Friday, 28 February 2014

''அமரா'' - திரை விமர்சனம்…!



கிராமத்தில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களோடு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார் நாயகன் அமரன். இப்படி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதை தாயார் கண்டித்தும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் தன் நண்பர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஊருக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகிறார் அமரன். ஆனால், அவரது நண்பரோ, வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிவரும் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் என்று கூறி அவரை விட்டுச் செல்கிறார்.

இதனால் மனமுடைந்து போன அமரன், வேலைக்குச் செல்ல முடிவெடுத்து மதுரையில் காய்கறி கடை நடத்திவரும் தன் அத்தையிடம் வேலைக்குச் செல்கிறார். ஒருநாள் இவர் மார்க்கெட்டில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவர் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் செல்கிறார். பணத்தை தராமல் சென்றது போலீஸ்காரர் என்று தெரியாமல் அவரிடம் சண்டை போடுகிறார்.

அதை தடுக்க வந்த போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார் அமரன்.போலீஸூடன் சண்டை போட்டதால் அமரனின் அத்தை, அவரை ரெயிலில் சென்னைக்கு அனுப்பி விடுகிறார். ரெயிலில் அமரனை சந்தித்த நாயகி சோனு, அவருடனே ஒட்டிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ரெயிலை தவற விடுகின்றனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிக்கை ஒன்றில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்றதாக செய்தி வருகிறது. இதை அறியும் சோனுவின் தந்தையான ஆஷிஷ் வித்யார்த்தி, இவர்களை கொல்ல திட்டம் தீட்டுகிறார்.

மறுநாள் விடிந்த பிறகு சோனு, அமரனிடம் நீ யார்? என்னை எதற்கு கடத்தினாய்? என்று சத்தம் போடுகிறார். அமரன் நடந்ததையெல்லாம் சோனுவிடம் விவரிக்கிறார். இதற்கு சோனு, நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன். இதற்கு சம்மதித்த என் தந்தையை சந்திக்க காதலனை அழைத்துக்கொண்டு நான் ஊருக்கு ரெயில் சென்று கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து விட்டார்கள் என்று கூறுகிறார். எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் காதலனையும் காணவில்லை என்று கூறி புலம்புகிறாள். காதலனை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு அமரனை கேட்கிறாள்.

அமரனும், சோனுவும் காதலனை தேடி அவரது வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு தன் அப்பா ஆஷிஷ் வித்யார்த்தி காதலனை கொன்றுவிட்டதாகவும், தன்னையும் கொல்ல தேடி வருகிறார் என்பதையும் அறிகிறார் சோனு.இறுதியில் அமரனும், சோனுவும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது போலீஸ் அதிகாரியான சம்பத்திடம் சிக்கினார்களா? காதலிக்காத இவர்கள் இரண்டுபேரும் காதலித்தார்களா? என்பதே மீதிக்கதை.

அமராவாக நடித்திருக்கும் அமரன், நடனம், சண்டை, காதல் என அனைத்திலும் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகி சோனுவுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். வில்லனாக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சம்பத் ஆகியோர் அவர்களுக்கே உள்ள பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
டி.இமான் இசையில் பாடல்களை ரசிக்கலாம். ராஜா முகமது ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. இயக்குனர் ஜீவன் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘அமரா’ பார்க்கலாம்….

இலவச வைஃபை கிடைக்குதான்னு நாக்கை தொங்க போடுற ஆட்களுக்கு எச்சரிக்கை..!

வைஃபை வைரஸ் – சமாலியன்(Chameleon) – ஜாக்கிரதை..!


இப்போதெல்லாம் எங்கு போனாலும் உடனே இலவச வைஃபை கிடைக்குதான்னு நாக்கை தொங்க போடுற ஆட்கள் மிக மிக அதிகமாகி விட்டார்கள். இதற்கிடையில் ந்ஏற்கனவே சொல்லிருக்கேன் அந்த மாதிரி பப்ளிக் வைஃபை ஸ்பாட்ஸ் உங்கள் தகவலை திருடும்னு – இப்ப அதையெல்லாம் தாண்டி வைஃபை வைரஸ் முதல் முதலா வந்திருக்கிறதை லிவர்பூல் பல்கலைகழகம் கண்டுபிடிச்சிருக்காங்க.

இந்த வைரஸ் பெயர் சமலியான் – Chameleon. இது எங்கு ஹாட் ஸ்பாட்ஸ் இருக்கோ அங்கே எல்லாம் நுழைஞ்சு பின்பு செக்யூரிட்டி இல்லாத நெட்வொர்க் மூலம் அங்க யூஸ் பண்ற அத்தனை கம்ப்யூட்டர் / டேப்ளட் மற்றும் மொபைல் மூலமா வந்து ஹார்டு டிஸ்கை காலி பண்ணிருமாம். உங்க கம்ப்யூட்ட்ரல இருக்கிற அத்தனை டீட்டெயிலும் கூட அந்த வைரஸ் எடுத்து எல்லோருக்கும் கொடுக்கும். இதற்க்கு தீர்வு இப்போதைக்கு இல்லை ஆனா சீக்கிரம் வந்திரும் என்று நம்பலாம்.

அது வரை கவனமாய் தெரிந்த நெட்வொர் வித் செக்யூரிட்டி ப்ரோட்டோகால் உள்ள நெட்வொர்க்ல மட்டும் தொங்குங்க..!

''தெகிடி'' - விறுவிறுப்பான திரை விமர்சனம்…!



எம்.ஏ,க்ரிமினாலஜி முடிக்கும் ஹீரோவுக்கு ஒரு டிடெக்டிவ் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சில நபர்களைப் பின் தொடர்ந்து அவர்களைப் பற்றி ரிப்போர்ட் சப்மிட் பண்ணும்படி அசைன்மெண்ட் தரப்படுகிறது. அந்த நபர்களில் ஹீரோயினும் ஒருவர். இவரும் ரிப்போர்ட் தர, அடுத்தடுத்து அந்த நபர்கள் வரிசைப்படி கொல்லப்படுகிறார்கள். ஹீரோ ஹீரோயினை காப்பாற்றினாரா? யார் அவர்களைக் கொல்வது? விசாரிக்கச் சொன்ன க்ளையண்ட் யார்? என ஹீரோ துப்பறிவதே கதை.

ஒரு துப்பறியும் படத்திற்கே உரிய நீட்டான திரைக்கதை. அமைதியாக ஆரம்பித்து, முதல் கொலை விழுந்தது முதல் பரபரப்பாகச் செல்கிறது. அதிக நடிகர் கூட்டம் இல்லாமல், முக்கிய பாத்திரத்தில் ஏழு பேர் மற்றும் துணைப்பாத்திரங்களாக இன்னும் ஏழுபேர் என சுருக்கமாக ஆட்களை நடிக்க வைத்திருப்பதே படத்திற்கு க்ரிப்பைக் கொடுக்கிறது.

ஹீரோ அசோக் செல்வனுக்கு முதல் வேலைக்கான ஆஃபர் வர, சென்னை வருகிறார். அவர் வேலையில் சேரும் டிடெக்டிவ் நிறுவனத்தின் பாலிசிகளில் ஒன்று, ஃபாலோ செய்யப்படும் நபருடன் டைரக்ட் காண்டாக் வைக்கக்கூடாது என்பது. அதன்படியே நடக்கும் ஹீரோ, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் காதலால் பாலிசியை மீறுகிறார். அதுவரைக்கும் சாதாரணமாகச் செல்லும்படம், அதன்பின் நடக்கும் சம்பவங்களால் சூடு பிடிக்கிறது.

கொஞ்சம் நடிகர்கள் தான் என்பதால் மெயின் வில்லன் இவராகத் தான் இருப்பார் என இரண்டு பேரை கெஸ் பண்ண முடிகிறது. ஆனாலும் படம் முடிகையில் கொடுக்கும் ட்விஸ்ட், அருமை. ஒரு ஹாலிவுட் பட ஸ்டைலில் நகரும் படத்தில் மிஸ் ஆவது, பரபரப்பான ஆக்சன் சீகுவென்ஸ் தான். வெறுமனே புலனாய்வும், தேடுவதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைக் கொடுக்கிறது.

அதனால் தான் முதல்பாதியிலும் இரண்டாம்பாதியிலும் செமயான ஆக்சன் ஃபைட் அல்லது சேஸிங்கை ஹாலிவுட்டில் வைத்துவிடுவார்கள். ஆனால் அது இல்லாததால், ஹீரோ பெரிதாக ஒன்றுமே செய்யவில்லையோ என்று தோன்றிவிடுகிறது. வெறும் மைண்ட் கேம், படிக்க நன்றாக இருக்கலாம், விஷுவலுக்கு அது மட்டும் போதாதே!

இன்னொரு குறை, ஹீரோவையே ஓவர் டேக் பண்ணும் ஜெயப்ரகாஷ் கேரக்டர். பிறகு இயக்குநர் சுதாரித்து தனி ரூட்டில் ஹீரோவை துப்பறிய விட்டாலும் ஜெயப்ரகாஷ்க்கு முன் ஹீரோ பம்மிக்கொண்டு சப்பையாக தோன்றுவது, இத்தகைய த்ரில்லர் படங்களில் இருக்கக்கூடாத ஒரு விஷயம். ஹீரோவை சாமானியனாக காட்டியதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் விறுவிறுப்பாகச் செல்லும் நல்ல த்ரில்லர் தான். அதிலும் கடைசியில் சொதப்பாமல், லாஜிக்கலாக எல்லாக் கொலைகளுக்கும் காரணம் சொல்லி இருப்பது அருமை.

வில்லாவுக்கு அடுத்து தனி ஹீரோவாக இவருக்கு இரண்டாவது படம். அசோக் செல்வனுக்கு வில்லாவில் அடித்த பேய் இன்னும் தெளியவில்லை போல. எப்போதும் சீரியஸான ஆளாகவே வருகிறார். முகமே அப்படியா, அல்லது சீரியஸான கேரக்டர் என்று இயக்குநர் ரொம்ப மிரட்டி விட்டாரா என்று தெரியவில்லை. ஏ செண்டருக்கு இது போதும். பி அண்ட் சி செண்டரை ரீச் செய்ய வேண்டும் என்றால், இன்னும் இறங்கி அடிக்கணும் பாஸ்!

அவன் இவனில் நடித்து பின்னர் காணாமல் போன ஜனனிக்கு இது நல்ல ஒரு ரீ எண்ட்ரி. அவருக்கு ப்ளஸ்ஸே கண்கள்(மட்டும்?) தான். அதில் பலவித எக்ஸ்பிரசன்ஸ் காட்டி, நம்மைக் கவர்கிறார். அவருக்குத் தெரியாமலேயே ஹீரோ அவரைக் காப்பாற்ற முயல்வதால், த்ரில் ஏரியாவுக்குள் அவருக்கு பெரிதாக வேலையில்லை. காதல் போர்சன் மட்டும் என்பதால் கலர்ஃபுல்லாகவே வந்து போகிறார்.

மொத்தத்தில் ‘தெகிடி’ விறுவிறுப்பான படம்…..

நீ மட்டும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை கொழும்புல நடத்திப் பாறேன்..? : விஜய்டிவியை எச்சரித்த டைரக்டர்..!

நீ மட்டும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை கொழும்புல நடத்திப் பாறேன்..? : விஜய்டிவியை எச்சரித்த டைரக்டர்..!


விஜய் டிவி நிறுவனம் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை நடத்த டைரக்டரும், தமிழீழ ஆதரவாளருமான கெளதமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்கவில்லை.அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை.

ஒட்டுமொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும், இறுதி நாளில் 40,000கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது,உலகம் முழுதும் அறிந்த உண்மை.

2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை. அது மட்டுமில்லாமல் வரும் மார்ச் மாதம் ஐ.நா வில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் சொல்லண்ணா துயரத்திற்க்கு ஆளானோம்.

அதே நேரத்தில்(மார்ச்10) ஜெனிவாவில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நீதி கேட்டு நடக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பது தான் வேதனையானது.

மார்ச்1,2 ல் CORAL PROPERTY DEVELOPMENT & CEYLON ARTS CREATION ஆகிய நிறுவனங்களோடு இணைந்து விஜய் டிவி பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை st.Joseph கல்லூரியிலும் நிகழ்ச்சி நடப்பதாக அறிந்தோம்.

இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்திற்க்கு காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாக தான் இது நடக்கிறது. இதற்கு விஜய் டிவியும் துணை போவது கொடுமையானது. தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு,சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார்.

இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும்,அதற்கு விஜய் டிவி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது. எங்கள் பிணங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால் மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரபல ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனம் தான் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வருகிறது என்பதும் இந்த நிறுவனம் ஏற்கனவே இலங்கையில் தனது தொலை தொடர்பு சேவையை அளித்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

செல்வராகவனின் சிறு வயது குசும்புகள்..!

இளசுகளின் பல்ஸ் தெரிந்த இயக்குநர் செல்வராகவனின் டவுசர் காலம்.
ஆம்லேட்டைப் பிய்த்து அதில் சோற்றை உருட்டி வைத்துச் சாப்பிட்டிருப்பார்.
அடிக்கடி மழையில் ஆட்டம் போட்டு நனைந்து வந்து அப்பாவிடம் அடி வாங்கியிருப்பார்.

டயர் கொளுத்தி வட்டமாய் நின்று கேம்ப் ஃபயர் டான்ஸ் அப்போதே ஆடியிருப்பார்.


