Saturday, 22 February 2014

இளைஞர்களுகளின் கவர்ச்சிக் கன்னியாக மாறும் அஞ்சலி..! -



கடந்த 90களில் மிக முக்கிய கவர்ச்சிக் கன்னியாக விளங்கிய ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகத் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

மறைந்த முன்னாள் நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு “ டர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது. இதனால் இதனைத் தொடர்ந்து மற்றொரு கவர்ச்சி நடிகையான ஷகிலாவின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படவுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளதாகவும், இப்படத்தில் ஷகிலாவாக நடிகை அஞ்சலி
நடிக்கவுள்ளதாகவும், அஞ்சலியும் ஷகிலாவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகை ஷகிலா தனது திரை அனுபங்களையும், திரையில் சந்தித்த துன்பங்கள், இன்பங்கள் என அனைத்தையும் டைரியில் எழுதி வைத்திருப்பதாகவும், அவற்றை வைத்து படம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

எப்படியோ கற்றது தமிழ் படத்தில் “ நெஜமாத்தான் சொல்லுறியா” என்று கேட்டு அழகான நடிப்பினை வெளிப்படுத்திய அஞ்சலி ஷகிலாவாக நடிப்பதன் மூலம் நடிப்பில் அடுத்த கட்டத்தை எட்டவிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் பெண் நடிக்கும் திரைப்படம்..!



தமிழ் படங்களில் பாலிவுட், மல்லுவுட் நடிகைகள்தான் தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர். தமிழ் பெண்ணை அறிமுகம் செய்யாதது ஏன்? என்று இயக்குனர்களிடம் கேட்டால், அவர்கள் நடிக்க வர தயங்குகிறார்கள் என்று பதில் தருகின்றனர்.

தற்போது அன்புடன் அன்பரசி என்ற படத்தில் தமிழ் பெண் தாரணி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதுபற்றி பட இயக்குனரும், ஹீரோவுமான ஆல்வின் அமலபிரசன்னா கூறியதாவது: தமிழ் பெண்கள் அழகானவர்கள்.

ஆனால் நடிக்க வர தயக்கம் காட்டுவதாக கூறுகிறார்கள். இப்படத்துக்கு ஒரு அழகான தமிழ் பெண் தேவைப்பட்டார். அப்படி தேடி கிடைத்தவர்தான் தாரணி. அழகான இளம்பெண்ணை அழகில்லாத இளைஞன் காதலிக்கிறான். ஆனால் தான் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை அவனை வாட்டுகிறது.

ஒரு கட்டத்தில் அவளிடம் தன் காதலை சொல்கிறான். அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அதை மையமாக வைத்து கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாண்டு, கோவை செந்தில், வேல்முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

உதயசங்கர் ஒளிப்பதிவு. சத்யதேவ் இசை. மார்ட்டின் துரைராஜ் தயாரிக்கிறார். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சிறுமலை பகுதியை சுற்றி ஷூட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு ஆல்வின் அமலபிரசன்னா கூறினார்.

அனுஷ்கா, காஜலை ஓரங்கட்ட நம்ம நயன்தாரா..!




உதயநிதி ஸ்டாலின் – நயன்தாரா நடித்த இது கதிர்வேலன் காதல் படம் இதுவரை வசூல் செய்த தகவலின்படி தயாரிப்பாளருக்கு சுமார் 15 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார் உதயநிதி. இந்த லாபத்திற்கு முக்கிய காரணம் நயன்தாராதான் என்று புகழ்ந்து வருகிறார்.

இதே உற்சாகத்தில் அடுத்த படத்திலும் நயன்தாராவை ஜோடியாக ஒப்பந்தம் செய்த உதயநிதி ´நண்பேண்டா´ படத்திற்காக நயன்தாராவுக்கு சம்பளமாக ரூ.1.5 கோடி கொடுக்க முன்வந்துள்ளார். இதில் 50 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டாராம்.

இதற்கு முன்னர் இதே படத்திற்கு ஒப்பந்தம் ஆன காஜல் அகர்வாலுக்கு சம்பளமே ஐம்பது லட்ச ரூபாய்தான் பேசியிருந்தார் உதயநிதி. ஆனால் ஒரு கோடி அதிகம் ஆனாலும் பரவாயில்லை. நயன்தாராதான் ஜோடியாக நடிக்கவேண்டும் என்று பிடிவாதமாக அவரை மீண்டும் ஜோடியாக்கியுள்ளார்.

