்டித்தான் கொடுப்பார் விஜய். பத்து ரூபாய் நோட்புக் கொடுப்பதைக் கூட பத்திரிகையாளர்களை அழைத்துத்தான் கொடுப்பார்.

சில மாதங்களுக்கு முன் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு 5 லட்சம் கொடுத்ததும் இப்படிப்பட்ட பப்ளிசிட்டி ரகம்தான்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அஜித், ரஜினிகாந்த் மாதிரி. தன் வருமானத்தில் பெரும்பகுதியை நலிந்தவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தி வருகிறார் அஜித்.

உதவி பெறுபவர்களுக்கே இது அஜித் செய்த உதவி என்று தெரியாமலே ஏராளமான பேருக்கு உதவிகளை செய்திருக்கிறார் அஜித்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் அஜித், தன்னிடம் பணிபுரிபவர்களை மட்டும் சும்மாவிட்டுவிடுவாரா என்ன? கேளம்பாக்கம் அருகில் 12 கிரவுண்ட் நிலத்தை வாங்கி, தன்னிடம் வேலை பார்க்கும் 12 பேருக்கு கொடுத்ததோடு, அந்த நிலத்தில் தன் செலவிலேயே வீடும் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்த இடமும் வீடும் தான் வாங்கிக் கொடுத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியமே வாங்கிக் கொண்டாராம்.

விஜய்யோ தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் வாடகை வாங்கிக் கொண்டுதான் வீடு கொடுத்திருக்கிறார்.

 அஜித் இந்த விஷயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது!

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்..! - உங்களுக்காக...




பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

மருத்துவப் பயன்கள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க:

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு:

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

இஞ்சி 5 கிராம்

பூண்டு பல் 5

நல்ல மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 5 இணுக்கு

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்..? கவலையை விடுங்க...




கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி..! - கொஞ்சம் கேளுங்க...




நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

பயமுறுத்துகிறதா பருமன்..? - இதப்படிங்க...!





கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:

அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது.

வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

அனுஷ்கா சர்மாவும், வீராட் கோலியும் அடித்த கூத்தால் , முக்கிய பொறுப்புகளிலிருந்து நீக்கம்...




இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீராட் கோலியும் காதலித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இதன்காரணமாக, அனுஷ்கா சர்மா வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் கோலியும் அங்கு செல்வார்.


அதேபோல் தனக்கு படப்படிப்பு இல்லாத நாட்களில் கோலி வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடும்போது அனுஷ்கா சர்மாவும் அங்கு சென்று அவருடன் ஜாலியாக ஊர் சுற்றுவார். இது தொடர்கதையாகி விட்ட நிலையில், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியின்போது,


 டோனி இல்லாததால் அவருக்கு பதிலாக வீராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த போட்டியில் இறுதி போட்டிக்குகூட இந்தியா தகுதி பெறவில்லை. ஆனால் அந்த தோல்வியைப்பற்றி துளியும் கவலைப்படாத கோலி, அதையடுத்து,


அனுஷ்கா சர்மாவை இலங்கைக்கு வரவைத்து அவருடன் அங்குள்ள கடற்கரையில் ஜாலியாக கும்மாளம் போட்டிருக்கிறார். இந்த போட்டோக்கள் இணையதளங்களில் பரவியதையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்தவர்கள் வீராட் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.


இதையடுத்து நடிகையுடன் ஜாலி டூர் அடிக்கும் வீராட்டுக்கு விளையாட்டில் போதிய ஈடுபாடு இல்லை என்று சிலர் அவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்களாம்.


இதையடுத்து அணியில் முக்கிய பொறுப்புகளை அவருக்கு கொடுப்பதற்கு சிலர் எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறார்களாம்.

சூர்யாவுக்கு நோ சொன்ன நடிகைக்கு, போட்டியா களமிறங்கிய கவர்ச்சி புயல்...!




சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படத்தில் வரும் ஒரு குத்துப்பாடலில் நடனம் ஆட பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மறுத்துவிட்டார்.

பாலிவுட் படங்களுக்கு மட்டுமே தான் ஒரு பாடலுக்கு ஆடுவேன் என்றும் மற்ற மொழி படங்களில் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் க்ளைமாக்ஸிற்கு முன்னர் ஒரு அசத்தலான குத்துபாட்டு வர இருக்கிறது. இந்த பாடலில் ஆடுவதற்கு முதலில் சோனாக்ஷி சின்ஹா ஒப்புக்கொண்டார். ஆனால் திடீரென படப்பிடிப்பு ஆரம்பிக்க இரண்டு நாள் இருக்கும்நிலையில் தன்னால் இந்த பாடலுக்கு நடனம் ஆட முடியாது என்று மறுத்துவிட்டார்.

அதன் பிறகு இயக்குனர் லிங்குசாமி ‘தேசி பாய்ஸ்‘ என்ற படத்தில் அசத்தலாக நடித்த Chitrangada Singh என்ற நடிகையை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். படுபயங்கர கவர்ச்சி உடையில் இவருடைய குத்துப்பாட்டு நடனம் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்தின் இசையமைப்பு பணியை ஏற்றுள்ளார். இந்த பாடல் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சைவம் படத்துக்காக தன் முடியை இழந்தார் நடிகர் நாசர்




நடிகர் நாசர், நடிப்பில்  தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர் , தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார்  என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு.


