Thursday, 13 March 2014

ஆஸ்கார் அப்படினா யாருங்க..? தேசிய விருதுக்கு மட்டுமே போட்டி போடும் தமிழ் படங்கள்..!

கடந்த ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன. 61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதிவரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது. 40 தமிழ் படங்கள் பல்வேறு தலைப்பின் கீழ் இப்போட்டியில் மோத உள்ளது. தேசிய விருதில் மொத்தம் 30 விருது பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், மரியான், மூடர் கூடம், ஓநாயும்...

தமிழ் படத்தை இனிமேல் இயக்கமாட்டேன -- மணிரத்தனம் அதிரடி...!

தமிழ் படம் இயக்காமல் பின்வாங்குகிறார் மணிரத்னம். ஆய்த எழுத்து, விக்ரம் நடித்த ராவணன், அபிஷேக்பச்சன் நடித்த குரு படங்களை இந்தி, தமிழ் என இருமொழிகளில் இயக்கினார் மணிரத்னம். இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க எண்ணி இருந்தார்.  இதற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா  இருவரையும் ஹீரோக்களாக தேர்வு செய்தார். திருமணத்துக்கு பிறகு இப்படம் மூலம் ஐஸ்வர்யாராயும் ரீ என்ட்ரி ஆக உள்ளார். அதேபோல் தமிழுக்கும்...

வேகமாக கல்லாக்கட்டப்போறேன் - தாய் மீது சபதம் எடுத்த கானா ஸ்பெசலிஸ்ட்....!

கானா பாடகர்கள் பலர் சினிமாவில் பாடியுள்ளனர். என்றாலும் அவர்களெல்லாம் ஓரிரு படங்களில் பாடியதோடு, சீசன் பறவைகள் போன்று காணாமல் போய் விட்டனர். ஆனால் கானா பாலா மட்டுமே பல படங்களில் தொடர்ந்து பாடியபடி, கோலிவுட்டின் கானா ஸ்பெசலிஸ்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில், அட்டகத்தி, உதயம் என்எச்- 4, ராஜாராணி, சூதுகவ்வும், நிமிர்ந்து நில் என 20 பாடல்கள் வரை பாடிவிட்டார். அதில், ஆடி போனா ஆவணி, நடுகடலுல, காசு பணம் துட்டு மணி மணி, ஓரக்கண்ணால என பல...

காலம் போன காலத்துல எதுக்கு இந்த வெட்டி பந்தா...!

அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல். அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர்,...