Wednesday, 26 February 2014

இந்த வலிகள் வந்தால் அலட்சியப்படுத்திடாதீங்க..!

எப்போதாவது கடுமையான வலி ஏற்பட்டு அவசரம் , வேலைப்பளு அல்லது மருத்துவச் செலவு காரணம் அதை அலட்சியப் படுத்தியிருக்கிறீகளா?

ஜாக்கிரதை! சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும். அப்படிப்பட்ட வலிகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் தொடர்ந்து படியுங்கள்.
pain-logo


1. மிகமோசமான தலைவலி: தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான் வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகவீனம்:-பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதிரியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம். அனேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள்.

தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும். மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆஞ்ஜைனாவாக (Angina) இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்.

3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி:-அனேகமாக இது arthritis ஆக இருக்கலாம்.

4. கடுமையான வயிற்று வலி: வயிற்றிலுள்ள குடல் வால் (appendix) பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendicitis எனப்படுகிறது. மருத்துவரிடம் சென்றால் அதை உடனே ஆப்பரேசன் செய்து எடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பாக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். Gallbladder மற்றும் pancreas பாதிப்புகள்குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாலும் வயிற்று வலி வரலாம்.

5. கெண்டைக்கால் வலி: கெண்டைக்கால் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரை ஈரலில் கடும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.

6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி: கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது சர்கரை நோயின் அடையாளமாக இருக்கலாம்.

7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி: சிலருக்கு மனச்சோர்வு(dippression) காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் ” கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது “என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள். கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிட்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும்,அதோடு மூளையையும் பாதித்து விடும்.

சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெரிந்து கொள்வது எப்போது நல்லது. வலி என்பது உடல் நமக்கு தரும் எச்சரிக்கை மணி. அதை அலட்சியப்படுத்தாம்ல் விழித்துக் கொண்டால் உயிருக்கு பாதுகாப்பு. வாழ்க நலமுடன்.


போலி தகவல்களால் பாதிக்கப்பட்டு பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்ருதி..!



போலி தகவல்களால் பாதிக்கப்பட்ட ஸ்ருதிஹாசன் பேஸ் புக்கில் இணைந்துள்ளார். பெரும்பாலான நடிகைகள் டுவிட்டரில் உள்ளனர்.

 தங்களை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை டுவிட்டரில் வெளியிடுகிறார்கள். ஸ்ருதிஹாசனும் அப்படித்தான். ஆனால் அவர் பேஸ்புக்கில் இணையாமல் இருந்தார். இதனால் சிலர் அவரது பெயரில் போலி பக்கம் தொடங்கி பேஸ்புக்கில் பல தகவல்களை வெளியிட்டு வந்தனர்.

அதில் பெரும்பாலும் போலி தகவல்களாக இருந்தன. திடீரென அந்த பார்ட்டிக்கு போய் வந்தேன். அந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு இந்த நடிகர்தான் பிடிக்கும் என பிரச்னையில் சிக்கிவிடும் போலி தகவல்களும் அந்த பேஸ்புக் பக¢கத்தில் இடம்பெற்றது.

இதனால் ஸ்ருதி பலவிதங்களில் பாதிக்கப்பட்டு நொந்துபோனார். போலி நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தானே பேஸ்புக்கில் இணைய முடிவு செய்துவிட்டார். இது பற்றி ஸ்ருதி கூறும்போது, ரசிகர்கள் பலர் பேஸ்புக்கில் சேர அழைப்பு விடுத்தனர்.

 போலிகளை தவிர்க¢கவும் இப்போது பேஸ்புக்கில் பக்கம் தொடங்கிவிட்டேன். இனி என்னைப் பற்றிய அனைத்து உண்மையான தகவல்களையும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்றார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கௌதம் மேனன்..!



தமிழ்த் திரையுலகில் அழகான காதல் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான கௌதம் வாசுதேவ் மேனன் இன்று தனது நாற்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இயந்திரவியல் பொறியாளாரான கௌதம் மேனன் மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அறிமுகப் படமே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததுடன் அடுத்தடுத்துப் படம் இயக்கும் வாய்ப்பினையும் பெற்றுத்தந்தது.

மின்னலே படத்திற்குப் பிறகு சூர்யா- ஜோதிகா நடித்த காக்க காக்க திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் மெஹா ஹிட்டாக அமைந்தது. பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு, சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா என்று மேலும் மேலும் உயரத்திற்குச் சென்றுகொண்டிருந்தார் கௌதம் மேனன்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை என்ற அளவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பெரும் தோல்விகளையும் வழக்குகளையும் சந்தித்துவருகிறார். குறிப்பாக நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் மாபெரும் தோல்வி மற்றும் எதிர்மறை விமர்சனங்கள், நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் தோல்வி, சூர்யா நடிக்கவிருந்த துருவ நட்சத்திரம் படத்திலிருந்து சூர்யா விலகிக் கொண்டது, படத் தயாரிப்பாளர்களின் வழக்குகள் என அடி மேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு பிரச்னைகளுக்கும் நடுவில் தல அஜித் நடிக்கும் ஒரு படம் மற்றும் சிம்பு நடிக்கும் ஒரு படம் என்று இரண்டு படங்களைக் கையில்
வைத்திருக்கிறார் கௌதம் மேனன். தல அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

இன்று பிறந்திருக்கும் இந்தப் புதிய வருடம் அவரது எல்லா கஷ்டங்களையும் போக்கி, வெற்றிப் பயணத்திற்கான பாதையை வகுத்துக் கொடுக்க  வாழ்த்துகிறோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கௌதம் மேனன் சார்.

உங்க கூகுள் குரோம் அடிக்கடி கிராஷ் ஆகுதா..?



இன்றைக்கு ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா? அதே வேளையில், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா? அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம் முதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும். குரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும்.

 கிடைக்கும் மெனுவில், "Tools" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், "Report an issue" என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது புதிய "Feedback" என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக "Tell us what is happening (required)" என்று ஒரு பெட்டி கிடைக்கும்.

இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும்.

குறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்த வகையான தேடல் என்றும் குறிப்பிடவும். உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் எதனையும் தர வேண்டாம்.

ப்ளக் இன் புரோகிராம் பயன்படுத்தும் போது கிராஷ் ஏற்படுகிறதா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட டேப்பில் கிளிக் செய்திடுகையில் ஏற்படுகிறதா என்பதனையும் விளக்கிக் கூறவும். "Include this URL" மற்றும் "Include this screenshot" ஆகியவற்றில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

குரோம் பிரவுசரில் தேடல் பகுதியில், டெக்ஸ்ட் அமைக்கையில், பிரவுசர் தன் குக்கீகளிடமிருந்து எந்த வகையான டெக்ஸ்ட் அமைக்கப்படலாம் என சிலவற்றைக் காட்டும். இந்த வசதியை நீக்கிவிடலாம்.

ஏனென்றால், பெரும்பாலான இடங்களில், இந்த வசதி பயனற்றதாகவே உள்ளது. இதனை நீக்கக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.

பின்னர் அதில் செட்டிங்ஸ் ("Settings") என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய "Settings" டேப் கிடைக்கும். அல்லது chrome://chrome/settings/ எனவும் டைப் செய்து இதனைப் பெறலாம். இங்கு "Search" என்பதற்குக் கீழாக உள்ள "Enable Instant for faster searching" என்பதில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

இதனை அடுத்து விண்டோவின் கீழாக உள்ள "Show advanced settings" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். கீழாகச் சென்று, "Privacy" என்ற இடத்தில் உள்ள "Use a prediction service to help complete searches and URLs typed in the address bar" என்பதில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.இவற்றை முடித்த பின்னர், "Settings" டேப்பில் கிளிக் செய்து மூடவும். குரோம் பிரவுசர், தன் மாறா நிலையில், தரவிறக்கம் செய்யப்படும் பைல்களை C:UsersName Downloads என்ற டைரக்டரியில் பதிந்து வைக்கும். இதில் Name என்பது, யூசரின் பெயர் ஆகும்.

இதற்குப் பதிலாக, நாம் தரவிறக்கம் செய்யப்படும் பைல்களின் தன்மைக்கேற்ப, அவற்றை வெவ்வேறு டைரக்டரி அல்லது போல்டர்களில் பதிந்து வைக்க விரும்புவோம். எனவே, தரவிறக்கம் செய்திடும் முன், பிரவுசர் நம்மிடம், எந்த இடத்தில் தரவிறக்கம் செய்திட வேண்டும் எனக் கேட்பது நமக்கு வசதியைத் தரும். இதற்குக் கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும்.முன்பு கூறியது போல, செட்டிங்ஸ் பக்கம் செல்லவும்.

