Wednesday, 19 February 2014

குள்ளமாக இருக்கும் ஆண்களுக்கான சில டிரஸ்ஸிங் டிப்ஸ்....!



குட்டையாக இருக்கும் ஆண்களுக்கு போதிய தன்னம்பிக்கையும் மனப்பான்மையும் இருப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் குட்டையாக இருப்பதால் உலகமே முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தமில்லை என்பதை முக்கியமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


 குட்டையாக இருப்பவர்களுக்கும் பல விதமான ஆடை அணியும் விதங்கள் இருக்கிறது. அவைகளை பின்பற்றினால் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அழகாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் இழந்த தன்னம்பிக்கையையும் மீண்டும் பெறுவார்கள். நீங்கள் அணியும் ஆடையுடன், பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதற்கு உங்கள் வங்கி இருப்பை கரைக்க வேண்டும் என்று எண்ணி விடாதீர்கள்.


நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உணர்வுடைய முயற்சி இருக்க வேண்டும். அப்படி நீங்கள் தேர்ந்தேடுக்கும் ஆடைகள் உங்கள் தோற்றத்தை மந்தமாக காட்டாமல் உங்களை முழுமையாக காட்சிப்படுத்த வேண்டும்.


கொடகொடவென இருக்கும் பேண்ட்டிற்கு பதிலாக சரியான அளவிலான பேண்ட்டை தேர்ந்தெடுத்து அணிந்தால் உங்களை சற்று உயரமாக காட்டும். மாறாக கொடகொடவென இருக்கும் பேண்ட்டை அணிந்தால் குட்டையாக தெரிவீர்கள். அதே போல் சற்று உயரமான ஹீல்சை கொண்ட ஷூக்களை பயன்படுத்துங்கள். ஆனால் அவை பெண்கள் பயன்படுத்துவதை போல் மிகவும் உயரத்துடன் இருக்க கூடாது.


 அப்படி அணியும் போது அவர்களின் உயரம் சற்று அதிகரிப்பதோடு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் என்று வரும் போது முடிந்த வரை நேர்கோடுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட சட்டைகள் மற்றும் பேண்ட்களை பயன்படுத்துங்கள். அப்படி செய்யும் போது நீங்கள் குட்டையாக இருப்பது மறைக்கப்பட்டு, பார்ப்பதற்கு சற்று உயரமாக தெரிவீர்கள்.


 மேலும், குட்டையாக இருக்கும் ஆண்கள் இதர அலங்கார பொருட்களின் மீதும் கவனம் செலுத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த தோற்றமும் மேம்படும். பார்ப்பவர்களின் கவனத்தையும் உங்கள் மீது ஈர்த்து உங்களை உச்சி முதல் மாதம் வரை கவனிக்க செய்யலாம்.



நீட்டு வடிவில் இருக்கு வடிவமைப்புகள்


 நீட்டு வடிவத்தில் இருக்கும் வடிவமைப்புகள் உங்களை உயரமாக காட்டும். அதற்கு காரணம் நம் கண்கள் அந்த கோடுகளை உங்கள் உயரத்தோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கும். பாதியிலேயே துண்டித்து போகாமல் கடைசி வரை உள்ள நீட்டு வடிவு கோடுகளை கொண்ட ஆடைகளை கொண்டு உங்களை உயரமாக காட்டுவது ஒரு சிறந்த வழியாகும். நல்ல டிசைனோடு உள்ள ஆடையில் மேலயும் கீழேயும் விழுகின்ற நேர் கோடுகளை கொண்ட ஆடைகளை அணிவித்தால் பார்ப்பதற்கு உயரமாக மட்டுமல்லாமல் ஸ்டைலாகவும் இருப்பீர்கள்.



சரியான அளவிலான ஆடைகள் முடிந்த வரைக்கும்,


 உங்கள் உடலமைப்புக்கு பொருந்துகின்ற சரியான அளவிலான ஆடைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் அணியும் ஆடைகள் தொளதொளவென இருக்க கூடாது. ஒவ்வொரு ப்ராண்ட் ஆடைக்கும் தனித்துவமான அளவு இருக்கும். அதனால் ஸ்லிம் ஃபிட் வகை ஆடைகளை விற்கின்ற பிராண்டை தேர்ந்தேடுத்து, அது உங்கள் உடல் அமைப்புக்கு பொருந்துகிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். ஒரு வேளை, ரெடிமேட் ப்ராண்ட் எதுவுமே உங்களுக்கு பொருத்துமாக இல்லையென்றால் நல்லொதொரு டெய்லர் மூலமாக உங்கள் உடல் கட்டமைக்கு பொருந்துகின்ற வகையில் ஆடைகளை தைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

 ஒற்றை நிற ஆடைகள்


 பல விதமான நிறங்களை கொண்ட ஆடைகளை தவிர்த்தால் உங்கள் தோற்றம் நெறிப்படும். ஒரே குடும்பத்தை சேர்ந்த நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தால் பார்ப்பவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். முடிந்த வரை நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் ஒரே வகை நிறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கருமையான நிறத்தை தழுவி இருப்பது நல்லது. இது உங்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்டும்.



 சிறிய விகிதங்கள்


உங்கள் ஆடைகளின் சில பகுதிகள் ஒன்றின் மீது ஒன்று மடிந்து இருக்கும் போது உங்கள் தோற்றத்தை எடுத்து காட்டுவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் மேல் பகுதியில் சொல்ல வேண்டுமானால், உங்கள் சட்டை காலர் மற்றும் ஜாக்கெட் முன்படிப்பு (நீங்கள் ஜாக்கெட் அணிந்திருந்தால்). இவை இரண்டையுமே குறுகலான பக்கம் வைத்திடுங்கள்.


