Monday, 3 March 2014

“ஆடி” கார் வாங்கிய சிவகார்த்திகேயன்: பொறாமையில் பொசுங்கும் திரையுலகம்..!





விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி போட்டி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பின், டான்ஸ் புரோகிராமில் போட்டியாளராக கலந்து கொண்டார், அதன் பின் விஜய் டிவியில் நிகழ்ச்சி கேம்பயரிங் செய்தவர். மீடியா, சினிமா பின்னணி எதுவுமின்றி கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி முன்னேறினார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் தந்தையும் தாயும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். மாமாவின் அரவணைப்பில் வளர்ந்த சிவகார்த்திகேயன் எம்.பி.ஏ படித்துக்கொண்டிருந்த போது கிடைத்த வாய்ப்பு தான் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் தன்னுடைய மிமிக்ரி திறமையை காட்டி வென்றார், அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவரை மெரினா படத்தில் இயக்குனர் பாண்டியராஜன் நடிக்க வைத்தார், மூன்று படத்தில் காமெடி ஆக்டராக தனுஷ் உடன் சப்போர்ட்டிங்காக வந்தவர். சினிமாவில் வாய்ப்புகள் ஆரம்பிக்கும் நேரத்திலேயே மாமா பெண்ணை கல்யாணம் கட்டி சட்டுபுட்டென குடும்பஸ்தராகவும் ஆகிவிட்டார்.

மெரினா தோல்வியைடைந்தாலும் எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா இரண்டும் கை கொடுக்க அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்தார், அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக இன்று நட்சத்திர நடிகராகிவிட்டார். பிந்து மாதவி உடன் கிசு கிசுக்கப்பட்டார், தற்போது தான் சிவகார்த்திகேயனுக்கு அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

சத்யம் தியேட்டர் வாசலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட ரிலீசின் போது சிவகார்த்திகேயன் பேனர் 60 அடிக்கு மேலே இருக்க, நடிகர் விஜய்யின் சிறிய பேனர் கீழே இருந்தது. ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த, சராசரி மனிதராக நம்மிடையே சுற்றிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் திடீரென பெரிய ஹீரோவாகிவிட்டார் என்னும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கே பொறாமை வரும் போது, சினிமாவில் பல ஆண்டுகளாக ஊறிக்கிடப்பவர்களுக்கு பொறாமை எழாமலா இருக்கும்.

சில நாட்களுக்கு முன் ஒரு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி எங்க காலத்தில் செட்டில் ஆகனும்னா ஒரு 15 படங்களிலாவது ஹீரோவாக நடிக்க வேண்டும், இப்போதெல்லாம் ஐந்து ஆறு படங்களில் நடித்துவிட்டாலே செட்டில் ஆகிவிட முடிகிறது என்று பேசியுள்ளார், இது சிவ கார்த்திகேயனை மனதில் வைத்தே என்கிறார்கள். தனுஷ் என்ற புளியங்கொம்பை பிடித்தவர் தனக்கு எது சரியாக வருமோ அந்த காமெடியை கணக்கு பண்ணி படங்களில் நடித்து வெற்றி ஹீரோகிவிட்டார். சிவகார்த்திகேயன் காசு விசயத்தில் மட்டும் படு கெட்டியாம், தனது சம்பளத்தை அது போனமாசம் இது இந்த மாசம் என்ற ரேஞ்சில் மாதா மாதாம் ஏற்றியவர் தற்போது வந்து நிற்பது 5 கோடியாம். காசு விசயத்தில் படு கெட்டியாம் இந்த ஹீரோ.

சினிமாவில் வாரிசுகளும் பழம் தின்று கொட்டை போட்டவர்களும் மட்டுமே வெற்றியை சுவைத்து தாக்குபிடிக்க முடிந்த கோலிவுட்டில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சந்தானம், பரோட்டா சூரி போன்ற சினிமா பின்புலம் எதுவும் இல்லாத எளிய‌வர்களும் வெற்றி பெறுவது சினிமா உலகம் ஒரு ஆரோக்கியமான போக்கில் சென்றுகொண்டுள்ளதை காட்டுகிறது.

வாழ்த்துகள் சிவகார்த்திகேயன், உங்களுக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய வெற்றியும் வாய்ப்பும், இந்த வெற்றியும் அது தரும் புகழும் பணமும் உலகத்தையே தன் காலுக்கு கீழ் தான் என்ற மிதப்பை தரும், குடும்பம், பணம், புகழ் அனைத்தையும் காப்பாற்றிக்கொள்வது உங்கள் கையில் மட்டுமே உள்ளது.

கர்ப்பத்தின் போது ஏற்படும் இரத்த சோகையை தடுக்கும் உணவுகள்...!




அனீமியா என்னும் இரத்த சோகை, உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும் போது ஏற்படும் ஒரு நோய். இந்த பிரச்சனை கர்ப்பமாக இருக்கும் போது பொதுவாக ஏற்படும். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இதனால் பிறக்கும் போது குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும். பொதுவாக இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம், இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலேட் குறைபாடு மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு போன்றவை தான். ஆனால் இவற்றில் முக்கியமானது இரும்புச்சத்து குறைபாடு தான்.

