Sunday, 2 March 2014

முக அழகுக்கு மெருகூட்டும் உதடுகள்..!



முக அழகுக்கு பெருகூட்டுவது உதடுகள் என்றால் அது மிகையாகாது. உதட்டில் ‘லிப்ஸ்டிக்’ தடவிக் கொண்டால் மட்டும் போதாது. மென்மையாகப் பராமரிக்கவும் வேண்டும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறவும் செய்யும்.FreeGreatPicture.com 1142 female lips album முக அழகுக்கு மெருகூட்டும் உதடுகள்

மற்றவர்கள் உபயோகிக்கும் ‘லிப்ஸ்டிக்’கைப் பயன்படுத்துவது கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி ‘லிப்ஸ்டிக்’ உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமானதைத் தெரிவு செய்யுங்கள். ‘லிப்ஸ்டிக்’ போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள ‘லிப்ஸ்டிக்’கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக மிக முக்கியம். ‘லிப்ஸ்டிக்’கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. ‘லிப் பிரஷ்’ஷின் உதவியாலேயே ‘லிப்ஸ்டிக்’ போட வேண்டும் முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். தினமும் வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு 1 தேக்கரண்டி பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர வறண்ட உதடுகள் குணமாகும். 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெயுடன் சிறிதளவு தேன், பன்னீர் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும். உதடுகளில் தடவிய ‘லிப்ஸ்டிக்’கை நீக்க தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம். ‘லிப்ஸ்டிக்’ போடுவதற்கு முன் உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், ‘லிப்ஸ்டிக்’ நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் வறண்டு காணப்படும். உதடுகளுக்கு ‘மேக்அப்’ போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: முதலில் பவுண்டேஷன் தடவி விட்டுப் பிறகு ‘லிப்ஸ்டிக்’ தடவினால் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.’லிப்ஸ்டிக்’ உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் ‘லிப் சால்வ்’ உபயோகிக்கலாம். ‘லிப்ஸ்டிக்’ உபயோகிக்காமல் நேரடியாக ‘லிப் கிளாஸ்’ தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். ‘லிப்ஸ்டிக்’கின் மேல் தான் ‘லிப் கிளாஸ்’ தடவப்பட வேண்டும்.

நீண்ட நேரம் அப்படியே இருக்க ‘லிப் பேஸ்’ தடவி விட்டு அதன் மேல் ‘லிப்ஸ்டிக்’ தடவ வேண்டும். ‘லிப்ஸ்டிக்’ போடும் போது அதன் நிறத்திற்கு ஏற்றதாக ‘லிப் லைனரி’ன் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். சிவப்பு நிறத்தைச் சார்ந்த ‘லிப்ஸ்டிக்’குகளுக்கு சிவப்பு நிற ‘லிப் லைனரு’ம் உபயோகிக்கலாம். தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காகப் பயன்படுத்தலாம்’மாய்ஸ்சுரைசர்’ இல்லாத ‘லிப்லைனரை’ ‘லிப்ஸ்டிக்’காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு ‘க்ரீம்’ தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!




இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.

யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.

ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.

நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்..!


பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது.

Freedom Ship என்ற பெயருடைய இந்தக் கப்பல் மிதக்கும் உலகம் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் ஆடம்பர வர்க்கத்தினருக்காக இவ்வாறானதொரு கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வரவுள்ளதாக Freedom Ship இன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 25 அடுக்கு மாடிகள் உண்டு. இங்கு குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு மேலதிகமாக 30 ஆயிரம் விருந்தினர்கள் பயணிக்கக் கூடிய வாய்ப்பையும் கப்பல் வழங்குகிறது.

கப்பல் உருவாக்கப்பட்டுள்ள விதம் குறித்தான வரைபடத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு கப்பலில் உலகத்தைச் சுற்றிவர பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வராது - சிம்பு...!



ஹன்சிகாவுடனான காதல் முறிந்துவிட்டாலும், நட்பு தொடரும், இருவரும் இணைந்து நடிப்போம் என்று கூறியுள்ளார் சிம்பு.

ஹன்சிகாவுடன் உறவு இல்லை என சிம்பு அறிவித்த பிறகு, இருவரைப் பற்றியும் ஏராளமான கதைகள் உலா வர ஆரம்பித்துவிட்டன. இருவருக்கும் இடையில் காதல் முறிந்ததற்கு பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.

இந்த முறிவை அறிவிக்கக் காரணம், ஹன்சிகாவின் அம்மாதான் என்று சிம்பு தரப்பில் கூறப்படுகிறது. ஹன்சிகாவை அவர் மிரட்ட ஆரம்பித்ததால், சிம்புவும் ஹன்சிகாவும் பேசி வைத்து இந்த காதல் முறிவை அறிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தங்கள் காதல் முறிவு குறித்து சிம்பு கூறுகையில், ஹன்சிகாவின் நலன் கருதி நான்தான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் இருவருக்குமிடையில் நட்பு தொடரும், எங்களின் இந்த அறிவிப்பு எங்கள் தொழிலை பாதிக்காது. இருவரும் சேர்ந்து நடிக்க எந்தத் தடையும் இல்லை.

இப்போதும்கூட வாலு படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். சேர்ந்து நடிக்கிறோம். என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றார்.

மயானக் கொள்ளையை நேரில் பார்த்த பூலோகம் படக்குழுழ...!



‘ஜெயம்’ ரவி, த்ரிஷா நடிக்கும் புதிய படம் ‘பூலோகம்’. இப்படத்தை ‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது இந்தப் படம். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.

 ஏற்கெனவே அவர் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திலும் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். மேலும் பிரபல அமெரிக்க நடிகருமான ‘நாதன் ஜோன்ஸ்’ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘பூலோகம்’ படத்தின் போது சில முக்கிய காட்சிகள் மயானக் கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது.

தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக கொண்டாடப்படும் மயானக் கொள்ளை திருவிழா நேற்று தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முழுமையாக காண சென்னை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் விஜயம் செய்தனர்.

இந்த விழாவை கண்ட ஜெயம் ரவி, ‘இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பது எனக்கு அளவிட முடியாத பெருமை. பூலோகம் போன்ற 'மாஸ்'  கதையும், கதைக் களமும் என்னை மக்களிடம் மிக எளிதாக ஐக்கியமாக்கி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை' என்றார்.

பல்லி சொன்னால் பலிக்குமா..?



கிராமங்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதை கவனித்திருக்க முடியும்.அதுவும் பல்லி என்று சொல்லமாட்டார்கள்.'பெயர் இல்லாதது' என்று சொல்வார்கள்.உடல்மீது விழுந்துவிட்டால் இடத்தைப்பொறுத்து பலன் இருக்கிறது.உடனே பஞ்சாங்கம் கேட்கப்போவார்கள்.பல்லி சொல்வது என்பது திசையைக் குறித்து பலன் போட்டிருக்கும்.சில இடங்களில் இந்த இடத்தில் சொன்னால் நல்லது,இது கெட்ட இடம் என்று அடையாளம் வைத்திருப்பார்கள்.சிலர் குலதெய்வக் கோயிலில் பல்லி சொல்வதைக் கேட்கப் போவார்கள்.

இந்தப் பதிவு எழுத நேர்ந்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்.அவருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.கணவனை இழந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன.தனது ஒரே மகள் குறித்து பெரும் கவலையில் இருந்தார்.தூக்கமில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.வயிற்றில் எரிச்சலும்,உடலில் வலிகளுமாக இனம் புரியாத கவலை.பசியின்மையால் சில வாரங்களாகவே சரியாக சாப்பிடுவதில்லை.நண்பர் ஒருவர் அவரைப் பற்றி சொன்னதால் வரச்சொல்லியிருந்தேன்.

என்னைச்சந்திக்க வந்தவர் நண்பர் சொன்னது போல இல்லை.மிகத்தெளிவாக இருந்தார்.பல வாரங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததைஅவர்  சொல்லி  அறிய முடிந்தது.இப்போது தெம்பாக இருக்கிறார்.நம்பிக்கையுடன் பேசுகிறார்.கவலை போய்விட்டது.நிம்மதியாக தூங்க முடிகிறது.அவரது பிரச்னை சரியாகிவிட்டது.நல்லதுதான் நடக்கும் என்று உறுதியாகச்சொன்னார் அந்த நம்பிக்கை வந்ததற்குக் காரணம் பல்லி.அதுவும் அவரது உறவினர் வீட்டில் உட்கார்ந்து மகள் பற்றிய சிந்தனையின்போது பல்லி சத்தம்.அவரது உறவினர் சொன்னார்,"அந்த இடத்தில் சொன்னால் நல்லது".

உண்மையில் அவருக்கு மனதைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.எதிர்மறையாக நினைத்ததால் மனநலம் பாதிக்கப்பட்டது.பல்லிசொல் காரணமாக சிந்தனை சரியான திசையை நோக்க பிரச்சினை சரியாகிவிட்டது.தொடர் ஆலோசனையும் மருத்துவ உதவியும் கூட அவருக்கு தேவைப்பட்டிருக்கலாம்.இப்போது அதெல்லாம் தேவையில்லை என்றாகிவிட்டது.மோசமான சம்பவங்கள் நடந்து விட்டால் கூட நாம் எளிதில் சமாளித்துவிடுகிறோம்.அப்படி நடக்குமோ? இப்படி நடக்குமோ என்று எதிர்மறையாக சிந்தித்து துயரத்தில் வீழ்ந்துவிடுகிறோம்.

கலங்கி நிற்கும்போது சரியான ஒருவரால் எண்ணங்களை மாற்றினாலே நமக்கு பல பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும்.நம்மைச்சுற்றி இருப்பவர்களும் கூட இவற்றை தூண்டிவிடவே செய்வார்கள்.உண்மையில் மறைமுக எதிரிகள் என்பவர்கள் இவர்கள்தான்.பிரச்சினையை பற்றி பேச ஆரம்பிக்கும்போதே சொல்வார்கள்." அங்கே அப்படி நடந்தது,இன்னாருக்கு இப்படி நடந்தது என்பார்கள்".உஷாரா இருந்துக்கோ! என்று அன்பை வெளிப்படுத்துவார்கள்.அவர்களிடம் இருந்து எட்ட நிற்பதே நல்லது.நம்பிக்கையை,நேர்மறை எண்ணங்களை விதைக்கும் உறவுகள்தான் தேவை.கூட்டுக்குடும்பங்கள் இதைச்  சிறப்பாக செய்துவந்தன.

புதிதாக தொழில் ஆரம்பிக்கவேண்டுமென்று ஒருவர் பல்லி கேட்கப்போகிறார்.பல்லி சொல்லிவிட்டது.மனம் நல்லதாக சிந்திக்கத்துவங்கும்.வெற்றி மீது நம்பிக்கை இருப்பதால் தடைகளையும் எளிதாக சமாளித்துவிடுவார்.அப்புறம் முன்னேற்றம் எளிதாகிவிடுகிறது.இன்னமும் பேயை முனியப்பன் கோயிலில் ஒட்டிக்கொண்டிருப்பதும்  அதில் சில நேரங்களில் வெற்றி கிட்டுவதும் இப்படித்தான் நடக்கிறது.