நயன்தாரா சம்பளம் இதுவரை தமிழ்த்திரையுலகில் எந்த நடிகையும் வாங்காத சம்பளம் என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

அனுஷ்கா பாஹுபாலி, ராணி ருத்ரம்மா படத்திற்கு கூட ஒரு கோடிதான் சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் இரண்டும் செம ரிஸ்க்கான கேரக்டர்கள். சண்டைப்பயிற்சி, வாள் பயிற்சி என வாங்கிய ஒரு கோடிக்கு கடுமையாக வேலை செய்கிறார்.

ஆனால் சாதாரண காமெடி மற்றும் காதல் படங்களில் நடிக்கும் நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? என சக நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு நிலைமை உள்ளது.

பவர்ஸ்டாருக்கு பீஸ் புடுங்க போறாங்க...!



கோலி சோடா படத்தில் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

இப்படத்தில் சில காட்சிகளில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.

பவர்ஸ்டார் சீனிவாசன் கூறும் போது, கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன். ஆனால் 3 நாட்கள் தான் என்னை வைத்து படப்பிடிப்பு நடித்தினார்கள்.

கொஞ்சம் தான் பணம் தந்தார்கள். பேசியபடி தராமல் ஏமாற்றி விட்டார்கள். நான் கேட்ட போது தரமுடியாது என மிரட்டுகிறார்கள் என்றார்.

இதற்கு கோலி சோடா படத்தின் இயக்குனரும் தாயாரிப்பாளருமான விஜய் மில்டன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

கோலி சோடா படத்தில் நடிக்க பவர்ஸ்டார் சீனிவாசன் 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். ஆனால் 3 நாட்கள் தான் படப்பிடிப்புக்கு வந்தார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேச வரும்படி அழைத்தோம். ஆனால் மறுத்து விட்டார். இதனால் வேறு ஒருவரை வைத்து பவர் ஸ்டாருக்கு டப்பிங் பேச வைத்தோம்.

அவர் நடித்த 3 நாட்களுக்கான சம்பளத்தை கொடுத்து விட்டோம். நடிக்காத நாட்களுக்கும் சம்பளம் கேட்கிறார். அதை எப்படி கொடுக்க முடியும் என்றார்.

'' சித்திரை திங்கள் '' - திரை விமர்சனம்…!



விருதுநகர் மாவட்டத்தில் வெங்கிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவராக தீரன். இவருக்கு மனைவி கிடையாது. ஆனால், அஸ்வந்த் தத்துப் பிள்ளையாக வளர்த்து வருகிறார். அதே ஊரில் இருக்கும் ஸ்வாதியும், அஸ்வந்தும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர்.

இவர்கள் காதலுக்கு ஸ்வாதியின் தாய்மாமா ராஜானந்த் எதிர்ப்பாக இருக்கிறார். இருந்தும் அவருக்குத் தெரியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒருநாள் இந்த காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிவிட திட்டமிடுகிறது. அந்த வேளையில்தான் தன்னுடைய அம்மா யார் என்பது நாயகன் அஸ்வந்துக்கு தெரிய வருகிறது. அவள் யார் என்பது தெரிந்திருந்தும் அஸ்வந்திடம் தீரன் மறைக்க காரணம் என்ன?
அஸ்வந்துடைய அம்மாவுக்கும், தீரனுக்கும் என்ன தொடர்பு? என்பதை இறுதியில் சொல்கிறார்கள்.

நாயகன் அஸ்வந்த், கதாநாயகனுக்கு சற்றும் பொருந்தாத முகம். நாயகியை காதலிப்பது, வில்லன்களுடன் சண்டை போடுவது, டூயட் பாடுவது என எந்தவொரு இடத்திலும் இவருக்கு நடிப்பு என்பது கொஞ்சம்கூட வரவில்லை. டான்ஸ் மட்டும் கொஞ்சம் நன்றாக ஆடுகிறார்.

