Monday, 10 March 2014

ஜோடியாக நடித்தாலும் என்னை ஒரு மகளாகத்தான் பார்த்தார்! ரஜினிக்கு தீபிகா படுகோனே புகழாரம்!!




கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்துக்காக கோலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்டவர் தீபிகா படுகோனே.


 ஆனால், அந்த படம் கைவிடப்பட்டதால், அதன்பிறகு அவர் கோலிவுட்டுக்கு வர வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்பட்டது. ஆனால், ராணாவுக்கு ஏற்கனவே அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் இருந்ததால் அவரையே கோச்சடையானுக்கும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் செளந்தர்யா.


 ஆக, அட்வான்ஸ் என்ற பெயரில் விட்டக்குறை தொட்டக்குறையாக ஒரு உறவு இருந்ததால் கோச்சடையானில் தீபிகா நடிக்க சாத்தியமானது. ஆக, கோலிவுட்டில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகருடன் நடித்து விட்ட பெருமையை பெற்றிருக்கிறார் தீபிகா.


இந்நிலையில, நேற்று கோச்சடையான் ஆடியோ விழாவுக்கு தீபிகா மங்களகரமாக வந்திருந்தார். தலை நிறைய பூ வைத்து புடவை கெட்டப்பில் வந்து அனைவரையும் கவர்ந்த தீபிகாபடுகோனே, மேடையில் பேசும்போது, இந்த படத்தில் நான் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன்.


 என்றாலும், அவர் என்னை ஒரு மகளைப்போல்தான் பார்த்தார். இருப்பினும் ரஜினியின் நாயகி என்ற பெருமையுடன் தமிழக ரசிகர்களை சந்திக்க வருவது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு தமிழக ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வதந்திகள் மனதை காயப்படுத்துகிறது : பிரியங்கா சோப்ரா வருத்தம்...!




எனக்கும் குடும்பம் இருக்கிறது. என்னைப் பற்றி வரும் வதந்திகள் என் மனதை காயப்படுத்துகிறது என்றார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, பற்றி சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் உலவுகிறது.

அதில் ஒன்று, சல்மான்கான் வீட்டிலிருந்து அதிகாலையில் அவர் வெளியேறியதாக வந்த செய்தி. இதனால் வேதனை அடைந்தார் பிரியங்கா.

அவர் கூறியதாவது: என்னைப் பற்றி கடந்த சில மாதங்களாக வதந்திகள் உலா வருகிறது. என்னுடைய உணர்வுகளையும், வாழ்க்கையையும் தனிப்பட்ட முறையிலேயே பாவிக்கிறேன். 17வது வயதில் நடிக்க வந்தேன். இப்போது நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது. அதிக நேரம் சினிமா விளக்குக்கு மத்தியில் கழிகிறது.

இதனால் என்னை சுற்றி நடப்பவைகள் என்னை பாதிக்காது என்று சொல்ல முடியாது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. நான் ஒரு பெண். என்னைப் பற்றி வரும் வதந்திகள் என் மனதை காயப்படுத்துகிறது.

பாலிவுட்டில் எனக்கு விலை மதிப்பற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். சல்மானுடன் எனக்கு மோதல் என்று முதலில் எழுதினார்கள். அது தவறு.

உண்மை என்னவென்றால் இந்த ஆண்டில் மட்டும் அவரது வீட்டுக்கு 6 முறை சென்றிருக்கிறேன். சல்மானின் சகோதரி அர்பிதா எனக்கு நெருங்கிய தோழி. ஆரம்ப கால கட்டங்களில் நடித்த சக நடிகர்கள் சிலரில் சல்மானும் ஒருவர்.

அவரிடம் எந்தநேரத்திலும் மனக்கசப்பு ஏற்பட்டது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் என் மீது அதிக அன்பு காட்டுவார். அதை வைத்து இப்போது எங்களை இணைத¢து பேசுகிறார்கள். இதில் உண்மை இல்லை.

ஹீரோயிச கொள்கையை கைவிட்ட காஜல்அகர்வால்..!




சினிமாவில் நடிக்க வந்த காலங்களில் பகலில் ஒரு படத்தில் நடித்தால், இரவில் இன்னொரு படத்தில் நடிப்பார் காஜல்அகர்வால். அதோடு, படாதிபதிகள் கேட்கிற தேதிகளில் கால்சீட் கொடுப்பார்.

ஆனால், பின்னர் ஓரளவு பெரிய நடிகையான பிறகு இரவு கண் விழித்து நடிப்பதை தவிர்க்கத் தொடங்கினார்.

ஓய்வில்லாமல் நடிப்பதையும் தவிர்த்து வருகிறார். தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடிக்கும் காஜல், தமிழில் காதலில் சொதப்புவது எப்படி பாலாஜி மோகன் இயக்கும் படத்திற்கு கால்சீட் கொடுத்திருப்பவர், காலை 9 மணிக்கு ஸ்பாட்டுக்கு வரும் நான் 6 அடித்ததும் வெளியேறி விடுவேன். அதன்பிறகு அஞ்சு நிமிசம்கூட தாமதிக்க மாட்டேன்.

அதற்கு என் உடம்பு ஒத்துழைப்பு கொடுத்தாலும் மனம் ஒத்துழைக்காது என்கிறார். காரணம், இப்போதெல்லாம் எனக்கு நிறைய ரிலாக்ஸ் தேவைப்படுகிறது. அதோடு, அழுத்தமான கதைகளில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று மனசு சொல்கிறது.


அதனால் கிடைக்கிற படங்களில் எல்லாம் நடிப்போம் என்றில்லாமல் செலக்டீவான கதைகளாக மட்டுமே நடிக்க ஒத்துக்கொள்கிறேன் என்று சொல்லும் காஜல், இனிமேல் ஹீரோயிசத்தை கருத்தில் கொள்ளாமல் தனது திறமையை வெளிச்சம் போடும் கதைகளாக இருந்தால் எந்த மாதிரியாக ஹீரோக்களுடனும் நடிப்பேன் என்று தனது ஹீரோயிச கொள்கையை திடீரென்று தளர்த்தியிருக்கிறார்.

காஜலின் இந்த புதிய கொள்கைக்கு ஆந்திராவில் ஆதரவு கிடைக்காதபோதும், கோலிவுட்டில் ஆதரவு பெருகி வருகிறது.

சூர்யாவின் அஞ்சான் கதை லீக் அவுட்..! - அதிர்ச்சியில் படக்குழுவினர்




சூர்யாவின் அஞ்சான் படத்தின் படக்கதை காற்று வழியாக கசிந்துள்ளது.
லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிவடைந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இறுதி கட்ட படப்பிடிப்பு கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. சமந்தா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

லிங்குசாமியின் வட்டாரத்திலிருந்து கசிந்த வரையில் படத்தின் கதையாக, சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, மும்பையில் நடக்கும் ஒரு கருத்தரங்கிற்காக செல்கிறார். மும்பையில் தன் கண்முன்னால் நடக்கும் ஒரு தவறை தட்டிக் கேட்கிறார். அது சின்ன தவறுதான். ஆனால் அதற்கு பின்னால் மும்பையின் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் இருக்கிறார்கள்.

தன் வேலையை முடித்து விட்டு சூர்யா சென்னை வந்து விடுகிறார். வந்த உடனேயே அவரது வேலை பறிக்கப்படுகிறது. அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், காதலிக்கும் முகம் தெரியாத மனிதர்களால் அச்சுறுத்தலும், பிரச்னைகளும் வருகிறது.

அவை எல்லாமே மும்பை தாதாக்களால் செய்யப்படுவது. அப்போதுதான் சூர்யாவுக்கு மும்பை சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. அப்படி பெரிதாக எதுவும் செய்யவில்லையே என்று துளாவி பார்க்கும்போதுதான், மும்பையில் நடந்தது சாதாரண விஷயம் இல்லை நாம் வசமாக தாதாக்களின் வலையில் சிக்கி விட்டோம் என்பதை உணர்கிறார்.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப்போல தாதாக்களை சந்திக்க சூர்யாவும் தாதாவாக மாறுகிறார். இதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.

சிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம்..!




லிச்சி பழம் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிறந்த விதத்தில் செயல்படுகிறது.சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.


லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடப்பட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.

லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76 சதவீதம், மேலும் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.

பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

உடலுக்கு உரம்

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

லிச்சி பழம் வைட்டமின் சி யை ஆதாரமாக உள்ளது. இதில் வைட்டமின் சி, மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளதால் நோயை எதிர்க்க கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது.

ரத்த உருவாக்கம்

மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.ரத்த உருவாக்கத்தை அதிகப்படுத்துகிறது.தினமும் ஒரு லிச்சி பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.

சிவப்பணு உருவாக்கம்

ஏனெனில் சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.மேலும் வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்பு சத்துகளை உரிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினமொரு லிச்சி பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மணப் பெண்ணாக போகும் பெண்களுக்கு, சில கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்..!




பொதுவாக பெண்கள் என்றால் தங்களை அழகாக காட்ட விரும்புவார்கள். அதற்காக உடல் பராமரிப்பு, சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்பு என அவர்கள் மெனெக்கெடுவது அனைவரும் அறிந்ததே.

சாதாரண நேரத்திலேயே இவ்வளவு மெனெக்கெடுபவர்கள் திருமணம் ஆக போகிறது என்றால் சும்மா இருப்பார்களா? தன் திருமண நாளின் போது ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் தனித்துவத்துமான தோற்றத்துடன், நேர்த்தியான அழகுடன், அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று ஆசை எழுவது இயற்கை தான். அழகான தோற்றத்தை பெற தன் உடல் மற்றும் சரும பராமரிப்பின் மீது மட்டும் அவள் அக்கறை எடுத்துக் கொள்வது பத்தாது.

திருமணத்தின் போது தன் கூந்தல் பராமரிப்பிலும் மணப்பெண் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஈர்ப்புள்ள தோற்றத்தை பெற மணப்பெண்ணாக போகும் பெண்ணுக்கு கூந்தல் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாகும். அதனை அடைய அழகு நிலையத்தை நாடி போக வேண்டும் என்ற அவசியமே இல்லை. மணப்பெண்ணாக போகும் பெண்களுக்காக சிகை அலங்கார வல்லுனர்கள் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளனர். அதனை பின்பற்றினால் மணப்பெண்ணின் சிகை அலங்காரம் அழகாவும், கவர்ச்சிகரமாகவும் அமையும்.

தலைமுடி பராமரிப்பை சீக்கிரமாகவே தொடங்குங்கள்: திருமண நாளின் போது கூந்தல் அழகாக காட்சி அளிக்க, மணப்பெண்ணாக போகும் பெண்கள் திருமண நாளிற்கு சில நாட்களுக்கு முன்பாகவே தயராக வேண்டும். முடிந்தால் சில மாதங்களுக்கு முன்பாகவே மணப்பெண்ணாக போகும் பெண்கள் தலைமுடி பராமரிப்பில் ஈடுபட தொடங்கி விடலாம். இது கடைசி நிமிஷ டென்ஷன் மற்றும் வலியை குறைக்கும். இதற்கு உதவி புரிந்திட சில தலைமுடி வல்லுனர்களின் ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளலாம்.


தலைமுடியின் வாகை பொறுத்து அதற்கேற்ப பராமரிப்பில் ஈடுபடுங்கள்: மணப்பெண்ணாக போகும் பெண்ணுக்கு தலைமுடியை பராமரிப்பதில் எதிர்பார்த்த விளைவை பெற முதலில் அவர்களின் தலைமுடி வகையை அறிந்து கொள்வது அவசியம்.