இதோ மற்றொன்று .சமீபத்தில் இயக்குனர்  விஜயின்  ' சைவம் ' படப்பிடிப்பின் போது , அவர் ஏற்று நடித்துள்ள ஒரு முதியவர் கதா பாத்திரத்துக்கு என்று  பிரத்தியேகமாக சிகை அலங்காரத்தில் ஒரு மாற்றம் செய்ய  வேண்டி இருந்தது , அவரது முன்னதலையில் ஒரு பகுதியை சவரம் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை .


இதனால் அவர் தற்போது நடிக்கும்  மற்ற படங்கள் பாதிக்க படுமோ என்று தயங்கிய போது   இயக்குனர் விஜய் ,ஒப்பனை கலைஞரும் சிகை அலங்கார   நிபுணருமான பட்டணம் ரஷீத் அவர்களை கலந்து ஆலோசித்தார். அவரது ஆலோசனையின் பேரில் நாசரின் அசல் சிகை அலங்காரம் போலவே ஒரு Wig செய்தனர்.


அதன் உபயத்தில் நாசர் மற்ற படங்களில் இடையூறு இல்லாமல் நடித்தார். படத்தின் rushes பார்த்த இயக்குனர் பெருமிதத்தோடு ' நாசர் சார் நமக்கு கிடைத்த மிக அறிய வகை நடிகர்.
'சைவம்' படத்தில் வரும் அந்த முதியவர் கதாபாத்திரத்தில், நம் குடும்பத்தில் நாம் காணும்  தாத்தாக்களை தத்ரூபமாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார் .


பல்வேறு  கதாபாத்திரங்களை  ஏற்று  மெருகூட்டிய  நாசருக்கு ' சைவம் ' மற்றும் ஒரு  மணி மகுடமாக  திகழும் என கூறினார் .


நாசர் , நடிப்பில்  தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர் , தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார்  என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு.

படாதிபதிகளின் நெஞ்சில் பால்வார்த்த சிம்பு!




சிம்பு நாயகனாக நடித்த படங்கள் திரைக்கு வந்து 2 வருடங்களாகி விட்டது. ஆனபோதும், அவரைப்பற்றிய பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஹன்சிகாவுடன் நடிக்கத் தொடங்கியபோது

அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது, அதை ஹன்சிகாவே அறிவித்ததால் அந்த செய்தி பல மாதங்களாக கொளுந்து விட்டு எரிந்தது. அதையடுத்து, நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிப்பதாக சொன்னபோது, தனது காதலை முறித்துக்கொண்டார் ஹன்சிகா.


அதேபோல் சிம்புவும் தனது டுவிட்டரில் ஹன்சிகா என்னை ரொம்பவே படுத்தி எடுத்து விட்டார். இப்போதுதான் நிம்மதியடைந்துள்ளேன் என்று தான் காதலை முறித்துக்கொண்டதையும் தெரியப்படுத்தினார்.


ஆனால், இதற்கிடையே, இன்னொரு காதல் செய்தியாக ஆண்ட்ரியாவை சிம்புவுடன் இணைத்தும் ஒரு காதல் செய்தி பரவியது. இங்க என்ன சொல்லுது படத்தில் நட்புக்காக இணைந்து நடித்தவர்கள், ஒரு படத்துக்காக ஒரு பாடலையும் இணைந்து பாடினார்கள். அதில் புகைந்ததுதான் அந்த காதல் செய்தி.


ஆனால், ஆண்ட்ரியாவுடன் தனக்கு காதல் கீதல் என்று எதுவும் இல்லாத நிலையில், இப்படியொரு செய்தி பரவியது சிம்புவின் மனதை ரொம்பவே பாதித்து விட்டதாம். இதுபற்றி ஒரு பேட்டியில் பீல் பண்ணி பதிலளித்துள்ள சிம்பு, இனிமேல் என் வேலையை மட்டும் பார்க்கப்போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். சிம்புவின் இந்த பதில் அவரை வைத்து படம் தயாரிக்கும் பல படாதிபதிகளின் நெஞ்சில் பால் வார்த்துள்ளது.

தமிழில் சுடிதார், தெலுங்கில் 2 பீஸ்; காட்டு காட்டுன்னு காட்டிய ஸ்ருதியை ஓட்டிய காவல்துறை...!




தமிழில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், தெலுங்கு, இந்தி படங்கள் என்று வருகிறபோது வரிந்து கட்டி விடுகிறார். அந்த வகையில், தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரேஸ் குராம் என்ற படத்தில் இதுவரை எந்த தெலுங்கு படத்திலும் இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் ஸ்ருதி.

பப்ளிசிட்டிக்காக அப்படத்தின் போஸ்டர்களை ஆந்திராவிலுள்ள முக்கிய சாலைகளில் ஒட்டியபோது, சாலையில் சென்ற மொத்த வாகனங்களும் நிறுத்தப்பட்டு அந்த ஆபாச போஸ்டர்களைத்தான் ஜொள் விட்டார்களாம். இதனால் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, விபத்துக்களும் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரம் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட முக்கிய ஏரியாக்களில் போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்களாம். இதனால், ஆந்திர போலீசாரே களமிறங்கி அப்பட போஸ்டர்களை கிழித்தெறிந்து விட்டார்களாம். அதோடு, இனிமேல் இந்த மாதிரி ஆபாச போஸ்டர்களை ஒட்டக்கூடாது என்று அந்த பட நிறுவனத்தையும் எச்சரித்துள்ளார்களாம்.

