Tuesday, 11 February 2014

தூத்துக்குடி துறைமுகத்தில் டெக்னிகல் பணிவாய்ப்பு..!



தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளது நாம் அறிந்ததே. முத்துக் குளிப்பதில் இந்த நகரம் பெயர் பெற்றது. ஸ்பிக் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களும் இங்கு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த துறைமுகத்தில் டெக்னிகல் பிரிவிலுள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் : மெக்கானிக் டீசல் பிரிவில் 9, எலக்ட்ரீசியன் பிரிவில் 12, பிட்டர் மற்றும் வெல்டர் பிரிவுகளில் தலா 2, போர்ஜர் மற்றும் ஷீட் மெட்டல் ஒர்க்கர் பிரிவுகளில் தலா 1, மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள் பிரிவில் 10, டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கில் 2, பாஸா பிரிவில் 5, டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பிரிவு மெக்கானிக்கலில் 5, எலக்ட்ரிகலில் 3, கிராஜூவேட் அப்ரெண்டிஸ் – மெக்கானிகலில் 4 மற்றும் எலக்ட்ரிகலில் 1 காலியிடமும் நிரப்பப்பட உள்ளது.

தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து ஐ.டி.ஐ., இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங்கில் பட்டப்படிப்பு தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களையும் இணைத்துப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
V.O.Chidambaranar Port Trust, Tuticorin-628 004. (0461- 2352423,
Fax:2352385

விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.02.2014

இணையதள முகவரி: www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx

மணமகனுக்கு திடீர் வலிப்பு: தாலியை கழற்றி வீசிய மணமகள்..!



சேந்தமங்கலம் : நாமக்கல் அருகே முகூர்த்த நேரத்தில் மணமகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், மணப்பெண் தாலியை கழற்றி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் அடுத்த சேந்தமங்கலம் சேர்ந்தவர் ராமசாமி (26). இவருக்கும்  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சேர்ந்த ராதாவுக்கும் (பெயர்கள் மாற்றம்) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

கருமலை முருகன் கோயிலில் நேற்று காலை திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன.முகூர்த்த நேரம் நெருங்கியதும், மணமகள் கழுத்தில் தாலி கட்டு வதற்காக வந்த ராமசாமிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் அவரது வாயில் ரத்தம் கொட்டியது.

இருந்த போதிலும் ராமசாமி,  ராதாவுக்கு தாலி கட்டினார். மாப்பிள்ளைக்கு வலிப்பு இருப்பதை பார்த்து மணப்பெண் அதிர்ச்சியடைந்தார். உடனே, தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி வீசினார். மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவோ கெஞ்சியும் ராமசாமியை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இது பற்றி தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், பெண் வீட்டார் ஏற்க மறுத்ததால் சீர்வரிசை பொருட்களை திருப்பி கொடுத்த மாப்பிள்ளை வீட்டார், வீடு திரும்பினர். இதற்கிடையில், ராமசாமி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மணமகனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், மணப்பெண் தாலியை கழற்றி வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்க்கரை நோயும்...! இயற்கை மருந்தும்...!



  • மாத்திரைகள் சாப்பிட்டு குணமாகாத நோய்களுக்கு ஒரே மருந்து இயற்கை மருந்துதான். சர்க்கரை நோயாளிகள் காலை 2, மதியம் 3, இரவு 4  மாத்திரைகள் என தினந்தோறும் மருந்து சாப்பிட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒரு இயற்கை மருந்து முருங்கை சாறு.சர்க்கரை நோயாளிகள் முருங்கை கீரை சாறை 20 மிலி அளவு தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை  கட்டுப்படுத்தும். உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.



  • சர்க்கரை நோயாளிகள் பலவிதமான மாத்திரைகள் சாப்பிட்டும் நோயை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் முருங்கை கீரையை  பொரியல் செய்து அதில் எள்ளு பிண்ணாக்கு தூள் ஆகியவற்றை கலந்து உணவில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதில் தேவைக்கு தக்கவாறு, நோய்க்கு தக்கவாறு உணவை எடுத்துக்கொள்ளவும். உணவு முறையை முறைப்படுத்தி கொள்ள வேண்டும்.