 சரியான ஆடைகள்



 ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் அல்லது சூட் வகை ஜாக்கெட் அணிந்தால் உங்கள் தோள்பட்டை கனமாக தெரியும். இப்படி இருக்கும் போது அது உங்கள் உயரத்தை அதிகரித்து காட்டும். பேண்ட் அணியும் போது இயற்கையான இடுப்பு கோடுகளில் நிருகுமாறு அணியுங்கள். மாறாக இடுப்புக்கு கீழே அணிவித்தால் உங்கள் கால்கள் குட்டையாக தெரியும். பொதுவாக குட்டையான ஆண்களுக்கு அவர்களின் மற்ற உயரமான பாகங்களை விட அவர்களின் கைகளும் கால்களும் சின்னதாக இருக்கும். அதனால் தான் அவர்கள் குட்டையாக இருக்கிறார்கள். அதனால் உங்கே உடம்பின் மேல் பகுதியில் அணியும் ஆடையின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


 கொஞ்சம் உயரத்தை அதிகரித்திடுங்கள்



 அதிகமாக இல்லாமல், குறைந்த அளவில் கொஞ்சம் உயரத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். அப்படி உங்கள் உயரத்தை அதிகரிக்க சற்று உயரமாக இருக்கும் காலணிகளை அணியலாம். அல்லது லிஃப்ட், தடிமனான காலனி சோல், உயரமான ஷூ போன்ற உபகரணங்களை பயன்படுத்தலாம். இவை அனைத்தினாலும் உங்கள் உயரத்தை சிறு அளவிற்கு உயர்த்திடலாம்.

ராஜீவ் கொலையாளிகள் சிறையிலிருந்து விடுதலை : ஜெயலலிதா அறிவிப்பு..!



ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் மூவரையும் விடுதலை செய்ய  முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதனையடுத்து சாந்தன், முருகன், பேரறிவாளன் நளினி ஆகியோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் 23 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களை தவிர ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசே விடுவிக்கும்:

தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். முடிவு குறித்து மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை மாநில அரசே விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னதாக நேற்று உச்சநீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா அவ்வளவு ஈஸி இல்லை..! - கதறும் அதர்வா..!



”ஒருநடிகனுக்கு, மூணாவது படத்துலயே உச்சம் தொடுற அளவுக்கு நல்ல பேர் கிடைக்கிறது சாதாரண விஷயம் இல்லை. எனக்கு அது கிடைச்சதுக்குக் காரணம் பாலா சார். கொஞ்ச நாள் அந்த சந்தோஷத்தை அனுபவிச்ச பிறகு யோசிச்சுப் பார்த்தா, எனக்கு பொறுப்பு ஜாஸ்தியாகி இருக்குனு தோணுது. இனி என் படங்களைப் பத்தி நானே பேசாம, ஆடியன்ஸைப் பேசவைக்கணும்!” – குறுகுறு கண்களும் கன்னக்குழி சிரிப்புமாக அதர்வாவிடம் பேசும்போதே நமக்கும் உற்சாகம் ஒட்டிக்கொள்கிறது.

” ‘பரதேசி’ படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. அதில் எதுவும் வருத்தம் உண்டா?”

”நான் தேசிய விருது எல்லாம் எதிர்பார்க்கலை. ஆனா, பாலா சாருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். அவருக்கு விருது கிடைக்காமப்போனதில்தான் எனக்கு வருத்தம்!”

”ஃபீல்டுக்கு வந்து நாலு வருஷத்தில் மூணே படங்கள்தான்… இந்த ஸ்பீடு போதுமா?”

”எல்லா ஹீரோக்களுக்கும் வருஷத்துக்கு மூணு படம் பண்ணணும்னுதான் ஆசை இருக்கும். ஆனா, நான் பண்ற படங்கள் அப்படி சின்ன கேப்ல முடிக்க முடியாததா இருக்கு. ‘பாணா காத்தாடி’க்கு ஷூட்டிங் நாட்கள் கம்மி. ஆனா, முதல் படம் என்பதால், ரிகர்சல் அதிகம் எடுத்துக் கிட்டேன். ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ டெக்னிக்கலா நேரம் எடுத்துக்கிச்சு. ‘பரதேசி’ பட லுக் காரணமா, மத்த படங்களில் நடிக்க முடியலை. இப்போ நான் ஓடவேண்டிய நேரம் வந்திருச்சு. அதான் ‘ஈட்டி’, ‘இரும்புக் குதிரை’னு வரிசையா கமிட் ஆகியிருக்கேன்!

இதுல ஒவ்வொண்ணும் ‘பரதேசி’க்கு சம்பந்தமே இல்லாத படங்கள். ‘இரும்புக் குதிரை’யில் பைக் ரேஸர் கேரக்டர். ‘ஈட்டி’யில் அத்லெட் கேரக்டர். படம் முழுக்க ஓடிட்டே இருக்கணும். என்னை நீங்க அத்லெட்னு நம்பணும்கிறதுக்காக, சிக்ஸ்பேக் வெச்சிருக்கேன்!”

” ‘இதயம் பார்ட்-2’ படம் எடுத்தா நடிப்பீங்களா?”

”என்ன கதை, கான்செப்ட்னு தெரியணும். ‘இதயம்’ அப்பாவுக்கு பெரிய அடையாளம் கொடுத்த படம். பெரிய அளவில் பேசப்பட்ட படம். அதை பீட் பண்ற அளவுக்கு நல்ல கதை கிடைக்கணும். ‘இதயம்’ படத்தைவிட ‘இதயம் பார்ட்-2’ கதை நல்லா இருந்தா, கண்டிப்பா நடிப்பேன்!”

”ஜனனி அய்யரோட சம்திங்… சம்திங், ப்ரியா ஆனந்த் உங்களைக் கலாய்ச்சுட்டே இருக்காங்கனு ஏதேதோ கேள்விப்படுறோமே!”

