Monday, 17 February 2014

வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் முறை - தமிழக மாணவர்..!

வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த தமிழக மாணவர்..!



விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பிளஸ் 1 மாணவர் டெனித் ஆதித்யா,16. தொடர்ந்து பல்வேறு அறிவியல் கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து வருகிறார் இவர் கடந்த இரண்டு ஆண்டிற்கு முன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக் போன்றவைகளுக்கு மாற்றாக வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார் செய்வதற்கு வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். இந்நிலையில் அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், இந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்பு குறித்து விவாதம் நடந்தது. அப்போது மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு இம்மாணவர் “டெலி கான்பரன்சிங்’ மூலமாக விளக்கம் கொடுத்தார். இவரைப்போல தூத்துக்குடி மாவட்டம் ஏரல் இன்ஜினியர் ஜாபர் அலியின் “மேத்டிஸ்க்’ கணித உபகரணம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது பெருமைப் படத்தக்கது.

பள்ளி மாணவர்களிடயே அறிவியல் கண்டுபிடிப்பு மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய அறிவியல்சங்கம், ஆண்டு தோறும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த போட்டியை நடத்தி வருகிறது. அத்துடன் சிறந்த கண்டுபிடிப்புகளை தேர்வு செய்து, விருது பதக்கங்களை வழங்கிவருகிறது. முதல் மூன்று வெற்றியாளர்களை, சர்வதேச போட்டிகளுக்கு, இந்திய நாட்டின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு,கடந்த ஆறு மாதமாக இந்தியா முழுவதும் நடந்தது. தமிழகத்திலிருந்து மட்டும் 4 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு,கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தனர். இறுதித் தேர்வில் அகில இந்திய அளவில் 30 பேர் தேர்வானர்.

அவர்களுக்கு ஜன., 11ல் சென்னையில் போட்டிகள் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டம்,வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவன் மா.டெனித் ஆதித்யா தேசிய அளவில் முதலிடம்பெற்று தங்கப்பதக்கம் கோப்பையை வென்றார். இவர் ஏற்கனவே பல்வேறு மாநில விருதுகளையும் மத்திய அரசின் தங்கப்பதக்கம் விருது பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது தனது கண்டு பிடிப்பிற்காக காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். அதே சமயம் மே மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் மாநாட்டில் இந்தியாவிற்கான கண்டுபிடிப்பை சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள லாங்வுட் பல்கலைக்கழகத்தின் ஏழாவது ஆண்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கணிதம் கற்கும் உச்சிமாநாடு நடந்தது. அதன் இயக்குனர் மனோரமா நிகழ்ச்சியை துவக்கினார். கல்வித் துறையின் டீன் பால்சாப்மேன் தலைமை வகித்தார். அமெரிக்காவில் உள்ள கல்வித்துறை நிபுணர்கள் கல்லூரி பேராசிரியர்கள் கிராமப்புற மேல்நிலை துவக்கப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதலாவதாக இந்தியாவின் சார்பில் தமிழக மாணவர் டெனித் ஆதித்யாவின் வாழை இலை பதப்படுத்தும் தொழில்நுட்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது குறித்து மாநாட்டில் டிஜிட்டல் டிஸ்பிளே போர்டில் அனைவ ருக்கும் விவரித்து காட்டப்பட்டது. அப்போது மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் டெனித் ஆதித்யா, திருவனந்தபுரத்தில் இருந்து, “டெலிகான்பரன்சிங்’ மூலம் பதிலளித்தும், தனது கண்டுபிடிப்பின் பயன்கள் குறித்தும் விவரித்து பேசினார்.


இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள் அடுத்த உச்சி மாநாட்டின்போது நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.

தலைவாவை முந்திய கோச்சடையான்..!



ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ’கோச்சடையான்’ டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. டிரைலரை கிட்டதட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கின்றனர்.

முன்னதாக விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் டிரைலர்தான் அதிகம் பேர் பார்த்தவர்கள் வரிசையில் இருந்தது. இந்த டிரைலரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருந்தினர்.

இப்போது விஜய்யின் சாதனையை கிட்டத்தட்ட டபுள் மடங்கு வரவேற்பு பெற்று ரஜினியின் ‘கோச்சடையான்’ முறியடித்துள்ளது.

