Friday, 28 February 2014

இந்த கதையில அமிதாப்பச்சனும் வராருங்க...! உங்களுக்கு தெரியுமா?



அதோ இதோவென்று ஒருவழியாக ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதில் முதற்கட்டமாக அதன் ஆடியோ பங்ஷன் வருகிற மார்ச் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த் அப்பா-மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அனிமேஷன் படம் தான் ‘கோச்சடையான்.’ இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்ட் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்திருக்கும் இந்தப்படம் ‘மோஷன் கேப்சர்’ என்ற புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று சொல்லப்பட்ட நிலையில் படத்தின் ஆடியோ பங்ஷன் எப்போது நடக்கும் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் ‘கோச்சடையான்’ ஏப்ரல் மாதம் ரிலீசாகுமா? என்கிற சந்தேகமும் ரசிகர்களிடையே இருந்து வந்தது.

இதற்கிடையே ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் அடுத்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்துடன், பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்.

விழாவில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை படத்தை தயாரிக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல், மீடியா ஒன் ஆகிய நிறுவனங்கள் கவனித்து வருகின்றன.

0 comments:

Post a Comment