”அதெல்லாம் கிசுகிசு அளவுக்குக்கூட வொர்த் இல்லைங்க. சமந்தா, அமலா பால், ஜனனி அய்யர், ப்ரியா ஆனந்த்… இவங்க எல்லாரோடவும் நடிக்கும்போது ஃப்ரெண்ட்லி டச் உண்டு. ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, ‘ஹாய்… ஹலோ’கூட சொல்லிக்கிறது இல்லை. ப்ரியா செம சேட்டை. ‘இரும்புக் குதிரை’ செட்ல கஷ்டமான ஒரு சீன். அதுக்கு எட்டு டேக் ஆகும்னு நான் சொன்னேன். 10 டேக் மேல போகும்னு ப்ரியா பெட் கட்டினாங்க. 12 டேக் போச்சு. அதான் சைக்கிள் வாங்கித் தரணும்னு என்னைக் கலாய்ச்சுட்டு இருந்தாங்க. வேற ஒண்ணும் இல்லை!”

”முரளி பையனா இருந்துக்கிட்டு லவ் பண்ணலைனா எப்படி?”

”இப்போ எதுவும் தோணலைங்க. சினிமாவில் இன்னும் டிராவல் பண்ணவேண்டியது நிறைய இருக்கு. இப்போதைக்கு என் சினிமா கேரியர் மேல மட்டும்தான் எல்லாக் கவனமும். 24 வயசுதானே ஆகுது. இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும். ஒட்டுமொத்தமாத் தீபாவளி கொண்டாடிடலாம்!”

”முதல் படத்துக்கும் மூணாவது படத்துக்கும் இடையிலான சினிமா பத்தின உங்க ஐடியா எந்த அளவுக்கு மாறியிருக்கு?”

”ஒரு கதை இருந்தா, அந்த கேரக்டர் தானா டெவலப் ஆகிடும்னு ஆரம்பத்துல நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சுவாரஸ்யமான, சவாலான ஒரு கேரக்டர் இருந்தா, அதைச் சுத்தி பிரமாதமான கதை பிடிச்சிடலாம்னு ‘பரதேசி’யில் நடிச்ச பிறகு தெரிஞ்சுக்கிட்டேன்.

அதே மாதிரி க்ளோசப் ஷாட்ல என்ன நடிச்சுட முடியும்னு முன்னாடி நினைப்பேன். ஆனா, வைட் ரேஞ்ச்ல எடுத்த ஒரு ஷாட்டுக்கு, முக ரியாக்ஷன்களை மட்டும் க்ளோசப்ல எடுக்கும்போது, எக்கச்சக்கமா பெர்ஃபார்ம் பண்ண வேண்டியிருக்கும். அந்த வித்தியாசத்தை இப்போ தெளிவாப் புரிஞ்சுக்கிட்டேன். சினிமா அவ்வளவு ஈஸி இல்லை சார்!”

வீட்டுக்கடனை விரைவில் கட்டுவது சிறந்ததா...?



 இன்று வீட்டுக்கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் மொபைல் போன் எண்ணிக்கைக்கு அடுத்தது வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லோரும் தவறாமல் செய்வது வீட்டுக்கடன் வாங்குவது. வீட்டுக்கடன் பொதுவாக 20 வருடம் என எடுத்துக்கொண்டால், ஒரு லட்சத்திற்கு மாதம் 1,000 ரூபாய், 10.5% வட்டி விகிதத்தில் வரும். வட்டி மேலும் கீழும் சென்றாலும் சராசரியாக 10% நீண்ட கால அடிப்படையில் வரும்.

இது நம்முடைய அசலையும் சேர்த்து 2.5 மடங்கு. 50 லட்சம் ரூபாய்க்கு நாம் 120 லட்சம் ஏறக்குறைய கட்டுவோம். அவ்வளவு வட்டி எதற்கு தரவேண்டும் என்று பலர் 7 முதல் 10 வருடங்களில் கட்டி முடித்துவிடுவார்கள். அப்படியே பழக்கப்பட்டவர்களுக்கு அதிலி ருந்து வெளியே வருவது கடினம். பொதுவாக எல்லோரும் சொல்வது நான் நிறைய வட்டி கட்ட விரும்பவில்லை அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கவேண்டும்.

மேலும் சிலர் எனக்குக் கடன் இருந்தால் சரியாகத் தூக்கம் வராது. ஆனால் அவர்கள் சீக்கிரமாக கட்டி முடித்தவுடன் செய்யும் முதல் காரியம் முந்தைய வீட்டைவிட பெரிய வீடாக வாங்குவது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் EMI என்பது ஒரு போதை! முதல் சில மாதங்களுக்கு கடினமாக இருக்கும், பின்பு பழகிவிடும். நாம் அதிலிருந்து வெளியே வராதபடி நம் வீட்டின் கதவை எதாவது ஒன்று தட்டி கொண்டே இருக்கும்.

முதலீடு என்று வரும்போது நாம் உணர்ச்சிவயப்படக் கூடாது. உணர்ச்சி என்பது நமக்குத் தானே தவிர பணத்திற்கு எப்போதுமே இருந்ததில்லை. உணர்ச்சி இல்லாத பணத்தைக் கையாளும்போது நாமும் முடிந்தவரை உணர்ச்சி வயப்படாமல் இருக்க வேண்டும்.