செட்டிங்ஸ் டேப் திறந்தவுடன், "Show advanced settings என்பதில் கிளிக் செய்திடவும். கீழாகச் சென்று "Downloads" என்பதன் கீழே, "Ask where to save each file before downloading" என்பதில் டிக் செய்து அமைக்கவும். முடிந்தவுடன் settings டேப்பில் கிளிக் செய்து மூடவும். குரோம் பிரவுசர் தொடங்குகையில், எந்த இணையப் பக்கத்துடன் தொடங்க வேண்டும் என்பதனை, இங்கு எப்படி அமைக்கலாம் என்பதனைக் காணலாம்.மாறா நிலையில், குரோம் பிரவுசர் தொடங்குகையில், "New Tab" பக்கம் காட்டப்படும்.

இதில், பயனாளர், அடிக்கடி பார்க்கும் இணையதளப் பக்கங்களின் காட்சி காட்டப்படும். இது பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்குத் தேவையான, தாங்கள் அடிக்கடி செல்லும் இணையதளப் பக்க படத்தின் மீது கிளிக் செய்து, அதனைப் பெற்று பணி தொடங்கலாம்.சிலருக்கு இது பிடிக்காது. அவர்கள், தாங்கள் விரும்பும் இணையதளம் மட்டும் தானாகத் திறக்கப்பட வேண்டும் என விரும்புவார்கள்.அல்லது எந்த இணையப் பக்கமும் இல்லாமல், காலியாக உள்ள பக்கமே காட்டப்பட வேண்டும் என விரும்புவார்கள்.இதனை அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.

ரென்ச் (wrench) பட்டனைக் கிளிக் செய்திடவும். பின்பு ஆப்ஷன்ஸ்(Options) தேர்ந்தெடுக்கவும். இப்போது "Options" டேப் காட்டப்படும். இனி இடதுபக்கம் உள்ள "Basics" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். On startup என்ற பிரிவில், "Open the following pages" என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். குரோம் பிரவுசர் ஒன்று அல்லது பல இணைய தளங்களுடன் தொடங்க வேண்டும் என எண்ணினால், அவற்றை நீங்களாகத் தேர்ந்தெடுக்கவும்

இதற்கு "Add" பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு "Add page" என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் நீங்கள் காட்டப்பட விரும்பும் இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடவும். இப்படியே, நீங்கள் விரும்பும் அனைத்து இணைய தளங்களின் முகவரிகளை இணைக்கவும். அப்போதுதான் திறக்கப்பட்ட இணைய தளத்துடன் பிரவுசர் திறக்கப்பட, "Use current pages" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

காலியாக உள்ள பக்கத்துடன் பிரவுசர் திறக்கப்பட, "Add page" என்ற டயலாக் பாக்ஸில், about:blank என டைப் செய்திடவும். பின்னர், "Add" பட்டனில் அழுத்தி, டயலாக் பாக்ஸை மூடவும்

விலகிப்போன விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யாவும்..!



ஒரே நடிகரும் நடிகையும் ஒன்றிரண்டு படங்களில் சேர்ந்து நடித்துவிட்டாலே அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் உலாவரத் தொடங்கிவிடுகின்றன.

அதைப் போலவே விஜய் சேதுபதிக்கும் அவருடன் ரம்மி மற்றும் பண்ணையாரு பத்மினி திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை ஐஸ்வர்யாவுக்கும் இடையே கிசுகிசுக்கள் உலாவரத் துவங்கியுள்ளன.

இதனை மேலும் வளர்த்து மீடியாவிற்குத் தீனி போட வேண்டாமென்று இருவரும் முடிவெடுத்துள்ளதைப் போல சமீபமாக நடைபெற்ற அலை அலையாய் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட இருவரும் விலகியே அமர்ந்திருந்தனராம். இனிமேலாவாது கிசுகிசுக்கள் வருவது குறையட்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தான் நடிக்கும் படங்களின் ஹீரோயினாக யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிக் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி, சமீபமாக தனது கேரக்டருக்கு ஹீரோயினே இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லையென்று சொன்னது நினைவு கூறத்தக்கது.