இப்படி ஆபாச போஸ்டர் விவகாரம் ஆந்திராவில் பத்தி எரிந்ததால், தனக்கு எதிர்ப்பாகவும் மகளிர் அமைப்புகள் கொடி பிடிக்க நேரும் என்பதால், தற்காலிகமாக ஐதராபாத் முகாமை மும்பைக்கு உடனடியாக மாறறியுள்ளாராம் ஸ்ருதிஹாசன்

இயக்குனருடன் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி. ஜீவாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்




என்றென்றும் புன்னகை வெற்றிப்படத்தை அடுத்து ஜீவா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘யான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கடல்” படத்தில் நடித்த துளசி நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜீவா தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். தெலுங்கில் பிரபலமாக உள்ள இயக்குனர் கருணாகரனின் இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளார். இந்த படத்தை ஜீவாவின் தந்தை தனது சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஜீவாவுக்கு மீண்டும் ஜோடியாக நடிக்க த்ரிஷா பெரும் முயற்சி செய்தார். ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் கருணாகரன் இயக்கத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படமான டார்லிங் படத்தில் ஹீரோயினியாக நடித்த காஜல் அகர்வால்,

இயக்குனரிடம் நேரடியாக சென்று தனக்கு ஜீவாவுடன் நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். கருணாகரனுக்கும், காஜல் அகர்வாலுக்கும் ஏற்கனவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாக கடந்த சில வருடங்களுக்கு முன் டோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியது என்பது எல்லோரும் அறிந்த தகவல்.

இந்த படத்தில் த்ரிஷாவுக்கு மீண்டும் வாய்ப்பு தருவதாக ஜீவா வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் இயக்குனர் கருணாகரன் பிடிவாதமாக இந்த படத்தில் காஜல் அகர்வால்தான் ஹீரோயின் என்று உறுதியாக கூறிவிட்டதால், வேறு வழியின்றி ஜீவா விட்டுக்கொடுத்துவிட்டார். தனது தந்தையின் சொந்த பேனரில்கூட தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லையே என்ற அதிர்ச்சியில் இருக்கின்றாராம் ஜீவா.

ஷாருக்கானுக்கு அஜித் மீது பொங்கிய பாசத்தின் பின்னனி...!




வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம் தான்.


இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.


உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் விஷயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்திருக்கின்றனர்.


அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி வெயிட் தூக்கவும் முடியாது. இதனால் முறையான பயிற்சியாளரை தேடி வருகிறாராம் அஜித்.


இந்த விஷயத்தை அறிந்த பாலிவுட் கிங் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பயிற்சியாளர் அஜீத் வீட்டிலேயே தங்கி பயிற்சி அளித்து வருகிறார்.


கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் 6 பேக்ஸ் அல்லது 8 பேக்ஸ்ஸை காண ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.

ஓடியாடி வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பில்லை - பெண்களே உஷார்...!




சுறுசுறுப்பாக ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய், குறிப்பாக பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பில்லை house work womenஎன்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

மாறாக வீட்டு வேலைகளை செய்வதன் மூலம் எந்த பக்கவிளைவும் இன்றி ஆரோக்கியத்தை பெற்றுவிடலாம் வாரத்தில் ஐந்து முறை வீதம், 30 நிமிடங்களுக்கு பிஸிக்கல் ஆக்டிவிட்டி மூலம் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும். ஒரே முறையில் 10 நிமிடங்கள் நீங்கள் அதைச் செய்யலாம். உங்களுடைய தினசரி அட்டவணையில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளவும்.

வீட்டு வேலை, நடைப்பயிற்சி, தோட்ட வேலை, உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பாக ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைகிறது என்கிறது, ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பெண்கள் ஆராயப்பட்டனர். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ள தொடர்பு அலசப்பட்டது. அப்போது, வேலை குறைந்த வாழ்க்கை முறையை வாழ்பவர்களை விட, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் சற்றுக் குறைவு என்று தெரியவந்தது

எப்போதும் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்யும் குடும்பப் பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 13 சதவீதம் குறைகிறதாம். எனவே குனிந்து, நிமிர்ந்து வேலை பார்ப்பது, குப்பை வாருவது, வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்வது என வாரத்தின் பெரும்பான்மையான நாட்களில் சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்கவும்.

கொஞ்சம்’ வேலை செய்பவர்கள் அல்லது மிதமாக வேலை செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவீதம் குறைகிறதாம். லிப்ட் உபயோகிப்பதற்குப் பதிலாக மாடிப்படிகளை உபயோகிக்கலாம்.

பிரயாணம் செய்யும்போது வீட்டு வாசலில் இறங்குவதற்குப் பதிலாக ஒரு பஸ் நிறுத்தம் முன்பதாக இறங்கி வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் நடந்து போகலாம். செல்லப்பிராணியோடு அதிகாலையில் வாக்கிங் போகலாம், இதுபோன்ற நடவடிக்கைகளினால் மார்பகப்புற்றுநோய் வாய்ப்பு குறைவு என்கின்றனர் நிபுணர்கள்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ்...?




தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.

7 கதாநாயகிகள் 7 கதாநாயகன்கள் நடிக்கும் படத்தில் ஜெய் ஹீரோ..!




சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு காரணமாக அவர்கள் இணைந்து நடித்து வந்த வாலு படம் ஏறக்குறைய ட்ராப்பாகிவிட்டது.

இருபது சதவிகிதக் காட்சிகளும், ஐந்து பாடல் காட்சிகளும் எடுக்க வேண்டியிருந்தநிலையில் சிம்பு புண்ணியத்தில் வாலு அறுந்துவிட்டது.