இன்று எல்லோருக்கும் சவாலான விஷயம் வீட்டுக் கடனை சீக்கிரம் முடிப்பது நல்லதா அல்லது கடைசிவரை கட்டுவதா? நிறைய பேர் ஆலோசனை சொல்வது சீக்கிரம் கட்டுவது நல்லது என்பதே. நமக்கு எதிலாவது சந்தேகம் வந்தால் அதில் சிறிது நேரம் செலவிட்டு,ஒப்பிட்டுப்பார்த்தால் நம்மால் ஓரளவிற்கு தெரிந்து கொள்ள முடியும். இது அப்படிப்பட்டஒரு முயற்சியே. இதில் ஒரே ஒரு கண்டிஷன் உணர்ச்சிவயப்படாமல் இருப்பது!

நாம் அனுமானமாக எடுத்து கொள்வது.

1. 49,919 EMI 2. 10.5% 3. 20 வருடம்

அடுத்தது முன்பணம் கொடுத்தவுடன் குறையக்கூடிய பணத்தை PPFல் முதலீடு செய்வது. 8.7% வட்டி என்பது தற்போதய நிலை. வீட்டுக்கடன் முடிந்தவுடன் அந்த பணத்தை 20 வருடம் வரை PPFல் முதலீட்டை தொடர்வது.

மற்றொன்று அந்த முன்பணத்தை அப்படியே ​மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது. சென்செக்ஸ் கடந்த 34 வருடங்களில் 17% கூட்டுவட்டி கொடுத்துள்ளது. டிவிடெண்டை எடுத்துக்கொண்டால் இன்னும் 2% வரை வரும்.

​மியூச்சுவல் ஃ​பண்ட்​

முதலீடு கடந்த 20 வருடங்களில் நிறைய ஃபண்ட் 20% மேல் கூட்டு வட்டி கொடுத்துள்ளது. அதனால் 15% கூட்டு வட்டி எதிர்பார்ப்பது என்பது ஒரு மிதமான எதிர்பார்ப்பு. உங்களால் அதைகூட நம்பமுடியாது என்றால் 12% எடுத்துகொள்ளுங்கள்.

அட்டவணையைப்பற்றி

ஒருவர் வீட்டுக்கடன் வாங்கிய இரண்டாம் வருடத்தில் இருந்து, ஒவ்வொரு வருடமும் 5லட்சம் முன்பணமாக கட்டுகிறார், 6ஆவது மற்றும் 7ஆவது ஆண்டில் 8 லட்சம், பின்பு கடைசியில் மீதமுள்ள 3.68 லட்சம். 8 வருடத்தில் முடிந்துவிடும். 8 வருடத்தில் அவர் கட்டிய பணம்மொத்தமாக 73.32 லட்சம். இதை செய்பவருக்கு மிக்க மகிழ்ச்சி ஏனெனில் கொஞ்சம்தான் வட்டி கட்டுகிறோம் என்று.

1. பணத்தை வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிக்கு கொடுத்து EMI குறைத்த பணத்தை முதலீடுசெய்யும்போது நமக்கு ஏறக்குறைய 2 கோடி கிடைக்கிறது.

2. அதற்கு பதிலாக அந்த பணத்தை முதலீடு செய்யும்போது 12% கூட்டு வட்டியில் 2.67கோடியும், 15% கூட்டு வட்டியில் 4.08 கோடியும் கிடைக்கிறது.

சாராம்சம்: வீட்டுக்கடன் வட்டி என்பது நமக்கு கிடைக்கும் கடன்களில் மிகக்குறைந்த மற்றும் நீண்ட கால கடன். நீண்ட கால கடன் என்கிறபோது நாம் கட்டக்கூடிய பணமும்அதிகம், அதே சமயம் நமக்கு வருமானமும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்போது நம்மால் கடனை எளிதாக கட்டமுடியும். வருங்காலங்களில் நமக்கு வருமானம் கூடும் என்ற ஒரு நம்பிக்கையில் தான் எல்லோரும் கடன் வாங்குகிறோம் என்பது உண்மை. மேலும் முதலீட்டில் நாம் செய்யும் முதலீட்டின் அளவை விட எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோம் என்பது மிக முக்கியம்.

அட்டவணைப்படி பார்க்கும்போது ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

1.வீட்டுக்கடனை சீக்கிரம் முடிப்பது சரியான ஒரு முடிவு கிடையாது.

2.வீட்டுக்கடன் வாங்கும்போது நமக்கு எவ்வளவு தருகிறார் களோ அவ்வளவு லோன் எடுக்கவேண்டும்.

3.இன்று வீட்டுக் கடன் பொதுவாக 20 ஆண்டுகள். சிலர் 25 ஆண்டுகள் வரை தற்போது கொடுக்கிறார்கள். நாம் எப்போதுமே எவ்வளவு அதிக ஆண்டுகள் நமக்கு தருகிறார்களோ அவ்வளவு எடுத்துக்கொள்வது நல்லது.

4.நான் வீட்டுக் கடனில் கிடைக்ககூடிய சலுகை களை பற்றி இங்கு எடுத்துக்கொள் ளவில்லை. இந்தக் கட்டு ரையின் முயற்சி ஒருவர் வீட்டுக் கடன் வாங்கும்போது அதை சீக்கிரம் கட்டலாமா கூடாதா என்பதே.

வீட்டுக்கடன் சீக்கிரம் முடிப்பது என்பது தவறான முடிவு என்றால் மிகையாகாது!

புரட்சித்தலைவி ஜெயலலிதா - வாழ்க்கை வரலாறு



ஜெயலலிதா ஜெயராம் அவர்கள், தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார். தமிழ் திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவரான ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி மேலும் விரிவாக காண்போம்.

பிறப்பு: 24 பிப்ரவரி 1948

பிறந்த இடம்: மைசூர், இந்தியா

தொழில் துறை: நடிகை மற்றும் அரசியல்வாதி


ஆரம்ப வாழ்க்கை:

‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார்.

 சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.

தொழில்:

ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. 1964ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார்.

ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து, அவர் “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார்.

 அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான  ”நதியை தேடி வந்த கடல்” இருந்தது.

அதே ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதா அவர்களை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் தீவிரமாக அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார்.

அவர் அரசியலில், எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். அவரது மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.

இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது – ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும். எனினும், 1988 ஆம் ஆண்டில் அவரது கட்சி,  இந்திய அரசியலமைப்பின் 356 கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது. 1989ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் இருந்தாலும்,  அவர் மூன்று முறை (1991, 2001, 2011) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

பங்களிப்புகள்:

அரசாங்க நிதி மற்றும் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் மோசடி, குற்றச்சாட்டுகள் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தாலும், மாநில மக்களின் மீது அவர் கொண்ட பற்றும், செலுத்திய பங்களிப்பும் அவரை மூன்று முறை ஆட்சிக்கு வர செய்தது. அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. அதேநேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமை, வன்முறை, மற்றும் ஊழலை நீக்க மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

விருதுகள்

‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது.

சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.

‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு  சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.

தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.

சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.

‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.

சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.


காலவரிசை

1948: மைசூர் நகரில், பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார்.

1961: ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.

1964: கன்னட படத்தில் முதல் முறையாக பங்கேற்றார்.

1965: தமிழ் படங்களில் அறிமுகமானார்.

1972: ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.

1980: பிரச்சார செயலாளராக எம்.ஜி. ஆரால் தேர்வு செய்யப்பட்டார்.

1984: மக்களவைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

1989: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

1991: முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

2002: இரண்டாவது முறையாக மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.

2011: தற்போது தமிழக முதல்வராக பணியாற்றுகிறார்.

சூப்பர் ஸ்டார்தான் முதலில் உடைத்தார் இரண்டாவதுதான் தல அஜீத்..!



சினிமா கதாநாயகர்கள், முதுமையானாலும் உடம்பிலும், தலையிலும் முதிர்ச்சி தென்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். குறிப்பாக, தலையில் ஒரு முடி வெள்ளையாக தெரிந்தாலும் கருப்பு சாயம் பூசிக்கொண்டு தங்களை இளமையாக வெளியில் காட்டிக்கொள்வார்கள்.

ஆனால், இப்படியிருந்த இமேஜை ரஜினிதான் முதலில் உடைத்தார். டை அடிக்காத வெள்ளைத்தலை, தாடியுடன் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மங்காத்தா, வீரம் படங்களில் பாதி கருப்பு, வெள்ளையுமாக இருக்கும் தனது நிஜ தலைமுடி கெட்டப்புடன் நடித்தார் அஜீத். ஆனால் அதுவே இப்போது ஒரு பேஷனாகி விட்டது.

தமிழ்நாட்டில் இதை யாரும் பின்பற்றாதபோதும், மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ப்ருதிவிராஜ் ஆகியோர் தற்போது தாங்கள் நடிக்கும் படங்களில் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில், மோகன்லால் ஜோஷி இயக்கும் படத்திலும், மம்மூட்டி கேங் ஸ்டார் என்ற படத்திலும், ப்ருதிவிராஜ் செவன்த்டே என்ற படத்திலும் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 இதில் மோகன்லால், மம்மூட்டிக்கு ஏற்கனவே நரைமுடிகள்தான் என்பதால் அப்படியே நடிக்கிறார்கள். ஆனால், ப்ருதிவிராஜ் இந்த படத்திற்காக தனது தலைமுடியை ஒயிட்டாக மாற்றிக்கொண்டு நடிக்கிறாராம்.

அண்ணன், தம்பி இணைந்து நடத்திய நாடகம் - அம்பலமானது...!



சினிமாவில் கடன் வாங்குவது சகஜம். அதே போல, படம் படுத்துவிட்டால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை வரை போவதும் சகஜம்.

 முன்னணி தயாரிப்பாளர்களே கூட இதற்கு விலக்கில்லை. அதுவும் மதுரையின் 'அன்பான' பைனான்சியர் மாதிரியானவர்களிடம் கடன் வாங்கிவிட்டு பட்ட பாடுகளை தேவயானிகள், ரம்பாக்கள் கதை கதையாக சொல்வார்கள்.

அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி சசிகுமார் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்!

இப்போது இதே அன்பானவரிடம் பெரும் தொகை ஒன்றை கடனாகப் பெற்றிருக்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

 அவர்தான் பிரம்மன் படத் தயாரிப்பாளர்.

(பிரம்மன்) சசிகுமார் ஒரு நல்ல இயக்குநர், தயாரிப்பாளராக இருக்கலாம். ஆனால் நடிகராக? அவருக்கென்று பெரிய சந்தை மதிப்பு இல்லாதது புரிந்தும், அளவுக்கு அதிகமான பட்ஜெட் பிரம்மன் படத்தை தயாரித்துவிட்டார் தயாரிப்பாளர்.

விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் விலை சொன்னபோது வாங்க மறுத்துவிட்டார்களாம்.

இதனால் அன்பானவரிடம் ரூ 14 கோடி கடன் வாங்கி இந்தப் படத்தை தானே சொந்தமாக வெளியிடுகிறாராம்.

அஞ்சு வட்டிக்கு இந்தக் கடனை வாங்கியிருக்கிறாராம்.

மதுரை - ராமநாதபுரம் ஏரியாவை மட்டும் சசிகுமாருக்கு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர்.

அதை நல்ல விலைக்கு விற்கும் முயற்சியில் உள்ளார் சசியின் தம்பி.

எப்படிப் பார்த்தாலும் சசிகுமாருக்கு லாபம்தான். தயாரிப்பாளருக்கு?!

யாருடனும் எனக்கு உறவு இல்லை ப்ளிஸ் நம்புங்க சிம்பு - ஹன்சிகா..!