இத்தகைய பிரச்சனை இருந்தால், குறைபிரசவம் ஏற்படுவதற்கும், குழந்தை மிகவும் எடை குறைவுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் இரத்தத்தின் அளவை சீராக வைக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் அத்துடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

ஏனெனில் வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சாப்பிட்டால் தான், உடலானது இரும்புச்சத்தினை உறிஞ்சும். அதே சமயம், டீ, காபி போன்ற பானங்களை அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கால்சியம் நிறைந்த பாலையும் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். ஏனென்றால், இவை இரும்புச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கும். இப்போது இரத்த சோகையை எதிர்த்துப் போராடும் சிறந்த 15 உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போம்.


வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் காலையில் 1-2 வாழைப்பழத்தை சாப்பிட்டால், இரத்த சோகையை தவிர்க்கலாம்.


பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே அத்தகைய பேரிச்சம் பழத்தை கர்ப்பிணிகள் தினமும் இரண்டு முறை, இரண்டு சாப்பிட்டு வர வேண்டும்.



ஓட்ஸ்

ஓட்ஸ் சாப்பிட்டாலும், இரத்த சோகையிலிருந்து விடுபட முடியும். ஏனெனில் இவை எளிதில் செரிமானமடைவதால், உடலுக்கு வேண்டிய கனிமச்சத்துக்களையும், இரும்புச்சத்தையும் எளிதில் உறிஞ்சச் செய்யும்.


நட்ஸ்

நட்ஸில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக இதனை அவ்வப்போது சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.


ப்ராக்கோலி

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியை கர்ப்பிணிகள் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் அதிகம் நிரம்பியுள்ளது.



மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் சொல்லமுடியாத அளவில் இரும்புச்சத்தானது நிறைந்துள்ளது. மேலும் சைவ உணவுகளை விட, அசைவ உணவுகளில் உள்ள இரும்புச்சத்துக்களை உடலானது எளிதில் உறிஞ்சும். எனவே இரத்த சோகை உள்ள கர்ப்பிணிகள், இரத்தத்தின் அளவை அதிகரிக்க மாட்டிறைச்சி ஒரு சிறந்த உணவாகும்.



பசலைக் கீரை

கீரையை கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் பசலைக் கீரையை அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட், இரத்த சோகையை விரைவில் போக்கும்.


மாதுளை

மாதுளையில் நல்ல அளவில் இரும்புச்சத்தானது நிறைந்துள்ளது. எனவே பழங்களில் கர்ப்பிணிகள் மாதுளையை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.


உலர் திராட்சை

உலர் திராட்சை, கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் முக்கியமானது. அதற்கு உலர் திராட்சையை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, காலையில் எழுந்து சாப்பிட வேண்டும்.


முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் நல்ல அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய இரத்தணுக்களை பெறலாம்.


முழு தானியங்கள்

தானியங்களை அதிகம் சாப்பிட்டால், இரத்த சோகையின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும் இவை இரத்தத்தின் அளவை சீராக வைக்கும்.


கடல் சிப்பி

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சிறந்த உணவுகளில் ஒன்று தான் கடல் சிப்பி. அத்தகைய கடல் சிப்பியை கர்ப்பிணிகள் டயட்டில் சேர்த்தால், அனீமியா என்னும் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம்.


தேன்

இரத்த சோகை உள்ள கர்ப்பிணிகள், தேனை டயட்டில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ஏனெனில் இதிலும் இரும்புச்சத்தானது அதிகம் உள்ளது. வேண்டுமெனில் இதனை அப்படியே அல்லது பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.


பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் வளமான அளவில் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. எனவே கர்ப்பிணிகள் தினமும் ஒரு பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


ஆரஞ்சு ஜூஸ்

மேற்கூறிய அனைத்து இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும் போது, ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸை பருகினால், அதில் உள்ள வைட்டமின் சி சத்து, உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்துக்களை உறிஞ்சச் செய்யும்.

சூப்பர் ஸ்டாரை நேரடியாக சந்திக்க சோனி நிறுவனம் தரும் அரிய வாய்ப்பு..!



பிரபல செல்போன் நிறுவனமான சோனி எரிக்சன் ரஜினிகாந்த்தை நேரடியாக சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.

சோனி மியூசிக் இந்தியா நிறுவனமும், சோனி எரிக்சன் செல்போன் நிறுவனமும் இணைந்து ஒரு போட்டியை ரஜினி ரசிகர்களுக்கு வைத்துள்ளது.

இதில் வெற்றி பெறும் அதிர்ஷ்ட நபர் ஒருவர் மார்ச் 9ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடக்கவிருக்கும் கோச்சடையான் பாடல்கள் ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டு ரஜினிகாந்தை நேரடியாக சந்தித்து பேசலாம்.


இதன்படி Jive என்ற சாப்ட்வேர் மூலம் சோனி மியூசிக் நிறுவனத்தின் பாடல்களை அதிகளவில் டவுன்லோடு செய்பவருக்கு இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு காத்திருப்பதாக சோனி நிறுவனத்தின் செயல் அதிகாரி நேற்று அறிவித்துள்ளார்.

சென்னை சத்யம் திரையரங்கில் இம்மாதம் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் மாபெரும் ஆடியோ ரிலீஸ் விழாவில் சோனி நிறுவனமும் தன் பங்களிப்பை அளிக்கவுள்ளது என்பதில் பெருமை அடைவதாக அவர் மேலும் கூறினார்.

மார்ச் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் பிரமாண்ட ஆடியோ ரிலீஸ் விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, கே.எஸ்.ரவிகுமார், இயக்குனர் செளந்தர்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தனியார் நிறுவன பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது.