Friday, 7 March 2014

காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கும் சிம்பு...!




ஹன்சிகாவுடனான காதலை முறித்து விட்டதாக சமீபத்தில் சிம்பு அறிவித்தார். இருவரும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர்.

படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். பிறகு இருவருமே காதலை பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் காதல் முறிந்து விட்டதாக பரபரப்பு அறிவிப்பை சிம்பு வெளியிட்டார். இதை அறிவிக்கும் போது இருவரும் ஐதராபாத்தில் நடந்த வாலு படப்பிடிப்பில் இருந்தனர்.

அப்போதுதான் இருவரும் மனம் விட்டு பேசி பிரிய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து ஒரு பாடலையும் சிம்பு பாடி இருந்தார். ‘நயன்தாரா வேண்டாம், ஆன்ட்ரியா வேண்டாம் நீ தான் என் டார்லிங்’ என்று அந்த பாடல் வரிகள் துவங்கின.

இதன் மூலம் இருவரும் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிரிந்து விட்டார்கள். இவர்கள் பிரிவுக்கு நயன்தாரா காரணம் என்கின்றனர்.

பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்தில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கின்றனர்.

 இருவரும் சிரித்து பேசி நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாயின. இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளார்கள்.

வாலு படத்தில் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி உள்ளன. இதை விரைவில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். காதல் முறிவுக்கு பிறகு இதில் இணைந்து நடிக்கிறார்கள்.

இன்டர்நெட்டில் நடிகையின் ஆபாச படங்கள்..! - போலீசில் புகார் அளித்தார்



நடிகை நவ்நித் கவுர் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி வருகின்றன. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

நவ்நித் கவுர் தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தார். அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நவ்நித் கவுருக்கும் மகராஷ்டிரா மாநிலம் பத்னேரா சட்டமன்ற தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவுக்கும் 2011–ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

தற்போது நவ்நித் கவுர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணயாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவரது ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றிலும் இந்த படங்கள் அனுப்பப்படுகின்றன. அரகுறை ஆடையில் ஆபாசமாக இருப்பதுபோல் இந்த படங்கள் உள்ளது.

இதனால் நவ்நீத் கவுர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த படங்களை இன்டர்நெட்டில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நவ்நித் கவுர் கணவரும் எம்.எல்.ஏ.வுமான ரவிராணா கூறும்போது, நவ்நித் கவுர் பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த படங்களை பரவவிட்டுள்ளனர் என்றார்.

வந்துட்டான்யா வந்துட்டான்...!




கோடை விடுமுறையை முன் வைத்து, தற்போது, பல படங்கள் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே, கோச்சடையான், விஸ்வரூபம், ஐ ஆகிய படங்கள் ரெடியாகியுள்ளன.

கூடுதலாக, நீண்ட இடைவெளிக்கு பின், வடிவேலு, நடித்து வந்த, ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படமும் கோடைவிடுமுறை வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.

கோடை விடுமுறையில், பல பிரபலங்களின் படங்களும் வெளியான போதும், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால்,

தாமதிக்காமல் சூட்டோடுசூடாக, தெனாலிராமனையும் களமிறக்குகின்றனராம்.

நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட..? பாலா மீது மவுனிகா பாய்ச்சல்..!




டைரக்டர் பாலா கருணை இல்லாதவர். என்னை அடிக்க ஆள் வைத்தார் என்று நடிகை மவுனிகா குற்றம் சாட்டியுள்ளார். இவர் டைரக்டர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி ஆவார்.

மவுனிகா கூறியதாவது:–

டைரக்டர் பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது அவரை காதலித்தேன். முதலில் மறுத்தார். நான் வற்புறுத்தினேன்.

பிறகு அவர் என்னை விட்டு விலகி போகவில்லை. அவரோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தேன்.

நானாக அவரை தாலி கட்டும்படி வற்புறுத்தவில்லை. அவர் தான் ஒரு நாள் திடீரென சிவன் கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டினார்.

பாலுமகேந்திராவுக்கும் எனக்கும் 28 வருட பந்தம் இருக்கிறது. அவர் என்னை அன்புடன் பார்த்துக் கொண்டார்.

அப்படிப்பட்ட என்னை பாலுமகேந்திரா மரணம் அடைந்த போது பார்க்க வரக்கூடாது என்று டைரக்டர் பாலா தடுத்தார்.

நான் வரக்கூடாது என்று சொல்ல பாலாவுக்கு என்ன உரிமை இருக்கிறது.

பாலுமகேந்திரா உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு நான் சென்றால் என்னை அடித்து விரட்டவும் ஆட்களை நிறுத்தி இருந்தார்.

பாலா விதித்த தடையை மீறி என் கணவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த டைரக்டர் பாரதிராஜா உதவி செய்தார்.

எனக்கும் பாலுமகேந்திராவுக்குமான உறவு தவறானதாக இருந்து இருந்தால் அவர் உயிரோடு இருக்கும் போதே என்னை பாலுமகேந்திராவிடம் இருந்து பிரிக்க பாலா முயற்சி செய்து இருக்கலாமே.

இவ்வாறு மவுனிகா கூறினார்.

ஒரே ஒரு வதந்தியால, எப்படி இருந்த நா இப்டி ஆயிட்ட...!




கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வதந்தி. நல்லவேளை… இது வதந்தியாகவே முடிந்தது. அதுவரை நிம்மதி.


கோடம்பாக்கத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மாறி மாறி பறந்த செல்போன் அழைப்புகளுக்கு ‘இருங்க விசாரிச்சுட்டு சொல்றேன்’ என கூறிய பலரும் அடுத்த நொடி நாலாபுறமும் நியூசை பரவ விட்டார்கள்.

என்னவாம்?


நடிகர் விவேக்குக்கு திடீர் நெஞ்சுவலி. அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள் என்பதுதான் அந்த பரபர நியூஸ்.

ஆளாளுக்கு ‘அப்படியா? அப்படியா?’

 என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு நம்ப முடியாமல் தவிக்க,

 ‘அதெல்லாம் இல்லீங்க. நல்லாதான் இருக்காரு’

என்று பதில் சொல்லி சொல்லி மாய்ந்தவர் அவரது நண்பரும் உதவியாளருமான ‘செல்’ முருகன்தான்.

அன்றைக்குதான் அவர் தன் பெயருக்கான காரணத்தை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்.

ஒருவழியாக விவேக்கின் காதுக்கே விஷயத்தை கொண்டு போனார் செல் முருகன். அட… இது நல்லாயிருக்கே, இப்படியெல்லாம் வதந்திகள் வந்தா ஆயுசு கெட்டியாம்ல?


என்று கேட்டு வாய்விட்டு சிரித்தாராம் விவேக். ‘இப்பதான் கமல் சார் படத்துல நடிக்கறதுக்கு கூப்பிட்டுருக்காங்க.


 (இத்தனை வருஷ சினிமா வாழ்க்கையில விவேக்கும் கமலும் இணைந்து நடித்தேயில்லை என்கிறது ஒரு சினிமா புள்ளிவிபரம்) அதுக்குள்ளே எவனுக்கோ பொறுக்கல போலிருக்கு’ என்று சந்தடி சாக்கில் வதந்தி கிளப்பியவர்களையும் திட்டி தீர்த்த விவேக், வேறொரு படப்பிடிப்புக்காக அன்றிரவே கிளம்பிவிட்டாராம்.

இதற்கிடையில் நான்தான் பாலா என்றொரு படத்தில் விவேக் ஹீரோவாக நடித்தாரல்லவா?

அந்த படத்தை தனது நெருங்கிய சினிமா பிரபலங்களிடம் சொல்லி படத்தை விற்றுக் கொடுக்கிற வேலையிலும் இறங்கியிருக்கிறார் விவேக். அவரே ஹீரோ என்பதால்தான் இந்த மெனக்கெடல்.

ஷகிலா கதையில் நடிக்க அவசியம் எனக்கு இல்லை அஞ்சலி ஆவேசம்..!




ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடித்து டாப் இடம் பிடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார் அஞ்சலி.

 அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தமிழில் வேகமாக முன்னேறிய நடிகை அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

சீதம்மா வாகிட்லே சிறுமல்லே சிட்டு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படம் ஹிட் ஆனது. ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்தார்.

 இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதுபற்றி அஞ்சலி கூறும்போது, ஷகிலா வாழ்க்கை படத்தில் நான் நடிப்பதாக கிசுகிசு வருகிறது.

நிச்சயம் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன். சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவது எப்படி என்பது தெரியும்.

அதற்காக ஆபாசமாக நடித்து முன்னணி இடத்தைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என அவர் கோபமாக கூறியுள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாண்டுமா..? அப்ப உங்க பலான வீடியோ கொடுங்க..! - இயக்குனர்




தன் படத்தில் நடிக்கும் ஹீரோயினுக்கு மற்றொரு இயக்குனர் படத்தில் நடிக்க வீடியோ காட்டி சான்ஸ் வாங்கி கொடுத்தார் ராம்கோபால் வர்மா.


தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களிடம் நெருக்கமாக இருப்பதாக அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் ராம் கோபால் வர்மா. ஐதராபாத்தில் அவரது அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடப்பதால் கடந்த 1 வருடமாக அவர் ஓட்டலில் தங்கி இருக்கிறார்.


வர்மா இயக்கும் ரவுடி தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஷான்வி ஸ்ரீவஸ்த்வா.


வர்மாவும் டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத்தும் நீண்ட நாள் நண்பர்கள். தான் இயக்கும் புதிய படத்திற்கு கடந்த பல மாதங்களாக ஹீரோயின் தேடி வருகிறார் புரி.


பல புதுமுகங்களை அவர் நேர்முக தேர்வுக்கு அழைத்தும் யாரையும் பிடிக்கவில்லை.

இது பற்றி வர்மாவிடம் கூறினார் புரி. உடனே அவர், என் படத்தில் நடிக்கும் ஷான்வியை வேண்டுமானால் உன் படத்திலும் நடிக்க வை என்றவர் ஷான்வி நடித்த வீடியோ காட்சிகளை புரியிடம் கொடுத்தார்.


அதை பார்த்தவர் திருப்தி அடைந்தார். தன் படத்துக்கு ஷான்வியையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.


இன்னும் 2 வாரத்துக்குள் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று புரி தெரிவித்தார்.