ஹிஸ்டரி சப்ஜெக்ட்டை விரும்பிப் படித்திருப்பார். ஆனால் ஆன்சர் ஷீட்டில் மட்டும் குழப்பி அடித்து ஹிஸ்டரி டீச்சருக்கு ஹிஸ்டீரியா வர வைத்திருப்பார்.  

பாய் ஃப்ரெண்ட்ஸ் வைத்துக்கொண்டால் பிம்பிள்ஸ் வரும் அளவுக்கு அலர்ஜி என்பதால், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் மட்டுமே வகைதொகையில்லாமல் நட்புப் பட்டியலில் வைத்திருப்பார்.

டி.எம்.எஸ் ரசிகராக, மயக்கம் என்ன, துள்ளுவதோ இளமை எனப் பழைய பாடல்களாகப் பாடித் திரிந்திருப்பார்.

தன் தோழியைக் கண்டுகொள்ளாமல் நண்பனின் தோழியிடம் பேச அடிக்கடி முயற்சி செய்திருப்பார். இதனாலேயே அடிக்கடி பெஞ்சில் ஏறி நின்றிருப்பார்.
ஸ்கூலுக்கு மட்டம் போட வருண பகவானை வேண்டிக்கொண்டிருப்பார். மழை பெய்தால் 'நான் சொன்னதும் மழை வந்துச்சா?’ என உற்சாகமாய் வீட்டுக்குள் டான்ஸ் ஆடியிருப்பார்.

ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு கடைசியாக ஓடி பல்பு வாங்கியிருப்பார். 'ஏன் செல்வா ஏன்?’ என யாரேனும் கேள்வி கேட்டால், 'ஓட ஓட ஓடத் தூரம் குறையல’ எனப் பாட்டாகவே பாடி ஒருபாட்டம் அழுதிருப்பார்.

டீச்சரோ, பக்கத்து கிளாஸ் திவ்யாவோ வந்து சொன்னால்தான் பரிட்சையை ஃபயரோடு எழுதுவார். இல்லை என்றால் வெள்ளைத்தாளை மடித்துக் கொடுத்துவிட்டு சோகமாய்க் கழுத்தை சாய்த்தபடி வாக்-அவுட் செய்திருப்பார்.
கேர்ள்ஸ் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் இவரே 'அடிடா அவளை... வெட்றா அவளை’ என சில நேரங்களில் உக்கிரமாய் திட்டித் தீர்த்ததால், ஹெட்மாஸ்டரிடம் செமத்தியாய் அடி வாங்கியிருப்பார்.


முந்தின நாளே மக்-அப் பண்ணிவிட்டு வந்து க்ளாஸ் ரூமில் அயர்ந்து தூங்குவார். டீச்சர் எழுப்பிக் கேள்வி கேட்டால் கையைக் கட்டிக்கொண்டு அப்படியே ஒப்பித்து வாய் பிளக்கவைத்திருப்பார்!  

தமிழ் சினிமாவும் அமெரிக்க மாப்பிள்ளைகளும் - ஒரு பார்வை...!



தமிழ் சினிமாவில் தியாகம் செய்வதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்களின் பரிதாப மைண்ட் வாய்ஸ்.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தாலும் நாங்க மட்டும் கூடுவாஞ்சேரி ஹைவேயில் 'நீயா நானா’ கோபிநாத் மாதிரி கோட் சூட்லேயே திரியணுமுங்க.

எல்லாப் படத்துலேயும் கிட்டத்தட்ட ரெண்டே கெட்டப்தான். ஃபுல் ஷேவ் பண்ணின, மாட்டுக்கு ஊசி போடுற டாக்டர் கெட்டப், இல்லைனா பிரெஞ்ச் பியர்டு வெச்ச சயின்டிஸ்ட் கெட்டப். இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமோ, முடிவு காலமோ இல்லையா பாஸ்?

இந்த ஹீரோக்கள் எல்லாம் மனப்பாடம் செஞ்ச திருக்குறள் மாதிரி கடகடனு ஈஸியா டயலாக்கை ஒப்பிச்சிட்டுப் போய்டுவாங்க. நாங்க மட்டும் நுனிநாக்குல இங்கிலீஷ் பேசணுமாம். அடிநாக்கில் சூடென்ன, அடுப்பையே வெச்சாலும் நுனிநாக்குல இங்கிலீஷ் வராதுனு நமக்குத்தானே தெரியும்.

படத்துல 21/4 மணி நேரமும் உனக்குத்தான் அந்தப் பொண்ணுனு ஆசை வார்த்தை காட்டி ட்ரீம்ல மிதக்க விட்டுட்டு கடைசிக் கால் மணி நேரத்துல வழக்கம்போல் எல்லா ஹீரோயின்ஸோட அப்பாவும் அந்த ஹீரோ கையில் பெண்ணைக் கொடுத்து ரெடிமேட் வசனம் பேசறீங்களே... இதுக்கு என்னாத்துக்கு நாங்க அமெரிக்காவில் இருந்து வரணும்?

ஹீரோயினுக்கும் எங்களுக்குமான கல்யாண அறிவிப்பை ஹீரோயினோட அப்பா எங்கே அறிவிப்பார் தெரியுமா? மற்றும் நம் உறவினர்களும் நண்பர்களும் கூடியிருக்கிற பார்ட்டியில் பந்தாவா மைக்கைப் பிடிச்சுட்டு, 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன். என் மகள் பிரியாவைக் கல்யாணம் பண்ணப்போற மாப்பிள்ளை இவர்தான்’னு அறிவிப்பாங்க. படபடன்னு கை தட்டுற அத்தனைப் பக்கிகளும் நாங்க தியாகம் பண்ற க்ளைமாக்ஸ்ல எங்கே போறாய்ங்கனே தெரியலை.

கடைசியில் கல்யாணம்தான் ஆகப்போறதில்லை. ஹீரோயினோட ஒரு கனவு டூயட்டாவது கொடுக்கலாம்ல? ஏம்பா, எங்களுக்கெல்லாம் கனவே வராதா?

எல்லாப் படத்திலேயும் காதலுக்காகப் பெத்தவங்களைத் தியாகம் பண்றீங்க, சில படங்கள்ல பெத்தவங்களுக்காகக் காதலையே தியாகம் பண்றீங்க, இந்தப் பாவப்பட்ட அமெரிக்க மாப்பிள்ளைகளுக்காவும் உங்க காதலைத் தியாகம் பண்ணித்தான் பாருங்களேன் ஹீரோயின்ஸ்!

தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்...புது பிரச்சனையை கிளப்பும் நயன்தாரா...!



புஸு புஸு நடிகையும், விரல் வித்தை நடிகரும் பிரிந்து செல்ல ஒரு வேளை அந்த டீல் தான் காரணமாக இருக்குமோ என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

விரல் வித்தை நடிகர் என்றைக்கு தனது முன்னாள் காதலியான நயன நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கினாரோ அன்றைக்கே அவருக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டது.

ஆனால் அவர் யாருடன் நடித்தாலும் அது தொழில் அதை எல்லாம் தான் பெரிதுபடுத்த மாட்டேன் என்று புஸு புஸு நடிகை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையே காதலும் இல்லை ஒன்றும் இல்லை தான் சிங்கிள் தான் என்று நடிகர் அறிவித்தார்.

முன்னதாக அவருடன் நடிக்க நயனம் போட்ட கன்டிஷனே தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதானாம்.

அதற்கு நடிகரும் சம்மதம் தெரிவித்திருந்தாராம். இந்நிலையில் புஸு புஸு நடிகையுடனான காதல் முறிவுக்கு ஒரு வேளை நயனம் மற்றும் நடிகருக்கு இடையேயான திருணம டீல் தான் காரணமோ என்று பலர் கிசுகிசுக்கின்றனர்.

ரெட்லைட் ஏரியாவுக்கு ஈ.சி.ஆர் ரோடு தான் பெஸ்ட் : புதுமுக டைரக்டர் சொன்ன ‘பகீர்’ ஐடியா!



‘மதுரை சம்பவம்’ படத்தை டைரக்ட் செய்த யுரேகா அதன் பிறகு எந்தப் படத்தையும் டைரக்ட் செய்யவில்லை. பக்கா கமர்ஷியல் படமான இந்தப்படத்துக்குப் பிறகு அவரைத்தேடி பல பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதன்பிறகு எந்தப்படத்தையும் டைரக்ட் செய்யாமல் அமைதியாக இருந்தார்.

இப்போது திடீரென்று பாலியல் தொழிலாளர்களின் பிரச்சனைகளை சொல்லும் ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ என்ற டைட்டிலில் ஒரு படத்தை தயாரித்து, டைரக்ட் செய்திருக்கிறார்.

சின்னத்திரை புகழ் சாண்ட்ரா எமி ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப்படம் பாலியல் தொழிலாளர்களின் எல்லாவிதமாக பிரச்சனைகளையும் அதற்கு இந்த அரசு என்ன தீர்வை தர வேண்டும் என்கிற செய்தியையும் படமாக்கி வந்திருக்கிறார்.

இதுபற்றி நேற்று பேசிய யுரேகா இது ஒரு ஆபாசமான படம் என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் படத்தில் துளி கூட அந்த மாதிரியான விஷயங்கள் இருக்காது என்றவர், இதற்காக பல மாதங்கள் கள ஆய்வுகளை செய்தாராம். அதுமட்டுமில்லாமல் பல பாலியல் தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடைய அனுபவங்களையும் கேட்டிருக்கிறார்.

அதில் அவர்கள் சொல்லும் முக்கியமான பிரச்சனை போலீஸ்காரர்கள் மற்றும் ரெளடிகளின் தொல்லை தான் அதிக அளவில் இருப்பதாக சொன்னார்கள். ஒரு பாலியல் தொழிலாளி ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதித்தால் அவள் வீட்டுக்கு வெறும் 100 ரூபாயைத்தான் கொண்டு போகிறாள். மீதி பணத்தை போலீஸ் அதிகாரிகளும், ரெளடிகளும் பிடுங்கிக் கொள்வதாக தெரிவித்தார்கள்.

அதனால் அவர்களுக்கு சென்னையில் முறையாக அனுமதி கொடுத்து விட்டால் இந்த மாதிரியான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தப்படம் வந்தபிறகு பாலியல் தொழிலாளி என்கிற பெயர் பாலியல் போராளி என்று மாறும். என்றவரிடம் சென்னையில் எந்த ஏரியாவில் ரெட்லைட் ஏரியாவை வைக்கலாம் என்று ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் ரெட்லைட் ஏரியாவை வைக்கலாம் என்றார்.

பாலா + சசிகுமார் = 'கரகாட்டம்’ - திரை விமர்சனம்



சசிகுமாரை ஹீரோவாக வைத்து பாலா எடுக்கப்போகும் அடுத்த படத்தோட டைட்டிலே 'கரகாட்டம்’னு கோலிவுட் பூரா பேச்சு சுத்தி அடிக்குது. காலில் சலங்கை இல்லாமலே கரகரனு ஆடுகிறவர் பாலா. கரகத்தையும் சேர்த்துக் கொடுத்தா என்னெல்லாம் பண்ணுவாரோ? வாங்க கரகாட்டம் கதை எப்படி இருக்கும்னு கொஞ்சம் கற்பனையில் ஓட்டிப் பார்ப்போம்.

சேந்தம்பட்டி கிராமத்திலேயே பெரிய ஆட்டக்காரரா இருந்தவர்தான் சண்முக சுந்தரம். அவருக்கு ஒரு அக்கா (அநேகமா இந்த ரோல்ல காலஞ்சென்ற காந்திமதி முகச் சாயலில் ஒரு நடிகை நடிக்கவைக்கப்படுவாராம்) சண்முக சுந்தரத்துக்கு ஓர் அழகு மகள். பெயரே சொப்பன சுந்தரி. அப்பாவை மிஞ்சும் கரகாட்டக்காரி. (இந்த ரோல்லதான் நம்ம வரலட்சுமி நடிக்கிறாங்க.) ஊர்த் திருவிழாவில் ஆடுகிற வாய்ப்பு வரலட்சுமிக்குக் கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருக்கிற சண்முக சுந்தரத்தின் கனவில் ஒரு லோடு ஜல்லி அள்ளிக் கொட்டிவிடுகிறார் ஊர்ப் பண்ணையாரான சந்தானபாரதி (சந்தானபாரதியே நடிக்கிறார்.)

எதிரியோட நிழலைப் பார்த்தே அவரோட குணத்தைச் சொல்கிற 'ஜெய்ஹிந்த்’ புகழ் வாகை சந்திரசேகர்தான், வரலட்சுமியோட அக்கா புருஷன். 'உங்களை நம்பி இருக்கிற எங்களுக்கு நீங்க இப்படி துரோகம் பண்ணலாமா முதலாளி?’னு பண்ணையாரிடம் நியாயம் கேட்கிறார் மிஸ்டர் வாகை. 'அட கிறுக்குப்பயலே! எனக்கு உன் கொழுந்தியா மேல  கண்ணு. உனக்கு நான் வெச்சிருக்கிற ரெமி மார்ட்டின் மேல கண்ணு’னு ஓப்பனா தேங்காய் உடைச்ச மாதிரி சொல்றார். அப்போதான் ஊருக்கு அந்த அசலூர் கரகாட்டக் கோஷ்டி வருது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்! என்ன அதே ஒரிஜினல் 'கரகாட்டக்காரன்’ கதை போலவே இருக்குதா?