  • சர்க்கரை நோயாளிகள் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழித்து கொண்டிருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் கெடும். அதிக தொந்தரவு  ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு முருங்கை பிசின், ஆவாரம் பிசின் ஆகியவற்றை சமஅளவில் தூள் செய்து காலை, மாலையில் நோய்க்கு தக்கவாறு பசும்  பாலில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இதை சாப்பிட்டு வரலாம். இதனால் அடிக்கடி சிறுநீர் போவதை கட்டுப்படுத்தலாம்.

அரை நிர்வாணமாக தோன்றி மோடிக்காக வாக்கு சேகரிக்கும் மாடல் அழகி..!- அதிர்ச்சியில் பா. ஜ. க



குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் அவருக்கு வாக்கு சேகரிப்பது போல் வெளியாகியுள்ள மும்பை மாடல் அழகி மேக்னா பட்டேலின் நிர்வாண புகைப்படங்கள் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

உடம்பில் துணியே இல்லாமல் நின்று கொண்டு நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்ற வாசகம் அடங்கிய பிளக்கார்டை கையில் பிடித்து போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் பாஜகவின் சின்னமான தாமரையை தன் உடலில் வைத்துக் கொண்டு மோடிக்கு வாக்கு சேகரிக்கிறார். பப்ளிசிட்டிக்காக இந்த நடிகை இப்படி செய்துள்ளதாக பலரும் விமர்சிக்கிறார்கள்.

நடிகை மேக்னா தன்னை பிரபலமாக்கிக் கொள்ள திடீர் என்று மோடிக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்ற பெயரில் நிர்வாண போட்டோஷூட் நடத்தி பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது பல்வேறு இணையதளங்களில் பரபரப்பாகவும், மின்னல் வேகத்திலும் பரவி வரும் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் பற்றி கருத்து தெரிவித்த மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் மாதவ் பந்தாரி, ‘மோடிக்கு பலர் ஆதரவு திரட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

எனினும், இதைப்போன்ற ஆபாசமான அணுகுமுறைகள் ஏற்கத் தக்கதல்ல. சில நிமிடங்களுக்குள் பிரபலமடைந்து, புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மோடியின் புகைப்படத்துடன் நிர்வாண போஸ் கொடுத்துள்ள மேக்னா பட்டேல் மீது எங்கள் கட்சியை அவமதித்ததற்காக வழக்கு தொடர வேண்டும் என தேசிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வருகிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிலேயே மிக பழைமையான இரண்டு கோவில்கள்..!




1, சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில், மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் வட்டம், காஞ்சி மாவட்டம்.

2, வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.


1, சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில், மாமல்லபுரம்...!

இது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலாகும். இது சென்னைக்கு அருகேயுள்ள புகழ்பெற்ற மாமல்லபுரத்திலிருந்து சில கல் (5 கிமீ) தொலைவில் சாளுவன்குப்பம் என்ற இடத்தில் உள்ளது. இந்தக் கோவில் 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது.

இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளதாக அகழ்வாய்வாளர்கள் நம்புகின்றனர். முதலாவது சங்க காலத்திய (கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை) செங்கல் கட்டுமானம் என்றும் இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல் கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின்) கருங்கல் கட்டுமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

பெரும்பாலான கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில்கள் அமைக்கப்பட வேண்டிய ஆகமநெறிகளை விளக்கும் "சிற்ப சாஸ்திரங்கள்" எழுதப்படுவதற்கு முன்னமேயே கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். இக்கோவில்தான் முருகக் கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது. தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவ காலத்துக்கு முந்தைய கோவில்கள் இரண்டில் இக்கோவில் ஒன்று. மற்றொன்று வேப்பத்தூரில் அமைந்துள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலாகும்.

2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட புயல் அல்லது ஆழிப் பேரலைகளால் இந்தச் செங்கல் கோவில் அழிந்து போயிருக்க வேண்டுமென்பது ஆய்வாளர்களின் கருத்து. 2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் எழுந்த ஆழிப் பேரலைகள் குறைந்த பின்னர் தொல்லியல் ஆய்வாளர்கள் சுனாமி அலைகளால் வெளிப்பட்ட பாறைகளில் கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தனர். சோழ மன்னர்கள் முதலாம் பராந்தகன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் ஆகியோரால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுகள் திருவீழ்ச்சில் (தற்போதைய சாளுவன்குப்பம்) என்ற இடத்தில் அமைந்த முருகன் கோவிலைப் பற்றிக் குறிப்பிட்டன.

2, வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர்...!

வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர் பெருமாளுக்குரிய கோவிலாகும். இக்கோவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள வேப்பத்தூர் கிராமத்தில் உள்ளது. கற்கள் மற்றும் சாந்து கொண்டு அமைக்கப்பட்ட இந்த விஷ்ணு கோவில் கிபி 850 களில் பல்லவ மன்னர்களாலும் பின்னர் சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனாலும் அதற்குப் பிறகு 1520 களில் கிருஷ்ணதேவராயராலும் கட்டுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. செங்கல்லால் ஆன பழைய கோவிலுக்கு மேல் இக்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில், பல்லவர் காலத்துக்கும் முந்தைய கோவில்களாக அறியப்பட்டுள்ள மிகவும் பழமையான இரண்டு கோவில்களில் இக்கோவில் ஒன்றாகும்.

இந்த கோவில் பற்றிய குறிப்புகள் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் உள்ளன.
தரையில் இருந்து, 4 மீ., உயரத்தில், மூன்று அடுக்குகளாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம், இன்னும் சிதைந்த நிலையில், காட்சி
அளிக்கிறது.

இன்று ஒற்றைக் கோபுரத்துடன் நின்றாலும் அதன் உள்ளே தெரியும் ஓவியங்கள் இக்கோயிலை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றது. தற்சமயம் கோயிலில் சிலைகள் யாதும் இல்லை. சுவர் சித்திரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஆய்வாளர்களுக்குப் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. புத்த விகாரையை நினைவுறுத்தும் சிற்பங்களை பார்க்கலாம். ஆதியில் ஒரு பௌத்த ஆலயமாக இருந்து பின்னர் வடிவம் மாறிய கோயிலாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. ஆய்வாளர்களின் தொடர்ந்து ஆய்வு இக்கோயிலின் ஆரம்ப நிலையைக் கண்டறிய உதவும்.

சிலம்பரசனுக்கு போட்டியாக களமிறங்கும் குறளரசன்..! T.R-ன் மாஸ்டர் பிளான்...!



சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறியதாவது:-

நான் தற்போது “ஒரு தலைக்காதல்” என்ற படத்தை இயக்க உள்ளேன். இப்படத்துக்கு நானே கதை, திரைக்கதையும் எழுத உள்ளேன். இப்படத்தில் புதுமுக நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன். எனது இளைய மகன் குறளரசனையும் கதாநாயகனாக அறிமுகப்படுத்த உள்ளேன். அந்த படம் பற்றிய அறிவிப்பு ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய எண்கள்...




    மருத்துவமனைகள்  

    ஜி.எச்.மருத்துவமனை    044 - 25305000.
    ஸ்டான்லி            044 - 25281347.
    கீழ்ப்பாக்கம்        044 - 28364951.
    ஆர்.எஸ்.ஆர்.எம்        044 - 25900362.
    லயன்ஸ் இரத்த வங்கி    044 - 28415959.

    காவல் துறை
       
    எச்1 வண்ணாரப்பேட்டை    044 - 25231442.
    மகளிர் காவல் ராயபுரம்    044 - 23452509.
    லஞ்ச ஒழிப்பு துறை        044 - 25383962.
    அவசர உதவி        100.

    தீயணைப்பு துறை    

    சென்னை தலைமை மையம்    044 - 25941149.
    கொருக்குபேட்டை நிலையம்    044 - 25544662.
    வியாசர்பாடி        044 - 25520101.
    சென்னை மாநகராட்சி  
    மேயர் அலுவலகம்        044 - 25381328.25384510.
    சுகாதாரத்துறை        044 - 25383611.
    அமரர் குளிர் சாதன பெட்டி    044 - 1913.

    இலவச உதவி எண்கள்
       
    அவசர ஊர்தி        108.
    அமரர் ஊர்தி        155377.
    குழந்தைகள் நலம்        1098.
    மகளிர் நலம்        1091.
    மூத்த குடிமக்கள்        1253.
     மின்சாரத்துறை பொது புகார்    155333.
    தலைமை அலுவலகம்    044 - 28521109.
    ஸ்டான்லி அலுவலகம்    044 - 25289412, 25288336.
    தெருவிளக்கு        044 - 25291455.

