Monday, 24 March 2014

டீ - யில் இத்தனை வகையா...? டீ பிரியர்களே உங்களுக்காக...!




சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.

மசாலா டீ:

ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமையான தேநீர்.

ரோஸ் டீ:

தேநீர் கொதிக்கும் போது புத்தம் புது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு தேநீர் தயாரிக்கவும். ரோஜா பூ இதழ்களை ஒரு டப்பாவில் போட்டு வைத்தும் தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ டீ:

 குழந்தைகள் சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். டீ தயாரிக்கும் போது தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும்.

இஞ்சி டீ:  அஜீரணம் வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை சீவி விட்டு நன்கு நசுக்கி டீ கொதிக்கும் போது சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.

ஏலக்காய் டீ:

ஏலக்காய்களை தோலுடன் பொடி செய்து தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். இனிப்புகள் செய்ய ஏலப்பொடி செய்யும் போது ஏலக்காய் தோலை எரியாமல் சேகரித்து வைத்த உபயோகப்படுத்தலாம்.

எலுமிச்சை டீ:

நீரை கொதிக்கவிட்டு தேயிலைப்போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டவும். ஆறியதும் அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து சில ஐஸ்கட்டிகளைப் போட்டு பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா டீ:

சில புதினா இலைகள், துளசி இலைகள், இவற்றுடன் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கி போட்டு 4,5 மிளகைப்பொடி செய்து போட்டு நீரில் கொதித்ததும் தேயிலை, சீனி, பால், கலந்து வடிகட்டி அருந்தவும்.. இது ஜலதோஷம் இருமல் இவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

தேநீர் நம் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை, மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதைவிட தேநீர் அருந்துவது நல்லதே! அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மீறினால் நரம்புகளையும் வயிற்றையும்  பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர் வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.

சிம்பு, நயன்தாரா திருமணம் உண்மையா?




சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.

பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாராவை பாண்டியராஜ் ஜோடியாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருவரும் சிரித்து பேசுவது போன்ற படங்கள் வெளியாயின. நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

ஆனால் பட விளம்பரத்துக்காக இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என தெரிய வந்தது.

அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விளம்பரபடுத்துவதற்காகவே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரிய வரும்.

சரத்குமார் நடித்து வந்த வேளச்சேரி படம் டிராப் ஆனது.?!



ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து வந்த சரத்குமாரை, பழசிராஜா, காஞ்சனா போன்ற படங்கள் அவருக்குள் இருந்த வித்தியாசமான நடிகரை வெளியே கொண்டு வந்தன.


அதனால் அவரை இன்னொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் நோக்கத்தில் உருவான படம்தான் வேளச்சேரி. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக இனியா நடித்து வந்தார்.


சிறிய இடைவேளைக்குப்பிறகு சரத்குமார் கதாநாயகனாக நடிக்க கமிட்டான இந்த படத்தில் அவருக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் வீதம் சம்பளம் பேசி படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.


அந்த சமயத்தில் சில நாட்களில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் சரத்குமார் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததாககூட சலசலப்பு ஏற்பட்டது.


இருப்பினும், எப்படியும் படத்தை முடித்து விட வேண்டும் என்று வேகமாக நகர்த்தி வந்த நேரம், பைனான்ஸ் பிரச்னை வெடித்து விட்டதாம். சரத்குமார் என்ற பெரிய நடிகரின் படமாக இருந்தும் பைனான்ஸ் உதவி செய்ய யாரும் முன்வரவில்லையாம்.


அதனால், இப்போது படப்பிடிப்பை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் சரத்குமாரை விட இப்படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருந்த இனியா பெரிய வருத்தத்தில் இருக்கிறார்.

நான் தா சீனியரு,எங்கூடத்தான் நீங்க நடிக்கனும், சிவகார்த்திகேயன்லா ஜூனியர்தாங்க...!




