Friday, 21 March 2014

கோபம் இல்லாத மனைவி உங்களுக்குத் தேவையா..? இதப்படிங்க...


கோபம் இல்லாத மனைவி தேவையா..?


குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக் கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.

மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:

1. மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.

2. மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.

3. முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் ‘மூடு அவுட்’டாக வாய்ப்பு அதிகம்.

4. வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

5. மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

6. மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.

8. மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லா வி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

9. கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.

11. மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.

12. வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

கடைசி கடைசியாக ஒரு யோசனை: இதை உங்கள் மனைவி பார்க்கிற மாதிரி வச்சு படிக்காதிங்க....

ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா...? – ஒரு அதிரடி ரிப்போட்…!




வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.

1. ராஜவசியம்

தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும்.

2. லோக வசியம்

இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.

3. சர்வ வசியம்
இது இந்துக்களின் தெய்வங்களை வசீகரித்தலாகும். அதாவது அசுத்த ஆவிகளான 33 கோடி ஆவிகளையும் வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். 33 கோடி ஆவிகளையும் வசீகரப்படுத்தினால் மந்திரம் செய்யலாம்.

4. மிருக வசியம்

இது மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும்.

5. ஆண் பெண் வசியம்

இது தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம் செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினதும் பாவனைப் பொருட்கள் தலைமயிர் என்பனவற்றுள் ஏதேனும் இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு முறைகளிலே செய்யப்படுகின்றது
1. சாதாரண தரம் 2. உயர்தரம்

சாதாரண தரம்

இதனைச் செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய், என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால் அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று செலவு குறைந்தாக காணப்படுகின்றது.

உயர்தரம்

இவ்விசயம் செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும் (யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக் கூறி ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய் எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தால் சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும்.

அசுத்த ஆவிகள்

வசியம் செய்யப்படுகையில் அசுத்த ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகின்றது. அசுத்த ஆவிகள் எனும் போது இந்து மத்த்திலுள்ள 33 கோடி தேவர்களையும் குறிக்கின்றது. ஆவிகளுடன் பேசுதல் என்பது தெய்வங்களின் ஆவிகளுடன் பேசுதல் என்று கூறுவர். இங்கு தெய்வத்தின் ஆவிகளாக இந்து தெய்வங்களையே குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவதாக செத்த மனித ஆவிகளுடன் பேசுதல் ஆவிகளோடு பேசுதல் எனப்படும்.

ஏவல் பில்லி சூனியம்

ஏவல் பில்லி சூனியம் என்பன தெய்வங்களின் ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். இது பின்வரும் மூன்று முறைகளில் செய்யப்படும்.
தெய்வம் எனும் ஆவிகளை ஏவி விடுதல் – உம் – முனி, காளி,
செத்த ஆவிகளை ஏவி விடுதல் –
மிருகங்கள், ஊர்வனவற்றை ஏவி விடுதல்
நாய் – கடிக்கும்படி
மாடு – முட்டும்படி
பாம்பு – கொத்தும்படி

மந்திரம் பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள் யாவை?

1. பணவிரயம்
2. ஏமாற்றம்
3. மரணம் ஏற்பட வாய்ப்புண்டு
மாணவர்களது கேள்விகளும் விரிவுரையாளரின் பதில்களும்

கேள்வி :- செத்த ஆவியை எப்படி வசியம் செய்வது?

பதில் : ஒரு வீட்டிலே (இந்துக்களின்) ஒருவர் மரித்து அவரது கிரியைகள் முடிந்த பின்பு 8ம் நாளிலே ஆவிகளை வரவழைப்பர். அந்த ஆவிகளிடம் அந்நபர் எவ்வாறு இறந்தார்? எனக் கேட்பார்கள். அது எவ்வாறெனின் மந்திரம் செய்பவர் தனது உதவியாளருடன் இறந்தவர் வீட்டில் பிரவேசித்து இறந்தவருக்கு விருப்பமான பொருட்களை வைத்து, செத்தவரின் ஆவியை மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம் அழைக்க வேண்டும். அப்போது குடும்பத் தலைவனின் மண்டையோடு எரித்த சாம்பலை தட்டிலே கொட்டி அதில் பெயர் எழுதி மந்திரம் உச்சரிப்பர். அதனிடம் கேள்விகள் கேட்பார்கள். ஆவி பதிலளிக்கும். இங்கு இறந்தவரின் ஆவியல்ல, அந்நேரத்தில் 33 கோடி தெய்வ ஆவிகளுள் ஒன்று வருகிறது. வீட்டார் நீ யார், என கேள்வி கேட்கையில் அது இறந்தவரின் பெயரைக் கூறும். எனவே மேற்குறிப்பிட்ட முறையின் மூலமாகவே இறந்த ஆவிகளை வசியம் செய்ய இயலும்.

கேள்வி :- ஏவல் பிசாசு என்றால் என்ன?

பதில் :- ஆவிகளை மனுஷர் ஏவிவிடுதல், அதாவது எதிராளிகளின் குடும்பங்களை பிரிக்கும் எண்ணமாக ஆவிகளை ஏவி விடுதலைக் குறிக்கும். முரடனாக இருப்பவனுடன் மோத முடியாவிட்டால் நாய்கள், மாடுகள் என்பவற்றை ஏவி விடுதல், செத்த ஆவிகளை ஏவுதல், மற்றும் தெய்வ ஆவிகளான காட்டேரி, முனி, காளி என்பவைகளை வசியம் செய்து ஏவி விடுதல்

கேள்வி :- ஆவிகளை ஏவியபின் பிரதி உபகாரம் செலுத்த வேண்டுமா?

ஆம் ஏனெனில் கோழிகளை அநேகமாக இவ்வாறு இரத்தப்பலியாக செலுத்தி பிரதிஉபகாரம் செய்யவார்கள். பிழையான முறையிலே செய்தால் ஆவி ஆபத்தினை விளைவிக்கும். ஆதலால் செய்கின்ற பிரதியுபகாரத்தினை அந்த ஆவியை திருப்திப்படுத்தும் வண்ணம் நேர்த்தியாக இரத்தப் பலியாக செலுத்தலாம்.

கேள்வி :- செத்த ஆவியை எழும்பி வர வசியம் செய்கையில் அதற்கு உருவம் ஒன்று இருக்குமா?

பதில் :- இல்லை. ஆனால் அந்த ஆவியானது வசியம் செய்யும் வீட்டுக்கு யாரேனும் வந்திருந்தால் அவரக்ள் மூலம் அல்லது வேறு நபர்கள் மூலம் வெளிப்பட்டு பேசும்.
கேள்வி :- செய்வினை செய்யப்பட்டால் செய்யப்பட்ட நபர் அதை எடுக்க முடியுமா?
பதில் :- ஆம். யாருக்கு செய்வினை செய்யப்பட்டதோ, அவர்கள் செய்வினை செய்தவரிடம் வந்து , அவரிடம் விடயத்தினை கூறுகையில் அவர் வேறு ஆவிகளைக் கொண்டு, அந்த செய்வினையினை நீக்கிப் போட முடியும்.

கேள்வி – இயற்கையுடன் தொடர்பான மந்திரம் செய்ய முடியுமா?

முடியும். இயற்கையுடன் தொடர்ப்படுத்தி மந்திரம் செய்யும்போது தேவைக்கேற்ப பிரகாரம் செய்ய முடியும். இப்படி செய்வது குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டுமே நிலைத்திருக்கும். தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் குறித்த கால அளவு முடிவடையும் போது மீண்டும் மீண்டும் அதனை புதுப்பித்து செயற்படுத்த முடியும். அவை அநேகமாக தொழில் போன்ற காரியங்களில் கையாளப்படுகின்றது.

கேள்வி :- நோய் ஏற்பட என்ன வசியம் செய்ய வேண்டும்.