உங்களுக்கு வறண்ட தலைமுடி என்றால் கண்டிப்பாக பொடுகு இருப்பதில் ஆச்சரியம் இருக்காது. அதனை நீக்க பொடுகை நீக்கும் பொருட்களை சந்தையிலிருந்து வாங்கி பயன்படுத்துங்கள். தலைக்கு குளித்த ஒரு நாளைக்கு பிறகு தலை முடியை சாதாரணமாக விட்டு விட சொல்லி மணப்பெண்ணாக போகும் பெண்களுக்கு தலைமுடி வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படி செய்தால் தலைமுடி பளபளப்பாகவும் நல்ல தோற்றத்துடனும் நீண்ட காலம் நிலைக்கும்.

இயற்கையான தலைமுடி பராமரிப்பு வழிமுறைகளை தேர்ந்தெடுங்கள்: மணப்பெண் அழகாக காட்சி அளிக்கும் டிப்ஸ்களை பெற கூந்தல் அலங்காரத்துக்கு இயற்கையான வழிமுறைகளை தேர்ந்தெடுங்கள். அதற்கு இயற்கையான தலைமுடி பராமரிப்பு பொருட்களையே பயன்படுத்துங்கள்.

ரசாயனம் கலந்த பொருட்களை மணப்பெண்ணாக பெண்கள் பயன்படுத்தினால் அவை தீங்கை விளைவிக்கும். அது பொடுகு அல்லது முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கி விடும். இருப்பினும் மணப்பெண்ணாக போகும் பெண்கள் அழகிய கூந்தலை பெறுவதற்கு ஹேர் ட்ரையர், சிந்தடிக் நிரப்பூச்சுகள் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவ்வகை பொருட்கள் கூந்தலின் வலிமையை குறைத்து விடும். தலைமுடியை கலரிங் செய்வதற்கு மருதாணியுடன் வடிசாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பேஸ்டை பயன்படுத்துமாறு வல்லுனர்கள் அறிவுறுத்துகிறார்கள். தலைமுடி பளபளவென காட்சி அளிக்க மாதம் ஒரு முறை தலை முடிக்கு முட்டையின் வெள்ளை கருவை பயப்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

சீரான முறையில் தலைமுடியை கழுவ வேண்டும்: மணப்பெண்ணாக போகும் பெண்கள் அழகிய கூந்தலை பெறுவதற்கு கொஞ்சம் ஷாம்பூ போட்டு தலை முடியை வாரம் மூன்று முறையாவது சீரான முறையில் கழுவ வேண்டும். மணப்பெண்ணாக போகும் பெண்களுக்கு இது பெரிதும் பரிந்துரைக்கப்படுகிற அழகு குறிப்பாகும். அதற்கு காரணம் இது தலைமுடியை பலவகை சேதத்திலிருந்து பாதுகாக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தலை முடியை கழுவ புரதம் கலந்த கண்டிஷனரை பயன்படுத்தினால் அது ஸ்டைலான கூந்தலாக காட்சி அளிக்கும். திருமணத்திற்கு முன்பு கொஞ்ச நாளைக்கு சீரான முறையில் தலைமுடி மசாஜிலும் ஈடுபடலாம். இதுவும் மணப்பெண்ணாக போகும் பெண்ணுக்கு திருமணத்தின் போது அழகிய கூந்தலாக காட்சி அளிக்க உதவும். மணப்பெண்ணாக போகும் பெண்கள் மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றினால் அவர்களின் திருமணத்தில் சிறப்பாக காட்சி அளிப்பார்கள். அதனால் உங்கள் திருமணத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

சுதந்திர தினத்தன்று ‘அஞ்சான்’ திரைப்படம் வெளியாகவுள்ளது..!




லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத், விவேக் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அஞ்சான்'.


மும்பையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.


இப்படத்தினை வெளியிட இருக்கும் யு.டிவி நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் தளத்தில் "'அஞ்சான்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் லிங்குசாமியிடம் நீண்ட நேரம் உரையாடினேன்.

ஆகஸ்ட் 15ம் திகதி 'அஞ்சான்' வெளியாகும். பெரிய பட்ஜெட் படம் என்பதால் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்.