இந்தப் படம் உலக முழுவதும் ஏப்ரல் 11ம் திகதி திரைக்கு வருகிறது.

விஸ்வரூபம் – 2 ஏப்-14 ரிலீஸ் உறுதி..!



கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘விஸ்வரூபம் 2′. கமல் எழுதி இயக்கி வருகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது..இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் -14ல் ரிலீஸாகும் என்று தெரிய வருகிறது.

ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியாததால் படம் தாமதமாகி வருகிறது என்றும் இதற்கிடையில் ரஜினியின் கோச்சடையான் ஏப்ரல் 11ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டதால்.அந்த நாளில் விஸ்வரூபம் 2 ரிலீஸ் செய்ய வேண்டாம் என வினியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதால் கமலின் விஸ்வரூபம் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறது என்று வெளியான தகவலில் கொஞ்சமும் உண்மை இல்லை என்றும் திட்டமிட்டபடி தமிழ் புத்தாண்டில் வெளியாகும் எனவும் ஆஸ்கார் தரப்பு தெரிவிக்கிறது.

‘விஸ்வரூபம்’ சில திரையரங்குகளில் மட்டுமே ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், ‘விஸ்வரூபம் 2′ பொருத்தவரை அனைத்து மொழிகளிலும், திரையரங்குகளிலும் படத்தை ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட இருக்கிறார்.இதற்க்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் டிரெய்லர் வெளியீடு, மார்ச் மாதம் முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இதற்கிடையில் ஒரே சமயத்தில் 2 பெரிய ஹீரோக்களின் படம் வந்தால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதாலே இந்த படம் மே மாதத்துக்கு தள்ளிப்போகும் என வதந்தியைப் பரப்புவதாகவும் இதை நம்ப வேண்டாம் என்றும் கமல் தரப்பிலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - வாழ்க்கை வரலாறு




தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 29, 1908

பிறப்பிடம்: நாகர்கோயில், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர்  

இறப்பு: ஆகஸ்ட் 30, 1957

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

அவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

சினிமா பயணம்

தன்னுடைய நாடகக் குழு மூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். பெரும்பாலும், சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள இவர் ‘பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்

இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந்திர காந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்தம புத்திரன்’, ‘சகுந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஹரிதாஸ்’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திரலேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்னகுமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘காவேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்காரன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்கரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்லகாலம்’, ‘ராஜா தேசிங்கு’.

அவர் பாடிய சில பாடல்கள்

‘ஜெயிலுக்குப் போய் வந்த’, ‘பணக்காரர் தேடுகின்ற’, ‘ஆசையாக பேசிப்பேசி’ (பைத்தியக்காரன்), ‘ஒண்ணுலேயிருந்து’, ‘இடுக்கண் வருங்கால்’ (முதல் தேதி), ‘சங்கரியே காளியம்மன்’ (ரங்கோன் ராதா), ‘காட்டுக்குள்ளே’, ‘ஒரு ஏகாலியைப்’, ‘ஆரவல்லியே’ (ஆர்யா மாலா), ‘கண்ணா கமலக் கண்ணா’, ‘கண்னேந்தன்’ (கண்ணகி), ‘இருக்கிறது பார் கீழே’ (மங்கையர்க்கரசி), ‘கண்ணே உன்னால்’, ‘சந்திர சூரியன்’ (அம்பிகாபதி), ‘தீனா..மூனா.. கானா…’ (பணம்), ‘உன்னருளால்’, ‘என் சாண் உடம்பில்’ (ரத்னமாலா), ‘சிரிப்பு இதன் சிறப்பை’ (ராஜா ராணி), ‘வாதம் வம்பு பண்ண’, ‘காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற’ (டாக்டர் சாவித்திரி), ‘நித்தமும் ஆனந்தமே’, ‘விஜய காண்டிபா வீரா’, ‘அன்னம் வாங்கலையோ’, ‘இவனாலே ஓயாதத் தொல்லை’ (பவளக்கொடி), ‘இன்னுக்கு காலையில’, ‘வெகுதூரக்கடல் தாண்டி’ (சகுந்தலை), ‘நல்ல பெண்மணி’, ‘ஆயிரத்திதொள்ளாயிரத்தி’, ‘சுதந்திரம் வந்ததுண்ணு’ (மணமகள்), ‘சும்மா இருக்காதுங்க’ (நல்லகாலம்).

