Tuesday, 4 March 2014

பல்லிடுக்கு நூலை எதற்கு அவசியம் பயன்படுத்த வேண்டும்?




படர்ந்து இருக்கும் பற்காறையினால் உண்டாகும், பல் ஈறு வீக்கம் மற்றும் பசை நோய் போன்றவற்றை நீக்குகிறது. ஒரு பல் மருத்துவர் அல்லது உடல் நலவியல் வல்லுநர் உதவியுடன் பற்காறையை வழக்கமாக தூய்மைப்படுத்துதலால், அது மேலும் பற்காறை உண்டாவதை தடுக்கிறது.

பல்லிடுக்கு நூலை பயன்படுத்துவதால் கூட பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வருவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் ஒவ்வொரு நாளும் பல்லிடுக்கி நூலை பயன்படுத்தி ஒருவருடைய ஆரோக்கியத்தையும் மற்றும் புன்னகையையும் மேம்படுத்த முடியும்.

முக்கியத்துவம்:

மக்கள் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பல்லிடுக்கு நூலை பயன்படுத்தி, பற்களில் இருக்கும் உணவு துகள்கள் மற்றும் பற்காறையையும் நீக்கலாம். மேலும் பல் துலக்கி சென்றடைய முடியாத இடங்களிலும் கூட இதனை உபயோகப்படுத்த முடியும். பற்காறை என்பது பொருட்களில் ஒட்டக்கூடிய படலம் ஆகும். அதில் பற்சிதைவுக்கு காரணமான பாக்டீரியாவை கொண்டிருக்கிறது. மேலும் பல்லைச் சுற்றி உண்டாக்கும் ஈறுகளின் (பல் ஈறு வீக்கம்) அழற்சியையும் , பின்னர் பல்லைச் சுற்றி நோய்களையும் ஏற்படுத்துகிறது.

எச்சரிக்கை:

அதிக ஆபத்தான பாக்டீரியாக்கள் பற்காறையில் ஒட்டிக் கொண்டு நச்சுகளை உற்பத்தி செய்ய தொடங்குகிறது. நச்சுகள் ஈறுகளில் எரிச்சல், பல் ஈறு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இந்த பல் ஈறு வீக்கத்தினால், நச்சுகள் பற்களுக்கு ஆதரவு கொடுக்கும் எலும்புகளையும் தாக்குகிறது. இதனால் எலும்புகள் வலிமையை இழப்பதோடு, தளர்வான பற்கள் கொண்டிருப்பதோடு, பற்களையும் இழக்கின்றோம்.

பரிசீலனைகள்:

பல்லிடுக்கு நூலை பயன்படுத்துவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்லைச் சுற்றி வீக்கம் மற்றும் பல் ஈறு வீக்கத்தினாலும் கூட இதயகுழலிய நோய் ஏற்படுகிறது. ஏனெனில் இது உடலில் தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படுத்துகிறது. பக்கவாதம் நோயாளிகளின் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில், பல்லைச் சுற்றிய கடுமையான வீக்கத்தினால் குறிப்பிடத்தக்க பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தடுப்புகள்:

பல்லிடுக்கு நூல் அழகு தருவதிலும் உதவியாக உள்ளது. அதுவும் இதனைப் பயன்படுத்துவதால், அசிங்கமான பற்காறை ஏற்படுவதை தடுக்க முடியும் மற்றும் வாயில் ஏற்படும் தூர்நாற்றத்தையும் தடுக்க முடியும்.

வகைகள்:

பல்வேறு வடிவங்களில் பல்லிடுக்கு நூல்கள் கிடைக்கின்றன. அதுவும் மெழுகினால் பூசப்பட்ட மற்றும் மெழுகினால் பூசப்படாத, பரவலான மற்றும் வழக்கமான வடிவங்களிலும் காணப்படுகிறது. மேலும் புதினா மற்றும் இலவங்கப்பட்டை என்ற சுவைகளிலும் கிடைக்கிறது. இவை அனைத்தும் ஒரே வேலையைத் தான் செய்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒருவரின் பற்களுக்கு இடையிலான இடைவெளி பரந்து இருந்தால், அதற்கேற்றால் போல் பல்லிடுக்கு நூலை பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமான விஷயம் என்னவெனில் பொருட்களை தேர்வுச் செய்து அதை தினசரி பயன்படுத்த வேண்டும்.