மேலும் 'அஞ்சான்' படப்பிடிப்பு இன்னும் 30 நாட்களுக்கு மும்பையில் நடைபெறும். அதோடு படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்து விடும். ஏப்ரல் 14ம் திகதி முதல் மீதமுள்ள படப்பிடிப்பு இருக்கும்.


தமிழ் புத்தாண்டு அன்று அஞ்சான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். எங்களது அடுத்த வெளியீடான 'நான் சிகப்பு மனிதன்' படத்துடன் 'அஞ்சான்' டீஸரை இணைக்க முயற்சிகள் செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.


யாருப்பா இந்த வேலையை செஞ்சது..ஒய் திஸ் கொலவெறி...?




விமல்,சூரி,பிரியா ஆனந்த் மற்றும் தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவரும் திரைப்படம் ஒரு ஊர்ல ரண்டு ராஜா.


ஜெயம்கொண்டான், சேட்டை முதலிய படங்களை இயக்கிய R.கண்ணன் இப்படத்தினை இயக்கிவருகிறார்.


சமீபமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்புகளின் போது விபத்தில் சிக்கவிருந்த தம்பி ராமைய்யாவை தனது சமயோசித புத்தியினால் சூரி
காப்பாற்றியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


விமல்,பிரியா ஆனந்த், சூரி மற்றும் தம்பி ராமைய்யா ஆகியோர் நடிக்க வேண்டிய ஒரு காட்சியின்படி இவர்கள் நால்வரும் ஒரு காரில் பயணிக்க
வேண்டுமாம். இக்காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது தம்பி ராமைய்யா மட்டும் காரில் சீட் பெல்ட்டுடன் அமர்ந்திருந்ததாகவும், ட்ரைவர் இன்றித் திடீரென இந்தக் கார் ஓடத் துவங்கியதாம்.


எதிர்பாராமல் நிகழ்ந்த இந்நிகழ்ச்சியைப் பார்த்த சூரி, தம்பி ராமைய்யா அமர்ந்திருந்த கார் ஏரியின் அருகில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்ததும்
அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக காருக்குள் பாய்ந்த சூரி காரின் பிரேக்கினை அழுத்தி காரினை நிறுத்தியுள்ளார்.

 இதன்மூலம் ஏரியில் விழுந்து
நொறுங்கவிருந்த காரும், அதற்குள் அமர்ந்திருந்த தம்பி ராமைய்யாவும் காப்பாற்றப்பட்டதாக இப்படத்தின் இயக்குனர் கண்ணன் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிரடி ஆட்டம் போட்ட “டமால் டுமில்”..!




அறிமுக இயக்குனர் ஸ்ரீ இயக்கும் படம் ‘டமால் டுமில்’. சமிபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


டிரெய்லர் வெளிவந்த பிறகு மக்களிடையே பல மடங்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீ நம்மிடம் கூறுகையில், இப்படத்தில் மொபைல் மற்றும் டிவி முக்கிய பங்கு வைப்பதாக தெரிவித்தார்.


எனினும் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் இந்த மாதத்திற்குள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். படத்தின் தீம் மியூசிக் இன்று யூ டியூபில் வெளியிடப்பட்ட கொஞ்ச நேரத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.


தனது ஆஸ்தான குருவான இயக்குனர் ஷங்கர் பற்றி ஸ்ரீ கூறுகையில், அவருடைய எந்திரன் படத்தில் வேலை செய்ததாகவும், அவர் நண்பன் படம் இயக்கும் போது நான் டமால் டுமில் பட வேலைக்காக வெளியே வந்துவிட்டதாகவும் கூறினார்.


மேலும் இயக்குனர் சங்கர் தன்னை ஊக்குவித்ததாகவும் கூறினார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் இப்படத்தில் வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீ இயக்குகிறார், தமன் இசை யமைக்கிறார்.


 இப்படத்தை ஆர்.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
காமெடி கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது ’டமால் டுமீல்’ படம்.