நாயகி ஸ்வாதி, பாவடை தாவணியில் அழகாக இருக்கிறார். அழுகை, காதல் எல்லாம் இவருடைய முகத்தில் எல்லா நடிப்பும் நன்றாக வருகிறது. ராஜானந்த் வில்லனாக மிரட்டியிருக்கிறார். தீரன் இரு கெட்டப்புகளில் வந்தாலும் இரண்டிலும் தோற்றத்தில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. நடிப்பு என்பது இவருக்கு சுத்தமாக வரவில்லை. இவர் கோபப்படும்போது நம்மை சிரிக்க வைக்கிறார். டீச்சராக வரும் ஸ்ரீரேகாவும் செயற்கைத்தனமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகருக்கும், நடிகைக்கும் காதல், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறைமாமன், நாயகியை அடையத் துடிக்கும் வில்லன் என தமிழ் சினிமாவில் நரநரத்த கதையையே இயக்குனர் மாணிக்கமும் எடுத்திருக்கிறார். மற்றபடி இந்த கதையில் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. கதாபாத்திரங்கள் தேர்வில் கோட்டை விட்டுவிட்டார். காட்சியமைக்கும் விதத்திலும் நிறைய சொதப்பல் செய்திருக்கிறார்.

ஏ.எம்.அருண் ஒளிப்பதிவு படத்தின் தொய்வுக்கு மேலும் ஒரு காரணம். சரத் பிரிய தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘சித்திரை திங்கள்’ தெளிவில்லை…..

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க போறீங்களா..? எச்சரிக்கை..!



வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம் தான். ஆனால் எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருக்கும்.

ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தைக் கையாள உதவும் வகையில் இதோ சில வழிகள்.. வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம். பூத்துகளையே தேர்ந்தெடுங்கள்.

அதுபோல ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் பூத்துகளை இரவு வேளைகளில் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏ.டி.எம்.மைப் பயன்படுத்தும் ஆரம்பகாலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.

பெரியகடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களில் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாக தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள்.

இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு ஒரு போலி கார்டைத் தயாரித்து உங்கள் பணத்தை அபேஸ் செய்துவிடுவார்கள். எனவே உங்கள் கார்டை தேய்க்கும் போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.மைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் சிலசமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ, அல்லது பணம் வராமல் தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.

கூல்டிரீங்ஸ் வேண்டாம்.. ஜீஸ் குடிங்க..! - அதிர்ச்சி தகவல்



உடலுக்கு குளிர்பானங்களை விட பழ ஜுஸ் மிகச்சிறந்தது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை காலம் ஆரம்பிக்கும் நிலையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது.

அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை நாடுகின்றனர்.

ஆனால் பாட்டில்களில் அடைக்கப்படும் குளிர் பானங்கள் உடல்நலத்துக்கு பல கேடுகளை விளைவிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை விட பழ ஜுஸ்களே உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் எனவும் கூறுகின்றனர்.

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களில் கார்போஹைரேட்டுகளும், சர்க்கரையும் கலக்கப்பட்டுள்ளது. 250 மி.லி. குளிர்பானம் குடித்தால் 105 கலோரி சக்தியும், 26.5 கிராம் சர்க்கரை சத்தும் உடலுக்கு கிடைக்கிறது.

அதே நேரத்தில் பழச்சாறு அதாவது ‘ஜுஸ்’ குடித்தால் 110 கலோரி சக்தியும், 26 கிராம் சர்க்கரை சத்தும் கிடைக்கிறது. இவை இரண்டையும் ஆராயும்போது குளிர்பானத்தில் குறைந்த அளவிலான சர்க்கரையும் உள்ளது.

சர்க்கரை அளவு கூடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதே நேரத்தில் நீரிழிவு நோய் இருப்பவர்களின் உடல்நிலை மேலும் மோசமடைகிறது.

இதுதவிர உடல் பருமனும், இருதய நோய்களும் உருவாகும் வாய்ப்பு ஏற்படுவதாகவும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் கலாஸ்கோவ் பல்கலைக்கழக இருதயநோய் மற்றும் மருத்துவ அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

எனவே பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானங்களை விட பழ ஜுஸ்கள் உடல் நலத்துக்கு சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டின் அல்லது பாக்கெட் உணவை தவிர்ப்பதே நல்லது..! - எச்சரிக்கை



இப்போதெல்லாம் நொடியில் சமைக்க கூடிய ‘டின்’ உணவுகள் கிடைக்கின்றன. ஏன், டின் உணவை வாங்கி அப்படியே சாப்பிடக் கூடிய முழு உணவுகள் மற்றும் ‘ஸ்நாக்ஸ்’ உணவுகள் கிடைக்கின்றன.