இந்தப் படத்துக்காக கடந்த மூன்று வருடங்களாக ராத்திரி பகல் பாராமல் உழைப்பைக்கொட்டிய புதுமுக இயக்குநர் விஜய் சந்தரை, தயாரிப்பாளரும் நினைத்துப்பார்க்கவில்லை.

 படத்தின் நாயகனான சிம்புவும் அவரைப்பற்றி யோசிக்கவில்லை.

வாலு படத்தை நம்பி உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு, அடுத்தப் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் விஜய்சந்தர்.

இந்தப் படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருடன் 7 கதாநாயகிகளும், 7 கதாநாயகன்களும் நடிக்கின்றனர்.

நயன்தாரா, நஸ்ரியா, சுவாதி, சன்னிலியோன், ப்ரியா ஆனந்த ஆகிய நடிகைகளும் 7 கதாநாயகிகளில் அடக்கமாம்.

7 கதாநாயகன்களில் சிம்பு, ஆர்யா, ஜீவா, ஜெயம்ரவி, மிர்ச்சி சிவா ஆகியோரும் உண்டு.

நாகராஜா சோழன், கங்காரு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி என்ற தயாரிப்பாளர் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார்.

 ஒரு ஹீரோவை வச்சு படம் எடுக்கிறதே கஷ்டம். விஜய் சந்தரோ 7 கதாநாயகிகள் 7 கதாநாயகன்கள் வச்சு படம் எடுக்குமளவுக்கு துணிந்துவிட்டார்.

வெட்டி சீனெல்லாம் போடல ப்ரோ - சிவகார்த்திகேயன்..!




மான் கராத்தே திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபமாகச் சென்னையில் நடைபெற்றது. சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்ற இவ்விழாவில் சிவகார்த்திகேயனைச் சுற்றிலும் சுமார் 50 பவுண்சர்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் சிவகார்த்திகேயனைச் சந்திக்க நினைத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் இதர ஊடகங்களைச் சார்ந்த அனைவருமே பவுண்சர்களால் தடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் மேல் கடும் விமர்சங்கள் எழுந்தன.

ஆடியோ வெளியீட்டிற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் மதன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் திருக்குமரன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பத்திரிக்கையாளர்கள் படத்தினைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு இயக்குனரும், தயாரிப்பாளரும் பதிலளித்தனர்.

படத்தினைப் பற்றிய கேள்விகளுக்குப் பிறகு சிவகார்த்திகேயனிடம் ” பவுண்சர்களை வைத்துக் கொண்டு ஏன் எங்களைக் கஷ்டப்படுத்துனீங்க?” என்று கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன் தனக்குப் பவுண்சர்களை நியமிக்கும் அளவிற்கு வசதி இல்லையென்றும், இந்த விழாவிற்குக் கூட தான் தனியாகத்தான் வந்திருப்பதாகவும், 50 பவுண்சர்களை நியமிக்கும் அளவிற்குத் தனக்கு வசதியில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த மான் கராத்தே திரைப்படத்தின் தயாரிப்பாளர் மதன், இசைவெளியீட்டு விழாவில் கூட்டம் ஏற்பட்டு அதனால்
ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே தான் பவுண்சர்களை நியமித்ததாகவும், ஆனால் அதுவே பிரச்னையாகும் என்று தான் நினைக்கவில்லை என்றும், இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்த அவர், இந்தத் தவறுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டாராம்.

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் மான்கராத்தே திரைப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

குக்கூ பட வெற்றியினால் சோகத்தில் மூழ்கிய படத்தயாரிப்பாளர்..!




ஒரு படம் வெற்றி பெற்றால், அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை எண்ணி சந்தோஷப்படுகிறவர்கள் திரைப்படத்துறையில் மிகக்குறைவு. பொறாமைத்தீயில் பொசுங்கிப்போகிறவர்களே அதிகம்.

அவன் யாரென்றே தெரியாவிட்டாலும், அடுத்தவனின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத நல்ல உள்ளங்கள் நிறைந்த இடம்தான் திரைப்படத்துறை.

 நேற்று வெளியாகி இருக்கும் குக்கூட படம் அருமையாக இருக்கிறது என்றும், படம் வெற்றியடைவது உறுதி என்றும் ரசிகர்கள் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், பிரபல படத்தயாரிப்பாளர் ஒருவர் கடும் சோகத்தில் இருக்கிறாராம்!

அவர்..நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. அது சரி.. குக்கூ ஹிட்டானால் இவருக்கு என்ன?

சில வருடங்களுக்கு முன் தன் மகன் ஜானியை ஹீரோவாக வைத்து ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு பூஜைபோட்டார் சக்கரவர்த்தி. 18 வயசு என்ற படத்தை ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கத்திலும், சந்திரபாபு என்ற படத்தை லிங்குசாமியின் உதவியாளரான ராஜுமுருகன் என்ற புதுமுக இயக்குநரை வைத்தும் தொடங்கினார்.

18 வயசு படம் 2012 ஆம் வருடம் வெளியானது. 15 நாட்கள் படப்பிடிப்பி நடைபெற்றநிலையில் சந்திரபாபு படத்தை ட்ராப் பண்ணிவிட்டார் சக்கரவர்த்தி. அதற்கு அவர் சொன்ன காரணம்..அந்த டைரக்டருக்கு படம் எடுக்கத் தெரியலை என்பதுதான்.

அன்று அவரால் படம் எடுக்கத் தெரியலை என்று குற்றம்சாட்டப்பட்ட ராஜுமுருகன்தான் இன்றைய குக்கூ படத்தின் இயக்குநர். இந்த ப்ளாஷ்பேக்கின் காரணமாகவே குக்கூ படத்தின் வெற்றி எஸ்.எஸ். சக்கரவர்த்தியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாம்.