கதை பிடித்தால் சில ஹீரோக்கள் கால்ஷீட் கொடுப்பார்கள். சில ஹீரோக்கள் சம்பளம், பேனர், டைரக்டர் போன்ற காரணங்களினால் கால்ஷீட் கொடுப்பார்கள். நடிகர் ஜீவாவுக்கு இந்த விஷயங்கள் எதுவுமே முக்கியமில்லை. இவை எல்லாமே ஜீவாவுக்கு இரண்டாம்பட்சம்தான்.


தன்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அணுகும்போது, ஜீவா சொல்லும் முதல் வார்த்தை...எனக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக த்ரிஷா உடன் ஜோடி சேர வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டார். தன் ஆசையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லிப்பார்த்தார். அவரது ஆசையை நிறைவேற்ற சில தயாரிப்பாளர்கள் த்ரிஷாவை அணுகியபோது, மார்க்கெட் இல்லாத ஜீவா உடன் நடிக்க முடியாது என்று மறுத்தார் த்ரிஷா.


சில வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு மார்க்கெட் போனது. அதன் பிறகு என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவா உடன் சேர்ந்து நடித்தார். தற்போது காஜல் அகர்வால், அனுஷ்கா, அமலாபால் என்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி வருகிறாராம் ஜீவா. உங்கள் படத்துக்கு உள்ள வியாபாரத்துக்கு நீங்கள் சொல்லும் நடிகைகளை எல்லாம் நடிக்க வைக்க முடியாது என்று தயங்கித் தயங்கி ஒரு தயாரிப்பாளர் சொன்னாராம்.


கடுப்பான ஜீவா, அப்படீன்னா சில வருஷம் வெயிட் பண்ணுங்க. என் ரேன்ஜ் உயர்ந்ததும் நான் டேட் தர்றேன். அப்ப படம் பண்ணலாம், இப்ப கிளம்புங்க. என்று அடிக்காத குறையாய் விரட்டினாராம்.

தமன்னாவின் பேராசைக்கு வந்த சோதனை...!




கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிப் பின்னர் ஓரிரு வருடங்களில் முன்னணி நடிகையாகவும் மாறினார் தமன்னா. ஆனால் அதன்பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் அதிகப் படங்கள் நடிக்காமல் தெலுங்கு,ஹிந்திப் படங்களில் தனது கவனத்தைச் செலுத்திவந்தார்.

தல அஜித்தின் வீரம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரியான தமன்னா மீண்டும் முன்னணி நடிகையாகும் முயற்சியில்
ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் தல அஜித்தின் வீரம் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இப்படத்தின் விளம்பர
மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்குத் தமன்னாவை தயாரிப்பாளர் அழைத்துள்ளார்.

இந்த அழைப்பினை மறுத்த தமன்னா தான் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வரவேண்டுமானால் 15 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கூறியதாகவும், இதனால் கோபமடைந்த படக்குழு, தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்து, தமன்னாவை இனி எந்தத் தயாரிப்பாளரும் புக் பண்ணக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதைக் கேட்டு அதிர்ந்துபோன தமன்னா, உடனே சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டதாகவும், இதற்குப் பிறகு தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு முழு ஆதரவு தருவேன் என்றும் ஒப்புக் கொண்டாராம். இதற்குப் பிறகு தமன்னா மீதான தடையை விலக்கிக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் வீரம் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

3 கோடிக்கு, 3 கோடி லாபம்! – படத்தயாரிப்பாளர்களுக்கு ஆசை காட்டும் பா.விஜய்..!




பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்த ஞாபகங்கள், இளைஞன் இரண்டு படங்களுமே படு தோல்வியடைந்த படங்கள். ஆனாலும் பா.விஜய்க்கு நடிப்பு ஆசை அடங்கவில்லை. எப்படியாவது கதாநாயகனாக ஜெயித்தே ஆக வேண்டும் என்பதில் வெறியாக இருக்கிறார்.


அதேசமயம், தயாரிப்பாளர்கள் யாரும் பா.விஜய்யை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவரை வைத்து படம் எடுக்கவும் யாரும் தயாராக இல்லை.