பதில் :- இது ஏவல் வசியம் எனப்டும். ஒருவருக்கு நோய் ஏற்பட்ட வசியம் செய்ய வேண்டுமாயின் அவரது காலடி மண்ணை எடுத்து, அவரது பெயரை உச்சரித்து சந்தனக் கட்டையினால் ஒ உருவம் செய்ய வேண்டும். ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் பெண் உருவமும். பெண்ணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் ஆண் உருவமும் பின்னர் மாவினால் உருவம் ஒன்று செய்து, ஊசி, முட்டை என்பவற்றுடன் வைத்து ஊசியினால் முட்டையை குத்தும்போது யாருக்கு எதிராக வசியம் செய்யப்பட்டதோ அந்நபருக்கு அதே நேரம் உடலின் பகுதியில் குத்துக்கள்(வேதனை) ஏற்படும்.

கேள்வி :- அதிகமாக இரவு நேரம் மந்திரங்களை செய்வது என்பதைப் பார்க்கையில் மந்திரம் நேரம் என்பற்றுக்கு இடையில் தொடர்பேதும் உள்ளதா?

பதில் :- நேரம் என்பது முக்கியமில்லை. இரவு நேரங்களில் மந்திரங்களைச் செயக் காரணம் என்னவெனில் ஆட்களின் நடமாட்டமானது இரவு நேரங்களில் இல்லை என்பதனால் அமைதியான சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு மந்திரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் இதற்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என வேறுபாடு கிடையாது. எந்நேரமும் மந்திரம் செய்யலாம்.

கேள்வி:-உறுதியான சில விசுவாசிகள் அசுத்த ஆவிகளால் அலைக்கழிக்கப்படுகின்றனர். இது ஏன்?

பதில் :- உறுதியான விசுவாசிகள் என கணிப்பிடும் முறை தவறு. இரட்சிக்கப்பட்ட நீண்ட காலமாக இருந்தாலும், அவரது வாழ்க்கையில் மறைமுகமான பாவங்கள் காணப்படலாம். எனவே, இந்த இரகசிய பாவங்களில் அந்நபர் தொடர்ந்து ஈடுபடுகின்றபோது அசுத்த ஆவியின் இலக்கிற்கு ஆளாக வேண்டி ஏற்படும். உண்மையான விசுவாசிகளிடம் ஆவி செல்லாது

ரத்தக் கொழுப்பை சீராக வைத்துக் கொள்ள இதப்படிங்க...!




ரத்தக் கொழுப்பை சீராக வைத்துக் கொள்ளவும்,

இதயம் என்றும் பழுதின்றி இயங்கவும்,

பூண்டு மற்றும் வெங்காயம் மிகவும் அவசியம்...!

சின்ன வெங்காயம் மற்றும் சிறிய பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.

 பல்லாரி வெங்காயத்தை விட சிறு வெங்காயம் பலம்டங்கு பலன்கள் கொண்டது.

மலைப்பூண்டை விட சிறு பூண்டில் சத்துக்கள் அதிகம் உள்ளது.

பூண்டில் உள்ள அலிசின் என்ற சத்து மாரடைப்பைத் தடுக்கும்.

மேலும் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பூண்டையும் வெங்காயத்தையும் ஒதுக்காமல் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்,

இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு குட் பை சொல்லுங்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் நினைவாற்றல் சிறப்பா இருக்கணும்னா...?




பள்ளி செல்லும் குழந்தைகளின் நினைவாற்றல் சிறப்பா இருக்கணும்னா மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை வழங்குவது நல்லதுன்னு நிபுணர்கள் சொல்கிறார்கள்..

ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, நெல்லி நாவல் பழம் ஆகிய பழங்கள் மூளைக்கு தேவையான அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட்டும், வைட்டமின் ‘சி’யும் வழங்குகின்றதாம்...

 இவற்றில் இருக்கிற ஓமேகா-3 என்கிற சத்து மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது என்று சொல்கிறார்கள்..

ஓமேகா 3 மீன்களில் அதிகம் உள்ளதால் வாரம் இருமுறை குழந்தைகளுக்கு மீன் கொடுக்கலாம்.

மூளையின் ஞாபகசக்தியை வளர்க்கும் சத்துகளில் முக்கியமானதாக சொல்வது கோலைன்.

இந்தச் சத்து முட்டையில் அதிகம் இருக்கிறதாம். இதை அதிகம் உண்டால் ஞாபகசக்தி அதிகரிக்குமாம்..

மேலும் மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுமாம்...

யாசகன் - திரை விமர்சனம்…!




மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தை, சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ். இவர் தந்தை சொல்லை தட்டாத பிள்ளை. தன் குடும்பம் மட்டுமல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பவர். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையும் கொண்டவர். யாருக்கு துன்பம் ஏற்பட்டாலும் உடனே சென்று உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்.

மகேஷ் ஒரு நாள் வேலை தேடி ஒரு கம்பெனிக்கு செல்கிறார். அங்கு புதியதாக திருமணம் ஆன மகேஷின் நண்பரும் வேலை தேடி வருகிறார். மகேஷ் வேலையை விட்டுக் கொடுத்தால் தான் நண்பருக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்து அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

இந்த மாதிரி பல தியாகங்களை செய்து வருகிறார் மகேஷ்.இதற்கிடையில் மகேஷ் அப்பாவின் குடும்ப நண்பரின் மகளான நாயகி நிரஞ்சனா, மகேஷையே சுற்றி சுற்றி வருகிறார். முதலில் கண்டுக்கொள்ளாத மகேஷ், பிறகு நிரஞ்சனா காதலை சொன்னவுடன் ஏற்றுக் கொள்கிறார்.ஒருநாள் மகேஷின் வீட்டு அருகில் இருக்கும் ஒரு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இதைக் கண்ட மகேஷ் அவர்களை பின் தொடர்ந்து மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்கிறார்கள். நிறைய பணம் தேவை என்பதால் மனம் வருந்துகிறார் சிறுமியின் தாயார். இவருக்கு ஆறுதல் கூறிவிட்டு பணத்திற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லுகிறார் மகேஷ்.

சிறுமியை காப்பாற்றுவதற்காக தன் சகோதரியான ஜானவியிடம் பணம் கேட்கிறார். அதற்கு ஜானவி பணம் இல்லை என்று சொல்லிவிடுகிறார். பிறகு தான் உதவி செய்த அனைவரிடமும் சென்று பணம் கேட்கிறார். ஆனால் யாரும் உதவி செய்ய முன் வரவில்லை. இறுதியாக ஏற்கனவே தான் உதவி செய்த ஒருவரிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்கிறார். அவரும் பணம் தர மறுக்க மனமுடைந்து அங்கிருந்து செல்கிறார். மகேஷ் பணத்தை கேட்டவரிடம் இருந்த பணம் திடீரென காணாமல் போக, இதற்கு காரணம் மகேஷ் தான் என்று போலீசில் புகார் செய்கிறார் அவர். இதனால் போலீஸ் மகேஷை கைது செய்கிறது.

ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால் மகேஷ் வெளியே வருகிறார்.வெளியில் வரும் மகேஷ், சிறுமி வீட்டிற்குச் சென்று பார்த்தால் சிறுமி இறந்து விடுகிறாள். இதனால் மனமுடைந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆகிவிடுகிறார் மகேஷ். இதற்கிடையில் நிரஞ்சனாவின் அப்பாவிற்கு பணி இடம் மாற்றம் ஆகி வேறு ஊருக்குச் சென்று விடுகிறார்.மகேஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் குடும்பத்தினர் வெறுக்கின்றனர். இறுதியில் மகேசின் மனநிலை சரியானதா? காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

‘அங்காடித் தெரு’ வில் நடித்த மகேஷ், அந்தப் படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு நிகரான பாத்திரம்தான். ஆனால், அது வலுவாக இல்லை என்றே சொல்லலாம். படம் முழுக்க சோர்வாகவே வருகிறார். கேரளத்து வரவான நாயகி நிரஞ்சனா, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷின் அக்காவாக வரும் ஜானவி, நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் 2 பாடல்கள் அருமை. பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம்.

மதுரையில் நடத்த உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ள துரைவாணன், கதாபாத்திர தேர்விலும், கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால் காட்சிகளை ஒருங்கினைப்பில் சற்று தடுமாறியிருக்கிறார். திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘யாசகன்’ – தனி ஒரு மனிதனின் போராட்டம்….

விரட்டு - திரை விமர்சனம்…!




நாயகன் சுஜீவ் தாய்லாந்தில் மிகப்பெரிய திருடன். ஒருநாள் திருடிவிட்டு ஓடிவரும்போது அவனை நாயகி எரிகா காப்பாற்றுகிறார். சுஜீவ் திருடன் என்று தெரிந்திருந்தும் அவனுடன் நட்புடன் பழகி வருகிறார் எரிகா. ஒருகட்டத்தில் இருவரும் இந்த திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு எங்காவது சென்று ஓட்டல் ஆரம்பிக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.
அதன்படி, ஒரு ரெயிலில் ஏறி பயணமாகிறார்கள்.

அதே ரெயிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு எரிகாவுக்கு நன்கு அறிமுகமான சுமன் ஷெட்டியும் பயணமாகிறார். சுமன் பணம் கொண்டு வருவது தெரிந்தவுடன் அதை பத்திரமாக கொண்டு சேர்க்க எரிகாவும் உறுதி தருகிறார். ஆனால், நாயகனுக்கோ அந்த பணத்தின் மீது ஒரு கண் இருக்கிறது.இந்நிலையில், அதே ரெயிலில் தாய்லாந்து ராணியின் கழுத்தில் கிடந்த கறுப்பு வைரத்தை திருடிய கும்பல் பயணிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்க, அந்த கும்பலை பிடிக்க ரகசியமாக போலீசும் பயணம் செய்கிறது. இந்நிலையில், சுமனின் பணத்தை திருட ஒரு கொள்ளை கும்பலும் முயற்சிக்கிறது.



அந்த கொள்ளைக் கும்பலிடம் இருந்து நாயகிக்காக சுமனின் பணத்தை காப்பாற்றுகிறான் சுஜீவ். இதனால் நாயகன் மீது நாயகிக்கு காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் நாயகனுக்கும் அந்த பணத்தின் மீது ஆசை வந்துவிட, நாயகிக்கு தெரியாமலேயே அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, பணம் திருடு போய்விட்டதாக நாயகியிடம் நாடகமாடுகிறார். ஆனால், நாயகிக்கு நாயகன்தான் அந்த பணத்தை திருடியது என்பது தெரிந்துவிடுகிறது. நாயகனுடன் சண்டைபோட்டு அந்த பணத்தை வாங்கி சுமனிடம் ஒப்படைக்கிறார். நாயகன் மீது வெறுப்பும் கொள்கிறார். இருந்தாலும், சுமனிடம் உள்ள பணத்தை கைப்பற்ற கொள்ளைக் கும்பல் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறது.
இந்த முயற்சியை நாயகன் முறியடித்தாரா? நாயகனும், நாயகியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? கறுப்பு வைரத்தை திருடிய கும்பலை போலீஸ் பிடித்ததா? என்பதே மீதிக்கதை.

நாயகன் சுஜீவுக்கு இளம் ஹீரோவுக்குண்டான அத்தனை அம்சமும் இருக்கிறது. ஆனால், நடிப்பு தான் வரவில்லை. குறிப்பாக நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரொம்பவும் செயற்கைத்தனமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமே காட்டாமல் நடித்திருப்பது பார்க்க சலிப்பை ஏற்படுத்துகிறது.நாயகி எரிகா அழகாக இருக்கிறார். இவருக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சோகமான காட்சிகளில் நடிக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். சுமன் ஷெட்டிக்கு ரொம்பவும் அப்பாவியான கதாபாத்திரம். குழந்தைத்தனமான நடிப்பில் அசத்துகிறார். துப்பறியும் நிபுணராக வரும் மனோபாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மிரட்டியிருக்கிறார். அவருக்கு உதவியாளராக வரும் பெண் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.

ஒரு ரெயிலுக்குள்ளேயே படம் முழுவதையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டி.குமார். ரெயிலுக்குள்ளேயே இவ்வளவு வித்தியாசமான காட்சியமைப்புகளை காட்டமுடியுமா? என்பதில் வென்றிருக்கிறார். ஆனால், ஆக்ஷன் கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் தோல்வி கண்டிருக்கிறார். இறுதிக்காட்சியில் முரட்டு வில்லனை ஒல்லிப்பிச்சான் ஹீரோ அடித்து துவம்சம் செய்வதை ரசிக்க முடியவில்லை.தரணின் இசை படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. ஆண்ட்ரியா பாடிய பாடல் அருமை. ஆனால், அந்த பாடலை இறுதியில் வைத்து கடைசி வரை படத்தை பார்க்க வைத்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரது கேமரா ரொம்பவும் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘விரட்டு’ பரவாயில்லை…….

சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?




சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்:

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

தேன் கலந்து சாப்பிட்டால் - என்னனென்ன பயன்கள் தெரியுமா...?




* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாமா..? சாப்பிட நீங்க ரெடியா...?


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி..!



வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்!

‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம். அட...எங்கே பைய எடுத்து கிளம்பிட்டீங்க... வெண்டைக்காய் வாங்கவா... ம்...ம்...!..


கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்

முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.

சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான்.

முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் தசிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.

முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.

முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது

அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது.

அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..! - கண்டிப்பா படிங்க.....


சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!



"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்"
-தேரையர்.

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

முருங்கை மரத்தை பற்றி சொல்லப்போறேன் கேளுங்க..!




முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய...

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்:
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற
பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%

புரதம்-6.7%

கொழுப்பு-1.7%

தாதுக்கள்-2.3%

இழைப்பண்டம்-0.9%

கார்போஹைட்ரேட்கள்-12.5%

தாதுக்கள்,வைட்டமின்கள்,

கால்சியம்-440 மி,கி

பாஸ்பரஸ்- 70மி.கி

அயன்- 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி



வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்...

இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்.

கூந்தல் பராமரிப்புக்கும் வெங்காயத்துக்கும் என்னங்க சம்மந்தம்..? - இதப்படிங்க...!




கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம்.

 இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். * கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும்.

எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும்.

* கூந்தல் வளர்ச்சி:

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

* ஸ்கால்ப் பிரச்சனை:

வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

* பொடுகுத் தொல்லை:

தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

புதிய படத்தில் இருந்து நஸ்ரியா நீக்கம் - காரணமே தெரியலயாம்...!




நடிகை நஸ்ரியா புதிய படத்திலிருந்து திடீரென வெளியேறினார்.நேரம், நய்யாண்டி, ராஜா ராணி என பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நஸ்ரியா நாசிமுக்கு திடீரென்று மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.


விரைவில் திருமணம் நடக்க உள்ளது. ஆனாலும் நஸ்ரியா படங்களில் நடிக்க பஹத் குடும்பம் தடை போடவில்லை. அவர் விரும்பினால் தொடர்ந்து நடிக்கலாம் என்று பஹத் பாசிலும் கூறினார்.


இதையடுத்து நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு மல்லுவுட் நடிகர் லால் தயாரிக்க அவரது மகன் லால் ஜூனியர் நடிக்கும் ஹை ஐ யம் டோனி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நஸ்ரியா.

ஆனால் சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டது. அதில் நஸ்ரியா பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மியா என்ற ஹீரோயின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.


அப்படத்திலிருந்து நடிக்காமல் நஸ்ரியா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம்பற்றி சரியாக தெரியவில்லை. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நஸ்ரியா நடிக்க விரும்பினாலும் அவரது குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால்தான் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

லிங்குசாமிக்கு வந்த ரூ.200 கோடி மர்ம பணம்...! என்ன தான் நடக்குதுங்க...!




ஒரே சமயத்தில் கமல்ஹாசனின் உத்தமவில்லன், சூர்யாவின் அஞ்சான், மற்றும் விஜய் சேதுபதி, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உள்பட பல படங்களை தயாரித்து வருகிறார் லிங்குசாமி. ஒரு நேரத்தில் ஒரு படம் தயாரிப்பதே ஒரு தயாரிப்பாளருக்கு பெரிய விஷயம்.

அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்கும் முன்னர் கடுமையாக நிதி நெருக்கடியை சந்திப்பார்கள். ஆனால் ஒரே தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் எப்படி இத்தனை பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கின்றார் என்பதே இப்போதைய கோலிவுட்டின் உச்சபட்ச டாக்.

இதுகுறித்து கோலிவுட்டில் பலவித கிசுகிசுக்கள் கசிந்து வருகிறது. மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி லிங்குசாமிக்கு சுமார் 200 கோடி ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை வைத்துதான் லிங்குசாமி இத்தனை படங்களையும் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இன்னொரு தரப்பினரோ மதுரை அன்புவிடம் மொத்தமாக 50 கோடிக்கும் மேல் லிங்குசாமி கடன் வாங்கி ஒவ்வொரு மாதமும் கரெக்டாக வட்டி கொடுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்த இரண்டு கிசுகிசுக்களும் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆத்திரமடைந்த தயாரிப்பாளரின் கெஸ்ட் ஹவுஸ் சென்று சமாதானப்படுத்திய தமன்னா




அஜீத், தமன்னா மற்றும் பலர் நடித்த ‘வீரம்’ தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் Veerudokkade என்ற படம் ஆந்திராவில் இன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்காக அதிகளவில் தியேட்டர்கள் புக் ஆகியுள்ளதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


மேலும் இந்த படத்தை குறித்து சில நாட்களுக்கு முன் எழுந்த ஒரு கிசுகிசு தமன்னாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. Veerudokkade படத்தின் தெலுங்கு டப்பிங் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வருமாறு தமன்னாவை தயாரிப்பு தரப்பு அழைத்தபோது, தனக்கு ரூ.15 லட்சம் கொடுத்தால் மட்டுமே வரமுடியும் என்று டிமாண்ட் செய்ததாக கூறப்படுகிறது.


இதனால் கடும் கோபம் அடைந்த அந்த தயாரிப்பாளர். உடனடியாக தயாரிப்பு சங்கத்தை கூட்டி, தமன்னாவை இனிமேல் எந்த தயாரிப்பாளரும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று தடை போட்டாராம். அந்த தயாரிப்பாளர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள தெலுங்கு படத்தயாரிப்பாளர்கள் உடனே அவருக்கு பேச்சுக்கு கட்டுப்படு இனி தங்கள் படங்களில் தமன்னாவை புக் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்கள்.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமன்னா அதிர்ச்சியாகி, பின்னர் தயாரிப்பாளரின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று அவரை மணிக்கணிக்க்கில் தனிமையில் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. தமன்னாவில் சமாதானத்தில் திருப்தி அடைந்த தயாரிப்பாளர் தற்போது தடையை நீக்கிவிட்டார் என கூறப்படுகிறது.

அம்பூட்டு நல்லவனாய்யா நீ...... வியக்க வைத்த நடிகர்!




சமீப நாட்களாக திரைத்துறையிலும் சமூகவலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்(விமர்சிக்கப்பட்டவர்) சிவகார்த்திகேயன். தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ‘மான் கராத்தே திரைப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.


அப்போது ‘உங்களது ஒவ்வொரு படத்திலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றதே?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய சிவகார்த்திகேயன் “சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் கதைக்கு தேவைப்படுவதால் என் படங்களில் இருக்கிறதே தவிர, 


என் சொந்ஹ முயற்சியால் புகுத்தப்பட்டவை அல்ல. அப்படி இருந்தும் பெரும்பாலும் சிகரெட் பிடிப்பதை நான் படங்களில் தவிர்த்து விடுவேன். படத்திற்காகத்தான் நான் புகைப் பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை செய்கிறேன். 


சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது.(சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது)” என்று கூறினார்.

 மேலும் அவர் அடுத்ததாக நடிக்கும் இரு படங்களின் கதாபாத்திரங்களின் தனிச்சிறப்பே குடிக்காதவன், புகை பிடிக்காதவன் என்பது தானாம். ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை குடித்ததுமில்லை,


 சிகரெட் பிடித்ததுமில்லை என்று கூறியதைக் கேட்ட அனைவரும் அம்பூட்டு நல்லவனாய்யா நீ.... என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 


சிவகார்த்திகேயன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை படங்களில் மட்டும் இதுபோன்ற காட்சிகளை தவிர்த்தால் போதும் என்கிறது ரசிகர்களையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் திரையுலகம்.

சுவையுடன் சுகம் தரும் பிளம்ஸ்!




நமது நாட்டில் மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஓன்று பிளம்ஸ்.

நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும்.


மனிதனின் செயல்பாட்டிற்கு இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும்.


சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.


இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.


ரத்தத்தை சுத்தப்படுத்த

ரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.

ரத்த சுத்தத்திற்கு பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

ஜீரண சக்கியைத் தூண்ட

உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவானது நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

உடல் புத்துணர்ச்சிக்கு

உடலும் மனமும் சேர்வடையாமல் புத்துணர்சியுடன் இருக்க தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் அதிக சோர்வடைகிறது.

இதனால் இளவயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக்கின்றனர். இந்த குறைகள் நீங்கி உடல் புத்துணர்வடைய பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம். பிளம்ஸ் பழத்தை உலர்த்தி காய வைத்தும் சாப்பிடலாம்

ஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா?




குண்டான பெண்களை அவர்கள் சைட் மட்டும் அடிக்க விரும்பவில்லை, திருமணம் செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுவார்களாம். ஆச்சரியப்பட வேண்டாம், ஏனெனில் அதற்கு சில உண்மைக் காரணங்கள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…


* இப்போது ஆண்கள் என்றால் உணவுகளை நன்கு விரும்பி சாப்பிடுபவர்கள், ஆனால் அவர்களுடன் ஒல்லியான பெண்கள் சென்றால் உணவுகளை மிகவும் குறைவாக தான் சாப்பிடுவார்கள். அதனால் குறைவாக தான் ஆர்டர் செய்வார்கள். இந்த நிலையில் ஆண்களுக்கு நிறைய சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், துணைவி என்ன நினைப்பாளோ என்று நினைத்து,


நிம்மதியாக சாப்பிடாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவே சற்று குண்டு பெண்கள் என்றால், அவர்கள் நிறைய ஆர்டர் செய்வார்கள், அதனால் ஆண்களும் நிறைய சாப்பிடலாம். இத்தகைய ஒரு காரணத்தாலும் அவர்கள் குண்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்.

* ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு, தான் மிகவும் அழகு என்று நினைப்பு அதிகம் இருக்கும். அதனால் ஏதாவது ஒரு விருந்திற்கு செல்ல வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் மேக்கப்பிற்கு அளவே இல்லாமல் போகும். சொல்லப்போனால், அந்த நேரத்தில் கண்ணாடியே கெதி என்று இருப்பார்கள். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேறு யாரை பற்றியும் கவலை இல்லை. எப்படி சென்றாலும் பரவாயில்லை, தன் கணவருக்குப் பிடித்தால் போதும் என்று நினைத்து விரைவில் கிளம்புவதோடு, கணவரையும் கிளப்பிவிடுவார்கள். இதுவும் ஒரு காரணம்.


* முக்கியமான ஒன்று, ஒல்லியான பெண்களை திருமணம் செய்து கொண்டால், கண்டிப்பாக இரவில் படுக்க கட்டில் மெத்தை வேண்டும். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அப்படி எதுவுமே வேண்டாம் என்று நினைப்பதாலும் தான்.


* இப்போது உங்கள் துணைவி நன்கு பிட்டாக, அழகான வடிவத்தோடு இருந்தால், ஆண்கள் கண்டிப்பாக குண்டாக மாறினால் நன்றாக இருக்காது. அவ்வாறு குண்டானால், பின் அவர்களோடு வெளியே செல்லும் போது, நன்றாக இருக்காது.


மேலும் குண்டாகி விட்டால், பின் அவற்றை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று காலையில் எழுந்து உடற்பயிற்சி, ஜாக்கிங் என்றெல்லாம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தோன்றும். இந்த நேரத்தில் ஒருவித தாழ்வுமனப்பான்மை ஏற்படும். இதன் காரணமாகவும், அவர்கள் தன்னை விட குண்டாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகின்றனர்.