மனுஷங்க எப்படி எல்லாம் இருக்காங்க பாருங்க மக்களே!

தல படத்திற்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர்...!




ஒரு திரைப்படத்தின் வெற்றியில் அப்படத்தின் கதை, ஹீரோவிற்கு அடுத்தபடியாக முக்கிய இடம் வகிப்பது இசை. பெரும்பாலான பிரபல இயக்குனர்கள் தங்களின் படங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு இசையமைப்பாளர்களையே அணுகிவந்துள்ளனர்.


 குறிப்பாக மணி ரத்னம் படங்களுக்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளனர். பாடல்களும் மாபெரும் வெற்றிப் பாடல்களாகவும் உருவெடுக்கும். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார்.


 இயக்குனர் மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற ஜாம்பவான்களின் படங்களிலும் இளையராஜா என்ற ஒரே இசையமைப்பாளர்தான் இன்றுவரையிலும் இசையமைத்துவருகிறார்.


இவ்வகையில் ஒரு இயக்குனருக்கும், இசையமைப்பாளருக்குமான நட்பானது மிக முக்கியமான ஒன்றாக இருந்துவருகிறது. அப்படி இரு நண்பர்களுக்கிடையே உருவாகும் பாடல்கள் மெஹா ஹிட்டாக அமைந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இதே வரிசையில் கௌதம் வாசுதேவ் மேனனும் - ஹாரிஸ் ஜெயராஜும் இருந்துவந்தனர்.


ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கௌதம் மேனனுக்கும், ஹாரிஸ் ஜெயராஜுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இனிமேல் இருவரும் இணைந்து பணியாற்றப்போவதில்லை என்று அறிவித்திருந்தனர்.


கௌதம் மேனனும் அவர் இயக்கிய கடந்த சில படங்களுக்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜை அணுகவில்லை. ஆனால் இம்மாத இறுதியில் துவங்கவுள்ள தல அஜித் படத்திற்கு இசையமைக்க மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜை அணுகவுள்ளதாகக் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.


இதனைப் பற்றி ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் கௌதம் மேனன் படங்களுக்கு இசையமைக்கும் விருப்பம் தனக்கு இல்லையென்றும் கூறியதாக வதந்திகள் பரவிவருகின்றன.

கௌதம் மேனன் - தல அஜித் இணையவுள்ள புதிய படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கலாம் என்று ஏற்கெனவே பேசப்பட்டுவந்த நிலையில்தான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருப்பதாகவும் ஒருதரப்பினர் கூறினர்.


இப்பொழுது எது உண்மை, எது பொய் என்று அறியமுடியாத சூழல் நிலவிவருகிறது. விரைவில் தல படத்தின் இசையமைப்பாளர் யார் என்று அறிய ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.

மான் கராத்தே - இசை விமர்சனம்...!




எதிர்நீச்சல்’ ஆல்பத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியில் இன்னொரு ஆல்பம் என்றால் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதோடு, ஸ்ருதிஹாசன், தேவா, ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன் என பாடகர்களிலும் வெரைட்டி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

மற்ற ரசிகர்களைவிட ‘மான் கராத்தே’ ஆல்பம் எப்படி வருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ‘தல தளபதி’ ரசிகர்களுக்குதான் ஆர்வம் அதிகம். பின்னே... அஜித், விஜய் படங்களுக்கு இசையமைக்கும் அதிர்ஷ்டசாலியாகியிருக்கிறாரே அனிருத். இவ்வளவு பில்டப்களுக்கும் ஈடுகொடுத்திருக்கிறதா ‘மான் கராத்தே’வின் பாடல்கள்!

மாஞ்சா...
பாடியவர் : அனிருத்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

வழக்கமாக தன் இசையமைப்பில் வெளிவரும் ஆல்பங்களில் குறைந்தது இரண்டு பாடல்களையாவது பாடிவிடுவார் அனிருத். ‘மான் கராத்தே’ ஆல்பத்தில் முதல் பாடலையே தன் குரலில் ஆரம்பித்து பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். இந்த வெஸ்டர்ன் டைப் பாடலின் பின்னணியில் கர்நாடக இசையை லேசாக ஒலிக்கவிட்டு பாடலை வித்தியாசமாக அமைத்திருக்கிறார் அனிருத். குறிப்பாக கர்னாடிக் கோரஸும், தவிலின் இசையையும் ரசனையாக கலக்க வைத்திருக்கிறார் அனிருத். கார்க்கியின் ஸ்டைல் வரிகளும், அனிருத்தின் குரலும் இந்தப் பாடலுக்கு பெரும் பலம். டிரம்ஸ், கிடார், பியானோ, தவில் என எல்லாவிதமான வாத்தியங்களையும் கலந்து கட்டி ரசிக்க வைத்திருக்கிறார். டிரைலரில் வரும் இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயனின் டான்ஸ் மூவ்மெண்ட் வாய்பிளக்க வைக்கிறது.