இங்கனதான் வைப்பார் ஒரு ட்விஸ்ட் நம்ம பாலா. மேற்கொண்டு கதையைப் படிங்க. வெளியூரில் இருந்துவரும் கரகாட்டக்காரச் கோஷ்டியில் ரெண்டு பேர் இருக்காங்க. ஒருத்தர் சசிகுமார். இன்னொருத்தர் சமுத்திரக்கனி. அவர் அலுமினிய கலர்ல டவுசர் போட்டு ஆடுவார். இவர் வெங்கலப்பானை கலர்ல டவுசர் போட்டு ஆடுவார். ஆனா ரெண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ். கஞ்சா அடிச்சா, அன்னிக்குப் பூரா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் பாட்டுகளை பிளே பண்ணிட்டு நிறுத்தாம ஆடுவாங்க. இவங்க ஆட்டத்தைப் பார்த்து ஊரே சுத்தி நின்னு வேடிக்கை பார்க்குது.

ஆனா சண்முக சுந்தரம் மட்டும் ரத்த ரத்தமா வாந்தி எடுக்கிறார். 'ஏய்... ஆட்டக்காரத் தம்பிகளா! கரகாட்டக் கலை புனிதமான கலை. அதைக் கஞ்சா போட்டுக்கிட்டு ஆடுறீங்களேடா... அந்த மகமாயி மன்னிக்க மாட்டாடா. தைரியமான ஆம்பளைனா, கஞ்சா போடாம ஆடுங்கடா’னு சவுண்டு கொடுக்கிறார். இதனால் வெறியான சமுத்திரக்கனி, சண்முக சுந்தரத்தோட குரல்வளையைக் கடிச்சிடுறார். கடுப்பான வரலட்சுமி நெஞ்சுல ஏறி மிதிச்சு, சமுத்திரக்கனியை சாகடிச்சிடுறார். நண்பனோட சாவுக்குக் காரணமான பொண்ணைப் பழிவாங்குறவரைக்கும் கரகாட்டம் ஆட மாட்டேன்னு சபதம் போட்டுட்டு ஊருக்குக் கிளம்பிப் போகிறார் சசிக்குமார்.

ஆட்டம் பாதியில் நின்னதால் சாமிக்குத்தம் ஆகி, ஊரில் மழை பெய்யாம வறண்டுபோயிடுது. உடம்புல ஒட்டுத்துணி இல்லாம ஒரு கன்னிப்பையன் கரகாட்டம் ஆடினா, வானம் பொத்துக்கிட்டு ஊத்தும்னு ஊர்ப் பெரிய தலைக்கட்டு சந்தானபாரதி சொல்கிறார். இதற்கு உடன்படாத சசிக்குமாரை வில்லனோட ஆட்கள் பத்தாம் நம்பர் ஸ்பானர், கடப்பாறை, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கித் தூக்கிட்டு வர்றாங்க. எழுந்து நடமாடவே முடியாத சசிக்குமார் புருவத்துல குண்டூசி எடுக்கிற ஸ்டெப் எல்லாம் தலையில் கரகத்தை வெச்சு ஆடி க்ளாப்ஸ் வாங்குகிறார்.

மழை அடிச்சு ஊத்துது. சந்தானபாரதியைக் கரகத்தைக் கீழே விழாம தலையில் வெச்சுக்கிட்டே துரத்தி துரத்தி அடிக்கிறார். நார்நாராக் கிழிச்சிக் கழுத்தில் மிதிச்சு சந்தானபாரதியைக் கொன்ற பிறகுதான் வெறி அடங்குது சசிக்குமாருக்கு. ஆட்டத்துலேயும் வீரத்திலேயும் மயங்கி வரலட்சுமி தன் தோல்வியை ஒப்புக்கிட்டு கழுத்தை நீட்ட ரெடி ஆகுறாங்க. ஆனா கல்யாணம் பண்ணாமப் பழிவாங்குகிறார் சசிக்குமார். சோகமா கஞ்சா தோட்டத்து வழியா சில்அவுட்டில் நடந்துபோகிறார். 'எ ஃபிலிம் பை பாலா’னு டைட்டில் போடுறாங்க. இந்தப் படத்துக்காக ஏற்கெனவே பாதி உடம்பா இருக்கிற சசிக்குமாரை கால்வாசி உடம்பாக்  குறைக்கவெச்சிருக்காராம் பாலா. கடந்த ஒரு மாசமா பன்னும் டீயும் சாப்பிடவெச்சு வெயிட்டைக் குறைச்சிருக்கிறாராம் சசிக்குமார்.

இன்னொரு ஸ்கூப் நியூஸ். படத்துக்காக நிஜமாகவே கரகாட்டத்தைக் கத்துக்கிட்டாராம் சசி. பாலா ஒரு பிரம்போட பக்கத்திலேயே நின்னு, 'ஆடுறா... டேய் ஒழுங்கா ஆடுறா... இல்லை கொன்டேபுடுவேன்’ என சசிக்குமாரை அடித்து வெளுக்கும் டீஸர் விரைவில் வெளிவருமாம்!

சோக கதையெல்லாம் என்கிட்ட சொல்லாதிங்க... அழுதுடுவேன்..!



இந்தி நடிகர் அமீர்கான் அரசியலில் ஈடுபட போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளித்து அமீர்கான் கூறியதாவது:–

நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்க வில்லை. யாருடனும் கூட்டு சேரவும் இல்லை. அரசியலை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன். பிரச்சினைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு என் சப்போர்ட் இருக்கும். ஆனால் எந்த கட்சியோடும் சேர மாட்டேன். நான் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். நெஞ்சை நெகிழ வைக்கும் சோகமான கதைகள் கேட்டால் நான் அழுது விடுவேன்.

டி.வி. நிகழ்ச்சியில் கூட நிறைய சோக கதைகள் கேட்டுள்ளேன். அப்போதெல்லாம் எனக்கு அழுகை வந்தது.

இவ்வாறு அமீர்கான் கூறினார்.

அஜீத்'வுடன் சிம்புவை நடிக்க விடமாட்டேன் - கௌதம் மேனன்..!



கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை வரும் மார்ச் மாதம் 15ம் தேதி மிக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரும் என கௌதம் மேனன் உறுதியாக கூறிவருகிறார்.

சமீப காலமாக வந்த படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்த அஜீத்தை கௌதம் மேனன் முற்றிலும் மாற்றுவதற்கு தயாராகிவிட்டார். சுமார் 10 கிலோ அஜீத்தின் எடையை குறைத்து இளமையான தோற்றத்தை ஏற்படுத்த தற்போது தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறார் கௌதம் மேனன்.

ஹாலிவுட் மேக்கப்மேன்கள் அஜீத்தின் தோற்றத்தை முடிவு செய்கிறார்கள். இந்த படத்தில் அஜீத்தின் கேரக்டர் இளமையானது என்பதால் மேக்கப்பின்  உதவி மட்டுமின்றி உண்மையிலேயே அஜீத்தை இளமையாக மாற்ற கௌதம் மேனன் முடிவு செய்திருக்கிறார்.

இந்த படத்திற்கு ஹீரோயின் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அனுஷ்காவிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பிரபல ஹிந்தி நடிகையிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும் மங்காத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் அர்ஜூன் நடித்தது போன்று இந்த படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல நடிகரை நடிக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு என்றும், ஆனால் கௌதம் மேனன் பின்னர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் தெரிகிறது. சிம்புவை வைத்து கௌதம் மேனன் ஏற்கனவே ஒரு படம் எடுத்துக்கொண்டிருப்பதால் இதிலும் சிம்புவை நடிக்க வைத்தால் அதே ஸ்டைல்தான் இந்த படத்திலும் கிடைக்கும் என்பதால் சிம்புவை தவிர்த்தாராம் கௌதம் மேனன்.

அந்த பிரபல நடிகர் யார் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறார் கௌதம் மேனன்.

விஜயை கன்னத்தில் அடித்த வில்லன் - முருகதாஸ் படக்குழுவினர் பரபரப்பு..!



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு ஆந்திராவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சிறையை உடைத்துக்கொண்டு வில்லன் டோட்டா வெளியே வருவது போன்ற ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ராஜமுந்திரி சிறை போன்று செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தின் கதைப்படி சிறையில் இருந்து தப்பித்து செல்லும் அன்னிய நாட்டு உளவாளியை விஜய் எப்படி பிடிக்கிறார் என்பதை பல திடுக்கிடும் திருப்பங்களோடு முருகதாஸ் இயக்கி வருகிறார்.

நேற்றைய படப்பிடிப்பில் சிறையில் இருந்து வில்லன் நடிகர் டோட்டா தப்பிக்கும் காட்சிக்கும் படமாக்கப்பட்டன. அதன்பின்னர் விஜய் மற்றும் டோட்டா ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சிகளும் சிறை வளாகத்தில் நடப்பது போன்றும் படமாக்கபட்டது.

இந்த சண்டைக்காட்சியில் நடிக்கும்போது டோட்டா ஒரு ஷாட்டில் விஜய்யின் கன்னத்தில் நிஜமாகவே குத்திவிட்டார்.

இதனால் விஜய் உதட்டோரத்தில் இரத்தம் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் பரபரப்பு அடைந்தனர். விஜய் முகத்தில் லேசாக பஞ்ச் வைப்பது போல் நடிப்பதற்கு தனது கை தவறி நிஜமாக குத்திவிட்டதாக கூறி விஜய்யிடம் வில்லன் நடிகர் மன்னிப்பு கேட்டதை அடுத்து பரபரப்பு அடங்கியது.

விஜய்யின் காயத்திற்கு முதலுதவி செய்த பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

பனிவிழும் மலர்வனம் - திரை விமர்சனம்..!



காதல்படம் என்கிற எண்ணத்தில் திரையரங்குக்குள் வருகிறவர்களை படம் தொடங்கி சிறிதுநேரம் வரைதான் நிறைவு செய்யமுடியும். அதன்பின்னர் படம் வேறுதிசையில் பயணிக்கிறது. புலிவரும்அடர்வனம் என்று பெயர் வைத்திருக்கலாம்.

முகநூல் மூலம் அறிமுகமாகி காதலிக்கத் தொடங்கும் நாயகன் அபிலாஷ் நாயகி சானியதாரா ஆகிய இருவருக்கும் முகலாயர்காலத்திலிருந்து இருக்கும் பெற்றோர்எதிர்ப்பு வந்துவிடுகிறது.

 நாயகனின் தந்தையாக நாசர் நடித்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு அவரைப்போலவே இருக்கிற அவருடைய தம்பி ஜவகர் நடித்திருக்கிறார். இவ்வளவுகாலம் தமிழ்த்திரையுலகம் இவரை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டது? நாயகன் அபிலாஷைப் பார்க்கப்பார்க்கத்தான் பிடிக்கும் போலிருக்கிறது.

இந்தப்படத்தில் பிடிக்கவில்லை. நாயகி தாழ்வில்லை. பொதுவாகக் காதலுக்குக் கண்ணில்லை என்று சொல்வார்கள், இந்தக்காதலுக்கு அறிவில்லை.

 படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் நாயகன், கல்லூரியில் படத்துக்கொண்டிருக்கும் நாயகி ஆகிய இருவருக்கும் வீட்டில் எதிர்ப்பு வந்ததும் எங்கு போவதென்றே தெரியாமல் முதலில் வருகிற பேருந்தில் ஏறிவிடலாம் என்று சொல்லி தேனிக்குப் பயணப்படுகிறார்கள்.

இத்தனைக்கும் தமிழ்த்திரையுலக வழக்கம் போல நாயகனுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

அங்கு போயும் கோயில் கோயிலாகப் போய் எங்களுக்குத் திருமணம் செய்துவையுங்கள் என்று கேட்கிறார்கள், படிப்பறிவு இல்லதவர்கள்கூடப் பயப்படும் வனத்துக்குள் கவலையின்றிச் சுற்றுகிறார்கள் போன்ற அபத்தங்களெல்லாம் படத்தில் இன்னொரு நாயகியாக இருக்கின்ற வர்ஷாஅஷ்வதியைச் சந்திக்கத்தான்.

தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களுக்குள்ளேயே பெண்களுக்குப் பாலியல்வன்முறைகள் நடக்கும்போது மேகமலை மாதிரி வனப்பகுதியில் நடக்காமலா இருக்கும்?

நாயகி சானியதாரா மீது வனத்துக்குள் திரியும் சில குற்றவாளிகளுக்கு ஆசை வருகிறது. அவர்களிடமிருந்து தப்ப காதலர்கள் போராடுகிற நேரத்தில் தன் சிறுவயது மகனோடு வந்து அவர்களைக் காப்பாற்றுகிறார் வர்ஷா.

அதன்பின்னர் மொத்தப்படமும் இயற்கைஎழில் சூழ்ந்த வனப்பகுதிக்குள்ளேயே நடக்கிறது. சந்திரனும் சூரியனும் கூட நுழையமுடியாதகாடு என்று பாட்டெழுதியிருக்கிறார் வைரமுத்து, அந்தவரிகளை சமதளத்தில் நின்றுபாடிக்கொண்டிருக்கிறார்கள் காதலர்கள்.