* எங்கேனும் வெளியே செல்லும் போது, ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, அதனால் எவரேனும் உங்களை அடிக்கும் போது, உங்களை காப்பாற்ற, உங்கள் துணைவி குண்டாக இருந்தால், அவர் உங்களை காப்பாற்றலாம். அதுவே ஒல்லியான பெண்கள் அந்த இடத்தில் இருந்தால், அவர்களை ஒரு அடி அடித்தால் போதும், அவள் மயங்கி விடுவாள். அதிலும் பொதுவாக சற்று குண்டான பெண்களைப் பார்த்தால், எந்த ஆணும் அவர்களை நெருங்க பயப்படுவார்கள்.


எனவே தான் ஆண்கள், குண்டான பெண்களை விரும்புகின்றனர். ஏனெனில் அத்தகைய பெண்களால் அவர்களுக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது. என்ன நண்பர்களே! சொன்ன பாயிண்ட் எல்லாம் சரிதானா?

புதுமுக நடிகையின் இடுப்பை வளைத்து நொடித்த சந்தானம்!




சேது, பவர்ஸ்டாருடன் இணைந்து விசாகா சிங்கிற்கு காதல் அம்பு விட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இருந்து தனது ரொமான்ஸ் நடிப்பை தொடங்கியவர் சந்தானம்.


ஆனால், அப்படத்தில் சேது கதாநாயகன் என்பதால், விசாகா சிங்கை கட்டிப்பிடித்து டூயட் பாடும் பாக்கியம் சந்தானத்துக்கு சரிவர அமையாமல் போனது. ஆனால்,.


இப்போது அவர் நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார் சந்தானம்.


2010ல் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக்கான இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அஷ்னா சாவேரி நடிக்கிறார்.


இப்படத்துக்காக மற்ற ஹீரோக்கள் போன்று தனது உடல்கட்டையும் ஸ்லிம் பண்ணி யூத் கெட்டப்புக்கு தன்னை மாற்றியுள்ள சந்தானம், ஜீன்ஸ், டீசர்ட், கூலிங் கிளாஸ் என்று செம கலக்கு கலக்கியிருப்பவர், பாடல் காட்சிகளில் புதுமுக நடிகையை ரவுண்டு கட்டியுள்ளாராம்.


குறிப்பாக, ரொமான்ஸ் காட்சிகளில் ஓவராக காது கடித்திருப்பவர், பாடல் காட்சிகளில் அவரது இடுப்பை வளைத்து நொடித்து ஒரு வழி பண்ணிவிட்டாராம்.


ஆக, காமெடி, காதல், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஆர்ப்பாட்டமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம் சந்தானம்.

கொலுத்தும் வெயிலில் குளிர்ச்சி தேவையா? பொன்னாங்காணியை கண்டிப்பா சேத்துக்கனும்..!




கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்காணி.
அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை …
சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.


இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.

பொன்னாங்காணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு.

அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை.
பொன்னாங்காணியில் சீமை பொன்னாங்காணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண்டு.

இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது.

உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

பொன்னாங்காணியின் பயன்கள் :
இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும்.
சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.

உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு.
மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.

இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது.

பொன்னாங்காணிக் கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்காணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்காணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது – 10 கிராம் எடுத்து 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

பொன்னாங்காணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.

பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர்
கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது.

இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும்.

ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது.

குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் எந்த மூலிகைக்கும் தேவை.

என்னது, ‘கானா’ பாலா ரிக்‌ஷா ஓட்டுராரா...!




நடிகர் அவதாரம் எடுத்த இசை அமைப்பளர்கள்,


பாடலாசிரியர்கள் வரிசையில் அடுத்து பின்னணிப் பாடகர் ஒருவரும் ஹீரோவாக களம் இறங்குகிறார்!


அவர் ‘கானா’ பாலா.


விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தாய்’,

‘பிரியமானவளே’,


‘வசீகரா’


உட்பட பல படங்களை இயக்கிய செல்வபாரதி அடுத்து இயக்கும்


 ‘பாரிஸ் கார்னர்’


 படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ’கானா’ பாலா தான்!


சென்னை நகரில் பிறந்த, ரிக்‌ஷா ஓட்டும் ஒரு தொழிலாளியின் கதையைச் சொல்லும் படமாம் இது!


 இப்படத்தில் ‘கானா’ பாலா ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியாக, கதையின் நாயகனாக நடிக்கிறார்.


இப்படத்தில் பாலாவுக்கான ஜோடி, மற்ற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடந்து வருகிறது.

குக்கூ - திரைவிமர்சனம் [ குக்கூ... குறிஞ்சிப் பூ!]




தயாரிப்பு : ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

இயக்கம் : ராஜு முருகன்

நடிப்பு : தினேஷ், மாளவிகா, ‘ஆடுகளம்’ முருகதாஸ்

ஒளிப்பதிவு : பி.கே.வர்மா

இசை : சந்தோஷ் நாராயணன்

எடிட்டிங் : ஷண்முகம் வேலுச்சாமி

பஸ்களிலும், ரயில்களிலும் நாம் பயணிக்கும்போது எத்தனையோ பார்வையற்றோரைக் கடந்து வந்திருப்போம். நம்மைப் பொறுத்தவரை அவர்கள் பாவப்பட்ட ஆத்மாக்கள்! ஆனால், அவர்களுக்கும் ஒரு உலகம் இருக்கிறது. அவர்களுக்கும் பார்வை இருக்கிறது, ரசனை இருக்கிறது, அன்பு இருக்கிறது, கோபம் இருக்கிறது, காதல் இருக்கிறது என்பதை பறைசாற்ற வந்திருக்கும் படமே ‘குக்கூ’.

கதைக்களம்

இதயத்தில் ஆரம்பித்து இதயத்திலேயே தங்கிவிடும் பேரன்பின் ஓசைதான் ‘குக்கூ’வின் மையக்கதை.

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் (உணரும்) ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும், ஓசைகளாலும் அவர்களின் காதல் வேரூன்றத் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரக்கொடியின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு வேறொருவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறான். முடிவில் தமிழ் - சுதந்திரக் கொடியின் தெய்வீகக் காதல் ஜெயித்ததா? இல்லையா என்பதே ‘குக்கூ’.

படம் பற்றிய அலசல்

நல்ல படங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட தற்போதைய பிசினஸ் சினிமா உலகத்தில், வியாபாரத்தைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் இப்படி ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த தயாரிப்பு நிறுவனத்திற்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் முதல் படம் என்பது ஒரு இயக்குனருக்கு அவரின் சினிமா வாழ்க்கைக்கான அஸ்திவாரம். ஜெயிக்கும் குதிரையின் மேல்தான் இங்கே பந்தயம் கட்டுவார்கள். ஆனால், எழுத்தாளராக எப்படி சிறந்த படைப்புகளை ராஜு முருகன் வழங்கினாரோ அதைப்போலவே தன் முதல் படத்தையும் தரமானதாக தர முயன்றிருக்கிறார். நல்ல இயக்குனர்கள் வரிசையில் உங்களுக்கும் ஒரு இடம் ரெடி ராஜு முருகன்... வாழ்த்துக்கள்!

தமிழ்சினிமாவில் ஏற்கெனவே பார்வையற்றோரைப் பற்றி நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படங்களிலெல்லாம் மைய கதாபாத்திரம் மட்டுமே பார்வையற்றதாக படைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ‘குக்கூ’ முழுக்க முழுக்க பார்வையற்றவர்களின் ஒரு தனி உலகத்தையே படம் முழுவதும் காட்டியிருக்கிறது.

