எம்.ஜி.ஆர். நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார்.
நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கினார்.
இப்படம் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 14–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.
கலர் மெருகேற்றப்பட்டு உள்ளது. டிஜிட்டலிலும் புதுப்பித்து உள்ளனர்.
மொத்தம் 100 தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படும் என்று திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தன.