அந்தக்காதலர்கள் காட்டுக்குள் போனதும் கதைக்களம் காதலில் இருந்து விலகிப்போய் விடுகிறது. காதலர்களுக்கு கோழி, மீன் என்று நன்றாகச் சமைத்துப்போடுகிறார் வர்ஷா. பார்க்கும்போது நாக்கு ஊறுகிறது. வர்ஷாவின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கவர்கிறான்.

 பாவாஇலட்சுமணனைக் கிண்டல் செய்கிற மாதிரி மாரிமுக்கா என்று கத்துவது ரசிக்கவைக்கிறது. வனம் பற்றியும் விலங்குகள் பற்றியும் நல்ல கருத்துகளைச் சொல்கிறார்கள். காலகாலமாக விலங்குகள் போகும்பாதையில் நாம் வீடு கட்டிக்கொண்டுவிட்டால் அவை என்ன செய்யும்?

உட்பட சில வசனங்களில் இயற்கை மீது மனிதர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் வன்முறைகளை எடுத்துச்சொல்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கூடியிருக்கிறது என்பதற்கு இந்தப்படமும் இதன் இயக்குநரும் சான்று.

காடு பற்றியும் அங்குள்ள வாழ்க்கை பற்றியும் வர்ஷா பேசுவதைக் கேட்கும்போது அவர் அங்கேயே பிறந்துவளர்ந்த மாதிரி தெரிகிறது. அப்படியே விட்டிருக்கலாம் கடைசிக்காட்சியில் அவரைப் பெருமைப்படுத்துகிறேன் என்று அதையும் உடைத்துவிடுகிறார்கள். அவரும் காதலுக்காக வீட்டைவிட்டு ஒடிவந்து அந்தக்காட்டில் வசிப்பவராம்.

வர்ஷாவின் சின்னவயது மகனுக்கு ஒரு விநோதமான நோயைச் சொல்லி அதற்கு மருத்துவம் செய்யப்பணம் புரட்டும் காட்சிகளை வைத்து நோகடிக்கிறார்கள். அந்தக்காட்டுக்குள் சீட்டுசேர்க்கிற ஒருவர் நேர்மையாகப் பணத்தைக் கொண்டுவந்துகொடுக்கிறார்.

வர்ஷா வசிக்கும் ஓட்டுவீட்டுக்குக் கடன் இருக்கிறது போன்ற வியப்புகளும் இருக்கின்றன. ஒருவழியாகப் பணத்தைச் சேர்த்துக்கொண்டு காட்டுவழியாகப் போனால் சீக்கிரம் போய்விடலாம் என்று அவர்கள் காட்டுக்குள் போனதும் படத்தில் விறுவிறுப்பும் படபடப்பும் ஒருசேரச் சூழ்ந்து கொள்கிறது. புலி நடமாடும் காட்சிகளை நன்றாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

புலி நன்றாக நடித்திருக்கிறது. அந்தக்காட்சிகளில் நமக்கு இருக்கும் பதட்டம்கூட புலியிடம் அகப்பட்டுக்கொண்டிருப்பவர்களிடம் தெரியவில்லை. பஞ்சுமெத்தையில் உட்கார்ந்திருப்பதைப்போல மரக்கிளையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவ்வளவு நெருக்கடியான சூழலில் ஒரு குழந்தை நோயின் வலியில் துடிப்பது போல் காட்டி நம்முடைய கோபத்தைச் சம்பாதிக்கிறார் புதுஇயக்குநர் ஜேம்ஸ்டேவிட்.

தன் மகனின் உயிர் காக்க வர்ஷா எடுக்கும் முடிவு நெகிழவைக்கிறது. தன் குழந்தையை மட்டுமின்றி புலிக்குட்டியையும் அவர் காப்பாற்றுகிறார் என்று காட்டியிருப்பது தாய்மையின் உச்சம். இவ்வளவும் அந்தக்காதலர்கள் தங்கள் பெற்றோர் பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ளத்தான் உதவுகிறது எனும்போது, இதற்காகவா இத்தனை துயரம் என்ற எண்ணம் வருகிறது.

‘வல்லினம்’ - திரைவிமர்சனம்...!



நடிகர் : நகுல்

நடிகை : மிருதுலா பாஸ்கர்

இயக்குனர் : அறிவழகன்

இசை : தமன்

ஓளிப்பதிவு : பாஸ்கர்

திருச்சியில் கல்லூரி ஒன்றில் நகுலும், கிருஷ்ணாவும் நண்பர்களாக படித்து வருகின்றனர். இருவரும் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுடைய விளையாட்டு அந்த கல்லூரியில் பிரபலம்.

இந்நிலையில், ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நகுல் அடிக்கும் பந்து எதிர்பாராத விதமாக கிருஷ்ணா நெஞ்சில் பட்டுவிட அந்த இடத்திலேயே கிருஷ்ணா இறந்து விடுகிறார். தன் நண்பன் மரணத்தை தாங்க முடியாத நகுல், அந்த கல்லூரியில் இருந்தே விலகுகிறார். மேலும், தன் நண்பன் சாவுக்கு காரணமான கூடைப் பந்தை இனிமேல் விளையாடக்கூடாது என்றும் முடிவெடுக்கிறார்.

அதன்படி, சென்னைக்கு வந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். இதே கல்லூரியில் படிக்கும் மிருதுளா, சந்துரு ஆகியோர் நகுலுடன் நட்பு கொள்கிறார்கள். நாளடைவில் நகுலின் நடவடிக்கைகள் நாயகி மிருதுளாவிற்கு பிடித்துப்போக அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். நகுலும் அவளை காதலிக்கிறார்.

சந்துரு அந்த கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இருந்தும் தன்னுடைய அணியால் கல்லூரிக்கு இதுவரை ஒரு கோப்பைகூட பெற்றுத்தர முடியாத ஆதங்கத்தில் இருந்து வருகிறார்.

அதே கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் கல்லூரியின் பெயரை நிலைநிறுத்திய தலைக்கணத்தில் இவர்களைப் பார்த்து கிண்டலடிக்கின்றனர். மேலும், கூடைப்பந்து விளையாட்டை தரக்குறைவாகவும் பேசுகின்றனர்.

இதனால் வெகுண்டெழும் நகுல், சந்துருவுடன் இணைந்து கூடைப்பந்து விளையாட்டின் மகத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்க முடிவெடுக்கிறார். இறுதியில், கூடைபந்து விளையாட்டில் நகுல் தன்னுடைய முழு திறமையைப் பயன்படுத்தி கல்லூரிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தின் நாயகன் நகுல், ஒரு கூடைப்பந்து வீரருக்குண்டான எல்லா தகுதியும் இவருக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மாறுபட்ட நடிப்பில் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். கூடைப்பந்து விளையாடும்போது ஒரு அனுபவ வீரரைப் போலவே விளையாடியிருக்கிறார். கதை முழுவதும் இவரை மையப்படுத்தியே நகர்வதால், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அதை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகி மிருதுளாவுக்கு நாயகனை காதலிப்பது மட்டுமே வேலை என்பதால், இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே. இருந்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். திருச்சியில் நண்பராக வரும் கிருஷ்ணா, அங்கு பயிற்சியாளராக வரும் நடிகர் ஆதி ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கின்றனர். சென்னையில் நண்பராக வரும் சந்துருவும், நடிப்பில் நகுலுக்கு போட்டி போட்டிருக்கிறார்.

கல்லூரி முதல்வராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், பயிற்சியாளராக வரும் அதுல் குல்கர்னி, கதாநாயகியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிப்பில் மிளிர்கின்றனர்.

தமிழில் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுக்களை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கிறன. ஆனால், கூடைப்பந்து விளையாட்டை வைத்து தமிழில் இதுவரை ஒரு படம்கூட வந்ததில்லை. அதை இயக்குனர் அறிவழகன் சரியாக புரிந்துகொண்டு, அழகாக படமாக்கியதற்காக பாராட்டலாம். நட்பை மையப்படுத்தி, அதில் விளையாட்டை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.

கே.எஸ்.பிரபாகரன் ஒளிப்பதிவில் கூடைப்பந்து விளையாட்டை அழகாக படமாக்கியிருக்கிறார். இவருடைய கேமரா கண்கள் படத்தின் காட்சிகள் நம் கண்களை உறுத்தாமல் இருக்க ரொம்பவும் விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான்.

மொத்தத்தில் ‘வல்லினம்’ மெல்லினம்.

பிரித்விராஜ் கனவு நிறைவேறப்போகிறதாம்...!



பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியான மொழி திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடம் பெரும் அறிமுகத்தைப் பெற்ற நடிகர் பிரித்விராஜ் விரைவில் தான் அப்பாவாகப் போவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மலையாள நடிகர் பிரித்விராஜ். மொழி, வெள்ளித்திரை, சத்தம் போடாதே முதலிய படங்களின் மூலம் நன்கு அறிமுகமானவர்.

ஆனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில தமிழ்ப் படங்கள் சரியாகப் போகதாலும், மலையாளத் திரைப்படங்களில் நடிக்க அதிக வாய்ப்புக்கள் வந்ததாலும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்பொழுது மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு பிபிசி ரிப்போர்ட்டரான சுப்ரியா மேனனை மணந்து கொண்டார். சமீபமாக அவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் விரைவில் தான் அப்பாவாகப் போவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தானும் தன் மனைவி சுப்ரியாவும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், தனது வாழ்நாளில் மிக முக்கியமான வெளியீட்டிற்கான நாட்களை மகிழ்ச்சியுடன் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் மலையாளப்படங்களில் கவனம் செலுத்திவரும் பிரித்விராஜ் வசந்தபாலன் இயக்கிவரும் காவியத் தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துவருகிறார்.

நிமிர்ந்து நில் சூப்பரா வந்திருக்கு - ஜெயம் ரவி, நிம்மதியா இருக்கு..!



இயக்குனர் சமுத்திரக் கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடித்திருக்கும் திரைப்படம் நிமிர்ந்து நில்.

கடந்த காதலர் தினத்தில்
வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் பின்னர் பிப்ரவரி 28 ற்குத் தள்ளிவைக்கப்பட்டது.

பிப்ரவரி 28லிருந்து இதன் வெளியீட்டுத் தேதி
மார்ச் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 7ல் நிச்சயமாக இப்படம் வெளியாகும் என்று ஜெயம் ரவி உறுதி கூறியுள்ளார்.

வாசன் விசுவல் வென்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இதன் தெலுங்கு வெர்சனில் ஜெயம் ரவிக்குப் பதிலாக நானி நடித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 28ல் வெளியாகவிருந்த இப்படத்திற்கு, ஆந்திராவில் தியேட்டர்கள் கிடைக்காததால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபமாக இப்படத்தின் முன்னோட்டக்காட்சியைப் பார்த்த ஜெயம் ரவி இப்படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகவும், இதன் வெளியீட்டுத் தேதிக்காக
ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்படம் தனக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்றும், இப்படத்தை இயக்கிய இயக்குனர் சமுத்திரக்கனிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்
கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.

அவ்ளோ நல்லவரா சிம்பு? நயன்தாரா...!



இது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று தான் என்பது போல ஹன்ஷிகாவைப் பிரிந்து விட்டார் சிம்பு.

கடந்த 14-ஆம் திகதி காதலர் தினத்தில் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் சிங்கிளாக இருக்கிறேன் என்று ஹன்ஷிகா வெளியிட்ட ட்விட்டருக்கு பதிலாக நானும் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று நேற்று விரக்தியில் அறிக்கை ஒன்றை விட்டார் சிம்பு.

அவரின் இந்த அறிக்கை ஹன்ஷிகா இரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. நல்லவேளை ஹன்ஷிகா தப்பித்துக் கொண்டார், சிம்புவெல்லாம் ஒரு ஆளா..? என்றெல்லாம் ஹன்ஷிகாவுக்கு ஆதரவாகவும்,சிம்புவுக்கு எதிராகவும் சமூக இணையத் தளங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்னும் சில குசும்பான இரசிகர்களோ சிம்புவின் சொந்தப்படத்தில் நயன் தாரா நடிக்க வந்ததால் தான் ஹன்ஷிகா சிம்புவை கழற்றி விட்டு விட்டார். அவரிடமிரிந்து ஹன்ஷிகாவை காப்பாற்றிய நயன்தாராவுக்கு நன்றி என்றெல்லாம் கூட கமெண்ட்டுகளை அள்ளி விடுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு சிம்புவை – ஹன்ஷிகா காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோதே ஹன்ஷிகாவின் இரசிகர்கள் அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டில் உங்களுக்கும் வேற நல்ல ஹீரோவே கெடைக்கலியா? என்று வகை தொகையில்லாமல் திட்டினார்கள்.

அவ்ளோ நல்லவரா சிம்பு?

இந்த கதையில அமிதாப்பச்சனும் வராருங்க...! உங்களுக்கு தெரியுமா?



அதோ இதோவென்று ஒருவழியாக ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதில் முதற்கட்டமாக அதன் ஆடியோ பங்ஷன் வருகிற மார்ச் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த் அப்பா-மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அனிமேஷன் படம் தான் ‘கோச்சடையான்.’ இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்ட் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்திருக்கும் இந்தப்படம் ‘மோஷன் கேப்சர்’ என்ற புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று சொல்லப்பட்ட நிலையில் படத்தின் ஆடியோ பங்ஷன் எப்போது நடக்கும் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் ‘கோச்சடையான்’ ஏப்ரல் மாதம் ரிலீசாகுமா? என்கிற சந்தேகமும் ரசிகர்களிடையே இருந்து வந்தது.

