Wednesday, 12 February 2014

காதலிக்க வேண்டாம் லட்சுமி மேனனுக்கு அம்பிகா அட்வைஸ்...!



சீனியர் நடிகைகள் இளம் நடிகைகளுக்கு காதலிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்கின்றனர். ஹீரோயின்கள் எளிதில் காதல் வலையில் சிக்கிவிடுகின்றனர். சில காதல் கைகூடினாலும் பெரும்பாலான காதல்கள் முறிந்துவிடுகிறது.

இந்நிலையில் இளம் நடிகைகளுடன் அக்கா, அம்மா வேடங்களில் நடிக்கும் சீனியர் நடிகைகள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது மனம்விட்டு பேசுகின்றனர். கும்கி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மேனன்.

தற்போது ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில்  லட்சுமி மேனனின் அம்மாவாக அம்பிகா நடிக்கிறார்.

இதில் இருவருக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. அவ்வப்போது லட்சுமிமேனனிடம், இதுதான் சினிமாவில் நீ சம்பாதிக்க வேண்டிய தருணம். இந்த நேரத்தில் காதலில் சிக்கிக்கொள்ளாதே என்று அறிவுரை கூறி உள்ளாராம்.

காதல் கிசுகிசுவில் லட்சுமிமேனன் இதுவரை சிக்கியதில்லை என்றாலும் குடும்ப பாங்கான நடிகை என்ற இமேஜை மாற்றி வருகிறாராம். விஷால் ஜோடியாக நான் சிகப்பு மனிதன் படத்தில் கூடுதல் கவர்ச்சிகாட்டி நடித்திருப்பதுடன் லிப் டு லிப் காட்சியிலும் நடித்திருக்கிறார்.

இப்படம் வெளியானபிறகு தன்னுடைய இமேஜே மாறிவிடும் என்று லட்சுமி கூறி வருகிறாராம்.

நான்கு டீன் ஏஜ் பெண்களின் தந்தையாக கமல்ஹாசன் புதிய அவதாராம்...!



உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் தனது விஷ்வரூபம் -2 படத்திற்குப் பிறகு கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் காஜல் அகர்வால், தமன்னா மற்றும் திரிசா ஆகியோர் நடிக்கலாம் என்று இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் எழுதி, இயக்கிவரும் விஷ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம்பாகம் விரைவில் திரைக்குவர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்கும் படம் உத்தமவில்லன். இப்படத்தில் கமல்ஹாசன் நான்கு டீன் ஏஜ் பெண்களின் தந்தையாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிப்பதற்கான நாயகிகளைத் தேடிவரும் படக்குழு காஜல் அகர்வால், தமன்னா மற்றும் திரிசா ஆகியோரிடம் கேட்டுள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் நாயகிகள் யார் என்பது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து மலையாளப்படமான திரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன்.

மாதவனின் திடீர் போராட்டம்...!



இருட்டறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்படும் யானையை விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் தொடங்கி இருக்கிறார் மாதவன். பிராணிகள் வதை தடுப்பு அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறார் மாதவன்.

 மிருகங்கள், செல்லப்பிராணிகளிடம் பாசம் காட்டி வளர்க்க வேண்டும், அவைகள் சுதந்திரமாக விடப்படவேண்டும் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகிறார். சமீபகாலமாக மும்பையில் மாதவன் கையில் ஒரு கரும்பலகை வைத்திருக்கும் போஸ்டர்கள் காணப்படுகின்றன.

அதில் சுந்தர் சுதந்திரமாக விடப்பட வேண்டும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாதவன் கூறும்போது, எம்எல்ஏ ஒருவர் மகாராஷ்டிராவில் உள்ள ஜியோதிபா கோயிலுக்கு யானை ஒன்று பரிசளித்தார்.

அந்த யானையை அங்குள்ள சிலர் இருட்டறையில் இரும்பு சங்கிலியால் கட்டி  அடைத்து வைத்து அடித்து துன்புறுத்துகின்றனர். இந்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளை பார்க்கும்போது மனம் பதறுகிறது.

இந்த கொடுமை நிறுத்தப்பட வேண்டும். சுந்தர் என்ற அந்த யானையை உடனடியாக சுதந்திரமாக விட வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அது விடுவிக்கப்படவில்லை. சிறிய வயதே ஆன அந்த யானையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.

அரசு மருத்துவமனைகளில் படிக்கும் பயிற்சி செவிலியர்கள் அனைவருக்கும் உதவித்தொகை..!



தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் படிக்கும் பயிற்சி நர்சுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.

உதவித்தொகை பெறாத இதர வகுப்பினர் எங்களுக்கும் உதவித்தொகை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை அரசு ஏற்று அனைவருக்கும் உதவித்தொகை உண்டு என்று அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அதற்கான அரசாணையை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். அதாவது உதவித்தொகை பெறாத 1,355 பேருக்கு முதல் ஆண்டு மாதம் தோறும் 600 ரூபாயும், 2-வது வருடம் மாதம் தோறும் 700 ரூபாயும், 3-வது வருடம் மாதம் தோறும் 800 ரூபாயும் கொடுக்கப்படும். இந்த உதவித்தொகை இனிமேல் அனைவருக்கும் பொருந்தும்.

இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் பறப்பது பற்றிய தகவல்...!



இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift).

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust.

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight.

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag.

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்.

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்.

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும்.விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று. அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்.

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள். இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே காரணம் (அதாவது வானத்தில்).

ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால்,

இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது).

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான்.

இது சற்று சுவாரஸ்யமானது.

ஹலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள்,

விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சின்தான் .சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் .

இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது .விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது.

விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது,.காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது.

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும்.(மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்).

விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும்.

இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது.அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்.

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக?

இங்குதான் விஷயம் உள்ளது.

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது.

கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது,

குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்).

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்.

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மானிக்கிறது?

சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் .

எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது).

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது...

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும்.

கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா...?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது.

அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும்.

மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ்....

இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான்.

பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது...!

இப்படியும் ஒரு திருட்டா...?



 நின்று கொண்டு இருந்த காருக்கு முன்னால் 100 ரூபாய் நோட்டுகளை வீசி கார் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் ராமநாதன் (45). ஆடிட்டர். இவரிடம் அதே மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அண்ணா சாலையில் எல்ஐசி பில்டிங் அருகே உள்ள செங்கல்வராயர் கட்டிடத்திற்கு ராமநாதன் காரில் வந்தார்.

பின்னர், அங்குள்ள அலுவலகத்துக்கு சென்றார். காரை வெளியே நிறுத்தியிருந்தார். டிரைவர் வெங்கடேசன் காருக்கு அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, காருக்கு முன்னால், மர்ம நபர்கள் 2 பேர் நைசாக 6, 100 ரூபாய் நோட்டுகளை வீசினர்.

இதை கண்டு பரவசம் அடைந்த வெங்கடேசன் அதை நைசாக எடுக்க முயன்றார். இதை பயன்படுத்தி கொண்ட ஆசாமிகள் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி காருக்குள் சூட்கேஸில் இருந்த ரூ.4 லட்சம் மற்றும் லேப்டாப்பை அபேஸ் செய்து ஓட்டம் பிடித்தனர்.

ரூ.600ஐ எடுத்துக் கொண்டு திரும்பிய டிரைவர் ரூ.4 லட்சம் மாயமானதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து ஆடிட்டருக்கு தகவல் கொடுத்தார். அவரும் வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

பின்னர், இது குறித்து, வெங்கடேசன் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.