முதல் பாதியில் காமெடி, காதல், பாசம் என மெதுவாக பயணிக்க வைத்து, இடைவேளையில் நெஞ்சை கனக்க வைத்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் நீளமோ என்ற உணர்வைத் தந்தாலும், போரடிக்காத இரண்டாம் பாதியும், நெகிழ வைக்கும் க்ளைமேக்ஸுமாக ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியைப் கொடுத்திருக்கிறது ‘குக்கூ’.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படத்தின் மிகப்பெரிய பலமே ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருப்பதுதான். தினேஷ், மாளவிகா இருவருமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், தனது இயல்பான நடிப்பால் மாளவிகா ஒரு படி மேலே நிற்கிறார். சில இடங்களில் கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’கோ என்ற உணர்வு ஏற்படாதவாறு பார்த்திருந்தால் தினேஷும் அடடே அற்புதமப்பா!

ஆனால், இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடும் ஒரு கதாபாத்திரம் என்றால், அது தினேஷின் நண்பராக வரும் இளங்கோ என்ற கேரக்டரில் நடித்தவர்தான்.

முதல் பாதி முழுக்க நம்மை சிரிக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது இவர்தான்! தினேஷின் இன்னொரு நண்பராக வரும் ‘ஆடுகளம்’ முருகதாஸ் தனக்குக் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்கள் இல்லாமல் எம்.ஜி.ஆர், சந்திரபாபு, விஜய், அஜித் போன்றவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த சர்ப்ரைஸ் திரையில்!

பலம்

* இதுவரை பார்த்திராத ஒரு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற கதைக்களம்.

* கதாபாத்திரத் தேர்வும், அற்புதமான நடிப்பும்!

* படத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் ‘நச்’ வசனங்கள். உதாரணத்திற்கு.... ‘கண் இருக்கிற ஆம்பளை எங்கயும் இருக்கான்... மனசு இருக்கிற ஆம்பளை எங்கயாவதுதான் கிடைப்பான்’, ‘விட்டுட்டு போயிடுவியா?ன்னு கேட்டா... யாராவது உசுர விடுவாங்களா?’, ‘பொம்பளைங்களை திட்டுறதே ஒரு ஃபேஷனா வச்சுருக்கிங்களாடா?’ என அடுக்கிக் கொண்டே போகலாம்.

* உறுத்தாத ஒளிப்பதிவும், அற்புதமான பின்னணி இசையும், பாடல்களும். குறிப்பாக பாடல்கள் ஒவ்வொன்றும் படத்தோடு பார்க்கும்போது நெஞ்சை நெகிழ வைக்கிறது. அற்புதம்!

பலவீனம்

* ரொம்பவும் மெதுவாக நகரும் திரைக்கதை.

* பார்வையற்றவர்களின் மேல் பரிதாபம் வரவேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட சில காட்சிகள்.

* இன்னும் கொஞ்ச இடங்களில் கத்திரியை வைத்திருக்க வேண்டிய எடிட்டிங்!

* வாய்ப்பிருந்தும் கொஞ்சம் முன்கூட்டியே வைக்கப்படாத க்ளைமேக்ஸ்!

மொத்தத்தில்...

பொழுதுபோக்குவதற்காக எவ்வளவோ படங்கள் வாராவாரம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட நல்ல படங்கள் எப்போதாவது ஒரு முறைதான் வரும். அப்படிப்பட்ட படங்களை நாம் வரவேற்பதன் மூலமே மீண்டும் அதை உயிர்பெறச் செய்ய முடியும். பார்வையற்றவர்களோடு நெருங்கிப் பயணிக்க ஒரு உன்னத வாய்ப்பு இந்த ‘குக்கூ’!

ஒரு வரி பஞ்ச் : குக்கூ... குறிஞ்சிப் பூ!

சிவகார்த்திகேயனுக்கு மீடியாக்கள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் நல்லாவே வொர்க்கவுட் ஆகுது...!



டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரித்திருக்கும் படம் மான் கராத்தே. சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.


விழாவிற்கு பத்திரிகையாளர்களும், மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் வந்தபோது ‘பவுன்சர்கள்’ என்று சொல்லப்பட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் விழாவிற்கு வந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்கள். இதனால் அடியாட்களுடன் வந்த சிவகார்த்திகேயன் என்று பரபரப்பாக பேசப்பட்டது.


இதற்கு மறுப்பு தெரிவித்து, தனக்கும் அடியாட்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.


‘மான் கராத்தே’ படத்தின் இசை வெற்றியடைந்ததையொட்டி இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயன், அடியாட்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை, அதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் என்று கூறினார். இதைப்பற்றி படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்கும் போது, விழாவிற்கு நிறைய பிரமுகர்கள்,


ரசிகர்கள் வருவார்கள். அவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவே இவ்வாறு ஏற்பாடு செய்தேன். ஆனால் அது வேறுமாதிரியாக மாறிவிட்டது. இனிமேலும் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.


மேலும் சிவகார்த்திகேயனிடம், ஹன்சிகாவின் காதல் தோல்விக்கு நீங்கள் ஆலோசனை கூறினீர்களா என்று கேட்டதற்கு, இது அவர்களுடைய தனிப்பட்ட விசயம். நான் எப்படி தலையிடுவது? என்று பதில் அளித்தார்.


படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பேசும் போது, ‘பாடல்கள் வெற்றியடைந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் பாடல்களை கேட்டு பலர் பாராட்டுகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்’ என்றார்.

காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையும்..! - அட ஆமாங்க....



முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையும் குறையும் என்பது தெரியவந்துள்ளது.

உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடத்தியது.

இதில் தெரியவந்த தகவல்கள், காலை உணவில் முட்டையை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது.

இது உடலில் ஆற்றலை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.

அதன்மூலம் மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது.

அதனால் உடலில் கலோரிகள் குறையும். இவ்வாறு உணவுகளின் அளவு மற்றும் கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது

இன்று 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக போகுதுங்க..!




கடந்த வாரம், வெள்ளிக் கிழமை 6 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின! குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படங்களில் ஒரு படத்திற்குக் கூட சொல்லும் படியாக ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை!


கடந்த வாரம் 6 படங்கள் வெளியாகின என்றால் இந்த வாரம், அதாவது இன்று வெள்ளிக்கிழமை 5 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகவிருக்கிறது!


இந்த 5 படங்களும் பெரிய பட்ஜெட்டோ, பெரிய நடிகர்களோ இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களாகும்! அந்த ஐந்து படங்களில் டிரைலர் மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிற படம் அறிமுக இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள ’குக்கூ’.


இந்தப் படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஹீரோவாக நடிக்க, மாளவிகா நாயர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படம் நாளை ரிலீசாகிறது.


‘தேனீர் விடுதி’யை இயக்கிய எஸ்.எஸ். குமரனின் அடுத்த படமான ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படமும் நாளை ரிலீசாகிறது.


இந்தப் படமும் ரசிகர்களிடத்தில் பரவலான எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும்! சென்ற வாரம் வெளியான ‘ஆதியும் அந்தமும்’ படத்தை இயக்கிய கௌசிக் இயக்கியிருக்கும் மற்றொரு படம் ‘பனி விழும் நிலவு’.


ஹிருதய், எடன் ஜோடியாக நடித்திருக்கும் இப்படமும் நாளை வெளியாகிறது. ஒரு இயக்குனரின் 2 படங்கள் ஒரு வார இடைவெளியில் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களுடன் துரைவாணன் இயக்கத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ’யாசகன்’,


குமார். டி. இயக்கியிருக்கும் ‘விரட்டு’ என மொத்தம் 5 படங்கள் நாளை ரிலீசாக, இந்தப் படங்களில் எந்தெந்த படங்கள் ஜெயிக்கும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்!

டூத் பேஸ்ட்-டில் உள்ள கெமிக்கல் குழந்தைகளின் மூளையை பாதிக்கும்..!




பாரிஸ்: டூத் பேஸ்ட் உள்பட பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் பிலிப்பி கிரேண்ட்ஜீன், கேன் ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் பணிபுரியும் ஆய்வாளர் பிலிப் லாண்ட்ரிகன் ஆகியோர், நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.

தங்களது ஆய்வில் தெரியவந்த உண்மைகள் குறித்து இருவரும் கூறியதாவது:குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ரசாயன பொருட்களின் எண்ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 6 ஆக இருந்தது. இப்போது 12 ஆகியுள்ளது.

