Friday, 28 February 2014

நிமிர்ந்து நில் சூப்பரா வந்திருக்கு - ஜெயம் ரவி, நிம்மதியா இருக்கு..!



இயக்குனர் சமுத்திரக் கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடித்திருக்கும் திரைப்படம் நிமிர்ந்து நில்.

கடந்த காதலர் தினத்தில்
வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் பின்னர் பிப்ரவரி 28 ற்குத் தள்ளிவைக்கப்பட்டது.

பிப்ரவரி 28லிருந்து இதன் வெளியீட்டுத் தேதி
மார்ச் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 7ல் நிச்சயமாக இப்படம் வெளியாகும் என்று ஜெயம் ரவி உறுதி கூறியுள்ளார்.

வாசன் விசுவல் வென்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இதன் தெலுங்கு வெர்சனில் ஜெயம் ரவிக்குப் பதிலாக நானி நடித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 28ல் வெளியாகவிருந்த இப்படத்திற்கு, ஆந்திராவில் தியேட்டர்கள் கிடைக்காததால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபமாக இப்படத்தின் முன்னோட்டக்காட்சியைப் பார்த்த ஜெயம் ரவி இப்படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகவும், இதன் வெளியீட்டுத் தேதிக்காக
ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்படம் தனக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்றும், இப்படத்தை இயக்கிய இயக்குனர் சமுத்திரக்கனிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்
கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.

0 comments:

Post a Comment