இந்த யதார்த்தம் பா.விஜய்க்கு தெரியுமோ தெரியாதோ…பிரபல படநிறுவனங்களை அணுகி தன்னை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்கும்படி வாய்ப்புக் கேட்கிறார். அப்படி கேட்கும்போது, தன்னை வைத்து 3 கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தால், அந்தப் படத்தை 6 கோடி ரூபாய்க்கு நானே பிசனஸ் பண்ணித் தருகிறேன் என்றும் ஆசை காட்டுகிறாராம்.

அதோடு, தன் உறவுக்காரர்கள் பல பேர் கல்லூரிகள் நடத்தி வருவதாகவும், அந்தக் கல்லூரிகளில் இலவசமாக மெடிகல், இன்ஜினியரிங் சீட் வாங்கித்தருவதாகவும் ஆஃபர் வேறு கொடுக்கிறாராம்.


இப்படி எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு ஆசைகாட்டியும், ஆஃபர் கொடுத்தும் பா.விஜய்யை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வரவில்லை. எனவே அவரே 1 சிடி முப்பது ரூவா என்ற படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.


தன் பேனரில் இல்லாமல் வேறு பேனரில் தயாராகி வரும் 1 சிடி முப்பது ரூவா படத்தின் புரடக்ஷன், பப்ளிசிட்டி, பிசனஸ் என அனைத்து விஷயங்களையும் பா.விஜய்தான் கவனித்து வருகிறாராம்.


பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்த ஞாபகங்கள், இளைஞன் இரண்டு படங்களுமே படு தோல்வியடைந்த படங்கள். ஆனாலும் பா.விஜய்க்கு நடிப்பு ஆசை அடங்கவில்லை. எப்படியாவது கதாநாயகனாக ஜெயித்தே ஆக வேண்டும் என்பதில் வெறியாக இருக்கிறார்.

அதேசமயம், தயாரிப்பாளர்கள் யாரும் பா.விஜய்யை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவரை வைத்து படம் எடுக்கவும் யாரும் தயாராக இல்லை.
இந்த யதார்த்தம் பா.விஜய்க்கு தெரியுமோ தெரியாதோ…பிரபல படநிறுவனங்களை அணுகி தன்னை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்கும்படி வாய்ப்புக் கேட்கிறார். அப்படி கேட்கும்போது, தன்னை வைத்து 3 கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தால், அந்தப் படத்தை 6 கோடி ரூபாய்க்கு நானே பிசனஸ் பண்ணித் தருகிறேன் என்றும் ஆசை காட்டுகிறாராம்.
அதோடு, தன் உறவுக்காரர்கள் பல பேர் கல்லூரிகள் நடத்தி வருவதாகவும், அந்தக் கல்லூரிகளில் இலவசமாக மெடிகல், இன்ஜினியரிங் சீட் வாங்கித்தருவதாகவும் ஆஃபர் வேறு கொடுக்கிறாராம்.
இப்படி எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு ஆசைகாட்டியும், ஆஃபர் கொடுத்தும் பா.விஜய்யை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வரவில்லை. எனவே அவரே 1 சிடி முப்பது ரூவா என்ற படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.
தன் பேனரில் இல்லாமல் வேறு பேனரில் தயாராகி வரும் 1 சிடி முப்பது ரூவா படத்தின் புரடக்ஷன், பப்ளிசிட்டி, பிசனஸ் என அனைத்து விஷயங்களையும் பா.விஜய்தான் கவனித்து வருகிறாராம்.
- See more at: http://www.cinebeeps.com/archives/16713#sthash.qGFIxBJW.dpuf

எளிய இயற்கை மருத்துவம் - வாழ்க வளமுடன்...!


எளிய இயற்கை மருத்துவம்:-

1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.

5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.

6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.

8. அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.

9. கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.

10. மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.

11. நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும்.

12. நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.

13. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.

14. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

15. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.

16. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.

17. எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.

18. குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.

19. இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.