டூத் பேஸ்ட்டில் உள்ள புளோரிட் உள்பட பல்வேறு ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன.

கடந்த 2006ம் ஆண்டு எத்தனால், லெட், மெத்தில்மெர்க்குரி, பைபெனில்ஸ், ஆர்செனிக் மற்றும் டோலின் ஆகிய ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பதாக கண்டறியப்பட்டன.

இப்போது மெக்னீசியம், புளோரிட், குளோர்பைரிபோஸ், டெட்ராகுளோரோ எத்திலீன் உள்பட மேலும் 6 ரசாயன பொருட்கள் சேர்ந்துள்ளன.

இந்த ரசாயனங்கள் எல்லாம் பூச்சி கொல்லி மருந்தாகவும், டிரை கிளீனிங் போன்றவற்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்கள் டூத் பேஸ்ட் உள்பட பல பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

ஆட்டிசம், கவனக் குறைபாடு, கற்றலில் குறைபாடு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகிறது என்று தெரிய வந்துள்ளது.இந்த ரசாயன பொருட்கள் குழந்தைகளின் அறிவு திறனை சிதைத்து விடுகின்றன.

அவர்களுடைய நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்க வளர்ந்து வரும் நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரசாயன பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்து கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டியது அவசியம்.

அத்துடன், மார்க்கெட்டில் புதிய பொருட்கள் அறிமுகமாகும் போது அதில் உள்ள ரசாயனங்கள் குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு பிலிப்பி கிரேண்ட்ஜீன், பிலிப் லாண்ட்ரிகன் ஆகியோர் கூறியுள்ளனர்.

உயிர்காக்கும் மருந்துகள், உயிரையே எடுக்கும் அபாயம்...!




கவனக்குறைவாக கையாளப்படும் காலாவதி மருந்துகள்தான் சமயங்களில் இப்படி காலனின் பிரதிநிதியாக ‘கடமை’யைச் செய்துவிடுகின்றன. மருந்து, மாத்திரைகள் வாங்கும்போதே ‘எக்ஸ்பயரி’ தேதியை கவனித்து வாங்குவதில் துவங்குகிறது… வீட்டுக்கான மருந்து, மாத்திரை பொருட்களின் பராமரிப்பு!

இந்த வகையில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை குடும்பத்துக்கு அவசியமான பராமரிப்புக் குறிப்புகளைத் தருகிறார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சமூக நலம் மற்றும் மருத்துவத்துறையின் பேராசிரியரும், சிறப்பு மருத்துவருமான எம்.அகிலா.

காலாவதி தேதியை சரிபாருங்கள்!

”மருந்து, மாத்திரை வாங்கும்போதே, அவற்றின் காலாவதி (எக்ஸ்பயரி) தேதியை சரிபார்ப்பது நல்லது. வாங்கும் பில்லிலும் அவற்றைக் குறிப்பிடச் சொல்லலாம். சில சமயம் உதிரியாக மாத்திரைகளை வாங்கும்போது, மருந்து அட்டையின் ஒரு பாதியில் காலாவதி தேதி காணக் கிடைக்காது. அப்போது கடைக்காரரிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
காலாவதி தேதி என்பது, கடையோடு முடிந்துபோகிற விஷயமில்லை. வீட்டுக்கு வந்த பிறகும் கவனம் தேவை. ஒரு மருந்தின் ஆயுள் இரண்டு வருடமாக இருக்கிறது எனில், காலாவதி தேதிக்கு இரண்டு மாதம் முன்பே அதன் உபயோகத்தை நிறுத்திவிடுவது நல்லது. காரணம், மருந்து மாத்திரைகளின் வீரியம் என்பது, காலாவதி காலத்தை எட்டும் முன்னரே படிப்படியாக குறையத் தொடங்கும். சில மாத்திரைகளின் மேலிருக்கும் இனிப்பு பூச்சு, நாளாக உருகத் தொடங்கலாம். இரும்பு சத்துக்கான மாத்திரைகள், காலாவதி காலம் நெருங்கும்போது கருக்கத் துவங்கிவிடும்.

பாட்டிலை திறந்தாலே… போச்சு!

என்னதான் காலாவதி தேதி என்ற ஒன்று இருந்தாலும், ஒரு மருந்து பாட்டிலின் மூடியைத் திறந்துவிட்டாலோ… அல்லது மாத்திரையின் உறை கிழிக்கப்பட்டாலோ… எவ்வளவு சீக்கிரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன் படுத்திவிட வேண்டும். ‘காலா வதி தேதிதான் இன்னும் இரண்டு வருஷத்துக்கு இருக்கே’ என்கிற நினைப்பில் அவற்றை நீண்ட நாள் வைத்திருந்து பயன்படுத்துவது நல்லதல்ல. பாட்டில் மூடி திறக்கப்பட்ட பிறகு, மாத்திரையின் உறை கிழிக்கப்பட்ட பிறகு… அந்த மருந்துகளில் வேதிமாற்றம் நிகழ்ந்து, அது வாங்கப்பட்ட நோக்கம் நிறைவேறாமல் போக வாய்ப்பு இருப்பதோடு… வேறுவிதமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்! எனவே, வீட்டில் ஒரு தடவை பயன்படுத்திவிட்டு வைத்திருக்கும் மருந்து மற்றும் மாத்திரைகளில் போதிய கவனம் செலுத்துவது முக்கியம்!

மருந்துகள் வைக்கும் இடம்!

நோயாளிக்கு கைக்கு எட்டும் வாகில் அருகிலேயே எல்லா மருந்துகளையும் சிலர் குவித்து வைத்துவிடுவார்கள். சிலர் அந்தந்த நாளுக்கான அல்லது நேரத்துக்கான மாத்திரைகளை அவற்றின் உறையிலிருந்து அகற்றி, ஒரே பொட்டலமாக மடித்து வைத்திருப்பார்கள். இரண்டிலேயும் நோக்கம் பிறழ வாய்ப்புண்டு. தேவையான மருந்து, மாத்திரைகளை அந்தந்த நேரத்தில் மட்டுமே நோயாளியோ… உதவியாளரோ அதன் பிளாஸ்டிக் உறையிலிருந்து எடுக்க வேண்டும். தேவைப்பட்டால்… பிளாஸ்டிக் உறையோடு தனி மாத்திரைகளாக நறுக்கி வைக்கலாம். காற்றோட்டமான, ஒளிபடாத அலமாரி போன்ற இடங்களில் மருந்து, மாத்திரைகளை வைப்பதுடன், குழந்தைகளுக்கு எட்டாத இடமாக அது இருக்க வேண்டியது அவசியம்.

‘ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்’ என்று மருந்துகளில் குறிப்பிட்டுஇருந்தால் மட்டுமே, அவ்வாறு செய்யலாம். சிலர் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை மொத்தமாக வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு, தங்கள் வசதிக்காக அருகில் இருக்கும் மருத்துவமனை அல்லது பக்கத்தில் குடியிருக்கும் மருத்துவரை அணுகி ஊசிகளைப் போட்டுக் கொள்வார்கள். தடுப்பூசிகளை இயன்றவரை அரசு மருத்துவமனைகளில் போட்டுகொள்வதே நல்லது. பவர் கட் மற்றும் தடுப்பூசி மருந்துக்கான சரியான குளிர்நிலை பராமரிப்பு உட்பட பல பாதுகாப்பு அம்சங்களில் வீட்டு ஃப்ரிட்ஜ் என்பது உசிதமான இடம் அல்ல.

சாப்பிடும் முறை, இடைவெளி, அளவு!