டார்லிங் டம்பக்கு....
பாடியவர்கள் : பென்னி தயாள், சுனிதி சௌகான்
பாடலாசிரியர் : யுகபாரதி

ஃபர்ஸ்ட் லுக் டீஸரின் பின்னணியில் ஏற்கெனவே ஹிட்டடித்துவிட்ட ட்யூன் என்பதால் பரிச்சயத்துடன் இந்தப் பாடலுக்குள் நம்மால் உள்புக முடிகிறது. எனர்ஜி கொப்பளிக்கும் இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்திருப்பவர்கள் பென்னி தயாளும், சுனிதி சௌகானும். ‘டார்லிங் டம்பக்கு... கிருடா... கிருடா....’ என பென்னி தொடங்கி வைக்க, ‘பாவிப்பயலே இவ உயிர்மூச்சுல கடைபோடுற...’ என சுனிதி ஆரம்பிக்கும் ஸ்டைலே சூப்பராக இருக்கிறது. கிடாரின் ஜாலங்கள் நிறைந்திருக்கும் இந்த போக் பாடலை திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் எழுந்து நின்று ஆடப்போவது நிச்சயம். சிவகார்த்திகேயன், ஹன்சிகாவின் ‘லுங்கி டான்ஸ்’ இப்பாடலுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமையும். யுகபாரதியின் பாடல் வரிகள் ரசிக்கும்படி உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக நீண்ட நாட்கள் டிவிகளில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது இந்த ‘டார்லிங் டம்பக்கு’!

உன் விழிகளில்...
பாடியவர்கள் : அனிருத், ஸ்ருதிஹாசன்
பாடலாசிரியர் :ஆர்.டி.ராஜா

ஆல்பத்தின் இந்த ஒரே மெலடிப் பாடலைப் பாடியிருப்பவர்கள் அனிருத்தும், ஸ்ருதிஹாசனும். வெஸ்டர்ன் ‘பேஸ்’ சப்தங்களும், கர்நாடிக் வயலினும் கலவையாக கலந்து ஒலிக்கிறது இப்பாடலில். சரணத்தை அனிருத் பாட, பல்லவியில் அவரோடு கைகோர்த்திருக்கிறார் ஸ்ருதி. புதிதாக எதுவும் இந்தப் பாடலில் நம்மை ஈர்க்கவில்லை என்றாலும், கேட்பதற்கு போரடிக்காத ரகம்தான். ஆச்சரியமாக இப்பாடலின் மூலம் ‘கவிஞர்’ அவதாரம் எடுத்திருப்பவர் ‘மான் கராத்தே’வின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. ‘ஹேப்பி பர்த்டே’ ட்யூனோடு இப்பாடல் முடிவதால், அதற்கான காட்சி படத்தில் இடம்பிடித்திருக்கலாம்.

ராயபுரம் பீட்டரு...
பாடியவர்கள் : ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன்
பாடலாசிரியர் : ஆர்.டி.ராஜா

ரசிகர்களுக்கு வித்தியாச விருந்து கொடுக்கும் முனைப்போடு இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயனையும், நாட்டுப்புற பாடல் ஸ்பெஷல் ‘பரவை’ முனியம்மாவையும் இணைந்து பாடவைத்திருக்கிறார்கள்! தியேட்டரை அதிர வைக்கும் முடிவோடு இறங்கி குத்தியிருக்கிறார் அனிருத். எலக்ட்ரிக் கிடாரும், உறுமியும் இணைந்து விளையாடியிருக்கிறது ‘ராயபுரம் பீட்டரு...’ பாடலில்! ரகளையான இந்தப் பாடலுக்கு கைகொடுத்திருக்கிறது ஆர்.டி.ராஜாவின் வித்தியாசமான பாடல் வரிகள்! மொத்தத்தில் இந்தப் பாடல் ‘கொலக் குத்து’!

ஓப்பன் த டாஸ்மாக்...
பாடியவர்கள் : தேவா, அனிருத்
பாடலாசிரியர் : கானா பாலா

கானா பாலாவின் வரிகளுக்கு ‘கானா’ தேவாவின் குரல் என செம ரகளை பண்ணியிருக்கிறார்கள் இந்தப் பாடலில். ‘சரி சரி... க ம ப த நி....’ என தேவாவின் வாய்ஸில் கர்நாடக சங்கீதத்தோடு கலகலப்பாக ஆரம்பிக்கும் இந்தப் பாடல் முழுவதும் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் அனிருத்.

 பார்ட்டிகளிலும், ‘பப்’களிலும் நிச்சயமாக இடம் பிடிக்கும் இந்த ‘ஓப்பன் த டாஸ்மாக்’. முழுப்பாடலையும் தேவா பாட, இடையிடையே சின்ன சின்ன வித்தியாசமான வரிகளுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் அனிருத்.

பாடலின் கடைசியில் ‘பில்டிங் ஸ்டராங்கு பேஸ்மென்ட் வீக்கு...’, ‘ஐயாம் வெரி ஹேப்பி...’ என வடிவேலு, கவுண்டமணியின் புகழ்பெற்ற காமெடி டயலாக்கையே பாடல் வரியாக்கி எனர்ஜி ஏத்துகிறார் கானா பாலா. இன்னும் கொஞ்ச நாட்கள் பட்டி தொட்டியெங்கும் இந்தப் பாடல் ஒலிக்கப்போவது நிச்சயம்!

மொத்தத்தில்... ‘3’, ‘எதிர்நீச்சல்’ ‘வணக்கம் சென்னை’ ஆல்பங்களைப் போன்ற பாடல்கள் நிச்சயம் இந்த ‘மான் கராத்தே’வில் இல்லைதான். ஆனால், இந்த வருடத்தின் ‘சூப்பர் ஹிட்’ வரிசையில் இந்த ஆல்பத்திற்கும் நிச்சயம் இடமிருக்கும். அமைதியாக உட்கார்ந்து ரசிப்பதற்குப் பதிலாக ரகளையாக எழுந்து நின்று ஆடவைத்திருக்கிறார் அனிருத்! காட்சிகளோடு பார்க்கும்போது பாடல்கள் கூடுதல் கவனம் பெறும்! ‘மான் கராத்தே’... அனிருத்தின் ஸ்பெஷல் குத்து!