தேசபக்தி

பாரதத்தின் தந்தை எனப் போற்றப்படும், மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளராக விளங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அப்பொழுதே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னுடைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கலைவாணரின் சிந்தனையில் உதிர்ந்த ஒரு துளி

1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே புகழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார்? அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்’ என முடித்தார்.

இல்லற வாழ்க்கை

1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.

கொலைக் குற்றச்சாட்டு

இந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இந்நிகழ்வு, இவரின் கலைப் பயணத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் “கலைவாணர்” எனப் புகழப்பட்டார்.

மறைவு

நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.

தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை.

சீலிங் ஃபேன் உருவான கதை...!!!



பிலிப் தியல் ஜெர்மனியைச் சேர்ந்தவர். 1868ஆம் ஆண்டு தனது 21ஆம் வயதில் வேலை தேடி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குப் போனார்.

ஒரு தைரியத்தில்தான் அவர் அங்கே போனார். ஆனால் அங்கு வேலை கிடைப்பது, அதுவும் அவர் நினைத்தபடியான ஒரு நல்ல வேலை கிடைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை.

சின்ன சின்ன இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்களில்தான் வேலை கிடைத்தது. அம்மாதிரியான நிறுவனங்களில் வேலை வெகு நாள்கள் நீடிக்கவில்லை. தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தார்.

ஒரு வழியாக அமெரிக்காவின் மிகப் பெரிய இயந்திரத் தயாரிப்பு நிறுவனமான சிங்கர் தயாரிப்பு நிறுவனத்தில் பிலிப் தியலுக்கு ஒரு வேலை கிடைத்தது. ஐஸ் மெரிட் சிங்கரின் நிறுவனமான அது, தையல் இயந்திரங்கள் உற்பத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. பிலிப்புக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு.

அவரும் இதைப் பயன்படுத்தித் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். வேலையில் அவர் காட்டிய அர்ப்பணிப்பால் வெகு விரைவில் பதவி உயர்வு பெற்று, அதன் தயாரிப்பு மேம்பாட்டு அதிகாரி ஆனார் பிலிப்.

சிங்கர் தையல் கருவி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில்தான் அவர் மேற்கூரை மின்விசிறியை (Ceiling Fan) கண்டுபிடித்தார். தயாரிப்பு மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றியபோதுதான், மேற்கூரை மின்விசிறி கண்டுபிடிக்கும் சோதனையை அவர் மேற்கொண்டார்.

அப்போது தையல் இயந்திரத் தயாரிப்பில் பல புதிய யுக்திகளைப் பிலிப் கொண்டுவந்தார். அந்தச் சமயத்தில்தான் அவர் தையல் இயந்திர மோட்டாருடன் இறக்கைகளை இணைத்துப் பார்க்கலாம் என அவருக்குத் தற்செயலாகத் தோன்றியுள்ளது. அதற்கு முன்பே மேஜை மின்விசிறி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் அவர் இதைச் செய்து பார்த்தார்.

1880கள் கண்டுபிடிப்புகளின் காலம் எனலாம். அப்போது, அமெரிக்கா முழுவதும் பயன்பாட்டுக்கான கருவிகள் துரிதமாகக் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பிலிப் அலுவலக ரீதியிலான கண்டுபிடிப்புகளைக்கூடத் தன் வீட்டில் பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அப்படித் தன் வீட்டில் பணி செய்துகொண்டிருந்த ஒரு நாளில்தான், கூரையில் தன் மின்விளக்கு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பே பிலிப், மின் காயிலுடன் கூடிய மின் விளக்கைக் கண்டுபிடித்திருந்தார். எடிசன் கண்டுபிடித்த மின் விளக்கிற்குப் பிலிப்பின் விளக்குதான் ஆதாரமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது குறித்துச் சர்ச்சையும் இருக்கிறது.

விளக்கையே உற்று நோக்கிக்கொண்டிருந்த பிலிப்பின் மனதில் விளக்குடன் இணைந்த மேற்கூரை மின்விசிறியைக் கண்டுபிடிக்கும் எண்ணம் உதித்துள்ளது.