இதற்கிடையே ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் அடுத்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்துடன், பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்.

விழாவில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை படத்தை தயாரிக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல், மீடியா ஒன் ஆகிய நிறுவனங்கள் கவனித்து வருகின்றன.

பாஜக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 12 + 1...!



பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜயகாந்த் இன்று மாலை அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது -விஜயகாந்துக்கு மொத்தம் 12 தொகுதிகளையும், மாநிலங்களவை சீட் ஒன்றையும் தருவதாக பா.ஜ.க தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பாமக வுக்கு 8 அல்லது 9 தொகுதிகள்தான் ஒதுக்குவோம் என்று பாஜக கூறியுள்ளது. ஆனால் தே மு தி க-வை விட குறைவான திகுதிகள் என்பதால் அதை பாமக இதுவரை ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது

இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் வலுவான கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலையில் மதிமுக, ஐஜேகே, பாமக கொங்கு நாடு மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் பாஜ கூட்டணியில் இணையும் முடிவை தெரிவித்துள்ளன. அதே சமயம் பாமக தவிர மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது என்றாலும் தேமுதிகவை சேர்த்தால் கூட்டணி வலுவானதாக இருக்கும் என பாஜக கணக்கு போட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக விஜயகாந்தை பாஜக அணுகிய போது, விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் தொண்டர்களிடம் கருத்து கேட்டு கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறினார். ஆனால்,வழக்கம் போல் அந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முடிவை விஜயகாந்த் அறிவிக்கவில்லை.

அத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் கட்சி எம்எல்ஏக்களுடன் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை பேச்சு எழுந்தது. ஆனால், சோனியா, ராகுல் ஆகியோர் விஜயகாந்தை சந்திக்க முன்வரவில்லை என கூறப்பட்டது. இதனால், தேமுதிகவினர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.

இந்த அப்செட்டைப் பயன்படுத்தி மறுபடியும் விஜயகாந்தை, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது இக்கூட்டணியில் சேர வேண்டுமானால் 18 தொகுதிகள் வழங்க வேண்டும் என்று தேமுதிக கோரிக்கை விடுத்தது.ஆனால் 12 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தேமுதிகவினர் சம்மதிக்காத நிலையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே விஜயகாந்த் ஏதோ மெடிக்கல் செக்கப்புக்காக சிங்கப்பூர் சென்று விட்டார். ஆனாலும் தேமுதிகவில் விஜயகாந்த் சார்பில் செயல்படும் அவ்ர் மச்சான் சுதிஷ் உள்ளிட்ட தலைவர்களுடன் பாஜவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடைசியில் 12 தொகுதிகளையும், மாநிலங்களவை சீட் ஒன்றையும் தருவதாக பா.ஜ.க தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்று பாஜகவுடனான கூட்டணி உடன்பாடு குறித்த அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்தபடியே இன்று மாலை 5 மணியளவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. தற்போது கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவித்தாலும், எத்தனை சீட், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அக்கூட்டணியின் மற்றொரு கட்சியான பாமக வுக்கு 8 அல்லது 9 தொகுதிகள்தான் ஒதுக்குவோம் என்று பாஜக கூறியுள்ளது. ஆனால் தே மு தி க-வை விட குறைவான தொகுதிகள் என்பதால் அதை பாமக இதுவரை ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நேற்று ஒரு பா ம க எம் எல் ஏ முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்ததையடுத்து அவ்ர்கள் சொல்லும் தொகுதிகளுடன் ஒரு மேலவை எம்.பி. சீட் கேட்டு இணைய வாய்ப்பிருக்கிறதாம்.

அத்துடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே, கொங்குநாடு மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கவும் பாஜ முடிவு எடுத்துள்ளது. பேச்சுவார்த்தைகளை முடித்து வரும் 1ம் தேதி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட பாஜக மும்முரமாக இறங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஈறுகளில் ரத்தக் கசிவா? உங்களுக்கான வீட்டு வைத்தியங்கள்..!


ஈறுகளில் வீங்கச் செய்து பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான் இரத்தக்கசிவு நோய்.

இது பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்தை குன்றச் செய்யும் இதர நிலைகளான கர்ப்ப காலம், வைட்டமின் பற்றாக்குறை, ஸ்கர்வி என்றழைக்கப்படும் பல் வீக்க நோய், லுக்கேமியா என்றழைக்கப்படும் வெள்ளையணு புற்றுநோய், அல்லது இதர நோய்த்தொற்றின் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

இது பெரும்பாலும் கொடிய நோய்களான இரத்தத்தட்டு நோய் அல்லது லுக்கேமியா போன்றவற்றின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இதனை ஒழுங்கான முறையில் கவனிக்காவிட்டால், ஜிஞ்சிவிட்டீஸ் என்றழைக்கப்படும் ஈறு வீக்க நோய் வர வழிவகுக்கும். இவ்வாறு ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை எளிதான கை மருத்துவ முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

இதனால் அது பின்பற்றுவதற்கு எளிதானவையாக இருப்பதோடு, பல் ஆரோக்கியத்தை சில வாரங்களிலேயே மேம்படுத்தும்.


சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி குறைபாடு, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களுள் ஒன்றாகும்.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அதிக அளவிலான வைட்டமின் சி சத்தை வழங்கி, ஈறுகளின் இரத்தக்கசிவை தடுப்பதற்கு உதவக் கூடியவையாகும்.


பால்


பால் கால்சியம் சத்தின் தலைசிறந்த மூலாதாரமாகும். ஆகவே ஈறுகளை வலுப்படுத்த வேண்டுமெனில், உடலில் கால்சியம் சத்தை மீண்டும் மீண்டும் நிரப்ப வேண்டியது முக்கியம்.

எனவே ஈறுகளில் இரத்தக்கசிவை தவிர்க்க தினமும் தவறாமல் பால் அருந்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.


பச்சைக் காய்கறிகள்

பச்சைக் காய்கறிகளை நன்கு மென்று திண்பதன் மூலம் பற்கள் தூய்மையடைவதுடன், ஈறுகளில் இரத்த ஓட்டமும் தூண்டப்படும்.

ஆகையால், தினமும் ஒரு பச்சைக் காய்கறியை மென்று தின்னும் பழக்கத்தை மேற்கொள்வது நலம்.


க்ரான்பெர்ரி மற்றும் அருகம்புல் ஜூஸ்

க்ரான்பெர்ரி அல்லது அருகம்புல் சாற்றினை அருந்துவதன் மூலம் ஈறுகளின் இரத்தக்கசிவிலிருந்து நிவாரணம் பெறலாம்.

க்ரான்பெர்ரி சாறு அதன் ஆன்டிபாக்டீரியல் தன்மைகளை முடுக்கி விட்டு, ஈறுகளின் மேல் படிந்திருக்கக்கூடிய பாக்டீரியாக்களை துடைத்து, இரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கிறது.


பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா வாயில் இருக்கக் கூடிய மைக்ரோஎன்விரான்மெண்டை அமிலத்தன்மை கொண்டதாக மாற்றி பாக்டீரியாக்களைக் கொல்கிறது. அதற்கு பேக்கிங் சோடாவை விரல்களில் தொட்டு, ஈறுகளில் தேய்த்துக் கொள்ளலாம்.


கிராம்பு

கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மெல்லலாம் அல்லது கிராம்பு எண்ணையை ஈறுகளின் மேல் தேய்த்துக் கொள்ளலாம்.

இது பற்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய பழமையான மற்றும் எளிமையானதொரு கை வைத்தியமாகும்.


புதினா

எண்ணெய் பல் துலக்கும் போது வாயை புத்துணர்ச்சியோடும், தூய்மையாகவும வைத்திருக்கக்கூடிய புதினா எண்ணெயை உபயோகிக்கலாம்.





உப்புக் கரைசல்

பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்து வரலாம்.

இது ஈறுகளில் ஏற்படக்கூடிய இரத்தக்கசிவுக்கான மிகச் சிறந்த கை வைத்தியமாகும்.


மசாஜ்

பல் துலக்கிய பின் விரல்களைக் கொண்டு ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

இது ஈறுகளை வலுவாக்கி இரத்திக்கசிவிலிருந்து அவற்றை பாதுகாக்கும்.


புகைப்பிடிப்பதை தவிர்த்தல்

புகைப்பழக்கமானது வாயின் உட்புறங்களில் குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் உயிர்வளியற்றதாக மாற்றும்.

எனவே வாயை பாக்டீரியாக்கள் இன்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனில், புகைப்பிடிப்பதைத் தவிருங்கள்.

கம்ப்யூட்டர் பிரச்னைகள் - காரணம் என்ன..?



கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.

ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்:

இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும்.

அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன.

அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும்.

கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.


2. புளூ ஸ்கிரீன் ஆட் டெத்:

விண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன.

நல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது.

ஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம்.

நீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள்.

அல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.


3. கம்ப்யூட்டர் தொடங்க மறுக்கிறது:

உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா?

அல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா? இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும்.

பல்வேறு பிரிவுகளை இணைக்கும் கேபிள்களில் பிரச்னை இருக்கலாம். அல்லது அவை சரியான முறையில் இணைக்கப்படாமல் இருக்கலாம். கீழே, சில ஹார்ட்வேர் பிரிவுகள் தரக்கூடிய பிரச்னைகள் தரப்பட்டுள்ளன.

1. ஹார்ட் ட்ரைவ்: உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்சிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம்.

2. சி.பி.யு..: சி.பி.யு. என அழைக்கப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

3. ராம் நினைவகம்: சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ராம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்.

4. கிராபிக்ஸ் கார்ட்: கிராபிக்ஸ் கார்டில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது டிஸ்பிளேயைத் தவறாகக் காட்டும். அல்லது குழப்பமான இமேஜ்களை உருவாக்கும். குறிப்பாக முப்பரிமாண கேம்ஸ் விளையாடுகையில் இது நடைபெறலாம்.

5. சிறிய மின்விசிறிகள்: கம்ப்யூட்டரில் சி.பி.யு. மற்றும் பொதுவான விசிறி என இரண்டு வகை விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்கும். கம்ப்யூட்டர் இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தினை வெளியேற்றவும், சி.பி.யு. வெப்பத்தினால் தாக்கப்படமால், பாதுகாப்பாக இயங்கவும் இந்த விசிற்கள் செயல்படுகின்றன. இந்த விசிறிகள் செயல்பாட்டில் தொய்வு அல்லது முடக்கம் ஏற்பட்டால், மேலே சொல்லப்பட்ட சி.பி.யு. மற்றும் கிராபிக்ஸ் கார்ட் பிரச்னைகள் ஏற்படலாம்.இதனால், கூடுதல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, கம்ப்யூட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் இயக்கத்தை நிறுத்தலாம்.

6. மதர்போர்ட்: மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

7. மின்சக்தி புழக்கம்: மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக ச் சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.

கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்கான பிற காரணங்கள் சாப்ட்வேர் புரோகிராம்களால் ஏற்படுபவையாக இருக்கலாம். மேலே சொன்ன அனைத்து வகை அறிகுறிகளும், சாப்ட்வேர் பிரச்னைகளாலும் ஏற்படலாம்.

மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரை வந்தடைந்த மால்வேர் புரோகிராம்கள், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் நுழைந்து, மொத்த இயக்கத்தினையும் நிறுத்தலாம்.

பெண்களைத் தாக்கும் தைராய்டு நோய்கள் - அதிரச்சி தகவல்கள்..!



எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம்.

என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.

உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. கடந்த மே மாதம் 25ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்பட்டது.

இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை.

ஆயுர்வேதம்/ஹோமி யோ/சித்தா மருந்திலிருந்து 3லிருந்து 6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும் தவிர்க்கலாம்.

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.

கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது....

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது.

தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும்.

சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

ஹைப்போ தைராய்டு நோய்:

இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்தத் தைராகசின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர்தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போதல், மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாகக் காணப்படுதல்.

மருத்துவமுறை:

தைராக்சின் மாத்திரைகள் மூலம் இந்த நோயை முழுமையாக குணப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். அதேபோல் ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை ஆண்டுககு ஒருமுறையாவது அறிந்து கொள்ள வேண்டும். அதிக தைராக்சின் உடலில் இருந்தால் இதயம், எலும்பு, சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

தைராய்டு கட்டிகள்:

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரியதாவதை காய்டர் என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் அல்லது புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரியதாகும் தன்மை உடையது. இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிட முடியும்.

பாராதைராய்டு நாள மில்லா சுரப்பி:

இது ஒரு சிறிய நாளமில்லா சுரப்பிகள். நமது உடலில் மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்துகிறது. சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியம், இதில் சிறுமாற்றங்கள் ஏற்பட்டாலும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில் தான் உள்ளது. பாராதைராய்டு நோயானது 750 பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. பொதுவாக நடுத்தர வயது பெண்களை அதிகமாக பாதிக்கிறது. பெண்கள் தைராய்டு நோய் பற்றிய பயத்தினை தவிர்த்து, மருத்துவ ஆலோசனையினால் பயமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோ, தெரியாமல் இருக்கும். முதல் மாற்றம் மாதவிலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக) உடல் பருமன் அதிகமாகி விடும்.

இளம் பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸ“ஸ்) இருக்கலாம். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். டெலிவரிக்கு பிறகு உடல் குண்டாவது முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படும். அதிக களைப்பு, குளிர்ச்சியை தாங்க முடியாமல் தோன்றும்.

கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் முழுங்கும் போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். மற்ற நாளமில்லா சுரப்பிகளும் வேலை செய்யாமல் முடி வளர்ச்சி இல்லாமல் முடி கொத்து கொத்தாக கொட்டி சிலருக்கு வழுக்கையே வந்து விடும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியில்லாமல் உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பை தடுத்து விடும்.

டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

அறிகுறிகள்:

தைராய்டு சுரப்பி, அதிகமாக சுரந்தாலும், கழுத்து வீக்கம், உடல் சூடு, படபடப்பு, வியர்வை அதிகமாகும். நாக்கு வறண்டு, குமட்டல், வாந்தி கூட வரும். சிலருக்கு குறை பிரசவம், கருச்சிதைவு போன்றவை உண்டாகும். நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள். .சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழும் மாதிரி தோன்றும். பார்வை மங்கும்.

மேலும், நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.

உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையும் தைராய்டு அறிகுறிகளாகும்.

இன்னும் விளக்கமாக அறிகுறிகள்:

தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்:

• உடல் எடை கூடுதல் /குண்டாகுதல்
• உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோ, உடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட)
• குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்பிற்கும் குறைவு)
• அதிகமான உடல் சோர்வு, களைப்பு
• முறையற்ற மாதவிலக்கு
• குறைவான வியர்வை
• அதிமான தூக்கம், சோர்வு
• மலச்சிக்கல்
• மன அழுத்தம்
• அதிகமாக முடி கொட்டுதல், முடி வறண்டு போதல், சரும வறட்சி
• அதிகமான குளிர் உணர்தல்
• அதிகமான உடல் சதை வலி, சதை பிடிப்பு, சதை இறுக்கம், வலிகள் அதிகமாக இருத்தல்
• நினைவாற்றல் குறைதல், பாலுணர்ச்சி குறைதல்
• இரத்தத்தில் TSH அளவு அதிகமாயிருத்தல்


தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபா; தைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்:

1. உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்)

2. அதிகமான, சத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்

3. அதிகமான, வேகமான நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்பு

4. கை, கால், நடுக்கம், பதட்டம்

5. மாதவிலக்கு இல்லாதிருத்தல் மிக குறைவான மாதவிலக்கு

6. மிக அதிகமான வியர்வை

7. தூக்கமின்மை

8. அடிக்கடி மலம் கழித்தல், அதிகமான குடலின் அசைவுத்தன்மை

9. பய உணர்வு, கோப உணர்ச்சி

10. அதிகமாக முடி கொட்டுதல்

11. அதிகமான உஷ்ணம் உணர்தல்

12. உடல் சதை பலஹீனம்

14. இரத்தத்தில் T3 அளவு

கழுத்து வலி

கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு கழுத்து வலி ஏற்படும். மேலும் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக காதுகள் வரை பரவி காதுகளில் வலி ஏற்படக்கூடும்.

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் ஏற்படின் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

கழுத்து பகுதியில் கட்டி

குரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும் கட்டி போன்ற மாறுதல்கள் ஏற்பட்டிருப்பின் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தைராய்டு மெதுவாக அல்லது விரைவாக வளரும் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும்.

பேசுவதில் கடினம்

இந்த நோய் சுற்றியுள்ள திசுக்களை நோக்கி வளர்கிறது என்றால் இந்த நேரத்தில் குரல்வளையில் வலி ஏற்படும் வழக்கமாக பேசுவதைக்காட்டிலும் அதிக சிரமத்துடன் குரல் கரகரப்பாக தொண்டைகட்டியது போல பேச நேரிடும்.

நிணநீர் கணுக்கள்

தைராய்டு புற்றுநோயாளிகளுக்கு கழுத்தில் நிணநீர் கணுக்கள் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொண்டையில் ஏற்படும் மென்மையான விரிவாக்கத்தை தைராய்டு புற்றுநோயாளிகளால் உணரமுடியும்.

விழுங்குவதில் சிரமம்

பேசுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதை விட அதிகமாக விழுங்குவதில் சிரமம் ஏற்படும். உணவு, பழங்கள் என எது சாப்பிட்டாலும் அதிக சிரமத்துடன் தான் விழுங்க நேரிடும். ஏனெனில் தைராய்டு புற்றுநோய் உணவுகுழாயை ஒடுக்ககிறது.

சுவாசித்தலில் சிரமம்

வழக்கமான நாட்களில் சுவாசிப்பதை போல தைராய்டு புற்றுநோயாளிகளால் சுவாசிக்க முடியாது. தைராய்டு புற்றுநோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். தொண்டைகள் சுறுங்கி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது


குறை தைராய்டு கோளாறுகளால் சோம்பேறித்தனம், அசதி, அதிக தூக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாத விலக்குத் தொந்தரவுகள் தொல்லை தரும். பொதுவாக உடல் எடை கூடிக் கொண்டே போகும். "காய்ட்டர்'' என்கிற தைராய்டு வீக்கம் கழுத்தில் ஏற்படும், கை, கால் வலி, மூட்டு வலி, மலச்சிக்கல் தோன்றும். கருத்தரிப்பதில் கூட தடை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும். முடி கொட்டிப் போகும் அபாயம் உண்டு. ஆனால் மிகை தைராய்டு கோளாறால் பாதிக்கப்பட்டவர் எப்பொழுதும் டென்ஷனாகப் படபடப்புடன் இருப்பார்கள். கண் முழிகள் பிதுங்கி வெளியே தெரியலாம். மாத விலக்குத் தொந்தரவுகள் ஏற்படலாம். குடும்ப உறவில் நிறைய சிக்கல்கள் ஏற்படலாம். அதனால் விவாகரத்து வரைப் போக நேரிடுகிறது.

இதில் தொண்டை வலி வர அதிக வாய்ப்பில்லை. தைராய்டு சுரப்பி பெரிதாகி பலூன் மாதிரி உணவு குழாயைத் தடுக்கும் போது தொண்டை வலி ஏற்படலாம். குழந்தைகளையும் இது தாக்குகிறது. குழந்தைகள் பிறந்ததிலிருந்து வயதுக்கேற்ப அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் தோன்ற வேண்டும். தைராய்டு நோய்க்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பாக்டீரியாக் வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்நோய் இருந்தால் அதுவும் நம்மை தொடர்ந்து தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வது போல இதையும் பரிசோதித்து தெரிந்து கொள்வது நல்லது. இளம் வயதில் கழுத்தில் புற்று நோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். நம் உணவில் அயோடின் குறைவை ஒரு காரணமாகக் சொல்லலாம்.

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.

உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

சிகிச்சை:

"ஐசோடோப்'' எனப்படும் அணுவியல் சிகிச்சை இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. இம்முறையில் நோய்களைக் கண்டு பிடித்து குணமாக்க முடியும். கதிர் இயக்கத் தன்மையுடைய இம் மருந்தை வாய் வழியாகச் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகின்றன

தைராய்டிற்கு சிகிச்சை என்பது தைராய்ட் கிளாண்டை முழுமையாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிர்வீச்சு அயோடின் சிகிச்சையும் செய்யப்படுகிறது.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடல் உணவுவகைகளும் நல்லது. பசலைக் கீரை, எள், பூண்டு ஆகியவை மிகச்சிறந்தது.

செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளில் இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம்.

மனக்கவலை, அழுத்தமும் தைராய்ட் சுரப்பி சரியாக வேலை செய்யாததின் ஒரு அறிகுறியே. எனவே மனதை இலகாக்குவது அவசியம்.

சிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது ஹைபோ தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

தைராய்டு சுரப்பி பழுதை உடனடியாக குணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

டயட்

உடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

தைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. மீன்வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் உப்பைப் பயன்படுத்த வேண்டும். அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைக்க வேண்டும். திறந்து வைக்கக் கூடாது. அப்படி திறந்து வைத்தால், உப்பிலுள்ள அயோடின் காற்றில் கரைந்து விடும்.


உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்..

பாட்டி வைத்தியம்

தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.

ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

உடல் அசதி தீர அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.

அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குணமாகும்.

அடிக்கடி சளித்தொல்லையால் அவதியுறுபவர்கள் அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி சரியாகும்.

தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.

தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.


தைராய்டு பிரச்சனையால் மலட்டுத் தன்மை ஏற்படுமா? 

தைராய்டு சுரப்பிக் குறைபாட்டை பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலும். இச்சுரப்பி மிகுதியாகச் சுரந்தாலோ, மிகவும் குறைவாகச் சுரந்தாலோ மலட்டுத் தன்மை ஏற்படும்.

தைராய்டு சுரப்பிக் கோளாறினால் ஏற்படக் கூடிய விளைவுகள் : 

முப்பத்தாறு நாட்கள் இடைவெளியில் மாதவிலக்குத் தோன்றினால், சில வேளைகளில் மாத விலக்கே ஏற்படாமல் இருந்தால் அல்லது அடுத்தடுத்து மாதவிலக்காகி, குறைந்த உதிரப்போக்கும், அதுவும் துர்நாற்றத்துடன் இருந்தால் முட்டை வெளிப்படாது. இயல்பான மாதப்போக்கு இருந்தாலும் முட்டை வெளிவருவதில் சிக்கல் ஏற்படும்.

உடல் எடை அதிகரிப்பு, அதிகமான கொழுப்பு, முட்டை வெளிப்படாத நிலை சேர்ந்ரு இருக்கும். இத்தகைய பிரச்சனையால் முட்டை வெளியிடப்படாத குறைபாடுள்ளவர்கள் உணவு முறை மாற்றம் செய்து கொழுப்பைக் குறைக்கலாம். அதிகமாக கொழுப்பைக் குறைத்தாலும் மலட்டுத் தன்மை வரும்.

அதிக உடற்பயிற்சி செய்தாலும் முட்டை வெளிப்படுவது தடைபடும். நீண்ட தூரம் ஓட்டம் ஆபத்தானது. மாதவிலக்கு ஒழுங்காக வராத நிலையிருந்தால் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சியைக் குறைத்துக் கொள்ளலாம்.

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் இருந்தால் முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி முளைக்கும். முட்டை வெளிப்படுவதில் சிக்கல் ஏற்படும்.

ஆயுர்வேதத்தில் தைராய்ட் நோய்க்கு நிரந்தர தீர்வு

தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

தைராய்டு நோய் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். முறையாக, தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ, சித்த ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மந்தாரை- தைராய்டு நோய்க்கு அற்புத தீர்வு. காஞ்சனாரம் என்று அழைக்கபடும் மந்தாரை-தைராய்டு நோய்க்கு அற்புத தீர்வாக பயன் படுகிறது. ஆயுர்வேத மருந்தகளில் -காஞ்சனார குக்கலு எனப்படும் மருந்தை ஆயுர்வேத டாக்டர்கள் தைராய்டு பிரச்சனைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆங்கில மருந்துகளில் -தைராக்சின் ,எல்டிராக்சின்,தைரோ நார்ம்,நியோ மர்கசோல் போன்ற மருந்துகளை தருவார்கள்.இது ஒரு குறைபாட்டிற்கான சப்லீமேண்டே தவிர நிவாரணம் இல்லை-ஆனால் நாங்கள் ஆயுர்வேதத்தில் தைராய்டு சுரப்பியை வேலை செய்ய வைக்கிறார்கள்.ஆங்கில மருந்துகளில் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாபிடவேண்டும். அனால் குறிப்பட்ட காலம் ஆயுர்வேத மருந்துகளை சாபிட்டாலே முழுவதும் குணபடுதிவிடமுடியம்.

ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம், ஹம்ஸபாதி கசாயம், பிருஹத் கட்பாலதி கசாயம், குக்குலுதிக்க கசாயம், காஞ்சனார குக்குலு மாத்திரை, ஷட்தர்ணம் மாத்திரை, சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம், முட்சங்கன், தேள் கொடுக்கு இலை போன்றவைகளும்

ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம், நேட்ரம் மூர், ஸ்பான்ஜியா, அயோடம், பிட்யூட்டரினம் , லெசித்தின், அகோனைட். பல்சேட்டிலா, சைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும். ஆங்கில மருந்துகள் சாப்பிடும் போது ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுவதில் தவறில்லை டென்சனை குறைப்பதும், தியான மன அமைதிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதும், வர்ம சிகிச்சைகளை மேற்கொள்வதும் தைராய்டு நோய் குணப்படுத்தலாம்.

தைராய்டு பிரச்சினைக்கு யோகாசனம் 

''நான் நோய்க்கு இரையாகித் துன்பம் அனுபவிக்கப் பிறக்கவில்லை. ஆரோக்கியமாக இருந்து ஆனந்தத்தை அனுபவிக்கவே பிறந்தேன். அதற்கு உடல் நலம் அவசியம். ஆகையால் எதை விட்டாலும் இனி யோகாவை விட மாட்டேன்'' என்று தினமும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், யோகா செய்வதற்கான அவகாசம், நேரம், உற்சாகம் ஆகியவை தானாகவே கிடைக்கும். தூக்கம் சோம்பல் என்று எது தலை தூக்கினாலும் அதனை மனதின் பலத்தால் விரட்டி அடிக்க முடியும்! சோம்பல் என்று சொல்லும்போதே நினைவுக்கு வருவது தைராய்டு. இது சரியல்ல! நம் உடல், தைராய்டு ஹார்மோன்களை அதிகமாகவோ குறைவாகவோ உற்பத்தி செய்வதே தைராய்டு நோய்க்குக் காரணம். அயோடின் குறைபாட்டினால் சிலருக்கு தைராய்டு சுரப்பியில் இருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாகச் சுரக்கும். இது குறை தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. அதீத கவலை மற்றும் மன அழுத்தமும் தைராய்டு சுரப்பிகளைச் சரியாக வேலை செய்ய விடாமல் முடக்கிவிடும்.