முடி உதிர்கிறதா..? பொடுகு தொல்லையா..? இதோ தீர்வு டாஸ்மார்க் கடைகளில்..




கிக் இற்காக இன்றைய இளசுகள் பீருக்கு அடிமைப்பட்டுள்ளனர். பீரினால் கிக் மட்டும் தான் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.
காரணம், பீர் ஆனது தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக இருப்பதாக விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

பீரில் முடிக்கு செழுமை அளிக்கக்கூடிய விற்றமின்களும், புரதங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

பீரில் உள்ள விற்றமின் பி ஆனது தலைமுடிக்கு சிறந்த மென்மையை அளிக்கின்றது.

அத்துடன் பீரில் காணப்படும் பொஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை தலைமுடிக்கு உறுதி அளித்து முடி உதிர்வு, முடி சிதைவு, பொடுகு தொல்லை என்பவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.
எப்படி பயன்படுத்துவது..?

பீரை குடிப்பதால் இந் நன்மைகளை பெற்றுவிட முடியாது. அதனை நேரடியாக தலையில் பூசவேண்டும்.

01. முதலில் பீரை திறந்து அதில் வாயுகுமிழிகள் வெளியேறி முடியும் வரை காத்திருக்கவும். (இதில் முக்கிய விடயம், பீர் அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும்.)

02. பின்னர் தலைமுடியை ஷம்பூ போட்டு நீரினால் நன்கு அலசவும்.

04. அதன் பின்னர் பீரை தேவையான அளவு தலையில் ஊற்றி, விரல்களால் 5 நிமிடங்களுக்கு குறையாமல் மசாச் செய்யவும்.

05. இறுதியாக தலைமுடியை நீரினால் கழுவி, தேவை ஏற்படின் மீண்டும்
ஒருமுறை ஷம்போ போட்டு கூந்தலை லேசாக அலசலாம்.
குறிப்பு: இதில் எவ் இடத்திலும் சூடான நீரை பயன்படுத்த வேண்டாம்.

பீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்?

01. தலைமுடி நன்கு பிரகாசிக்கும்

02. தலைமுடி மென்மையாக இருக்கும்

03. தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்

04. தலைமுடியின் உறுதி அதிகரிக்கும்

05. முடிஉதிர்தல், பொடுகு பிரச்சினை முடிவுக்கு வரும்.

பீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் என்ன தீமை..?
பீர் வாசனை அன்று முழுவதும் உங்கள் தலையை சுற்றிவரலாம்..!
(பீரை பயன்படுத்திய பின்னர் வாசனையான ஷம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலசுவதால் இப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.)

இவ்வாறு வாரத்துக்கு ஒருமுறை தலைமுடிக்கு பீரை பயன்படுத்தினால் உங்கள் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

ஹீரோக்களை டம்மியாக்கவே நான் ஹீரோவாக நடிக்கிறேன்...! சந்தானம்




தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகரானவர் சந்தானம். அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் காமெடி நடிகரானார்.


சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஹீரோக்களே காத்திருந்தார்கள். இப்போது சந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் இது.


ஹீரோவாக நடிப்பது ஏன் என்பது பற்றி சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஹீரோவாக நடிக்கணும், பன்ஞ் டயலாக் பேசி பத்து பேரை பறக்க விடணுங்ற ஆசையெல்லாம் கிடையாது. ஆனா இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவாக நடிக்க முடியும்.


அப்பாவியாகவும் இருக்கணும் ஹீரோயிசம் காட்டி கைதட்டலையும் அள்ளணும். இதை ஒரு பெரிய ஹீரோ செய்ய முடியாது. செய்தா ரசிக்க மாட்டாங்க. புதுமுகங்கள் இந்த கேரக்டரை தாங்க மாட்டாங்க. அதான் நானே நடிக்க தீர்மானிச்சேன்.


வழக்கமான என்னோட படத்துல வர்ற காமெடியை விட கூடுதலா கொஞ்சம் காமெடி சேர்த்துகிட்டு ஹீரோவாகிடவில்லை. நான் எது பண்ணினதாலும் மக்கள் ரசிச்சு கைதட்டுவாங்கன்னும் நினைக்கல.