இப்படியான நடிகரின் மீது இதுபோன்ற கிசுகிசுக்கள் ஏற்பட்டுவருவது குறித்து பலரும் ஆச்சர்யப்படுகின்றனர்.

சிவபெருமான் ஏன் '' பாங் '' என்னும் சோமபானத்தை குடிக்கிறார்...?



நம்மில் பல பேர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டிருப்போம்.ஏன் சிவபெருமான் பாங் என்ற சோமபானத்தை குடிக்கிறார்? பாங் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு - அது கஞ்சா செடியின் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து செய்யப்படும் மதி மயக்குகிற பானமாகும். இந்த பழமை வாய்ந்த இந்திய பானம், கடவுள்களின் அமுதம் என்று நம்பப்படுகிறது.

பாங்கில் கஞ்சா கலந்திருப்பதால், அதனை பருகுவது அவமதிப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹிந்து புராணங்களின் படி, பாங் என்பது சிறப்பாக செயல்படும், மனித இனத்திற்கு கிடைத்த இயற்கை மருந்தாகும். பல நரம்பியல் சீர்குலைவு, சரும வியாதிகள் மற்றும் புண்களுக்கு இது தீர்வாக அமையும்.

சரி மீண்டும் கேள்விக்கு வருவோம், சிவபெருமான் ஏன் பாங் பானத்தை விரும்பி குடிக்கிறார். பாங் பற்றியும் சிவபெருமானுக்கும் அதற்கும் உள்ள உறவை பற்றியும் சுற்றித் திரியும் பல கதைகளை பற்றி இப்போது பார்க்கலாமா?

வேதங்கள்

 வேதங்களின் படி, அமுதம் வேண்டி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, ஒரு துளி அமுதம் மத்ரா மலையின் மீது விழுந்ததாம். அந்த துளி விழுந்த இடத்தில் இருந்து, ஒரு செடி முளைத்ததாம். அந்த செடியின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் பானம், அனைத்து கடவுள்களுக்கும் பிரியமான ஒன்றாகும். அதில் சிவபெருமானும் அடக்கம். அதன் பின், மனித இனம் அந்த இன்பத்தை அனுபவிக்க, இமயமலையில் இருந்து அந்த கஞ்சாவை சிவபெருமான் கீழே கொண்டு வந்துள்ளார்.

கங்கையின் தங்கை 

பாங் என்பது கங்கா தேவியின் தங்கையாகவும் நம்பப்படுகிறது. அதனால் தான் பாங்கும் கங்கையும் சிவபெருமானின் தலையில், இரண்டு பக்கமும் குடியிருக்கிறது. இதற்கு மற்றொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது - கஞ்சா செடி என்பது பார்வதி தேவியின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படுகிறது. அவரும் அவரின் தங்கை கங்கா தேவியுடன் சிவபெருமானுடன் வசிக்கிறார்.

சோம பானம் 

கடவுள்கள் பருகும் சோமபானத்தை தான் பாங் என்று பழங்கால புராணங்கள் கூறுகிறது. இருப்பினும் சோமபானமும் பாங்கும் ஒன்றா அல்லது வேறுபட்டதா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.

சிவபெருமானும் பாங்கும்

 சிவபெருமான் எப்போதுமே ஆழ்ந்த தியானத்தில் இருப்பதால், முழுமையான பேரின்பம் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறனை பெற பாங் பானம் பெரிதும் உதவுகிறது என்று நம்பப்படுகிறது. அதனால் தான் யோகிகளும் துறவிகளு பாங் பருகி, கஞ்சாவை புகைக்கின்றனர்.

அதனால் சிவபெருமானை போல் தாங்களும் பேரின்ப நிலையை அடையலாம். சிவபெருமான் ஏன் பாங் பானத்தை குடிக்கிறார் என்பதற்கு மேற்கூறியவையே சில காரணங்கள். எந்த காரணமாக இருந்தாலும் சரி, சிவராத்திர்யின் போது பாங் குடிப்பது என்பது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது பல நோயை குணப்படுத்தி பல விதமான வலிகளை நீக்கும் என்று நம்பப்படுகிறது.


ஒரே தயாரிப்பாளரின் மூன்று படங்களுக்கு இன்று ஆடியோ ரிலீஸ்..!



ஜேஎஸ்கே பிலிம்ஸ் ஜே சதீஷ்குமாரின் மூன்று படங்களுக்கு இன்று ஒரேநாளில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. தமிழ் சினிமாவில் சமீப நாட்களில் இப்படி ஆடியோ வெளியீடு நடத்தப்பட்டதில்லை.