சிகிச்சை:

தைராய்டு பிரச்னையை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ஆசனங்களைத் தொடர்ந்து செய்ய நல்ல முன்னேற்றம் காணலாம். ஏற்கெனவே நோயாளிகள் செய்துகொள்ளும் மருத்துவச் சிகிச்சையுடன் யோகாவையும் சேர்த்து செய்தால் பலன் நிச்சயம். இந்த ஆசனம் செய்தால் தைராய்டு பிரச்னை குணமாகும் என்று முடிவாகச் சொல்லிவிட முடியாது. தொண்டையில் பிரச்னை என்பதால் தொண்டைக்கான ஆசனங்களைப் பரிந்துரைக்கிறோம். தைராய்டு பிரச்னை உள்ளவர்களின் உடல் எடை, வயது, உடலின் தன்மை ஆகியவற்றை வைத்து அவர்களால் எந்த அளவு ஆசனம் செய்ய முடியுமோ அதன்படி ஆசனங்களில் சிறிய மாற்றங்கள் செய்து அவர்களுக்கு ஏற்றாற்போல வடிவமைக்க வேண்டியதும் மிக மிக அவசியம். தைராய்டு நோயாளிகள் அபாசனம், விபரீதகரணி மற்றும் சர்வாங்காசனம் ஆகியவற்றைச் செய்யலாம். இந்த இதழில் சர்வாங்காசனம் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.


சர்வாங்காசனம்

சர்வ அங்க ஆசனம் = சர்வாங்காசனம். பெயருக்கேற்ப உடலின் அனைத்து அங்கங்களையும் சீராக்கிடும் ஆசனம் இது.

1. தரையில் மல்லாந்து படுக்கவும்.

2. படுத்த நிலையிலேயே, மூச்சை வெளியிட்டு இரு கால்கள் மற்றும் முதுகு ஆகியவற்றைச் சேர்த்துச் செங்குத்தாகத் தூக்கவும்.

3. கைகளால் இடுப்பைத் தாங்கி பிடித்துக்கொள்ளவும். சுவாசம் இயல்பாக இருக்க வேண்டும். மேலிருக்கும் இரு கால் கட்டை விரல்களையும் பார்க்க வேண்டும்.
கீழ்த்தாடை பகுதி நெஞ்சை ஒட்டியிருக்க வேண்டும். கழுத்துப் பிடரி சரியாகத் தரை விரிப்பில் படிந்திருக்க வேண்டும். முதுகெலும்பு நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

4. இந்த நிலையில் ஒரு நிமிடம் இருக்கவும். சுவாசம் நார்மலாக இருக்கட்டும்.

5. மூச்சை உள்ளிழுத்துக் கால்களை நிதானமாக இறக்கவும். முதுகெலும்பை இறக்கிப் படுத்த நிலைக்குத் திரும்பவும்.

ஆரம்ப நிலையில் இந்த ஆசனத்தை மூன்று நிமிடம் செய்தால் போதும். நாள் செல்லச் செல்ல நேரத்தை அதிகரிக்கலாம். தினசரி இந்த ஆசனத்தை ஒரு முறை செய்தால் போதும். அடுத்த ஆசனத்தைத் தொடங்கு முன் ஒரு நிமிடம் ஒய்வெடுக்க வேண்டும்.

பலன்கள்:


1. மூளைக்கு அதிக ரத்தம் பாய்வதால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

2. தைராய்டு சுரப்பியின் வியாதிகளில் இருந்து நிவாரணமளிக்கும். பிட்யூட்டரி சுரப்பியின்
வேலைத்திறனை மேம்படுத்தும்.

3. உடலை இளமையாக, வலிமையாக வனப்பாக வைக்க உதவும்.

4. பெண்களின் மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கு இந்த ஆசனம் சிறந்தது.

5. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள் இவற்றைப் போக்க உதவும். தோல் நோய்கள், டான்சில்ஸ் போன்றவற்றுக்கும் இந்த ஆசனம் நிவர்த்தி அளிக்கும்.
மேற்சொன்ன ஆசனத்தைச் செய்வதற்குக் கடினம். ஆனாலும் முறையான பயிற்சியால் செய்யலாம்.

தினமும் தொடர்ந்து இந்த ஆசனத்தைச் செய்யக் கண்கூடாக வித்யாசம் தெரியும். தைராய்ட் பிரச்னை குறைந்து வருவதை உணர முடியும்.

எச்சரிக்கை:

இந்த ஆசனங்களை நோயாளிகளின் வயது, என்ன வேலை பார்க்கிறார், அவரின் உடல் நிலை போன்றவற்றைப் பொறுத்து தான் யோக சிகிச்சை தர வேண்டும். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தலைவலி இருப்பவர்கள் செய்யக் கூடாது. மேலும் சிலர் மனநிலை யையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நோயாளிகள் மனதளவிலும் உடல் அளவிலும் கவுன்சிலிங் அளித்த பிறகே முறையாக சிகிச்சையை தொடங்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யும் முன்பு யோகா ஆசிரியரைக் கலந்தாலோசிப்பது அவசியம். ஆசனம் செய்யும்போது கண்களில், காதுகளில், தலையில், கழுத்தில் அழுத்தம் ஏற்பட்டால் ஆசனத்தை நிறுத்திவிட்டு யோகா ஆசிரியரிடம் செல்ல வேண்டும். செர்விகல் ஸ்பான்டிலோசிஸ் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. கண் வியாதி உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்ட 2 மணி நேரம் கழித்துத்தான் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும்!

தைராய்டு நோய் உணவு குறிப்புகள்

அட்ரீனல்களும் தைராய்டு சுரப்பிகளும் சீராக இயக்க போதுமான அளவு அஸ்கார்டிக் அமிலம் தேவை. எலுமிச்சம் பழ ஜூஸ் சாப்பிடலாம்.



முருங்கைக்கீரை கொய்யா சோயா மொச்சை போன்றவை தினமும் இடம்பெற்றால் உடலுக்குத் தேவையான வைட்டமின் தங்கு தடையின்றிக் கிடைத்து உடலும் உள்ளமும் அமைதிபெற்று நோய்கள் குணமாக ஆரம்பிக்கும்.

பெண்களே கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..!


இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது…??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..??? அதற்கு பலவழிகள் உண்டு. இதை ஆண், பெண் கடைபிடிக்கலாம். அவை

* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள்.

* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.

* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.

* பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்.

* அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்.

* கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்.

* சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.

* செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்.

* உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் சொல்லிப்பாருங்கள்.

* உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்.

* எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 1000 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்..100 எண்ணிக்கையை கடந்த உடன் உங்கள் மனநிலை சற்று மாறுவதை காணலாம்.

* இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்….

- கோபம் வரும் போது மேலே கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் உங்கள் கோபம் குறைந்து அமைதி அடைவீர்கள்.

செக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா..?- சிவகுமார் பதில்..!



சிவகுமார் ஒரு பன்முகத்திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார். இவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் பேசிய பல விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது.

அதில் ஒன்று- கவிக்குயில் படத்துக்காக அவர் ஷூட்டிங் சென்றபோது மனிதக் கழிவுகளினூடே அவர் படுத்துக்கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம். புயல் காற்று அடிப்பது போன்ற காட்சியாம் அது. படுத்துக்கொண்டிருக்கும் சிவகுமாருக்கடியில் தண்ணீர் ஓடுகிறது. அதில் மனிதக் கழிவுகளும் கலந்திருந்த துர்நாற்றம் வீசுகிறது. ஆனாலும் அவர் சில மணி நேரங்கள் அப்படியே படுத்த நிலையில் அந்த துர்நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு நடித்துக் கொடுக்கிறார்.

அதற்கு அவர் ஒரு காரணம் சொன்னார். அது சகலரையும் மிகவும் கவர்ந்ததிருக்கும்.அதாவது மனித மலத்தை மனிதர்களையே அள்ளச் சொல்லும் பழக்கம் நமக்கிருக்கிருந்தது. அந்தக் கொடுமைக்கு தெரிந்தோ தெரியாமலோ நாமும் பொறுப்புதான். அதற்கு தண்டனையாக அதை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அவர் சொன்னார். இதே வார்த்தைகளில் அல்ல. இந்த அர்த்தத்தில். அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதை அது நமக்கு காட்டுகிறது அல்ல்வா?இப்படி பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் நல்ல புரிதலுடனும் சொல்கிறார்.


அது பற்றிய கேள்வியும் பதிலும்;

கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல்வதில்லையே..நீங்களாவது விளக்குவீர்களா?

ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமியிலேயே பேரின்பம். காமக்கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப்பிய பாரதத்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம். குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டோமென்று கருதமுடியாது.ஆணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு; பெண்ணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு. ஆண் செயல்படுபவன்; பெண் அதை பெற்றுக்கொள்பவள்.

எத்தனை நதி பெருக்கடுத்தாலும் கடல் மட்டம் உயராது. எத்தனை விறகுக்கட்டைகளைப் போட்டாலும் வேள்வி நெருப்பு அணையாது. அவ்வளவு வீரியமானது பெண்களுடைய செக்ஸ் உணர்வு.சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று ஆகாயத்திலும் அடுக்கு மாடிகளிலும் பறந்தும் ஒருவன் ஜாலம் செய்யலாம். ஆனால் ஒரு பெண்ணை அவ்வளவு எளிதில் செக்ஸில் அடிபணிய வைக்க முடியாது.

மனதாலும் உடலாலும் ஒத்துழைப்பதில்லை என்று ஒரு பெண் முடிவெடுத்து விட்டால், சடலத்தோடு உறவுகொண்ட விரக்தியே மிஞ்சும்.ராமாயணத்தில் கௌதம முனிவன் மனைவி அகலிகையிடம் தேவேந்திரன் மாறுவேடத்தில் வந்து கூடுவான். தன் கணவன் என்று நினைத்து இணங்கிய அகலிகைக்கு அடுத்த சில நொடிகளில் இதுவேறு ஆடவன் என்று புரிந்துவிடுகிறது. இருந்தாலும் போகட்டும் என்று அனுமதித்துவிட்டாள் என்று ஒரு சம்பவம் உண்டு. இதை அறிந்த கௌதம முனிவன் அகலிகையைக் கல்லாகச் சமைத்துவிட்டான் என்று கதை போகும்.

டாக்டர் மாத்ருபூதம் செக்ஸ் பற்றிய விவாதத்தில் அகலிகையின் உணர்வை உறுதிப்படுத்துகிறார். எவ்வளவுதான் ஒரு பெண் மனதளவிலும் உடல்வழியாகவும் முரண்டுபிடித்தாலும், ஒரு காமுகனின் பலாத்காரத்தை- ஒரு கட்டத்தில் உடம்பு ஏற்றுக்கொள்கிறது. மனதை உணர்ச்சி தற்காலிகமாக வென்றுவிடுகிறது. சில கணம் உடல் அந்த உறவில் திளைத்து மூழ்கியபின் மீண்டும் மனம் உணர்ச்சியை வெல்லும்போது நடந்துவிட்ட தவறுக்கு அவள் கதறி அழுவாள். இதுவே உண்மை என்கிறார்.

மனித உடம்பை இரண்டாகப்பிரித்து மேல்பகுதி சுத்தமானது, கீழ்ப்பகுதி அசுத்தமானது. வலது கை சுத்தம்; இடது கை அசுத்தம் என்று பிள்ளைகளிடம் சொல்லித்தராதீர்கள் என்கிறான் ஓஷோ. உடல் முழுமையானது. வாயில் துர்நாற்றம் வீசாமல் இருக்கவேண்டுமென்றால் ஆசனவாய் சுத்தமாக இருக்கவேண்டும். ஆசனவாயில் அடைப்பு ஏற்பட்டால் துர்நாற்றம் மேலே கிளம்பி சிறுகுடல், இரைப்பை, உணவுக்குழாய் வழி வாயிலே புகுந்து வெளியேறும்.

ஆசனவாய் சிறுநீர்த்தாரை இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொள்ள குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். சிறுவனோ சிறுமியோ சிறுநீர்க் கழித்தபின் அதிலே தேங்கும் உப்பின் காரணமாக, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும்போது விரலால் சொறியவே செய்யும். அங்கு கை வைப்பது பாவம், தவறு என்று சொல்லி குழந்தைகளை அதட்டாதீர்கள், மிரட்டாதீர்கள்.

சிறுநீர் மற்றும் மலம் கழித்தபின் அந்தப்பகுதிகளைச் சுத்தமாகக் கழுவப் பழக்கிவிடுங்கள். அதைவிடுத்து, வீண் மிரட்டல் விடுப்பதால் தன் உடம்பில் உள்ள அந்த உறுப்பு, வேண்டாத ஒன்று-தீண்டத்தகாதது என்று அந்தச் சிறுவன் அல்லது சிறுமி மனதிலே எண்ணம் படிய, அவர்கள் வளர்ந்து திருமணம் செய்து முதலிரவில் சந்திக்கும்போது ஏதோ கெட்ட காரியம் செய்கிறோம்-பாவ காரியம் செய்கிறோம் என்று பயந்தே கூடுகிறார்கள். அதனால் பிறக்கும் குழந்தை குழப்பத்துடன் மிரட்சியுடன் பிறக்கிறது.