டி.ராஜேந்தரின் மகள் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது...!



டைரக்டர் டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். இவருக்கும் அபிலாஷ் சிங்கப்பூருக்கும் சென்னையில் உள்ள 'லீலா பேலஸ்' நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடந்தது.


தி.மு.க.தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், 'தினத்தந்தி' இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் தேசிய தலைவர் டத்தோ கே.எஸ்.நல்லா, புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், பிரபு, 'விக்ரம்' பிரபு, 'ஜெயம்' ரவி, கார்த்தி, நடிகைகள் குஷ்பூ, மீனா, மும்தாஜ், பூர்ணிமா பாக்கியராஜ், டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, ஷங்கர், பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, வசந்த், சேரன், விஜய், பாண்டிராஜ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர்கள் ஞானவேல்ராஜா, டி.சிவா, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர்கள் எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்திரி, ஏ.எல்.அழகப்பன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைவரையும் டி.ராஜேந்தர், அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன் ஆகியோர் வரவேற்றார்கள்.

‘பேஸ்மேக்கர்’ -அறுவை சிகிச்சையின்றி பொருத்திய இந்திய மருத்துவர்...!



அமெரிக்காவில் புதுமையான பேஸ்மேக்கரை அறுவை சிகிச்சையின்றி நோயாளியின் உடலில் பொருத்தி இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர்
 விவேக் ரெட்டி சாதனை புரிந்துள்ளார்.

சிறிய மெட்டல் சில்வர் டியூப் வடிவில் உள்ள இந்த பேஸ்மேக்கர், சில சென்டிமீட்டர் நீளம் மட்டுமே கொண்டது. இது, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்மேக்கரின் அளவில் 10இல் ஒரு பகுதியைவிட சிறியது.இதனைப் பொறுத்திக் கொண்டவர், வழக்கம்போல செயல்படமுடியும். தற்போது உள்ள பேஸ்மேக்கரை விட, இது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

இதய துடிப்பை சீராக்க நோயாளிகளின் உடலில் ‘பேஸ்மேக்கர்’ என்ற கருவி பொருத்தப்படுகிறது. தற்போது ஆபரேசன் மூலம் அது பொருத்தப்பட்டு வருகிறது.ஆனால் ஆபரேசன் இல்லாமல் ‘பேஸ்மேக்கர்’ கருவியை இதயத்தில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் பொருத்தியுள்ளார். அவரது பெயர் விவேக் ரெட்டி. இவர் நியூயார்க்கில் உள்ள ‘தி மவுண்ட் சினாஸ்’ ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார்.

தற்போது இதய நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும் ‘பேஸ்மேக்கர்’ ஈயத்தால் தயாரிக் கப்பட்டது. ஆனால் இது சில்வர் மெட்டலால் தயாரிக்கப்பட்ட சிறிய ‘டியூப்’ வடிவிலானது.இது வழக்கமான ‘பேஸ்மேக்கர்’ கருவியை விட 10 மடங்கு மிகச்சிறியதாகும். இக்கருவியை அடிவயிற்றுக்கும், தொடைக்கும் இடையே செல்லும் ரத்தக் குழாய் மூலம் இதயத்துக்கு செலுத்தி டாக்டர் விவேக் ரெட்டி இச்சாதனை படைத்துள்ளார்.

இந்த அதி நவீன பேஸ்மேக்கர்’ கருவி ‘நானோ’ டைப் ஆகும். இதை செயின்ட் ஜூட நிறுவனம் தயாரித்து பல பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு ‘லெட்லெஸ்–2’ என பெயரிட்டுள்ளனர்.

 இக்கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் 670 பேருக்கு பொருத்தப்பட உள்ளது. இவை 50 ஆஸ்பத்திரிகள் மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தப்பட உள்ளது.‘‘சர்வதேச அளவில் தற்போது 40 லட்சம் இதய நோயாளிகளுக்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி மூலம் உயிர் வாழ்கின்றனர். ஆண்டுக்கு 7 லட்சம் பேர் இக்கருவி பொருத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க்து.