ஹன்சிகா தனது டுவிட்டரில் நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். யாருடனும் உறவு இல்லை என்று பதிவு செய்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன்மூலம் சிம்புவுடனான காதலை முறித்து விட்டதாக செய்தி பரவுகிறது.

சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் என்றார்.

இது சிம்பு, ஹன்சிகா காதலில் பிளவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதுவும் ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை. இருவரும் பிரிந்த விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் திடீரென்று நயன்தாரா தோழிதான். ஹன்சிகாதான் என் காதலி என்று சிம்பு பேட்டி அளித்தார்.

இதையடுத்து மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்றனர். ஆனால் ஹன்சிகா இதனை மறுப்பதுபோல் நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று டுவிட்டரில் கூறி உள்ளார். கடந்த 14–ந்தேதி காதலர் தினத்தில் இருவரும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

ரஜினிக்கு பதிலாக கார்த்தி..!



விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார்.

 அதற்கடுத்து ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். அந்தப் படம் ரஜினி நடித்த ‘மூன்று முகம்’. இதில் கார்த்தி நடிக்கிறார்.

கார்த்தி ரஜினி படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

‘பாட்ஷா’ படத்தை ரீமேக் செய்தால் நடிக்கத் தயார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்.

 ‘மூன்று முகம்’ படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரான ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்பதைத் தன் படத்துக்கான டைட்டில் ஆக்கினார்.

இப்போது ‘மூன்று முகம்’ ரீமேக்கில் நடிக்கிறார். ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார்.

  ‘பையா’, ‘சிறுத்தை’ படங்களில் கார்த்தி – தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது.

அந்த இரண்டு படங்களும் ஹிட்டானது.

 அந்த ஹிட் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது.

ஜிகர்தண்டா - டீஸருக்கே ரெண்டு லட்சம் பார்வையாளர்கள்..!



இந்த வருஷத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படங்கள்ல ஒண்ணா போர்ஃப்ஸ் பத்திரிகையால் குறிப்பிடப்பட்ட ஒன் அண்ட் ஒன்லி தமிழ்ப் படம் ‘ஜிகர்தண்டா’.

இப்போ 7-ம் தேதி அந்த படத்துடைய டீஸர் ரிலீஸ் ஆகி பட்டையைக் கிளப்பிக்கிட்டிருக்கு.

வெளியான முதல் நாள்லேயே ரெண்டு லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

டீஸருடைய லுக் செம ஸ்டைல், அதுலேயும் ஜிகர்தண்டாவுக்குக் கொடுக்கிற அந்த விளக்கமும் குரலும் மிரட்டல்னு அலசி ஆராய்ஞ்சு டீஸருக்கே அதிக விமர்சனம் வாங்கினது இந்தப் படமாதான் இருக்கும்.

ஆல் தி பெஸ்ட் ஜிகர்தண்டா டீம்!

மணிரத்னத்தின் டவுசர் காலம்..!



மணி மணியாய், ரத்தினச் சுருக்கமாய் பேசும் இயக்குநர் மணிரத்னத்தின் டவுசர் காலம் இதோ…

‘எல்லோரும் நாளைக்கி ஹோம்வொர்க் பண்ணிட்டு வந்திடணும்’னு மிஸ் சொன்னால், இவர் மட்டும் ‘ஏன்?, எதுக்கு? எப்படி?’ எனத் தவணை முறையில் கேள்வி கேட்டு அடி வாங்கியிருப்பார்.

பக்கத்து பெஞ்சில் தூங்கி விழும் கேர்ள்ஃப்ரெண்ட் அஞ்சலியை, ‘ஏந்திரி அஞ்சலி ஏந்திரி… ஏந்திரி அஞ்சலி ஏந்திரி… மிஸ் வந்துட்டாங்க’ எனக் கத்தியே பக்கத்து க்ளாஸ் அஞ்சலிகளையும் எழுப்பியிருப்பார்.

ஃப்ரெண்ட்ஸ் என்றால் அலாதிப் பிரியமான இவர், க்ளாஸ் ரூமில் கூட ஃப்ரெண்டின் தோளின் மேல் கைபோட்டபடிதான் பாடம் படித்திருப்பார்.

பக்கத்து வீட்டு குட்டிப்பசங்களைத் தூக்கிச்சென்று காடு கரை, கண்மாயெல்லாம் ஒளித்துவைத்து, வீட்டில் உள்ளவர்களைத் தேடி அலையவைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.

வகுப்பில் வாத்தியார் என்ன கேள்வி கேட்டாலும், அரை மணி நேரம் கழித்து சாவகாசமாக ஹஸ்கி வாய்ஸில் ரிப்ளை கொடுப்பது இவரின் தனி ஸ்டைல்.

கூடப் படிக்கும் பசங்க இவரிடம், ‘ஏன்டா?’ என்றால் ‘எல்லாம்’ என்றும் ‘என்னாச்சு?’ என்று கேட்டால், ‘புரியல’ என்றும் சம்பந்தமே இல்லாமல் பேசிக் குழப்பியிருப்பார்.

டீச்சரை வழிமறித்து, ‘மிஸ் நீங்க நல்ல மிஸ். நான் பாஸாவேன்னு நினைக்கலை. ஆனா ஃபெயிலாயிடுவேனோனு பயமா இருக்கு. யோசிச்சு மார்க் போடுங்க’னு சொல்லிவிட்டு ஓடியிருப்பார்.

நான் பிரதமரானால் கட்டுரைக்கு ஒரே வரியில் ‘எல்லாம் செய்வேன்’ என எழுதி மடித்துக் கொடுத்ததற்காக, இம்போசிஷன் எழுதியிருப்பார்.