ஒரு வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்தவுடன் செக்ஸ் பற்றிய விஷயத்தையும், பிறப்பு உறுப்புக்களின் பயன்பாட்டையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்கிறான் ஓஷோ.

‘மனிதனுக்கு இயற்கையில் இரண்டு பசி உண்டு. ஒன்று மேல் வயிற்றுப்பசி. இன்னொன்று கீழ்வயிற்றுப்பசி. இரண்டு பசிக்கும் முறையாகத் தீனி போடாவிட்டால் அடங்காது’ என்கிறார் கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

அறியாத வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஐந்தாறு நாட்கள் அவளுடன் கூடிக்குலவி ருசி பழக்கிவிட்டு துபாய்க்கு நீ வேலைப்பார்க்கப் போய்விட்டால் அவள் கதி என்ன ஆகும்?

ருசி கண்ட பூனை எத்தனை நாட்கள் பொறுமையாக இருக்கும்?

இதில் அவள் தவறு எங்கே இருக்கிறது?

ராமகிருஷ்ண பரமஹம்சர் வணக்கத்திற்குரிய துறவி. அவர் நாற்பது வயது தாண்டியே திருமணம் செய்துகொண்டார். சாரதா தேவிக்கும் அவருக்கும் இருபத்தியிரண்டு வயது வித்தியாசம். தன் மனைவியை அம்பாள் வடிவமாக, சக்தியின் பிம்பமாக பரமஹம்சர் பார்த்தார். அவரது பக்தியை சாரதா அம்மையாரும் அப்படியே ஏற்றுக்கொண்டார்.அவர்கள் தெய்வீகத்தம்பதிகள்.

இன்று ஒரு ஆண் செக்ஸ் உணர்வு குறையத் துவங்கும் நாற்பது வயதில் தன்னைவிட 22 வயது குறைவான ஒரு பெண்ணை மணந்து, செக்ஸ் பற்றி எதுவும் அவளிடம் பேசாமல், நீ சக்தி வடிவம் என்று பீடத்தில் அமர்த்தி விபூதி அடித்தால் அவள் நிலை என்ன ஆகும் ? யோசியுங்கள்!

பூப்படைந்து ஆறு ஆண்டுகளில் செக்ஸ் உணர்ச்சிப்பொங்கிப் பிரவாகமெடுக்கும் வயதில் அவளை நீ ‘அம்பாள் வடிவம் நெருங்காதே’ என்றால் அவள் கதி என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.

திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்ததும் செக்ஸ் உணர்வை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். இரவு பகல் எந்நேரமும் அதே சிந்தனையோடு, இருபது ஆண்டுகள் கழித்தும் ஒரு ஆணோ பெண்ணோ அலையக்கூடாது.

‘அதே சமயம் இனவிருத்திக்காக மட்டுமே மனைவியைக் கூட வேண்டும். மற்ற நேரம் அவளை நெருங்கக் கூடாது’ என்கிற காந்திஜி தத்துவத்தைக் கடைப்பிடித்து, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியைப் பாராமுகமாய் ரிஷ்யசிருங்கர் போல, முற்றிலும் உறவு தவிர்த்து வாழ்வதும் அவசியமில்லை.

முழுமையான செக்ஸ் இன்பம் என்பது உடலாலும் மனதாலும் ஒருமித்து திருப்தி அடைவது. உடலிலே குறைபாடு உள்ளவர்கள், ஆண்மை இழந்தவர்கள் கூட, ஒரு பெண்ணுக்கு மனதளவில் செக்ஸ் இன்பம் அனுபவித்த திருப்தியைக் கொடுக்கமுடியும்.

விடுமுறை நாட்களில் உங்கள் மனைவியை ஊட்டிக்கு பஸ்ஸில் அழைத்துப் போங்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து மேலே கல்லாறு பகுதியை பஸ் கடக்கும்போது குளிரில் பற்கள் தடதடக்கும். உங்கள் ஸ்வெட்டரை உங்கள் மனைவிக்குப் போட்டுவிடுங்கள்.

அதிகாலை ஆள்மறைக்கும் மேகமண்டலத்தில், மயிர்க்கூச்செரியும் குளிரில், தொட்டபெட்டா சிகரம் சென்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி சூடான வேர்க்கடலைக் கொரியுங்கள். நடந்தே ஊட்டி ஏரிப்பகுதிக்கு வந்து ‘பெடல் போட்டில்’ ஐஸ்கிரீம் சாப்பிட்டவாறு ஒரு மணிநேரம் சவாரி செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் வரிசையாக மட்டக்குதிரைகள் நிற்கும். ஒரு குதிரையில் மனைவியை ஏற்றிவிட்டு லேக் ஏரியாவை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். பகல் விருந்துக்குப்பின் மேட்னி காட்சி. இரவு கதகதக்கும் ஹோட்டல் அறையில், நடுங்கிக்கொண்டு உள்ளே வரும் மனைவியை இறுகக் கட்டி அணைத்து படுத்துக்கொள்ளுங்கள். எழுபத்தைந்து விகித சந்தோஷத்தை அவள் அனுபவித்திருப்பாள். உடல்ரீதியான செக்ஸ் இங்கே இரண்டாம் பட்சம்தான்.

ஆணைப்பொறுத்தவரை செக்ஸ் விஷயத்தில் என்றுமே அவசரக்காரன்தான். அடுப்பை மூட்டாமலேயே, தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து தோசை மாவை ஊற்றிவிடுகிற புத்திசாலி இவன். சில சமயம் தோசைக்கல், 50 தோசைகளை வேக வைக்கும் அளவு சூடாக இருக்கும்போது இவன் அரைக்கரண்டி மாவை மட்டும் ஊற்றுவான்.

பெண்களை நெருங்காமலேயே இருந்துவிடுவது உத்தமம். அவர்களை ஆட்டத்திற்குத் தயாராக்கிவிட்டு, நீ சீக்கிரமே ஆட்டத்தை முடித்து ஓடுவது பின்னால் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இயற்கையிலேயே அதிக செக்ஸ் பசி உள்ள ஆணுக்கு செக்ஸ் உணர்வு குறைவாக உள்ள மனைவி அமைவதும் உண்டு.

அதிக செக்ஸ் பசி உள்ள மனைவிக்கு கையாலாகாத கணவன் அமைவதும் உண்டு. அப்போதுதான் ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ கதை நிகழும்.

50 ஆண்டுகள் மணமொத்த தம்பதியாய் வாழ்ந்த ஒரு ஜோடி, ஊசி முனைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளும் நிலையில், உச்சம் தொட்ட இன்பத்தை- ஐந்து அல்லது ஆறு முறை அனுபவித்திருந்தால் பெரிய விஷயம் என்கிறது ஒரு நூல்.

ஒன்று இவன் முந்தி உச்சம் தொட்டு அடங்கிவிடுவான்
அல்லது அவள் உச்சம் தொடும்போது இவன் ஓய்ந்திருப்பான்!

உடல் பலத்தைப் பயன்படுத்தி செக்ஸில் வெற்றி பெறுவதைவிட, சாதுர்யத்தைக் கடைப்பிடித்து, பெண்ணை உச்சம் கொண்டு சென்று மகிழ்விப்பது எளிது.

பூரண செக்ஸ் இன்பம் என்பது இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைவதே. அது தெய்வ நிலை.

உலகை மறந்த அற்புதக் கணம்!

அந்தக் கணங்களில்தான் ஈருடல் ஓருயிர் நிலையை இருவரும் எய்துகிறார்கள்.
இந்திய மண்ணில், பொதுவாக எந்தக் கணவனும் தன் மனைவியிடம் இன்று நீ சந்தோஷமாய் இருந்தாயா என்று கேட்பதில்லை. பெண்ணின் திருப்தி- அவள் உடல் அசைவுகளில், மயக்க நிலை முனகல்களில் வெளிப்படும். அதுபற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

டாய்லெட்டில் சிறுநீர் கழிக்கும் நேரமே இவன் செக்ஸுக்கு ஒதுக்குவது கொடுமை.
இந்த லட்சணத்தில் விலைமாதரிடம் விளையாடி எய்ட்ஸ் வாங்கிவந்து வீட்டிலிருக்கும் மனைவிக்கும் அவள் வயிற்றில் சுமக்கும் அப்பாவிக் குழந்தைக்கும் அந்த எய்ட்ஸை தானம் செய்யும் புண்ணியவான்களும் உண்டு.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் செக்ஸ் கூடாது என்றுதான் பெண்கள் திங்கள், வெள்ளி தினங்களில் எண்ணெய்க் குளியல் போடவேண்டும். ஆண் சனிக்கிழமை குளிக்கவேண்டும் என்று வகுத்து வைத்தனர்.

தலையில் குளிர்ந்த எண்ணெய் வைத்து, அரக்கித் தேய்த்து உடம்பெல்லாம் பூசிவிடும்போது உச்சந்தலை உஷ்ணம் உடம்பின் கீழ்ப்பகுதிக்கு வந்துவிடுகிறது. அன்று மனைவியைக் கூடும்போது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு சீக்கிரமே ஆட்டத்தை முடித்துவிடுவான். உடல் சக்தியும் அதிகம் வீணாவதால் மறுநாள் உடல் அசதி கூடுதலாக இருக்கும்.

குடித்துவிட்டு உறவுவைத்தால், கொடிகட்டிப் பறக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். மது, ‘உடல் இன்ப வேட்கையை அதிகப்படுத்திவிட்டு, செயல்பாட்டைக் குறைத்துவிடும்’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று படித்தவர்கள்கூட பெண்களை போகப் பொருளாகவே பார்க்கின்றனர். காலையில் எழுந்து குளித்து, அடுப்பு பற்றவைத்து சிற்றுண்டி தயாரித்து, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, ஊட்டிவிட்டு யூனிஃபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பிய கையோடு, கணவனை கவனித்து பின் அரக்கப் பரக்க அலுவலகம் போய் ஆணாதிக்கம் மிக்க மேனேஜரிடம் அநியாயமாகத் திட்டுவாங்கி, மாலைவரை ஃபைல்களில் மூழ்கி, ஆறு மணிக்கு பஸ் பிடித்து அடித்துப் பிடித்து வீடு வந்து, கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து, பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்து, இரவு உணவு தயாரித்து எல்லோருக்கும் பரிமாறிவிட்டு உணர்ச்சியற்ற பிணமாய்ப் படுக்கையில் சாய்பவள்-

உனக்கு, ஊர்வசி ரம்பை போல் காட்சியளிக்க வேண்டும்- தாசி போல் இன்பம் தர வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?

ஓய்ந்து களைத்து உறக்கத்துக்கு ஏங்கும் உடம்பு ஒருபோதும் செக்ஸுக்குத் தயாராய் இராது.
இன்றைய வாழ்க்கை அமைப்பில் கணவன் மனைவி சேர்ந்தாற்போல் இரண்டு மணிநேரம் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை. இருவரும் வேலைப் பார்க்கிறார்கள். பெரும்பகுதி அலுவலகத்திலும் பஸ் பயணத்திலுமே கழிந்துவிடுகின்றன. மிச்சமிருக்கிற சொற்ப நேரத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, ரேஷன், பெட்ரோல் என்று பற்றாக்குறை பட்ஜெட் பற்றிப் பேசி டென்ஷனாகவே இருக்கிறோம்.

கணவன் மனைவி வாரத்தில் கடைசி ஒருநாளாவது வீட்டைவிட்டு எங்காவது வெளியில் சென்றுவர வேண்டும். வசதி இல்லாதவர்களுக்கு சென்னையில் கடற்கரை இருக்கிறது. பாம்புப் பண்ணை, மிருகக் காட்சி சாலை இருக்கின்றன. வெளியூர் தம்பதிக்கு இருக்கவே இருக்கிறது சினிமா. அதைவிட்டால் அருகில் ஏதாவது ஒரு கோயில். இப்படி அன்றாடப் பிரச்சினைகளை மறக்க ஒரு நாளையாவது ஒதுக்குங்கள்.

கணவன் மனைவியரிடையே விரிசல் ஏற்பட புறக்காரணங்களைவிட, உடல் ரீதியான உறவில் ஏற்படும் குறைபாடு மற்றும் விரக்தியே அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து வாழவேண்டும்

போகப்பொருளாக- துய்த்தபின் தூக்கி எறியும் வஸ்துவாக, பெண்களை நினைப்பதை நாம் மறந்து, அவளும் நம்மைப்போல் ஒரு ஜீவன். நமக்கு இருக்கும் விருப்பு, பொறுப்பு, ஆசாபாசம் அவளுக்கும் உண்டு. அவளில்லாமல் குடும்பத்தை ஒரு ஆண் உருவாக்கிவிட முடியாது. பரம்பரைத் தழைக்க முடியாது. நம்மைப் பெற்று வளர்ப்பவள் பெண். நம் வெற்றிக்குத் துணை நிற்பவள் பெண். நம் வயோதிகக் காலத்தில் பாசத்தைப் பொழிபவள் பெண்….என்பதை உணர்ந்து நடந்தால் பூமியில் சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.