விஜய்க்கு ஈடு கொடுப்பாரா அனிருத்...?




துப்பாக்கி’,

 ‘தலைவா’,

‘ஜில்லா’


ஆகிய படங்களில் ஒவ்வொரு பாடலை பாடிய விஜய்,


அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்திற்காகவும் ஒரு பாடலை பாட இருக்கிறார்!


‘துப்பாக்கி’யில் ஹாரிஸ் ஜெயாராஜ், ’தலைவா’வில் ஜி.வி.பிரகாஷ்குமார்,


‘ஜில்லா’வில் இமான் ஆகியோர் இசையில் பாடிய விஜய் இப்படத்தில் அனிருத் இசையில் பாட இருக்கிறார்.


விஜய் - ஏ.ஆர்.முருகதாஸுடன் அனிருத் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏற்கெனவே விஜய் பாடிய மூன்று படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ள நிலையில் அதை விட பெரிய ஹிட்டை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்


 ’ஹிட் மெஷின்’ அனிருத்!

வரலெட்சுமியை சினிமாவை விட்டு ஓட வைத்தது பாலா தானா..?




பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் படம் தாரை தப்பட்டை.


இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.


பொதுவாக பாலாவின் படத்தில் நடிப்பவர்களை பென்டெடுப்பார் என்பது தெரிந்த விஷயம்தானே.


வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமி பாலா படத்திற்காக கரகாட்டத்தை முறைப்படி கற்க தஞ்சையை காலையில் தொடங்கி மாலைவரை பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம்.


மேலும் படத்திற்காக சசிகுமார் தனது கெட்டப்பை மாற்ற, தாடியை எல்லாம் எடுத்து பென்சில் மீசை போன்று வைத்திருக்கிறார்.

நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.


இப்படத்தினை பாலா மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்

ஏண்டா ஹீரோ ஆனோம்..?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. சந்தானத்தின் கலகல பேட்டி..!




என்னது… சந்தானம், ஹீரோவா நடிக்கிறானா?’னு அதிர்ச்சியாகி நம்ம ஹீரோ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அடுத்தடுத்துப் பேசினாங்க. ‘மச்சான், எங்களுக்கு ஃப்ரெண்டா வந்து காமெடி பண்ணுவ. இப்ப நீயே ஹீரோ. இதுல உனக்கு யாரு ஃப்ரெண்டு?’னு போன்ல கேட்டான் ஆர்யா. ‘மச்சான் ஹாலிவுட்ல அர்னால்டுக்கு எல்லாம் ஃப்ரெண்டே கிடையாதுடா.

 தனியா வந்து, தனியாவே ஃபைட் பண்ணிப் பட்டையைக் கிளப்புவாரு. அப்படித்தான் மச்சான் இதுல நான்’னு சொன்னேன். அவன் எகிறிக் குதிச்சுச் சிரிச்சது இந்த எண்ட்ல இருந்த எனக்குப் புரிஞ்சது!”-ஆர்ம்ஸ் ஏற்றி, பாலீஷ் கூட்டி பளபளக்கிறார் சந்தானம்.

100 படங்களில் காமெடியன் என்ற மைல்கல்லுக்குப் பிறகு, ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார்.

”ஆர்யா, அப்படிச் சொன்னார். மத்தவங்கள்லாம் என்ன சொன்னாங்க?”

”சிம்பு, ‘என்ன ஹீரோ… என்ன பண்றீங்க?’னு விசாரிச்சார். ‘அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க’ன்னேன். ‘ஏன்… என்னாச்சு?’னு கேட்டார். ‘நான் ஹீரோவா நடிக்கிறதுக்குள்ள வி.டி.வி.கணேஷ் எல்லாம் ஹீரோ ஆகிட்டார். ‘ஏண்டா ஹீரோ ஆனோம்?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. அதனால நீங்க ‘சந்தானம்னே கூப்பிடுங்க’ன்னேன்.


 சிம்பு லைனை கட் பண்ணதும் பக்கத்துல இருந்த கணேஷ், ‘ஏண்டா அவரு உனக்கு போன் பண்ணார்னா, ஊர் உலகத்தைப் பத்தி ஏதாச்சும் பேசுங்க. என்னை ஏண்டா ஊறுகாய் ஆக்குறீங்க?’னு காண்டானார். ‘ஹீரோவா நடிக்கிற. முடி எல்லாம் கரெக்டா இருக்கா. மார்க்கெட்ல ஏகப்பட்ட புது விக் வந்திருக்கு. சாம்பிள் பார்த்தியா?’னு மெசேஜ் பண்ணார் ஜீவா. ‘நானும் யூத்தான்யா…’னு ரிப்ளை பண்ணேன். இப்படி… பல போட்டி பொறாமைகளுக்கு மத்தியில்தான் ஹீரோவா நடிக்க வேண்டியிருக்கு!”

”காமெடிப் பயணம் தெளிவாப் போயிட்டு இருக்கிறப்ப, ஏன் இந்தத் திடீர் திருப்பம்?”