எக்ஸாமில் மேப் வரைவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இருந்திருக்க மாட்டார்கள். இந்தியா மேப் மட்டும் இல்லாமல் இலங்கை, பாகிஸ்தான் மேப்களையும் கூட இம்மி பிசகாமல் வரைவதில் கில்லாடியாக இருந்திருப்பார்.

பிடிக்காத ஃப்ரெண்டுங்களையெல்லாம் கருப்பு சாத்தான், குட்டிச் சாத்தான், குண்டு சாத்தான் எனப் பட்டப்பெயர்கள் வைத்தே அழைத்திருப்பார். ரயில், ஏரி, காடுகளில் டிராவல் பண்றதுனா, கொள்ளைப் பிரியமான இவருக்கு காஷ்மீர்தான் ஃபேவரைட் டூரிஸ்ட் ஸ்பாட்!

பாலா அவர் ஸ்கூலுக்கே ஒரு ஹிட்லர்னா...! அப்போ சினிமாவுக்கு...?


எல்லோரையும் புரட்டி எடுத்துப் புரோட்டா பிசையும் இயக்குநர் பாலாவோட பள்ளி காலத்தைக் கொஞ்சம் அலசி ஆராய்வோமா?

லீவ் லெட்டரில் கூட, ‘ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ என எழுதாமல் ‘ஐ யம் சஃபரிங் ஃப்ரம் சைக்கோ’ என எழுதி வாத்தியார்களைக் கதிகலங்க வைத்திருப்பார்.

தன்னை அடித்த வாத்தியாரின் பிரம்பைப் பறித்துத் திரும்ப ஸ்கூல் டாய்லெட்டுக்குள் விரட்டி பயமுறுத்திய சம்பவம் உண்டு.

கொட்டாங்குச்சி, பனங்காய், போண்டா… இந்த ஹேர் ஸ்டைல்களிலும் சமயங்களில் இவை எல்லாவற்றையும் கலந்து கட்டிய ஹேர் ஸ்டைல்களிலும் வந்து ஒட்டுமொத்தப் பள்ளிக்கூடத்தையும் மெர்சலாக்கியிருப்பார்.

ஃபேவரைட் ஸ்பாட்டே சுடுகாடுதான். பல்லாங்குழி, கிட்டிப்புல், பம்பரம் எல்லாமே சுடுகாட்டில்தான் விளையாடி இருப்பார். ஆட்டத்துக்கு யார் வராவிட்டாலும் தனியாளாக விளையாடிக் குடும்பத்தையே பயமுறுத்தி இருப்பார்.

ஃபெயிலானதால் மண்டையில் குட்டிய வாத்தியாரைப் பார்த்து வெகுண்டெழுந்து, ‘லூஸாப்பா நீ?’ எனக் கேட்டதால், வாத்திகள் ரவுண்ட் கட்டி வெளுத்திருப்பார்கள்.

ஓட்டப் பந்தயத்தில் கையை வீசி ஓடாமல் அட்டென்ஷனில் குடுகுடுவென ஓடியிருப்பார்.

வீட்டில் எத்தனை யூனிஃபார்ம் வாங்கிக் கொடுத்தாலும் வாரத்துக்கு ஒரே சட்டையையும் டவுசரையும் போட்டு அழுக்கோடு பள்ளிக்கூடம் போவதைப் பெருமையாக நினைத்திருப்பார்.

சத்துணவு சாப்பாடு நிறையக் கொடுக்காவிட்டால், துரத்தி துரத்தித் தட்டாலேயே சத்துணவு வாத்தியை அடி வெளுத்திருப்பார்.

வீட்டில் இருந்தால் நாள் முழுவதும் விட்டத்தைப் பார்த்து படுத்துக்கிடப்பதும் வெளியே கிளம்பிப் போனால் லங்கர், லேகிய வியாபாரி, கழைக்கூத்தாடி, நடன நாட்டியக் குழு என யார் பின்னாலாவது கூடவே சென்று வேடிக்கை பார்ப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார்.

டீச்சர் சொல்லிக் கொடுத்த ரைம்ஸை மறந்து மயான ரைம்ஸான, ‘நான் ஆத்தாளப் பார்க்காத சுடுகாட்டுப்புள்ள…’யை அப்பவே மனப்பாடமாய் ஒப்பித்து எல்லோரையும் கடுப்பேற்றியிருப்பார்!

ஹாலிவுட்டை நோக்கி தமிழ் சினிமா..! - உலகநாயகன் கமல்



’’தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும்’’ என்று கமல்ஹாசன் கூறினார்.

சினிமா படவிழா

எழுத்தாளர் ராஜு முருகன் முதன்முதலாக டைரக்டு செய்துள்ள ’குக்கூ’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில், நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.

விழாவில் சூர்யா பேசும்போது, ’’நான் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்றால் அது, கமல்ஹாசன் போட்டுக் கொடுத்த பாதைதான். அவரை நான் சித்தப்பா என்றும் அழைத்து இருக்கிறேன். அண்ணன் என்றும் அழைத்து இருக்கிறேன். சித்தப்பா என்பதை விட, அண்ணன் என்றால் இன்னும் நெருக்கம் வருவதால், அண்ணன் என்றே அழைக்கிறேன்’’ என்றார்.

கமல்ஹாசன் பேச்சு

விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:-

’’எனக்கு வழக்கமான சினிமா மூட நம்பிக்கைகள் கிடையாது. இருந்தாலும், நரி முகத்தில் விழித்தால் நல்லது என்பார்கள். இன்று காலை நரி முகத்தில் விழித்து இருக்கிறேன். இந்த படத்தை தயாரித்த “பாக்ஸ்” நிறுவனத்தைத்தான் சொல்கிறேன். ஹாலிவுட்டில், பாக்ஸ் ஸ்டார் இருபதாம் நூற்றாண்டை கடந்து இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறது.