அதை நிரூபிப்பது போலவே, தொடக்கத்தில் அவர் சந்தைப்படுத்திய மின்விசிறி மின் விளக்குடன் கூடியதாகத்தான் இருந்தது. இது மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் ஆர்க் லாம்ப், எலக்ட்ரிக் டிரில்லிங் இயந்திரம் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளுக்காக பிலிப் இன்று நினைவுகூரப்படுகிறார்.

அமெரிக்காவுக்கு வேலை தேடி ஒரு சாதாரண மனிதனாக வந்த பிலிப் தியல், தன் அபாரமான உழைப்பாலும் திறமையாலும் முன்னேறி 1906இல் ‘தியல் தயாரிப்பு நிறுவனம்’ என்னும் பெயரில் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். மோட்டார், மின் விசிறி உள்ளிட்ட பல முக்கியமான பொருட்களை அந்நிறுவனம் தயாரித்து, சந்தைப்படுத்தியது.

24 மணி நேரமும் செயல்படும் தானியங்கி வங்கிக் கிளை..! ஐசிஐசிஐ-யின் புதிய முயற்சி..!



ஐசிஐசிஐ வங்கி நாடு முழுவதும் 33 நகரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் 61 மின்னணுக் கிளைகளை நிறுவியுள்ளது. இதில் கோயம்புத்தூரில் ஒரு கிளை உட்பட தமிழ்நாட்டில் 8 கிளைகள் உள்ளன. இது தற்போது சோதனை முறையில் இயங்கி வருகிறது.

"சுயசேவைகளை 24 மணி நேரமும் தரும் இந்த தானியங்கிக் கிளை முயற்சி வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய வசதியான வங்கிப் பரிவர்தனைகளை மேற்கொள்ள உதவும்" என ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் ராஜிவ் சபர்வால் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பசுமைகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த வங்கி சூரிய சக்தி மூலம் இயங்குகிறது. இவ்வங்கி எடுத்துள்ள இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு வசதியான வேலை நேரங்களையும் அளிக்கும்.

தன் கணக்கில் உடனடி மற்றும் நேரடியாக பணம் செலுத்துதல் (ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டும்), பணம் பெறுதல், காசோலை செலுத்துதல் மற்றும் அதற்கான ரசீது, வீடியோ மூலமாக வங்கிப் பிரதிநிதியுடன் சேவை மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான உரையாடல் போன்ற பல சேவைகளை இவ்வங்கி 24 மணி நேரமும் அளிக்கிறது.

இது மட்டும் அல்லாமல் இன்டர்நெட் வங்கிச் சேவை முனைமம், தொலைபேசி வங்கிச்சேவை, வங்கிக் கணக்கு அறிக்கை, டிமாண்ட் ட்ராப்ட் எனப்படும் கேட்புக் காசோலை விண்ணப்பம், பணப் பரிமாற்றம், காசோலை புத்தக விண்ணப்பம் போன்ற சேவைகள் இந்த தானியங்கி கிளைகள் வழங்கும் சேவைகளில் அடக்கம்.

ஜனவரி மாதத்தில் இந்த 61 தானியங்கி வங்கிகளின் சோதனை ஓட்டத்தில் 12 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டதாக அவ்வங்கித் தெரிவித்தது.

அனிருத்தின் பிரச்சனை என்ன...?



தனுஷ் நடித்த ‘3’ படத்துக்கு இசையமைத்து பிரபலமானவர் அனிருத். இப்படத்தில் இடம் பெற்ற ஒய்திஸ் கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. இதனால் அனிருத்துக்கு படங்கள் குவிந்தன.

இன்னொரு புறம் சர்ச்சைகளிலும் சிக்கினார். நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடுவது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது யூடியூப்பில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த இசை ஆல்பத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அனிருத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். அனிருத்திடம், நேரில் விசாரணை நடத்துகிறார்கள். குற்றம், நிரூபிக்கப்பட்டால் அனிருத் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமை அதிகம்..!



தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமை அதிகம் இருப்பதாக பத்மப்பிரியா கூறியுள்ளார். தமிழில், ‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்‘, ‘பொக்கிஷம்‘ உட்பட சில படங்களில் நடித்தவர் பத்மப்பிரியா.

மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அவர் மலையாள இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமை அதிகம். கால்ஷீட் கேட்பார்கள். கொடுப்பேன். அட்வான்ஸ் வாங்கிய பிறகு உங்களுக்கு இந்த கேரக்டர் செட் ஆகாது என்று சொல்லி விடுவார்கள். இதனால்தான் தமிழில் எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் அதிக நாள் நீடித்திருப்பது கஷ்டம். இவ்வாறு பத்மப்பிரியா கூறியுள்ளார்.

சாப்பிட்ட பிறகு செய்ய கூ டாத 7 ஆபத்தான செய்கைகள்..!



1. சாப்பிட்ட மாத்திரத்தில் புகை பிடிப்பது பத்து சிகரட்டுகள் பிடிப்பதற்கு சமமாகும் வெகு விரைவில் புற்று நோய்க்கு வலி வகுக்கும்

2. சாப்பிடவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம் இதன் மூலம் வயிற்றில் காற்று பெருகிவிடும் எனவே பழங்களை 1-2 மணி நேரத்துக்கு பிறகோ அல்லது 1 மணிநேரத்துக்கு முதலோ சாப்பிடவும்.

3. சாப்பிடவுடன் தேயிலை அருந்த வேண்டாம் தேலையில் அதிகமான அமிலம் உள்ளடங்கியுள்ளதால் இந்த பதார்த்தம் உணவில் உள்ள புரதங்களை எடுத்து கொள்ளும் அதனால் உணவு சமிபாட்டுக்கான நேரம் அதிகமாக எடுத்து கொள்ளும்.

4. சாப்பிடவுடன் பெல்டினை தளர்த்தி விடாதீர்கள் இது குடலினை உருக்குலைய செய்வதுடன் குடலில் தடைகளையும் ஏற்படுத்தும்.

5. சாப்பிடவுடன் குளிக்க வேண்டாம் ஏனெனில் குளிப்பதனால் கை கால் உடல் முழுக்க இரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் வயற்றுக்கு செரிமானத்துக்கு தேவையான இரத்த அளவு குறையும் அதனால் செரிமான அமைப்பு வலுவிழக்கும்.

6. சாப்பிடவுடன் நடப்பது உணவு செரிமானத்துக்கு சிறந்தது இதானால் 99 வயது வரை வழலாம் என்பார்கள் அது பொய் ஏனெனில் நடப்பதினால் நேரடியாக உடலில் இருந்து சத்துக்கள் உறிஞ்சபடாது மாற்றமாக உட்கொண்ட உணவில் இருந்தே ஊட்ட சத்துக்கள் உறிஞ்சபட்டு இது செரிமான ஓட்டத்துக்கு இயலாமையை தோற்றுவிக்கும்.

7. சாப்பிடவுடன் தூங்க வேண்டாம் -இதனால் உணவு ஒழுங்காக ஜீரணிக்க முடியாது. இது நமது குடலில் வாயு மற்றும் தொற்றுக்கு வழிவகுக்கும்.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் விளக்கம்..!



மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்..!



பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும். எளிதில் பிடித்து அடித்து விடலாம்.

‘டுவிட்’ செய்யும் டோஸ்டர்...!



உணவு பத­மாக வாட்­டப்­பட்ட தக­வலை “டுவீட்” (Tweet) செய்யும் டோஸ்டர் இருந்தால் எப்­படி இருக்கும்? அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் அவ்­வா­றா­ன­தொரு டோஸ்­டரை உண்­மை­யாக்கி­யுள்ளார்.

உணவு பத­மா­க­ வாட்­டப்­பட்­டுள்­ளதை “டுவீட்” செய்­யக்­கூ­டிய இந்த டோஸ்­டரை அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னியா மாகா­­ணத்தைச் சேர்ந்த ஹன்ஸ் சார்ளர் என்பவர் கண்­டு­பி­டித்­துள்ளார்.

ஐ.ஓ. பிரிட்ஜ் தொகு­தி­யினை பயன்­ப­டுத்தி இந்த டுவீட் செய்யும் டோஸ்டர் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டத்­துக்கு இணைய மேம்­பாட்­ட­ாள­ரான ஜெஸன் வின்டர்ஸ் என்ற ஹன்ஸின் நண்பர் உத­வி­பு­ரிந்­துள்ளார்.

இருப்­பினும் ஜெஸ­னுக்கு இவ்­வா­றா­ன­தொரு சிந்­தனை தோன்­ற­வில்லை. ஆனால் ஹன்ஸ் அதனை உண்­மை­யாக்­கி­யுள்ளார்.

இதற்­காக டோஸ்­ட­ரினுள் என்ன நடை­பெ­று­கி­றது என அறிந்­து­கொள்ள வெளியில் உணரி ஒன்றை பொருத்­தி­யுள்ளார் ஹன்ஸ். இதன் மூலம் வாட்­டப்­படும் உணவு தொடர்­பான தக­வல்­களை அறிந்து ஐ.ஓ பிரிட்ஜ் மூலம் டுவீட் செய்­கி­றது இந்த டோஸ்டர். ஒவ்­வொரு நாளும் காலை­யில், “வாட்­டப்­ப­டு­கி­றது”, ”வாட்டி முடிக்­கப்­பட்­டுள்­ளது” மற்றும் “செயலில் இல்லை” என தன்­னி­யக்­க­மாக டுவீட் செய்­கி­றது.

இந்த நவீன டோஸ்டர். தற்­போது 2000 இற்கும் அதி­க­மானோர் டுவீட்­டரில் இந்த டோஸ்­டரை தொடர்­கிறார்கள் என்­பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவல்களை இணையத்தளத்திலும் யூ.டி.யூப் மூலம் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் ஹன்ஸ்.

உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா..? அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க...!



இந்தியாவில் கிடைக்கக்கூடிய பழங்களில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் தான் பலாப்பழம். அதிலும் இந்த பழமானது இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தான் அதிகம் விளைகிறது. மேலும் நிறைய மக்கள் பலாப்பழத்தில் ஊட்டச்சத்துக்களானது குறைவாக உள்ளது என்று நினைக்கின்றனர்.

ஆனால் பலாப்பழத்தில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் பலாப்பழத்தை சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். இங்கு பலாப்பழத்தை சாப்பிட்டால் எப்படி உடல் எடையில் மாற்றம் தெரியும் என்று பார்ப்போம்.

பலாப்பழத்தில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. எனவே இது உடல் எடையை நிச்சயம் அதிகரிக்காது. மேலும் இந்த பழத்தை எவ்வளவு வேண்டுமானாலும் உடல் எடை கூடுமோ என்ற அச்சமின்றி சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்போர் டயட்டில் இதை சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருளை உட்கொண்டால் தான் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் பலாப்பழத்தில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், இது உடல் எடையை அதிகரிக்காது.

பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அதனை உட்கொள்ளும் போது, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது உடைக்கப்பட்டு, உடலில் கொழுப்புக்களின் அளவானது குறையும். மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருளை உட்கொண்டால், செரிமான மண்டலமானது சீராக செயல்படும். அதுமட்டுமல்லாமல் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும்.

பலாப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையானது அதிகரிக்காமல் இருக்கும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமம், கூந்தல் போன்றவற்றிற்கும் தான் நன்மைகளை வழங்குகிறது. எனவே பலாப்பழம் சாப்பிட்டு, உடலை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் கிளிசரினை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்..?



அழகுப் பராமரிப்பில் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் கிளிசரின். இத்தகைய பொருளை அழகைப் பராமரிக்க மட்டுமின்றி, வீட்டைப் பராமரிக்கவும் பயன்படுத்தலாம். ஏனெனில் கிளிசரின் வீட்டின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

மேலும் கிளிசரினை வீட்டைப் பராமரிக்கப் பயன்படுத்தினால், வீடு சுத்தமாக இருக்கும். அப்படி கிளிசரினை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் என்று கேட்கிறீர்களா? அதைப் பற்றி தான் இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி முயற்சித்துப் பாருங்கள். உண்மையிலேயே அசந்து போய்விடுவீர்கள்.

சில நேரங்களில் கதவுகளில் இருந்து சப்தம் எழுவதோடு, மூட முடியாமல் அவஸ்தைப்படுவோம். அப்போது நாம் பொதுவாக எண்ணெய் தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்நேரத்தில் கிளிசரின் இருந்தால், அதனைப் பயன்படுத்தினால், சப்தம் எழுவது நிற்பதோடு, கதவுகளை எளிமையாக திறந்து மூடலாம்.