நீர் எடுப்பான்கள் பல்லிடுக்கு நூலைகள் போன்று திறமையாக இருப்பதில்லை. ஏனெனில் அவை பற்காறைகளை நீக்குவதில்லை.

உயிர் கொல்லும் மருத்துவமனைகள்..!




அண்மையில் 25 ஆண்டை பூர்த்தி செய்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அஞ்சல் துறை, தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியிருக்கிறது. அதை வெளியிட்ட தமிழக துணை முதல்வர், அம்மருத்துவமனை தமிழகத்தின் சிறப்புகளுள் ஒன்றாக மிளிர்வதாகப் பாராட்டியும் இருக்கிறார்.


நல்லது... நூற்றாண்டு கண்ட அரசு மருத்துவமனைகளை நினைக்கும் போதே மக்கள் மனதில் எழும் அருவெறுப்பும், அவலமும் வார்த்தைகளில் வடிக்க முடியாது. அவலத்தின் உச்சம் அரசு மருத்துவமனைகள். இதை நான் புனைந்துரைக்கவில்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.கடந்த நவ., 3ம் தேதி, "தினமலர்' நாளிதழில் ம.மீனாட்சி, நங்கைநல்லூரில் இருந்து எழுதிய புகார் கடிதம், பிரசுரமாகி இருக்கிறது.

அதன் சாராம்சம்: மீனாட்சியின் 13 வயது பேத்தி, சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில், பன்றிக் காய்ச்சல் நோய் கண்டு சேர்க்கப்பட்டிருக்கிறாள். மருந்தில் ஜுரம் குறைந்தது. ஆனால், மீண்டும் காய்ச்சல் வந்தது. மருத்துவர், சிறுநீர்த் தொற்று என சந்தேகம் கொள்கிறார்.


"இங்குள்ள கழிவறைகளை உபயோகித்தால் சிறுநீர்த் தொற்று எப்படி வராமல் இருக்கும்?' என்று விவரமாகக் கேட்டிருக்கிறாள் அந்தச் சிறுமி. நம்பாத அந்த மருத்துவர், கழிப்பறைக்குச் சென்று பார்த்து அதிர்ந்திருக்கிறார். அப்பெண்ணைக் காப்பாற்றும் பொருட்டு உடனே, "டிஸ்சார்ஜ்' செய்தார்.

வீட்டுக்கு வந்த பின், தனியாரிடம் மருத்துவம் செய்து கொண்ட போது, அவளுக்கு, "டெங்கு' காய்ச்சல் இருப்பது தெரிந்தது; அரசு மருத்துவமனை தந்த அன்புப் பரிசு அது!

காரணம் என்னவெனில், அங்குள்ள மருத்துவர்களோடு, 24 மணி நேரம் பணியில் பெருச்சாளிகள், பூனைகள், நாய்கள் மற்றும் ஓய்வறியா கொசுக் கூட்டம், பன்றிக் காய்ச்சல் வார்டிலேயே வாசம் செய்கின்றன என்கிறார் கடித வாசகர்.இதை, "சுத்தி செய்யும் தொழிலாளர் பணிப் பிரச்னை' என்று, அதிகாரிகள் மிகச் சுலபமாக பைல் எழுதி முடிப்பர்.


தொழிலாளிகளுக்கு சரிவர வேலை பங்கீடு செய்யாததும், நான்கு பேர் பணியாற்றும் இடத்தில் ஒரு நபரை நியமிப்பதும், ஒரு நபருக்கு இரண்டு மூன்று இடங்களில் பணி செய்யும் ஆணை விடுப்பதும் போல, பல நிர்வாகக் காரணங்களால் நேரும் பிரச்னை இது. இதைச் சுலபமாக நிவர்த்தி செய்ய முடியும்.ஆனால், அரசு மருத்துவமனைகளின் பிரச்னை பல்வேறு பரிமாணம் கொண்டது. மூன்று தளங்களில் இதைப் பிரித்துப் பரிசீலிக்க வேண்டும்.


முதலில், அரசு மருத்துவமனைகளைப் பயன் கொள்வதும் மக்கள். இரண்டாவது அங்கு பணிபுரியும் மருத்துவர்கள். மூன்றாவது மருத்துவமனைகளை ஆளும் நிர்வாகம் அல்லது அதிகார வர்க்கம்.சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய அரசு போட்ட ஒரே கோடு, வறுமைக் கோடு. தான் போட்ட கோட்டைத் தானே அழிக்க விரும்பவில்லை அது.