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் இக்கால சூழ்நிலையில் ‘ரெடிமேட்’ உணவுகள் ஒரு வரப்பிரசாதம் தான். உணவின் முக்கியத்துவத்தினால், அதை பல நாள் கெடாமல் வைக்கும் வழிகளை தொன்று தொற்றே மனிதன் தேடி வருகிறான். இந்த தொழில் நுட்பம் தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது.

உணவை காக்கும் ரசாயன பொருட்களில்லாமல் பழச்சாறுகள் “டெட்ரா – பேக்”கில் கிடைக் கின்றன. இருந்தாலும், உணமேலும் கெடாமல் பல நாள் பாதுகாக்கும். ‘டெட்ரா பேக்’, இராசாயன பொருட்கள் முதலியனவற்றை தொடர்ந்து உபயோகித்தால் உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்று அறிவுறுத்தி வந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் அது ஆபத்தை விளைவிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 இது குறித்து சுற்று சூழல் ஆய்வாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில், உணவு பொருட்களை பேக்கிங் செய்யும்போது, பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு மற்றும் அதனை பதப்படுத்துவதற்கு உதவும் வேதி பொருட்கள் நீண்ட நாள் பயன்பாட்டில் மனித உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவித்துள்ளனர்.

உணவை கெட்டு போகாமல் வைத்திருக்க சேர்க்கப்படும் பார்மால்டிஹைடு என்ற வேதி பொருள் புற்றுநோய் உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த பார்மால்டிஹைடு அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது. தாகத்தை தணிப்பதற்காக குடிக்கும் குளிர்பானங்களை சேமிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சாப்பாட்டு மேஜையில் உள்ள தட்டுகள் போன்ற பொருட்களில் பார்மால்டிஹைடு வேதி பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது.

இரண்டாவதாக, மனிதனின் ஹார்மோன் உற்பத்தியில் பைஸ்பீனால் ஏ, டிரைபியூட்டைல்டின், டிரைகுளோசன் மற்றும் தாலேட்டுகள் ஆகிய வேதி பொருட்கள் உணவு பொருள் பாதுகாப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.மூன்றாவதாக, உணவை பாதுகாக்கும் வேதி பொருட்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும்.

தற்போது உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவது என்பது அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வு விரைவாகவும் மற்றும் நம்பகதன்மை யுடனும் அதிக பயன்பாட்டை கொண்டிருக்கும் மக்களிடம் சென்று சேர வேண்டியது அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.எனவே, சுகாதாரம் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்ப்பது நலம் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

“ஹால்மார்க்’ நகைகளுக்கு தனி அடையாள எண் – இன்னும் மூன்று மாதங்களில் அமல்..!



10 கிராமிற்கு மேற்பட்ட ‘ஹால்மார்க்’ முத்திரை உள்ள ஒவ்வொரு தங்க நகைக்கும் தனி அடையாள எண் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒருவர் தாம் வாங்கும் நகையை தயாரித்த நிறுவனம், தயாரித்த நாள், எடை, தரம் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

இன்னும் மூன்று மாதங்களில் அமலாக்கப்படும் இது ஒவ்வொவருக்கும் தாம் ஏமாற்றப்படவில்லை என்ற நம்பிக்கையையும் அளிக்கும் என்பதால் இத்தகைய நடைமுறை மூலம் தங்க நகைகளின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நகைகளின் தரத்தை குறிக்கும் “ஹால் மார்க்’ முத்திரைக்கான உரிமக் கட்டணத்தையும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கான “ஹால்மார்க்’ சான்றிதழ் கட்டணம், 3 லட்சத்திற்கு குறைவான மக்கள் வசிக்கும் சிறிய நகரங்களில், 2,500 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.

இக்கட்டணம் 10 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் உள்ள நகை நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரையை பயன்படுத்த 20 ஆயிரம் ரூபாய் செலுத்துகின்றன.

ஆர்வம் காட்டும் இக்கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளதால் இனி சிறிய நகை கடைகள் கூட தரமான ‘ஹால்மார்க்’ நகைகளை விற்பதற்கு ஆர்வம் காட்டும்.

‘ஹால்மார்க்’ முத்திரைக்கு தனி எண் வழங்கும் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

'' பிரம்மன் '' - உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக..!



படம் எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய சென்ட்டிமெண்ட் + லாலாலா லாலா லாலாலா விக்ரமன் டைப் சாக்ரிபைஸிங் படம் இது. சுவாரஸ்யமாக எடுத்து இருப்பதால் தப்பி விடுகிறது. ஆனாலும் கழுத்தில் ரத்த காயம் தான்.படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்துக் கொள்ளலாம்.

திரையரங்கை லீசுக்கு எடுத்து அந்த தொழிலில் முன்னேற கடுமையாக உழைக்கும் கூடவே டைம்பாஸ்க்கு காதலிக்கும் ஹீரோ. அவரை எப்போதுமே தண்டச்சோறு, வெட்டி ஆபீசர் என்று கலாய்க்கும் குடும்பம். அவரையும் எண்ணி மருகி மருகி காதலிக்கும் நாயகி.

இநநிலையில் திரையரங்கிற்கும் காதலுக்கும் பணத்தேவையின் காரணமாக சிக்கல் வர நாலாம் வகுப்பு வரை உடன் படித்த நண்பன் சினிமாவில் பெரிய இயக்குனராக இருப்பதை அறிந்து அவரிடம் உதவி கேட்க சென்னை வரும் ஹீரோ, எதேச்சையாக இயக்குனராகி விடுகிறார். அதே சமயம் நண்பனுக்காக அந்த வாய்ப்பையும், தன் காதலியையும் விட்டுத் தருகிறார். ஆனால் தமிழ்திரை சென்டிமென்ட்படி மீண்டும் அந்த திரையரங்கமும் காதலியும் நாயகனுக்கே கிடைப்பதை கொட்டாவி விட வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இதிலும் வழக்கம் போல நண்பர்களுக்காகவே வாழும் நாயகனாக சசிக்குமார். இந்த ‘பிரண்ட்’-ங்கற ஒரு அடிப்படை விஷயத்தை சொல்லியே எல்லோரும் இவர்கிட்ட கால்ஷீட் வாங்கிடறாங்க போல.மேலும் தனக்கு வராத ஏரியாவான ரொமான்ஸ், நடனம் போன்றவற்றிலும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார். சில இடம் நம்மை(யும்) கஷ்டப்படுத்தினாலும் பல இடத்தில் அசால்ட்டாக பாஸ் செய்து கடந்து போகிறார்.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். அந்த சதைப்பத்து இல்லாத கன்னத்திலும் குழி விழுவது அழகாக இருக்கிறது. அதை தாண்டி எதுவும் சொல்வதற்கில்லை.சந்தானம் ஒன்லைனர்களால் திரையரங்கில் சிரிப்பு வெடி பற்ற வைக்கிறார். கடைசி அரை மணிநேரத்தில் பெர்மார்மன்ஸிலும் பின்னுகிறார்.சூப்பர் சந்தானம்.

சென்னையில் நாம் பார்த்த பல உதவி இயக்குனர்களின் பிம்பமாக சூரி. அப்படியே இயல்பாக நடித்துள்ளார். நாம் எதிர்பார்த்தது சந்தானம் சூரி இருவருக்கும் இடையே நிறைய காட்சிகளைத்தான். ஆனால் இருவரையும் ஒரு இடத்தில் கூட ஒன்று சேர்க்கவில்லை இயக்குனர். என்ன பஞ்சாயத்தோ என்ன அரசியலோ யாமறியேன் பராபரமே.

அரங்கில் பிட்டு படம் ஓட்டியாவது சம்பாதித்து தியேட்டர் ஊழியர்களுக்கு உதவ நினைக்கும் சந்தானம், அந்த இயக்குனர் நண்பரின் தியாகம், தியேட்டர் வரி கட்டாமலேயே திரும்பக் கிடைப்பது, தங்கையின் சென்ட்டிமெண்ட், அம்மா அப்பாவின் கண்ணீர் எல்லாமே பக்கா நாடகத் தன்மையுடன் இருக்கிறது.

திருப்பதி பயணமும், அங்கு ஒரு சினிமாவும், தேவையில்லாத சண்டைக் காட்சியும் நேரத்தை கடத்த மட்டுமே பயன்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே சில முறை கேட்டதால் பாடல்கள் ஒன்றிரண்டு பிடிக்கிறது.

போதும் இதற்கு மேல் விம் வைத்து விளக்க எதுவுமில்லை. எனக்கும் பசிக்கிறது, அதனால் இத்துடன் எல்லாத்தையும் முடித்துக் கொள்வோம்.

உங்களுக்கான என் பிரத்யேக அட்வைஸ்- முன்னரே சொன்னது போல் படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்துக் கொள்ளலாம்.