சிலர் வீடுகளில் பல நாட்களாக சில பூட்டுகளைப் பயன்படுத்தாமல் இருப்பார்கள். அத்தகைய பூட்டுகளை திடீரென்று பயன்படுத்த எடுத்தால், அதில் சாவியானது நுழையாமல் இருக்கும். அப்போது அவ்விடத்தில் கிளிசரினைப் பயன்படுத்தினால், எளிதில் பூட்டுகளை திறந்து பூட்டலாம்.

கிளிசரினில் இயற்கையாகவே சுத்தப்படுத்தும் பொருள் உள்ளதால், இதனை பாத்திரம் கழுவும் போது பயன்படுத்தலாம்.

பூ ஜாடியில் உள்ள பூ வாடாமல் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், தண்ணீரில் சிறிது கிளிசரினைக் கலந்து, அதனை பூக்களின் மேல் தெளித்தால், பூக்கள் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.

பொதுவாக கதவுகளில் தூசிகளானது மூலை முடுக்குகளில் தங்கிக் கொண்டு வெளியே வராமல் இருக்கும். ஆனால் கிளிசரின் பயன்படுத்தி ஜன்னல் கதவுகளைத் துடைத்தால், தூசிகள் எளிதில் நீங்கி, கதவுகளும் பாதிப்படையாமல் இருக்கும்.

குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, நீரில் கிளிசரினைக் கலந்து, அதனைக் கொண்டு முட்டைகளை விடலாம். இதனால் பிறந்தநாள் கொண்டாட்டமானது சிறப்பாக இருக்கும்.

இரண்டே நாட்களில் நீங்களும் அழகாகலாம்..!



முக்கியமான நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். ஆனால் இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. இரண்டு நாட்கள் போதும், உங்களை நீங்கள் சூப்பராக அழகாக்கிக்கொள்ள..! வீட்டிலேயே அதை செய்துவிடலாம்..!

சருமத்திற்கு

வறண்ட சருமம் உங்களுக்கு பிரச்சினையாக இருந்தால் உடல் முழுவ தும் 'லிக்யூட் சோப்' பூசி, 'பாடி ஸ்கிரப்' பயன்படுத்தி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்பு நிறைய தண்ணீர் ஊற்றி, நன்றாக கழுவிவிடுங்கள். சருமத்திற்கு பளபளப்பு கிடைக்கும்.

அழகான விழிகளுக்கு

டீ பக் ஒன்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். பின்பு அதை எடுத்து நன்றாக குளிரவையுங்கள். அதை கண்களை மூடிக்கொண்டு, கண் மீது எல்லா இடங்களிலும் படும்படி பத்து நிமிடங்கள் வையுங்கள்.

தேயிலையில் அடங்கியிருக்கும் கபீன், கண் இமைப் பகுதிகளை அழகாக்கி, கண்களை ஜொலிக்கவைக்கிறது. கண்களில் இருக்கும் வீக்கங்களை அகற்றி பளிச்சிடச்செய்யும். நன்றாக தூங்காவிட்டால் கண்களின் அடியில் கறுப்பு நிறம் படியும். அதையும் நீக்கும் சக்தி, டீபக்கிற்கு இருக்கிறது.

முகப்பரு நீங்க

பளிச்சென இருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றி நிறைய பெண்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது.

அதற்கும் பரிகாரம் இருக்கிறது. ஒரு ஐஸ் கட்டியை துணியில் பொதிந்து மூன்று நிமிடங்கள் முகப்பரு மீது வைத்திருங்கள். பின்பு துணியில் இருந்து ஐஸ் கட்டியை நீக்கிவிட்டு, அந்த துணியை லாவண்டர் எண்ணெய்யில் தோய்த்து, பரு மீது வையுங்கள். இவ்வாறு செய்தால், பக்டீரியா தாக்கம் நீங்கி, இரண்டு நாட்களில் முகப்பரு மறையும்.