ஸ்கிரிப்ட்டுதல ஆரம்பிச்சு நான் ஜிம்முக்கு போயி தயாரானது வரைக்கும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம். நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்திருக்கோம். படம் வரும்போது அது தெரியும். என்கிறார் சந்தானம்.

பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு - அதிரடி முடிவு...!




பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவர் மவுனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் முதல் அரசியல் நடவடிக்கைகள் 1996–ல் நடந்தது.

அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணியை ஆதரித்தார். அந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாகவும் இருந்தார். அந்த அணி அமோக வெற்றி பெற்று ரஜினியின் அரசியல் செல்வாக்கை வலுவாக பறைசாற்றியது. அதன் பிறகு 1998–ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார்.

அப்போது அ.தி.மு.க.வும் பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்து நின்றன. அந்த சமயம் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது பாரதீய ஜனதாவுக்கு அனுதாப அலையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற வைத்தது. இதனால் 1999–ல் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தார்.

2004–ல் பா.ம.க.வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்பட்ட மோதல் அவரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்தது. கட்சி துவங்குவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது பா.ம.க.வை தோற்கடிக்க எதிர் அணியான பாரதிய ஜனதாவை வெற்றி பெற வைக்கும்படி வாய்ஸ் கொடுத்தார். அதற்கு பிறகு கடந்த 10 வருடங்களாக எந்த கட்சிக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுங்கியே இருக்கிறார்.

இந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோருக்கும் நெருக்கமாகி விட்டார். ஜெயலலிதா, கருணாநிதியை சந்தித்தார். எதிர் முகாமில் இருந்த பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி போன்றோருடனும் நெருக்கமானார். ரஜினி மகள் சவுந்தர்யா திருமணத்துக்கு அன்புமணி நேரில் வந்து வாழ்த்தினார். இது போல் பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடியுடனும் நட்பு வைத்து இருக்கிறார்.

எல்லா தலைவர்களுடனும் இந்த நல்லுறவை நீடிக்க செய்வதே அவர் எண்ணமாக இருக்கிறது. எனவே வரும் தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்..!




சின்னப்ப தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த படம் ‘வேட்டைக்காரன்’. குறுகிய கால தயாரிப்பு. எம்.ஏ.திருமுகம் இயக்கினார். ஆரூர்தாஸ் வசனங்கள். கே.வி.மகாதேவன் இசை. 100 நாள் படம். 1965ல் ஸ்ரீதரின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான படம் ‘வெண்ணிற ஆடை’.

 கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என நான்கு பொறுப்பையும் ஸ்ரீதர் கவனித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்தனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினார். அதேபோல் ஸ்ரீகாந்தை (‘தங்கப்பதக்கம்’ ஸ்ரீகாந்த்) ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.


நிர்மலாவுக்கு முக்கிய ரோல் படத்தில் இருந்தது. கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோயின்தான். மெயின் ஹீரோயின் வேடத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என ஸ்ரீதர் குழப்பத்தில் இருந்தார். அப்போதுதான் கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்திருந்த ஜெயலலிதாவை பற்றி கேள்விப்பட்டார். அந்த படங்களை பார்த்தார். அவரையே புக் செய்தார். இந்த படம் மூலம்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.


படம் முடிந்து சென்சாருக்கு சென்றது. தேவையே இல்லாமல் ஏதோ ஒரு காட்சிக்காக சென்சார் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்து வ¤ட்டது. இது பட யூனிட்டாருக்கு அதிர்ச்சியாக இருநதது. ஸ்ரீதருக்கோ பெரும் அதிர்ச்சியை இது தந்தது. படத்தில் கவர்ச்சி காட்ச¤கள் அதிகம் போலிருக்கிறது என்ற பேச்சு பரவிவிட்டது. முதல் நாள் முதல் ஷோவில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் பட்டாளம் நிரம்பி வழிந்தது.