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், சிவப்பு எனக்குப் பிடிக்கும் மற்றும் ஆள் என்ற மூன்று படங்களை வாங்கி வெளியிடுகிறார் ஜே சதீஷ்குமார். இந்த மூன்று படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் வேறாக இருந்தாலும், மொத்தமாக வாங்கிவிட்டதால் சதீஷ்குமார்தான் உண்மையான தயாரிப்பாளர்.

இவற்றின் இசை வெளியீடு இன்று ஒரே நாளில் நடக்கிறது. ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் சிம்பு தேவன் படம். அருள்நிதி-பிந்து மாதவி நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் என்பவர் இசையில் ஒரு பாடல் மட்டும் இன்று ரிலீசாகிறது.

யுரேகா இயக்கத்தில் மகேஷ்வரன் இசையில் உருவாகும் படம் சிவப்பு எனக்குப் பிடிக்கும். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் இசையும் இன்றுதான் வெளியாகிறது.

விதார்த் நடிக்கும் ஆள் படத்தை ஆனந்த் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜோஹன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பட இசையும் இன்று வெளியாகிறது. ஆனால் மூன்று இசை வெளியீடுகளுமே ஒரு தனியார் பண்பலை வானொலியின் ஸ்டுடியோவில் நடக்கிறது.

விதார்த்தை குப்பை மேட்டில் புரட்டி எடுத்த இயக்குநர்..!



மைனா படம் மூலம் பிரபலமான நடிகர் விதார்த் தற்போது ஆள், உலா, விழித்திரு, பட்டைய கிளப்பனும் பாண்டியா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு படத்தில் விதார்த்தை குப்பை மேட்டில் புரட்டி எடுத்துள்ளார் இயக்குநர் ஒருவர். ஆனந்த் கிருஷ்ணா இயக்கி வரும் ஆள் படத்தில் தான் இந்த கூத்து நடந்துள்ளது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மோசமான நாள் வரும். அதுமாதிரி விதார்த்துக்கும் ஒரு மோசமான நாள் அமைந்தது. அது என்ன என்பது ஆள் படத்தின் கதை.

கதையின் தேவை கருதி, தென்னிந்தியாவில் மிகப்பெரிய குப்பை கிடங்கு என்று அழைக்கப்படும் சென்னையில் உள்ள யானைக்கவுனி மற்றும் கல்யாணபுரம் போன்று சென்னையை சுற்றியுள்ள அத்தனை குப்பை மேடுகளிலும் விதார்த்தை புரட்டி எடுத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் ஆனந்த்.

படத்தின் முக்கியத்துவம் கருதி, விதார்த்தும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்துள்ளாராம் விதார்த்.

அனிருத்துடன் நள்ளிரவில் ஆட்டம் போட்ட ஸ்ருதி..!



மான் கராத்தே படத்துக்காக அனிருத் இசையில் ஒரு பாடல் பாடியுள்ள ஸ்ருதி, இந்தப் பாடல் பாடிய அன்று அனிருத்துடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தில் ஹீரோயினாக நடித்தபோதே, அனிருத்துக்கு நெருக்கமான தோழியாகிவிட்டவர் ஸ்ருதி.

இப்போது தெலுங்கு, இந்திப் படங்கள் மிகவும் பிஸியாக உள்ளார் ஸ்ருதி. ஆனாலும் அனிருத் இசையமைக்கும் மான்கராத்தே படத்தில், அவருக்காக ஒரு பாடல் பாடியுள்ளார்.

ஸ்ருதிக்கு நேரமின்மையால் நள்ளிரவில் வந்து அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தாராம். அதுமட்டுமல்ல, பாடல் பதிவு முடிந்தபிறகு நீண்ட நேரம் தன் நண்பருடன் மதுவிருந்திலும் பங்கேற்று உற்சாக ஆட்டம் போட்டுவிட்டுப் போனாராம் ஸ்ருதி.

இதுகுறித்து தனது ட்விட்டரில், 'அனிருத் இசையில் நள்ளிரவில் பாடல் பதிவு முடிந்தது. அன்று இரவு முழுவதும் ஒரே ஃபன் ஃபன் ஃபன்தான்... " என்று குறிப்பிட்டுள்ளார்.