பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியான மொழி திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடம் பெரும் அறிமுகத்தைப் பெற்ற நடிகர் பிரித்விராஜ் விரைவில் தான் அப்பாவாகப் போவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மலையாள நடிகர் பிரித்விராஜ். மொழி, வெள்ளித்திரை, சத்தம் போடாதே முதலிய படங்களின் மூலம் நன்கு அறிமுகமானவர்.
ஆனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில தமிழ்ப் படங்கள் சரியாகப் போகதாலும், மலையாளத் திரைப்படங்களில் நடிக்க அதிக வாய்ப்புக்கள் வந்ததாலும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்பொழுது மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு பிபிசி ரிப்போர்ட்டரான சுப்ரியா மேனனை மணந்து கொண்டார். சமீபமாக அவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் விரைவில் தான் அப்பாவாகப் போவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தானும் தன் மனைவி சுப்ரியாவும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், தனது வாழ்நாளில் மிக முக்கியமான வெளியீட்டிற்கான நாட்களை மகிழ்ச்சியுடன் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் மலையாளப்படங்களில் கவனம் செலுத்திவரும் பிரித்விராஜ் வசந்தபாலன் இயக்கிவரும் காவியத் தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துவருகிறார்.
0 comments:
Post a Comment