மாத்திரைகளை உணவுக்கு முன்பா பிறகா, முன்பு எனில் எவ்வளவு நேரத்துக்கு முன்பாக, எத்தனை டோஸ்கள், தொடர்ச்சியாக எத்தனை நாட்களுக்கு என்பவற்றை எல்லாம் மருத்துவரின் பரிந்துரையின்படி, தவறாமல் சாப்பிட வேண்டும். தண்ணீரில் கலந்து, அரை மாத்திரை, கால் மாத்திரை என அவற்றை பயன்படுத்தும்போதும் உரிய பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றவேண்டும். மாத்திரை கசக்கிறது என்று அவற்றை இனிப்புகளுடன் சேர்த்தோ, கரைத்தோ உண்ணும் பழக்கம் ஒரு சில பெரியவர்களுக்குக்கூட இருக்கிறது. குழந்தைகளுக்குக் கூட தேன் அல்லது தண்ணீர் தவிர்த்து டாக்டரின் ஆலோசனை இல்லாது ஏனைய இனிப்பு பொருட்களில் கலந்து தரக்கூடாது.

ஒருவரின் மாத்திரை மற்றவருக்குக் கூடாது!

ஊட்டச்சத்து பானமாக நோயாளிகள், பெரியவர்கள், குழந்தைகளுக்கு என உபயோகிக்கும் பவுடர்களை பராமரிப்பதிலும்கூட கவனம் அவசியம். பிளாஸ்டிக் பேக்கை திறந்ததுமே உகந்த டப்பாவில் போட்டு இறுக மூடிவைத்து பராமரிக்க வேண்டும். காற்று பட்டால் கெட்டியாகிவிடும் என்பது மட்டுமல்ல, ஆக்சிஜனேற்றத்தால் சத்துக்கென வாங்கிய பொருட்கள் அவற்றின் அர்த்தத்தை இழந்துவிடும் என்பதும் காரணம்” என்ற அகிலா,

”ஒருவருக்கு வந்திருக்கும் நோயின் அடிப்படையில் டாக்டர் பரிந்துரையின் பேரில் வாங்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் மட்டுமல்ல… சத்து மாத்திரைகள், பவுடர்கள் என்றாலும் ‘மீந்துவிட்டது’ உள்ளிட்ட காரணங்களுக்காக, உரிய மருத்துவ ஆலோசனை இன்றி பிறர் சாப்பிட அனுமதிப்பது தவறு. இதன் பின்விளைவுகள் விபரீதமாக கூட மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு” என்றும் எச்சரிக்கத் தவறவில்லை!

தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்..!




தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது.

தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:

1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.
2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.
3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.
4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.

மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.

தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.

4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.

5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.

6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.

7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.

9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.

10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.

சித்த மருத்துவ குறிப்புகள் - உங்களுக்காக...!




தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கு எண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை, பால் சேர்த்து குடித்தால் இருமல் குணமாகும்.

ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக :கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த :தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.

காசம் இறைப்பு நீங்க :கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

தலைப்பாரம் குறைய : நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

தும்மல் நிற்க :தூதுவளை பொடியை மிளகு பொடி அல்லது தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.

கலைஞர் குடும்பத்தில் இப்படி ஒரு ஆளா...!




சமீபகாலத் திரைப்படங்களில் மதுபான, டாஸ்மாக் காட்சிகள் இல்லாத திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பெரும்பாலும் அனைத்துத்திரைப்படங்களிலுமே நகைச்சுவை என்கிற பெயரிலோ அல்லது சோகப்பாடல் என்கிற பெயரிலோ ஹீரோவே டாஸ்மாக்கில் சென்று தண்ணியடித்துவிட்டுப் புலம்புவது போன்ற காட்சிகள் ஏராளமாகக் காட்டப்படுகின்றன.


தமிழ் சினிமாவின் புதிய, தவிர்க்கவியலாத ட்ரெண்டாகவே இக்காட்சிகள் உருவாகிவருவது வருந்தத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.


இந்நிலையில் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இனிமேல் தான் நடிக்கவிருக்கும் எந்தப் படத்திலும் டாஸ்மாக், மதுபானம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளாராம்.


பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் அனைத்துப் படங்களிலும், டாஸ்மாக் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுவருவது நினைவுகூறத்தக்கது. உதயநிதி படங்களில் சந்தானம் தவிர்க்க இயலாத நடிகராகவும் மாறிவருகிறார்.


இச்சூழ்நிலையில் டாஸ்மாக் காட்சிகள் இடம்பெறாத ஒரு படத்தினை எப்படி உருவாக்கபோகிறார்கள் என்று ரசிகர்கள் பேசிவருகின்றனர். ஆனால் சமீபமாக சந்தானமும் டாஸ்மாக் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.


உதயநிதி, நயன்தாரா இணைந்து நடித்த இது கதிர்வேலன் காதல் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து, மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துவரும் நண்பேன்டா திரைப்படம் உருவாகிவருகிறது.


இயக்குனர் ராஜேஷின் உதவி இயக்குனரான ஜெகதீஷ் இயக்கிவரும் இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார்.

சிவகார்த்திகேயனையும் விட்டுவைக்க வில்லை இந்த பார்ட் - 2 ...!




சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மாபெரும் மைல்கல்லாக உருவாகியிருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்.

மக்கள்மத்தியிலும், வசூலிலும் கொடிகட்டிப் பறந்த இப்படத்தின் படக்குழு மீண்டும் புதிய படத்தில் இணையவுள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இப்புதிய படம் வருகிற ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், மீண்டும் அதே படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக்
கலைஞர்கள் இணையவுள்ளனர்.


இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தினைத் தயாரிக்கவுள்ளது.


வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து இப்படத்திற்கான பாடல்கள் இசையமைக்கப்படலாம் என்றும், ஜூன் மாதத்தில் படப்பிடிப்புக்கள்
துவங்கப்பட்டு, செப்டம்பரில் படத்தினை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இச்செய்தியால் மீண்டும் ஒரு நகைச்சுவைத் திருவிழாவாக இப்புதிய படமும் அமையுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

கோச்சடையான் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. வி.ஐ.பி வெளியிட்ட ஆதாரபூர்வ அதிர்ச்சி தகவல்...!




கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதியை ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர் என்பது போல செய்திகள் தெரிவித்தன.


இந்நிலையில் கோச்சடையான் படம் வெளிவரும் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் கோலிவுட்டின் மிகப்பிரபலமான ஒரு வி.ஐ.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


அவர் கூறியது என்னவென்றால் கோச்சடையான் படம் வெளிவர வாய்ப்பே இல்லை என்பதுதான்.

கோச்சடையான் படத்தை முதலில் தயாரிப்பதாக ஒப்புக்கொண்ட நிறுவனம் EROS என்ற நிறுவனம்தான். ஆனால் அதன்பின்னர் EROS நிறுவனத்துடன் ரஜினியின் சார்பில் மீடியா ஒன் என்ற நிறுவனம் கோச்சடையானின் உரிமையை வாங்கியது.


ரிலீஸுக்கு முன்பாக ரூ.50 கோடியை ரஜினியின் மீடியா ஒன் EROS நிறுவனத்திற்கு திருப்பிக்கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்.


ஆனால் ரஜினி தற்போதைய நிலையில் ரூ.50 கோடியை திருப்பித்தரும் சூழ்நிலையில் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். அனிமேஷன் செலவுகள் அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டபடியால் தற்போது பணச்சிக்கலில் இருக்கின்றாராம் ரஜினிகாந்த்.

எனவே தியேட்டர் அதிபர்களிடம் இருந்து கோச்சடையான் படத்துக்காக அட்வான்ஸ் வாங்கி, அந்த பணத்தில் இருந்து ரூ.50 கோடியை திருப்பித்தந்துவிடலாம் என ரஜினி நினைத்தார்.


ஆனால் வழக்கமான ரஜினி படமாக கோச்சடையான் இல்லை என்றும், இது ஒரு பொம்மை படம் என்றும் பரவலாக செய்தி பரவி வருவதால் இந்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க தியேட்டர் அதிபர்கள் தயங்கி வருகின்றனர்.


மேலும் இந்த படத்துக்கு பெரிய தொகை எதையும் அட்வான்ஸாக கொடுக்க முடியாது என்றும், படத்தின் வசூலை பொறுத்துதான் பணம் கொடுக்க முடியும் என்றும் தியேட்டர் அதிபர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருவதால் தற்போது EROS நிறுவனத்திற்கு எப்படி பணம் கொடுப்பது என தெரியாமல் ரஜினி பெருங்கவலையில் இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.