கூந்தல் அழகுக்கு

நீங்கள் விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முதல் நாளே உங்கள் முடிக்கு ஏற்ற தரமான ஷாம்புவும், கண்டிஷனரும் பயன்படுத்தி தலையை நன்றாக கழுவுங்கள். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தலைக்கு குளித்து, கூந்தலை நன்றாக உலர வையுங்கள். பின்பு கூந்தலை பல பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் 'ப்ளோ டிரை' செய்யுங்கள். இறுதியில் முடியின் இறுதிப்பகுதியில் ஹெயர் வாக்ஸ் பூசுங்கள். இதன் மூலம் முடி உடைந்து போன அழகு குறைபாடு நிவர்த்தி செய்யப்படும். அழகும், ஜொலிப்பும் கூந்தலுக்கு இதன் மூலம் கிடைக்கும்.

பாதங்களுக்கு

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் பெட்ரோலியம் ஜெலி பூசி, காலுறை அணிந்துகொண்டு தூங்குங்கள். மறுநாள் பாதங்களுக்கு மென்மையும், அழகும் கிடைக்கும்.

மேக்-அப் நிலைத்திருக்க

முகத்தில் பவுண்டேஷனும், காம்பேக்ட் பவுடரும் பயன்படுத்திய பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் ஸ்பிரே செய்து, டிஸ்யூ பேப்பர் வைத்து ஒற்றி எடுத்தால், மேக்-அப் அதிக நேரம் நிலைத்திருக்கும்.

லிப்ஸ்டிக் அதிக நேரம் நிலைத்திருக்க உதடுகளில் கண்சீலர் போட்ட பின்பு லிப்ஸ்டிக் போடுங்கள். நெயில் பாலீஷ் இளகிப்போகாமல் இருக்க, அதன் மேல் கிளீயர் கோட் ஒன்று கொடுங்கள்.

பூமியை நோக்கிவரும் செயற்கைக்கோளால் ஆபத்து..?

 பூமியை நோக்கிவரும் ரஷ்யாவின் செயற்கைக்கோளால் ஆபத்து..?


ரஷ்யாவைச் சேர்ந்த கோஸ்மாஸ் 1220 என்ற செயற்கைகோளின் ஆயுட்காலம் முடிந்த நிலையில் அது பூமியை நோக்கி வருகிறது. அநேகமாக இன்று இரவு அது பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விண்வெளி ஆய்வு மையத்தின் ஜுலுதிகன் கூறுகையில், ‘பெரும்பகுதி எரிந்த நிலையில் பூமியை நோக்கி வரும் இந்த செயற்கைகோள் 3 டன் எடை கொண்டது. பசிபிக் கடலில் அது விழும் என்று எதிர்பார்க்கிறோம். அதேவேளையில் பூமிக்குள் நுழையும் போது ஏற்படும் மாற்றங்களால், அது இடம் மாறி அதிக மக்கள் கொண்ட பகுதியில் விழவும் வாய்ப்புள்ளது. எனவே அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.” என்றார்.

செயலிழந்துபோன ரஷ்யாவின் ராணுவ செயற்கைக்கோளான ஸ்மோஸ்-1220 பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. கடந்த 1980ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள் சிக்லோன்-2 என்ற விண்கலம் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. மூன்று டன் எடை இருக்கும் என்று குறிப்பிடப்படும் இந்த செயற்கைக்கோள் காற்று மண்டலத்தில் நுழையும்போதே பெரும்பான்மையான பகுதிகள் எரிந்துவிடும் என்று கூறப்பட்டபோதிலும், அதன் மிச்ச பகுதிகள் கீழே விழும்போது பூமியின் மேற்பரப்பை பாதிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பசிபிக் பெருங்கடலில் இவை விழக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வெளிப்புறக் காரணங்களால் இவை விழும் நேரமும், இடமும் மாறுபடக்கூடும் என்று சொலோடுகின் கூறுகின்றார்.பூமியின் பெரும்பகுதி நீர்ப்பரப்பால் சூழப்பட்டுள்ளதாலும், ஜனநெருக்கடியான இடங்கள் குறைவாக உள்ளதாலும் இந்த செயற்கைக்கோளின் சிதைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில் தாங்கள் செயல்பட்டு வருவதாக வானியல் பத்திரிகை ஆசிரியரான டேவிட் எய்ஷர் தெரிவித்துள்ளார்.