”பழைய பல்லவிதான். ஆனா, இது, இந்தக் கதைக்காக எடுத்த முடிவு. இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவா நடிக்க முடியும். ஏன்னா, அப்பாவியாவும் இருக்கணும்; அப்ளாஸும் அள்ளணும். அப்போ ஒரு எஸ்டாபிளிஷ்டு ஹீரோவால இதைப் பண்ண முடியாது. புதுமுகமும் தாங்க மாட்டார். ஆக, எனக்கான சப்ஜெக்ட்டாத் தோணுச்சு. உடனே ஓ.கே. சொல்லிட்டேன்.

மத்த படங்களைவிட கொஞ்சம் எக்ஸ்ட்ரா காமெடி, பளிச் பன்ச் மட்டும் சேர்த்துட்டு நான் ஹீரோ ஆகலை. ‘நான் எது பண்ணாலும் தியேட்டர்ல கைதட்டுவாங்க’னும் நினைக்கலை. ஸ்க்ரிப்ட்ல ஆரம்பிச்சு என் ஸ்கின்டோன் வரைக்கும் சிறிசும் பெருசுமா நிறைய சுவாரஸ்யம் சேர்த்திருக்கோம். படத்துல டான்ஸ், சேஸிங், ரன்னிங்னு நிறைய இருக்கு.


திடீர்னு ஒருநாள் கொஞ்ச தூரம் ஓடிட்டு, ‘கால் பிடிக்குது, தொடை பிடிக்குது’னு உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து நடிச்சா, ரெண்டு வருஷமாகும் படத்தை முடிக்க! அதுவும் போக, ‘வயித்தைப் பாரு தலகாணி மாதிரி வெச்சிருக்கான்’னு நாமளே பலரை ஓட்டியிருக்கோம். இப்போ நாமளும் அப்படி வந்து நின்னா, எல்லாரும் சிரிப்பாங்கள்ல. அதனால ஜிம் ஓட்டம், டான்ஸ் ஆட்டம்னு எல்லா ஏரியாலயும் பட்டி, டிங்கரிங் பார்த்துட்டுத்தான் நடிக்க ஆரம்பிச்சேன். பார்த்தா கொஞ்சாமாவது ‘ஹீரோ லுக்’ வருதுல்ல!”

”வருது… வருது… ஆனா, அது மட்டும் போதுமா?”

”எவ்வளவோ யோசிக்கிறோம்… அதை யோசிக்க மாட்டோமா? ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’-வில் பவர்ஸ்டார் மாதிரி இந்தப் படத்துலயும் ஒரு சர்ப்ரைஸ் மேஜிக் வெச்சிருக்கோம். ஆனா, அதைப் பத்தி அப்புறம் பேசலாம்!”

”இப்பவே சொல்லுங்க…!” என்று அழுத்திக் கேட்டதும்…

” ‘லட்டுக்கு ஒரு பவர்ஸ்டார்’னா ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ல ஒரு சோலார்ஸ்டார். ஆமா ப்ரோ… நம்ம ராஜகுமாரன் சார், படத்துல பிரமாதமான ஒரு கேரக்டர் பண்றார். ‘காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப. கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியா?’னு என்கிட்ட கேட்பார். ‘பார்த்ததில்லை’ம்பேன். ‘இதுல நீ பார்ப்ப’னு சொல்வார். இது ஒரு டீஸர்தான். இப்படி படம் முழுக்க அவரோட அழும்பு தூள் பறக்கும்!

படத்தோட இயக்குநர் ஸ்ரீநாத், என் நண்பன். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ல நடிக்கும்போதே, ‘நீ, நான், பிரேம்ஜி மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் மச்சான். நான்தான் டைரக்ஷன்’னு சொல்லிட்டு இருப்பான். அவனுக்கு டைரக்ஷன்தான் ஆர்வம். ஆனா, நடிக்கும் வாய்ப்புதான் வந்துச்சு. இப்போ அவன் திறமையை நிரூபிக்கிற மாதிரி இந்தப் படம் அமைஞ்சிருக்கு!”

”உங்க ஆதர்சம் கவுண்டமணியும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டாரே!”

”எனக்கு தங்கவேலு, கவுண்டமணி… இவங்க ரெண்டு பேரும்தான் இன்ஸ்பிரேஷன்னு பல தடவை சொல்லியிருக்கேன். கவுண்டமணி அண்ணன்கிட்ட எப்பப் பேசினாலும், செம லந்து கொடுப்பார். ஏதோ ஒரு படம் வந்து செம மொக்கை வாங்கின சமயத்துல பேசினேன். ‘அண்ணே அந்தப் படம் பயங்கரமாப் போயிட்டு இருக்கு. டிக்கெட்டே கிடைக்கலையாம்’னு சொன்னேன். பட்டுனு, ‘ஏன் டிக்கெட்டே அடிக்கலையா?’னு கேட்டார் பாருங்க


ஒரு கேள்வி… அதுதான் கவுண்டர்!


சுந்தர்.சி, ராஜேஷ், பூபதி பாண்டியன், சுராஜ்னு காமெடியில பின்ற எல்லா டைரக்டர்ஸும், ‘அவர்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க. சூப்பரா இருக்கும்’னு சொல்லுவாங்க. அந்த ஐடியா எனக்கும் உண்டு. ஆனா, அவர்கிட்ட இதைப் பத்தி நான் இதுவரை பேசினதே இல்லை. இப்போ இந்தப் பேட்டி மூலமா சொல்றேன்… இப்ப அவரும் ஹீரோவாப் பண்ணிட்டு இருக்கார். நானும் பண்றேன். அதனால எங்க ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்துச்சுனா, அண்ணன்கிட்ட போய் கேட்கலாம்னு இருக்கேன்