அந்த வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களே பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை, அங்கு அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானம், அலட்சியம் அனைத்தையும் சகித்துக் கொண்டு, மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர்.மருத்துவர்கள், இந்த ஏழை மக்கள் பால் காட்டும் அக்கறை அல்லது அக்கறையின்மை, அளிக்கப்படும் மருந்தின் தரம் பற்றி எதுவும் அவர்கள் அறியாதவை.


தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வசதி இல்லாத காரணத்தாலே, அவர்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர்; அவைகளின் மேல் உள்ள மதிப்பினால் இல்லை.மருத்துவர்களாக வந்து அமர்கிறவர்கள், அவர்கள் சந்திக்கும் நோயாளிகளுக்கு முடிந்தவரை நிவாரணம் தரவே எண்ணுகின்றனர்; பணி புரிகின்றனர்.

அவர்களை எளிதில் சோர்வடையச் செய்யும் விதமாக, மருத்துவமனைகளில் மருந்திருப்பதில்லை, சரியான மருந்துகள், "ஸ்டாக்' வைக்கப்படுவதில்லை. இருந்தால் அவைகளை வினியோகிக்கும் ஊழியர்கள் இல்லை.

பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த உயர் விலைக் கருவிகள் இருக்கவே செய்கின்றன. என்றாலும் அவை பழுதுபட்டிருக்கின்றன அல்லது அவைகளை இயக்கும் துறை சார்ந்த நிபுணர்கள் அல்லது உதவியாளர்கள் இல்லை.புது நியமனம் பெறுவதில் காலவிரயம் ஆகிறது.


நியமனமாகி வரும் போது, கருவி, வேலை செய்யாமலேயே பழுதடைந்து பயன்படும் நிலையில் இருப்பதில்லை. இந்தச் சூழ்நிலையில் பணியாற்றும் மருத்துவர்கள், விரக்தியும், சிடுசிடுப்பும் அடைந்து, தங்கள் பணியை ஒப்பேற்றுகின்றனர். தங்கள் விருப்பத்துக்கும், அறிவுக்கும் ஏற்ப, தம் "கிளினிக்'களில் பணிபுரிந்து அமைதியடைகின்றனர்.

"கிளினிக்குகள்' மருத்துவர்களை சீமான்களாக்கி விடுகின்றன.அரசு மருத்துவமனைகளின் நடைமுறை பற்றி எதுவும் அறியாதவர்கள் பல சமயங்களில் அதிகாரத்துக்கு வருகிற அபாயங்கள் நிகழ்வதுண்டு.சமூக மனோதத்துவம் வேறு; மருத்துவமனைகளின் மனோ நிலை வேறு. இந்த நுட்பம் அறியாதவர்களே, பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை நடத்தும் அதிகாரிகளாக வந்துவிடுகின்றனர்

வெஜிடபிள் சப்பாத்தி ரோல்..!




தேவையானவை:

கோதுமை மாவு - ஒன்றரை கப்,
கோஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
பச்சைப் பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன்,
துருவிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கேரட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்),
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

• உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

• பட்டாணியையும் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

• கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகத்தை போட்டு இதில் துருவிய கோஸ், வெங்காயம், கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

• மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து நன்றாக கிளறி கீழே இறக்கவும். இதுதான் பூரணம்.

• பிசைந்த மாவில் பெரிய எலுமிச்சை சைஸ் மாவு எடுத்து பிசைந்து எண்ணெய் தடவிய சப்பாத்திக்கல்லில் வைத்து பரத்தவும். திரட்டிய சப்பாத்தியில் கால் பாகம் தவிர்த்து, நடுவில் 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து உருட்டும் வகையில் நீளமாக பரத்தவும்.

• சப்பாத்தியின் நாற்புறமும் தண்ணீர் தொட்டு தடவி, சப்பாத்தியை ரோலாக உருட்டி, விளிம்புகளை ஒட்டிவிடவும்.

• குழிவான தவாவை சூடாக்கி, ரோலை வைத்து சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் - நெய் கலவையை ஊற்றவும்.

• ரோலின் அடிபாகம் சிவந்ததும் திருப்பிப் போடவும்.

• ரோல் நன்றாக சிவந்ததும், மேலாக பன்னீர் தூவியோ அல்லது பன்னீரை ரோலின் உள்ளே வைத்தோ சூடாக பரிமாறவும்.