படம் முடிந்து போகும்போது தியேடடர் சீட்டுகளை கிழித்து, கலாட்டா செய்துவிட்டு போனார்கள். சில தியேட்டர்களில் பாதி படத்திலேயே கலாட்டா செய்தனர். காரணம், முழு நீள குடும்ப கதை படமிது.


ரசிகர்களின் இந்த செயல்களால் படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துவிட்டனர். மூன்றே வாரத்தில் பல தியேட்டர்களிலிருந்து படத்தை எடுத்தும் விட்டனர். இதற்கிடையே படம் பார்த்த பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியது.


அது படத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஸ்ரீதரின் நேர்மையான உழைப்பை பத்திரிகைகள் பாராட்டியிருந்தன. கிராமப்புறங்களில் படம் பிக்அப் ஆக தொடங்கியது. படம் நல்லா இருக்கு எனற டாக் பரவ ஆரம்பிக்கவே வேறு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தார் ஸ்ரீதர். அதன் பின் படம் நிற்காமல் ஓடு ஓடு என ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. அமர்க்களமான ஹிட் என்றால் இதுதான் என சொல்லும்
அளவுக்கு பேசப்பட்டது.


படத்தில், நீராடும் கண்கள் இங்கே... போராடும் நெஞ்சம் அங்கே... நீ வாராதிருந¢தால்... என்னை பாராதிருந்தால்... நெஞ்சம் மாறாதிருப்பேன் இல்லையா...என்றொரு கண்ணதாசனின் பாடல் பதிவாகியிருந்தது. படத்தில் ஸ்ரீகாந்தை பார்த்து ஹீரோயின் பாடும் வரிகள் இவை. இதை மக்கள் ஏற்பார்களா என சந்தேகத்தை ஸ்ரீதருக்கு அவரது உதவியாளர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.


இதனால் இவ்வளவு அழகான பாடல் படத்தில் இடம்பெறாமலே போய்விட்டது. இதன் மெட்டும் மிக அருமையாக இருக்கும். எனக்கு இந்த பாடல் வரிகளை கொடுத்து சம்பளமும் பெற்றுவிட்டதால், அந்த வரிகளை வேறு படத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு தோன்றவில்லை. அவன்தான் கவிஞன் என என்னிடம் ஒருமுறை ஸ்ரீதர் கூறினார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் இந்த ஆண்டில்தான் வெளியானது. தேசிய விருது பெற்ற படமிது. ஜெயகாந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த படம். ஆசியா ஜோதி பிலிம்ஸ் பெயரில் இப்படத்தை தயாரித்தார். பிரபலம் ஆகாத பிரபாகர், வீராசாமி, காந்திமதி நடித்த படம். ஆனால், இதன் கதையும் அதை சொன்ன விதமும் புதுமையானது. நட்சத்திர நடிகர்கள் இல்லை என்பதால் இப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை.


 ஜெயகாந்தனே படத்தை வெளியிட்டார். ரிலீசுக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்களும் கேம் ஆடினார்கள். டிக்கெட் நிறைய இருந்தும் தியேட்டரில் ஹவுஸ்புல் என போர்டு வைத்துவிடுவார்கள். இதை நம்பி ரசிகர்கள் திரும்பிவிடுவார்கள். ரசிகர்கள் போனதும் போர்டை எடுத்துவிடுவார்கள். படம் பார்க்க ரசிகர்கள் வரவில்லை எனக் கூறி படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிடுவார்கள். இந்த விஷயத்தை ஜெயகாந்தனே எனனிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.


தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் வெளியான படம் ‘இதயக்கமலம்’. எல்.வி.ப¤ரசாத் தயாரித்தார். அவரது சிஷ்யரான ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கினார். வசனம் ஆரூர்தாஸ். கே.வி.மகாதேவனின் இசையில் எல்லா பாடல்களும் ஹிட். ரவிச்சந்திரனுடன் கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடித்த படம். நன்றாக ஓடியது.