நான், அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்பை நம்புபவன். ‘குக்கூ’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, இந்த படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் புலப்படுகிறது.

நாவல்கள்

சிறந்த நாவல்களை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று 35 வருடங்களாக சொல்லி வருகிற கூட்டத்தை சேர்ந்தவன், நான். வைக்கம் முகமது பஷீர் , ராஜுமுருகனுக்கு மட்டுமல்ல. எனக்கும் கதாநாயகன் தான். அங்கிருந்துதான் வேர் தொடங்குகிறது. சேரன் சொன்ன பொறாமை எனக்கும் உண்டு. என் ஊரில், என் தம்பிமார்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார்கள் என்று பெருமைப்படுகிறபோது, பொறாமை காணாமல் போய்விடுகிறது. என் பொறாமை,
ஆரோக்கியமான பொறாமை.

படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் ரெயிலில் பயணித்தபடி, காற்றை தொட்டு செல்வது போல் காட்சி வருகிறது. இதைத்தான் நண்பர் வைரமுத்து பார்வையற்றவர்களை பற்றி சொல்லும்போது, ’’உங்களுக்கு இரண்டு கண்கள். எங்களுக்கு இருபது கண்கள், நகக்கண்கள்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நட்சத்திரம்

சினிமா, வர்த்தகம் சார்ந்தது. அதுவே நட்சத்திரங்களை உருவாக்குகிறது. அப்படி உருவானவர்கள்தான் எங்களைப் போன்றவர்கள். திறமைக்கு தலைவணங்க வேண்டும். நான் சொல்லாலும், சூர்யா செயலாலும் அதை செய்து காட்டியிருக்கிறோம்.

எனக்கு இரட்டை வேடம் பிடிக்கும். சூர்யாவுக்கு சித்தப்பாவும் நான்தான். அண்ணனும் நான்தான். சிவகுமார் அருகில் இருக்கும்போது சூர்யாவுக்கு நான் சித்தப்பா. அவர் அருகில் இல்லாதபோது, அண்ணன். இப்படி சொல்வதால், நீ எனக்கு மகனா? என்று சிவகுமார் கோபித்துக் கொள்வார். சூர்யா சொன்னது போல், அவருடைய திறமையை நான் கண்காணித்து கொண்டிருக்கிறேன்.

செழுமையான பாதை

சமீபத்தில், நான் மத்திய பிரதேசம் சென்றிருந்தபோது, ’’இப்போதெல்லாம் தமிழில் நல்ல நல்ல படங்கள் வருகிறதாமே?’’ என்று கேட்டார்கள். அதில், உங்களுக்கும் பங்கு உண்டு. தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும். ஹாலிவுட்டை தொடர்ந்து தென்னகத்தின் திறமை உலகை நோக்கி பயணப்படுவதாக நான் நினைக்கிறேன்.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கேயார்

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா, டைரக்டர்கள் சேரன், லிங்குசாமி, பாண்டிராஜ், வெற்றிமாறன், அட்லீ, பட அதிபர்கள் யு.டி.வி. தனஞ்செயன், கதிரேசன், மதன், நடிகர்கள் விஜய்சேதுபதி, தினேஷ், நடிகை மாளவிகா, ஒளிப்பதிவாளர் வர்மா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், எழுத்தாளர் வண்ணதாசன், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், பாடல் ஆசிரியர் யுகபாரதி மற்றும் பலர் பேசினார்கள்.

படத்தின் டைரக்டர் ராஜுமுருகன் நன்றி கூறினார்.

விஜயகாந்த் நடிக்காதது திரைப்படத்துறைக்கு இழப்பு - கமல்..!



திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்து பணிபுரிந்துள்ள படம், ‘மறுமுகம்.’ இந்த படத்தின் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

‘‘இந்த படம் திரைப்பட கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாக சொல்வேன். நண்பர்கள் இணைந்து நட்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் நண்பர் திரைப்பட கல்லூரியின் மூத்த மாணவர் டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அனூப், ஷில்பி, கிஷி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். சஞ்சய் டாங்கி தயாரித்து இருக்கிறார். பொதுவாக, திரைப்பட கல்லூரி மாணவர்கள் முதலில் கதை சொல்ல செல்வது, விஜயகாந்திடம்தான். திரைப்பட கல்லூரி மாணவர்கள் எல்லோருடைய முதல் கனவும் அதுவாகவே இருந்தது.

கல்லூரியில் இருந்து வெளியே வந்ததும் செல்லும் இடம், விஜயகாந்தின் அலுவலகமாகத்தான் இருக்கும். திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலரையும் டைரக்டர் ஆக்கியவர், அவர்தான். நான் ஒரு படத்தை இயக்க தயாராக இருந்தபோது, அவர் அரசியல் என்று வேறு உலகத்தில் இருக்கிறார்.

அவர் இப்போது நடிக்காதது, திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு இழப்புதான். ‘மறுமுகம்’ என்றால் என்ன? என்று கேட்டார்கள். எல்லோரிடமும் பல முகங்கள் உண்டு. சூழலுக்கு ஏற்றபடி அவரவரின் நல்ல முகமோ, கெட்ட முகமோ வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும் ஒருவனது மறுமுகம்தான், இந்த படம்.’’

இவ்வாறு டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேசினார்.

படத்தை வெளியிடும் வினியோகஸ்தர் என்.விஸ்வாமித்திரன், கதாநாயகி பிரீத்திதாஸ், ஷில்பியோ, யாஸ்மின், கிஷி, ஒளிப்பதிவாளர் கனகராஜ், இசையமைப்பாளர் பிரவீன் சாய் ஆகியோரும் பேசினார்கள்.