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பாயும் புகார்கள்....! - பீஸ்ச புடுங்க போறாங்க...




மதுரவாயல் அருகே உள்ள வானகரம்–அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10–க்கும் மேற்பட்டோர் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.


 ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு போய் உள்ளது. குடியிருப்பு சங்கத்தினர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதேபோல் குடியிருப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அவர்கள் குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்து பவர் ஸ்டார் சீனிவாசன் தனது சூப்பர் மார்க்கெட் முன்பு செட் அமைத்துள்ளார்.


அதை அகற்றக்கோரி டிசம்பர் மாதம் வரை கெடு விடுத்து இருந்தோம். ஆனால் அவர் அகற்றாததால் கிரீல் கேட்டை நாங்கள் அகற்றினோம்.


இதற்காக எங்களை அவரது தரப்பினர் மிரட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்பை அகற்ற ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த புகார்கள் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

முன்பு சூப்பர்ஸ்டார்.., இப்ப அல்டிமேட்ஸ்டார் அசத்தும் ஷாருக்கான்...!!!




வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம் தான்.

இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.

உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் விஷயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்திருக்கின்றனர்.

அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி வெயிட் தூக்கவும் முடியாது. இதனால் முறையான பயிற்சியாளரை தேடி வருகிறாராம் அஜித்.

இந்த விஷயத்தை அறிந்த பாலிவுட் கிங் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பயிற்சியாளர் அஜீத் வீட்டிலேயே தங்கி பயிற்சி அளித்து வருகிறார்.

கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் 6 பேக்ஸ் அல்லது 8 பேக்ஸ்ஸை காண ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.

கோச்சடையானில் ஷாருக்கான் ரஜினியை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரகனியை பாராட்டிய சகாயம் I.A.S...!




நிமிர்ந்து நில் படம் பார்த்து பலரும் தன்னை பாராட்டினர்கள் என்று சமுத்திரகனி தெரிவித்தார்.


அதில் முக்கியமாக சகாயம் IAS தன்னிடம் பேசும்போது ஊழலுக்கு எதிராக இந்த உலகில் யார் குரல் கொடுத்தாலும் அவன் என் நண்பன் என்று சொல்லி பாராட்டினார்.


 அவரின் ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து’  என்ற வாசகத்தை தான் படத்தில் பயன்படுத்தினேன், அவர் அழைத்து பாராட்டியது எனக்கு பெருமையாக இருந்தது.


ஜெயம் ரவியின் கதாபாத்திரதின் பெயர் அரவிந்த் என்று இருப்பதால் பலரும் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோடு அதை ஒப்பிடுகிறார்கள்.


நான் மூன்று வருடங்களுக்கு முன்பாகவே இந்தக் கதையை ஜெயம் ரவியிடம் சொல்லிவிட்டேன். அதனால் அதற்கு இதற்கும் சமந்தமில்லை.


 நாங்கள்  நினைத்த பலவிஷயங்கள் படம் வெளிவருவதற்கு முன்பாகவே நடந்து வந்தன. அரவிந்த் என்ற என் நண்பன் இங்கே இருக்கும் ஊழல் விஷயங்களால் திணறிப்போய் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டான்.


அவனை நினைத்துத் தான் ஜெயம் ரவியின் கதாபாத்திரதிற்கு அரவிந்த் என்று பெயர் வைத்தேன் என்றார்.

எம்.ஜி.ஆரை புகழ்ந்து சிவாஜி பாடிய பாடல்...!




ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் 'கில்லி', 'தூள்' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.

1990-ம் ஆண்டு, கேமராமேன் ரவியாதவ் தயாரிப்பில் 'உறுதிமொழி' என்ற படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்த படம், வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. மரண தண்டனை கைதியை தூக்கில் போட கொண்டு செல்லும்போது, அங்கு வரும் டாக்டர், கைதியை கடத் திச் சென்று, பல கொடியவர்களை கொல்வதுதான் கதை.

இந்தப்படத்திலேயே 'கிராபிக்ஸ்' காட்சிகளை அமைத்திருந்தார்கள். சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் தீப்பற்றி எரிவது போல் கிராபிக்ஸ் மூலம் காண்பித்தார்கள்.

உறுதிமொழியை தயாரித்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்காக 'கிழக்கு வாசல்' படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் உதயகுமாரே எழுதியிருந்தார். தெருக்கூத்துக் கலைஞரான கார்த்திக்கை, அடுத்த ஊரின் பண்ணையார் மகள் குஷ்பு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவார். இதற்கிடையே பண்ணையாரால் அந்த ஊருக்கு அழைத்து வரப்படும் ரேவதியை கார்த்திக் காதலிப்பார்.

'கிழக்கு வாசல்' படப்பிடிப்பின்போது பல விபத்துக்கள் நடந்தன. ஒரு விபத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று அதிசயமாக உயிர் பிழைத்தார், உதயகுமார். 

படத்தில் நடிக்க சம்பளம் தேவையில்லை...! - காரணம் சொல்லும் நடிகை...!




வழக்கு எண் 18/9, படத்தில் பெண் தொழில் அதிபராக நடித்து புகழ்பெற்றவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ். தற்போது வெளியாகி உள்ள நிமிர்ந்து நில் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.


 "பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் பணம் வாங்காமலும் நடிக்க தயார்" என்கிறார். மேலும் அவர் கூறியதாவது:

சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் ஆச்சாரமான எங்கள் குடும்பம் என்னை சினிமால நடிக்கிறதுக்கு அனுமதிக்கல. அன்னிக்கு அனுமதிச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு ஹீரோயினா இருந்திருப்பேன்.


இப்போ கல்யாணமாகி துபாயில செட்டிலாகிட்டேன். என்னோட கணவர் துபாய், லண்டன் அமெரிக்காவில் பிசினஸ் செய்கிறார். நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்துறேன். தீடீர்னு ஒரு நான் சினிமால நடிக்கட்டுமான்ன ஹஸ்பண்ட்கிட்ட பர்மிஷன் கேட்டேன். உனக்கு விருப்பமுன்னா நடி என்றார். நடிக்க வந்து விட்டேன்.

நான் பணத்துக்காக நடிக்க வரவில்லை. சினிமா மேல உள்ள பக்தியில நடிக்க வந்திருக்கேன். அதனால கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். என்னோட வாழ்க்கை ரொம்ப மார்டன்தான்.


அதனால வில்லேஜ் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆயிரத்தில் இருவர்ங்ற படத்துல அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. நல்ல கதையோட வந்த இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன்.

 என்னோட திறமையை வெளிப்படுத்துற மாதிரி நல்ல கேரக்டரோடு வந்தால் பணம் வாங்காமல் கூட நடிக்க ரெடி. என்கிறார் ரித்திகா.

இவுங்க தாங்க சொந்த தியேட்டர்ல படம் காட்ரவங்க...!




சிவாஜி குடும்பத்து வாரிசு விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் இவன் வேற மாதிரி. எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்திருந்தார்.


இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் 13ந் தேதி ரிலீசானது.


கும்கி படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம், எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு சரவணன் இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகளுடன் படம் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த ரிசல்ட்டை படம் கொடுக்கவில்லை.


 என்றாலும் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் லாபமும் இல்லை, பெரிய அளவில் நஷ்டமும் இல்லை என்பது சினிமா வியாபார வட்டார தகவல்.


படம் 25 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியது. சென்னையில் மட்டும் சில தியேட்டர்களில் 50வது நாளை தொட்டது.


அதுவும் ஓரிரு காட்சிகளாக. சிவாஜி குடும்பத்தின் தியேட்டரான சென்னை சாந்தியில் தினமும் ஒரு காட்சியாக திரையிட்டு 100வது நாளை எட்டிப்பிடிக்க வைத்துவிட்டார்கள்.


கும்கியை போலவே இந்தப் படமும் 100 வது நாள் போஸ்டரை கண்டுவிட்டதில் சிவாஜி குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி.