Sunday, 23 March 2014

அறுசுவை உணவு...! - எதில் இருக்குனு உங்களுக்கு தெரியுமா...?




காரம்:

 உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.


கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


கசப்பு:

 உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.


இனிப்பு:

உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.


புளிப்பு: 

இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.


துவர்ப்பு:

 இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு:

 ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

ஞாபக மறதி உள்ளவரா நீங்கள்... - அவசியம் இதப்படிங்க...!




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகமாக இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது ஞாபக மறதி. உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிகள்:


* அறிவை பெருக்கும் விளையாட்டுகள்:

நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

* நன்கு தூங்குங்கள்:

தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் ஞாபக மறதியை ஏற்படுத்தும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது. இது போன்ற காரணங்கள் நினைவுத் திறனை குறைக்கும்.


* வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படியுங்கள்:

ஞாபக மறதி உள்ள மாணவர்கள், வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள். மாலை நேரத்தில் படிக்கும் பாடங்களை, அடுத்த நாள் காலை, மற்றொரு முறை பார்வையிடுவது நல்லது. அவ்வாறு செய்வதால் படித்த பாடங்கள் மனதில் பதியும்.


* எண்ணங்களை கற்பனை செய்யுங்கள்:

பாடத்தில் உள்ள படங்கள், அட்டவணைகள், கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன், எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துக்களை குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். புத்தகத்தில் உள்ள முக்கியமான வாக்கியங்கள், வார்த்தைகளை வண்ணங்கள் கொண்டு கோடிட்டு வையுங்கள். இவற்றின் வாயிலாக, எளிமையாக பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.


* எழுதும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்:

குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர, நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள். உதாரணமாக, பாடம் தொடர்பான சூத்திரங்கள், குறியீடுகள், போன்றவற்றை எழுதி வையுங்கள். எழுதியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள். இதனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும்.


* நினைவூட்டும் தந்திரங்கள்:

ஒரு பொருளையோ, நபரையோ, செய்தியையோ நினைவில் வைக்க விரும்புவோர், புகைப்படங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள், ஜோக்குகள், பாடல்கள், இணைப்பு வார்த்தைகள், வார்த்தைகளில் உள்ள எதுகை, மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க - சித்தமருத்துவம்..!




பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம் .

பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் .

எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விஷமனாலும் .

 அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .

நாய்க்கடி

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும் .


சீத மண்டலி

சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்

குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விஷம் முறியும் .


வண்டுகடி

ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும்.


செய்யான் விஷம்

தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் நீங்கும் .
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும்.


பூரான்

இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும் .

சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விஷம் முறியும் .


விரியன் பாம்பு கடித்தால்

இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும் .


நல்ல பாம்பு கடித்தால்

நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விஷம் வெளியேறும் .

தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விஷம் நீங்கும் வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விஷம் முறியும் .

தேள் கடித்தால்

தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் முறியும் .

நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விஷம் முறியும் .


எலிக்கடிகள்

அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும் .

அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும் .

மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் )

சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் .
சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் .

பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்

இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் . சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்!

வெந்தயம் - வயிற்றுக்கு நண்பன்... சக்கரைக்கு எதிரி...!




மஞ்சள், மிளகு, கடுகு, வெந்தயம்னு அஞ்சறைப் பெட்டியில இருக்கற எந்த பொருளா இருந்தாலும், அதை நல்லா தூய்மைப்படுத்தி பயன்படுத்தினா... அதோட பலனே வேற. அந்த வகையில, இந்தத் தடவை வெந்தய மகிமையைப் பார்க்கலாமா!

வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா... தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு... தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா... சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும்.

சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு... தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா... அஜீரணக் கோளாறு, வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் மாதிரியான சமாசாரங்கள் உங்க பக்கமே தலைவெச்சு படுக்காது.

அரை ஸ்பூன் வெந்தயத்தை வேக வெச்சு, அதோட கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தா... தாய்ப்பால் அதிகமா சுரக்கும். வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காய வெச்சு தூளாக்கிக்கோங்க. இதை காலை, மாலை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தா... மதுமேகம் (சர்க்கரை நோய்) தாக்கம் குறைஞ்சு, நாளடைவில நல்ல பலன் கிடைக்கும்!

தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தா... சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் இல்லாதவங்களும் இப்படி சாப்பிட்டு வரலாம். இதனால எந்த எதிர்விளைவும் இருக்காது!

வாய்ப்புண், வயித்துப்புண் தொந்தரவு இருக்குதா? ஒரு இளநீரை வாங்கி, அதுல ஓட்டைப் போட்டு, ஒரு கைப்பிடி வெந்தயத்தை உள்ள போட்டு மூடிடுங்க. ராத்திரியில அதை மொட்டை மாடியில பத்திரமா வெச்சு, காலையில அந்த வெந்தயத்தை சாப்பிடறதோட... இளநீரையும் குடிச்சா நல்ல பலன் கிடைக்கும்.

இப்படியெல்லாம் வெந்தயத்தை சாப்பிட விரும்பாதவங்க... தோசை, களினு பலகாரங்களா செய்தும்கூட சாப்பிடலாம். வெந்தயக்குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதன் மூலமாவும் நல்ல பலன்களை அடையலாம்!

ஹன்சிகா - அனுஷ்கா - ஆன்ட்ரியா''தான் வேணும்..-அடம் பிடிக்கும் ஜீவா...!




கதை பிடித்தால் சில ஹீரோக்கள் கால்ஷீட் கொடுப்பார்கள். சில ஹீரோக்கள் சம்பளம், பேனர், டைரக்டர் போன்ற காரணங்களினால் கால்ஷீட் கொடுப்பார்கள்.

நடிகர் ஜீவாவுக்கு இந்த விஷயங்கள் எதுவுமே முக்கியமில்லை. இவை எல்லாமே ஜீவாவுக்கு இரண்டாம்பட்சம்தான். தன்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அணுகும்போது, ஜீவா சொல்லும் முதல் வார்த்தை...

எனக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக த்ரிஷா உடன் ஜோடி சேர வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டார். தன் ஆசையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லிப்பார்த்தார்.

 அவரது ஆசையை நிறைவேற்ற சில தயாரிப்பாளர்கள் த்ரிஷாவை அணுகியபோது, மார்க்கெட் இல்லாத ஜீவா உடன் நடிக்க முடியாது என்று மறுத்தார் த்ரிஷா.

சில வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு மார்க்கெட் போனது. அதன் பிறகு என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவா உடன் சேர்ந்து நடித்தார்.

ற்போது காஜல் அகர்வால், அனுஷ்கா, அமலாபால் என்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி வருகிறாராம் ஜீவா.

உங்கள் படத்துக்கு உள்ள வியாபாரத்துக்கு நீங்கள் சொல்லும் நடிகைகளை எல்லாம் நடிக்க வைக்க முடியாது என்று தயங்கித் தயங்கி ஒரு தயாரிப்பாளர் சொன்னாராம்.

கடுப்பான ஜீவா, அப்படீன்னா சில வருஷம் வெயிட் பண்ணுங்க. என் ரேன்ஜ் உயர்ந்ததும் நான் டேட் தர்றேன். அப்ப படம் பண்ணலாம், இப்ப கிளம்புங்க. என்று அடிக்காத குறையாய் விரட்டினாராம்.

கண்களை தாக்கும் கணினி - அதிர்ச்சி தகவல்......!




இன்றைய பறக்கும் யுகத்தில் கணினி பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்கக்கூடியது என்றாலும் உடல்நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு.

கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்களில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரிசையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண்தான். ஆகையால் அதில் இருந்து தப்பித்துக் கொளள சில வழிகள்....

முதலில் அதிக நேரம் கணினியைப் பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கணினி திரைவில் வெளிச்சத்தை பார்ப்பதால் கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் 15 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.

அலுவலகத்தில் வேலை செங்கிறவர்களுக்கு இது சாத்தியப்படாது. ஆனால் இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஓய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

தொடர்ந்து கணினி முன்பு வேலை செய்யும் நபர்கள் இடை இடையே கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது. கணினியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று.

இதனால் முதுகுத்தண்டு நேராக இருக்கும் இதுபோல் செய்தால் உடல்வலி அதிகம் வருவதை தவிர்க்கலாம். பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்ததது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால் பாதத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

டைப் செய்யும் போது முழங்கைகளை இடையில் பக்கத்தில் வைத்திருப்பதால் கைகளுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியையும் எளிதாக குறைக்கலாம்.

கணினி திரையில் வெளிச்சத்தை குறைத்து வைத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம். இந்த 6 செயல்களையும் செய்து கணினி பாதிப்பில் இருந்து கண்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். தவற விட்டால் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வது போன்ற நிலை தான் ஏற்படும்.

உலகின் மிகவும் மோசமான நகரம் எது தெரியுமா..?




உலகின் முக்கிய பெருநகரங்களை அரசியலமைப்பு, குற்ற நிகழ்வுகள், சுற்றுச்சூழல் மாசு போன்ற முக்கிய அம்சங்களின் அடிப்படையிலும், அங்கு வாழும் மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற அளவுக்கோலின் படியும் ‘மெர்செர் கண்சல்ட்டிங் குரூப்’ என்னும் நிறுவனம் ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி பட்டியலிட்டு வருகிறது.

உலகில் உள்ள 239 முக்கிய நகரங்களின் தரவரிசை பட்டியலை இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அந்நிறுவனம், அனைத்து வகைகளிலும் உலகின் மிகவும் மோசமான நகரம் என்று ஈராக் தலைநகரான பாக்தாத்தை குறிப்பிட்டுள்ளது.

இங்கு வாழும் மக்கள் அன்றன்றாடம் உயிர் பயத்துடன் தீவிரவாத தாக்குதல்களை சந்தித்துக் கொண்டு,போதுமான குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வெளியேற்றும் வசதி போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத நிலையில், உரிய வேலைவாய்ப்பின்றி ஊழல் நிறைந்த அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாழ்ந்து வருவதாக இந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

கி.பி.762-ம் ஆண்டு டைகிரிஸ் ஆற்றின் மீது உருவாக்கப்பட்ட பாக்தாத் நகரம், வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான நகரங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் தலை நிமிர்ந்து நின்றது.

தலை சிறந்த பல்கலைக்கழகங்கள், வரலாற்று பதிவுகளை பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கும் கலையழகு மிக்க அருங்காட்சியகங்கள், நவீன விமான நிலையம், என அரபு நாடுகளின் கம்பீர அடையாளமாக திகழ்ந்த இந்நகரம் இன மோதல்களாலும், அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினருடனான போர் ஆகியவற்றிலும் சிக்கி, உருக்குலைந்து, சின்னாபின்னமாகி தற்போது பேய் வீடு போல் காட்சியளிப்பதாக உள்ளூர்வாசிகள் கவலையுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் இரவு வேளைகளில் வெளியே செல்ல பயந்தபடி, ஒவ்வொரு நிமிடத்தையும் மரண பயத்துடன் கடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்..!




பச்சை இலைக் காய்கறிகளில் முக்கியமானது தான் முட்டைக்கோஸ். ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் களைக்கோசு கூட இந்த குடும்பத்தை சேர்ந்தவைகளே. பெரிய அளவில் உருண்டையான இலை வகையை சேர்ந்த முட்டைகோஸ் கிழக்கு மெடிடேரேனியன் மற்றும் ஆசியாவில் இருந்ததாக நம்பப்படுகிறது. வருடம் முழுவதும் கிடைக்கும் இந்த காய் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். சுலபமாக அனைவராலும் வாங்கக்கூடிய மலிவு விலை காயாகவும் விளங்குகிறது முட்டைக்கோஸ்.

முட்டைக்கோஸிலேயே சிவப்பு மற்றும் பச்சை என பல வகைகள் உள்ளது. அவைகளை பச்சையாகவும் உண்ணலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். சில காயை போல் அல்லாமல், இதனை பச்சையாக சாப்பிட்டாலும் சுவை மிகுந்ததாகவே இருக்கும். அவற்றின் சுவை லேசான இனிப்புடன் நுகர்வதற்கும், சுவைக்கும் நன்றாக இருக்கும். வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ள முட்டைக்கோஸில் கலோரிகளும் குறைவாக உள்ளது. இதனை கிழக்கு மற்றும் மேற்கு வகை உணவுகளில் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இப்போது அந்த முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்ப்பதால், எந்த மாதிரியான நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போமா!!!

புற்றுநோயை தடுக்க உதவும்

முட்டைக்கோஸில் உள்ள பல குணங்கள் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை எதிர்த்து போராடும். அதிலும் இதில் உள்ள சல்போரோபேன் மற்றும் இண்டோல் 3 கார்பினோல் புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராடும் குணங்களை கொண்டவைகளாகும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

முட்டைக்கோஸில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. அதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து இயக்க உறுப்புகளை அடக்கும்.

அழற்சியை எதிர்க்கும் குணங்கள்

இந்த காய்கறியில் அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளதால், அழற்சியினால் ஏற்படும் மூட்டு வலியை எதிர்த்து போராடும்.

கண்புரை இடர்பாட்டை நீக்கும்

முட்டைக்கோஸில் உள்ள பீட்டா-கரோட்டின் கண்களில் ஏற்படும் மாக்குலர்த்திசு சிதைவில் இருந்து காக்கும். அதனால் கண்புரை வராமல் காக்கும்.

அல்சைமர் ஏற்படும் ஆபத்து குறையும்
முட்டைக்கோஸை உட்கொண்டால், முக்கியமாக சிவப்பு நிற முட்டைக்கோஸ், அல்சைமர் என்னும் ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகிறது. அதற்கு காரணம் முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே என்னும் சத்து தான்.

குடற்புண் சிகிச்சைக்கு உதவி புரியும்
குடற்புண் அல்லது வயிற்றில் ஏற்படும் அல்சரை குணப்படுத்த முட்டைக்கோஸை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் சாற்றில் உள்ள அதிக அளவிலான க்ளுடமைன், அல்சரை குணப்படுத்தும் குணங்களைக் கொண்டது.

உடல் எடை குறைய துணை நிற்கும்
எப்போதும் உடல் எடை மீது கவனம் கொண்டவர்கள் கண்டிப்பாக முட்டைக்கோஸை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முழு கப் சமைத்த முட்டைக்கோஸில் வெறும் 33 கலோரிகள் தான் உள்ளது. அதனால் முட்டைக்கோஸ் சூப்பை எத்தனை கப் வேண்டுமானாலும் குடியுங்கள், அது எடையை அதிகரிக்காது.

மலச்சிக்கலுக்கு நிவாரணி

இதிலுள்ள நார்ச்சத்து சரியான செரிமானத்திற்கு உறுதுணையாக விளங்கும். அதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.

பொலிவான சருமம்

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளதால் அது வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளில் இருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தக்க வைக்கும்.

தசை வலியில் இருந்து நிவாரணம்

முட்டைக்கோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசை வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். எனவே தசை வலி இருக்கும் போது முட்டைக்கோஸை சமைத்து சாப்பிடுங்கள்.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்...!




*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ரஜினி வழியில் நான் குறுக்கிடமாட்டேன்.. ஏனா ஏற்கனவே வச்ச ஆப்பே இன்னும் எடுக்கல..!




 'கோச்சடையான்' வெளியீட்டு தேதியை பொறுத்தே 'தெனாலிராமன்' வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு மறுபடியும் நடித்து வரும் படம் 'தெனாலிராமன்'. . ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் யுவராஜ் இயக்கி வருகிறார். இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. 'கோச்சடையான்' வெளியீட்டு தேதியைப் பொறுத்தே, 'தெனாலிராமன்' தேதி முடிவு செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா தனது ட்விட்டர் தளத்தில், "'தெனாலிராமன்' படத்தின் சென்சார் அடுத்த வாரம் நடைபெறும்.

ஏப்ரல் 1ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவும், 11ம் தேதி படத்தினை வெளியிடலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறோம்.

 ஆனால் 'கோச்சடையான்' வெளியீட்டு தேதியைப் பொறுத்தே 'தெனாலிராமன்' வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

ரஜினியுடன் மோதும் வடிவேலு என்ற செய்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஜில் ஜங் ஜக் - ஒரு அலசல் - எல்லாமே சில காலம்தான்...!




சந்தில் சிந்து  பாடுவது கேள்விபட்டு இருப்பீர்கள், ஆனால் இப்போது தான் கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் சினிமாவை தன் நக்கல் பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் கட்டி போட்ட நம்ம கவுண்டமணி, சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்த காலத்தில் பல பேர் காளான்போல் நுழைந்தனர், அந்த வரிசையில் முதலில் நிற்பவர் சந்தானம்.

சந்தானம் பண்ற காமெடிகள் அனைத்தும் கவுண்டரின் ஸ்டைலில் உள்ளவை.

காலப்போக்கில் “டூப்ளிகட்  கவுண்டர்”  என்று கூட சந்தானத்தை கிண்டல் அடித்தார்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் திசையை நோக்கி பயணித்தார் சந்தானம்.

பிறகு அவருக்கு சுத்தி சுத்தி சுக்கிர திசை அடிக்க ஆரம்பித்தது, வெற்றி மேல் வெற்றி, பல ஹீரோக்கள் அவர் கூட நடிக்க ஓத்த காலில் நின்றார்கள், சில படங்கள் கூட அவரால் ஓடியது, குறிப்பாக இயக்குனர் ராஜேசுடன் இவர் கூட்டணி சேர்ந்த படங்கள் எல்லாம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பின.

ஆனால் அதே இயக்குனர் நடிப்பில் தீபாவளி அன்று வெளி வந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா படு தோல்வி அடைந்ததால், சந்தானத்தின் காமெடிகள் சலித்து விட்டன என்ற  பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் உலாவ ஆரம்பித்துவிட்டன, இதையும் தாண்டி பல சம்பள சர்ச்சையிலும் சிக்கினார் சந்தானம்.

இந்த இடைப்பட்ட கேப்பில் என்ட்ரி ஆனார் நடிகர் சூரி, வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான அவர், அதற்கு அடுத்ததாக நடித்த சில படங்கள் வர்த்தக ரீதியாக  வெற்றி அடைந்தன.

இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி அடைந்து, அவரின்  காமெடி அனைவராலும் கவரப்பட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மோஸ்ட் வாண்டட் கமெடியனாக உருவெடுத்தார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாக்களை அசராமல் சாப்பிட்டு கடைக்காரரை அசரவைத்ததுடன்,  நம்மையும் சேர்த்து இன்று வரை அசரவைத்தவர் சூரி. அதனால் தான்  இன்று வரை அவர் பரோட்டோ சூரி என்று ரசிகர்களால்   அழைக்கப்படுகிறார்.

படங்கள் மேல் படங்கள் கமிட் ஆக தனக்கு ஒரு குரூப்பையும் அமைத்து கொண்ட  அவர் மீது ஹீரோக்கள், மற்றும் இயக்குநர்களின் பார்வை திரும்பியது.

சந்தானத்திற்கு அடுத்தபடியாக காமெடி லிஸ்ட்டில் நம்ம தாம் இருக்கோம் என்பதை தெரிந்துகொண்ட சூரி, தற்போது கணிசமாக சம்பளத்தையும் உயர்த்திவிட்டாராம்.

இதுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக ரீஎண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நம்ம கவுண்டர்.

தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் 49 ஓ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

ஆகமொத்தத்தில் பந்தயத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தனது வெற்றிக்கு காரணமான இயக்குனருக்கே அல்வா கொடுத்த சிவகார்த்திகேயன்...!




வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற வெற்றி படத்தை கொடுத்த பொன்ராம், தன்னுடைய அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டராம் தெரிவித்தது.

தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தாக லிங்குசாமி தயாரிப்பில் தான் இந்த படம் படப்பிடிப்புக்கு போக வேண்டியது.

இன்னும் சொல்ல போனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம், ஆனால் இயக்குனரோ திட்டமிட்டபடி  இன்னும் கதையை ரெடி பண்ணவில்லையாம்.

அதனால் சிவகார்த்திகேயன் அப்ஸெட்டாகிவிட, முதலில் பாடல் காட்சிகளை எடுத்துவிட்டு, பிறகு டாக்கிபோர்ஷனை எடுக்கலாம் என்று பொன்ராம் யோசனை சொன்னாராம்.

அதை நிராகரித்த சிவகார்த்திகேயன் நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பிறகு இந்த காம்பினேசனுக்கு ரொம்பவும் எதிர்பார்ப்பு இருக்கு, அதனால் எனக்கு விருப்பமில்லை.

எனவே இன்னும் காலஅவகாசம் எடுத்துக்கொண்டு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சொன்னதோடு, தனுஷின் டானா படத்துக்கு கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டார்.

எந்த விளம்பரமும் இல்லாமல் டானா படத்துக்கு பூஜை போடப்பட்டு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதனால் புள்ளி மான் வேகத்தில் கதை ரெடி பண்ணிட்டு இருக்கிறாராம் இயக்குனர் பொன்ராம்.

சத்துப் பட்டியல் ஆலிவ் எண்ணெய் இருக்குங்க...!




ஆலிவ் எண்ணெய் தன் நறுமணத்தாலும், சுவையாலும், சத்து பொருட்களாலும் உலகலாவிய புகழ் பெற்றது. இந்த எண்ணெய், அறுவடை செய்யப்படும் ஆலிவ் காய்களின் முதிர்ச்சிக்கு ஏற்ப நிறம் மாறும். ஆலிவ் எண்ணெய் உடலுக்கு அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. 100 கிராம் ஆலிவ் எண்ணெய் சுமார் 884 கலேரிகள் ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.

அதிக கொதிநிலை கொண்டது ஆலிவ் எண்ணெய். 210 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில்தான் ஆவியாகும் என்பதால் உணவுப் பண்டங்கள் விரைவில் சமைக்க உதவியாக இருக்கிறது. அதிக அளவில் லிப்பிடுகள் இதில் உள்ளன. இவை பூரிதமான கொழுப்பு, ஒற்றை பூரிதமாகாத கொழுப்பு, பலபூரிதமாகாத கொழுப்புகளை ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாக மாற்றி வழங்கும்.

கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். ஆலிவ் ஆயில்கள் எளிதில் கெடுவதில்லை. நல்ல குளிர்ச்சி கொண்டது. நீண்ட காலம் வைத்திருந்து சமைக்கப் பயன்படுத்தலாம். ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்புகள் இதய பாதிப்புகள் மற்றும் முடக்குவாதம் ஏற்படாமல் காப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஆலிவ் எண்ணெயில் உள்ளன. இவை மூளைத்திறனுக்கு அத்தியவாசியமாகும். ஏராளமான நோய் எதிர்ப்பு பொருட்களும் ஆலிவ் எண்ணெயில் இருக்கின்றன. ஆலிரோபின், ஆலோகேன் தால் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் குறிப்பிடத்தக்கவை.

இவை வைட்டமின்களுடன் இணைந்து புற்றுநோய், உடல்எரிச்சல், கரோனரி தமனி பாதிப்பு, நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு எதிராக செயலாற்றக் கூடியது. ஆலிவ் எண்ணெயில் 'வைட்டமின் இ' உள்ளது. 100 கிராம் ஆலிவ் எண்ணையில் 14.39 மைக்ரோகிராம் அளவு உள்ளது.

இது தினமும் உடலில் சேர்க்க வேண்டிய அளவான ஆர்.டி.ஏ. அளவின்படி 96 சதவீதமாகும். இது செல் சவ்வுகள் உறுதியாக இருப்பதற்கும், தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து தற்காப்பு பெறவும் உதவியாக இருக்கும். வைட்டமின் கே, ஆலிவ் எண்ணெயில் சிறிதளவு உள்ளது. இது எலும்பின் எடையை அதிகரிக்க அவசியமாகும். நரம்பு பாதிப்புகளை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கும்.

பயன்பாடுகள்:

ஆலிவ் எண்ணெய் பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது. பொறித்தெடுக்கும் எண்ணெய்ப் பண்டங்கள் தயாரிக்க உகந்தது ஆலிவ் எண்ணெய். ஸ்பெயின் நாட்டில் 'ஆன்டலுசியன் சாலட்', ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

தக்காளி, வெள்ளரிக்காய், குடமிளகாய், வெங்காயம் மற்றும் நறுமண இலைகளுடன் ஆலிவ் எண்ணெயும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. இத்தாலியில் 'எக்பிளான்ட் பிரை' பிரசித்தி பெற்றது. கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவை ஆலிவ் எண்ணெயில் பொறித்து தயாரிக்கப்படுகிறது இந்த உணவு.

பிரான்சில் 'ஆலிவ் டபனேட்' விரும்பி சுவைக்கப்படுகிறது. அக்ரோட்டுக் கொட்டைகள், வெங்காயம், பூண்டு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவை ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்து சுவைக்கப்படுகிறது.

புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு தரும் டி.இமான்...!




விஜய் டி.வி.யின் ‘ஸ்டார் சிங்கர்’ நிகழ்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்த திவாகருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வழங்கிய டி.இமான்,


அதற்கடுத்து கேரளாவை சேர்ந்த கண்பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியை ஒரு படத்தில் பாட வைத்தார்!


இப்படி நிறைய புதியவர்களுக்கு பாட வாய்ப்பு வழங்கி வரும் டி.இமான், அடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சரத் சந்தோஷ் என்ற இளைஞருக்கும் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார்.


இமான் இசை அமைக்கும் ’பஞ்சுமிட்டாய்’ படத்தில் வரும் டூயட் பாடல் ஒன்றில் சின்மயி கூட பாடுகிறார் சந்தோஷ்!


இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மகாபா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்..! நெஜமாதாங்க...



கிரீன் டீயின் மகத்துவம்கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாகசொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.

கிரீன் டீயின் நன்மைகள்……..

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

* இதய நோய் வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

* பருக்கள் வராமல் தடுக்கிறது.

* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

அஞ்சானை காப்பி அடித்த பென்சில் ...!




லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன் முதலாக நடிக்கும் படம், ‘அஞ்சான்’.


 இந்தப் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


 பல புதுமைகளுடன் உருவாகி வரும் இப்படத்தினை ‘ரெட் டிராகன்’


என்ற அதிநவீன கேமராவை வைத்து படம் பிடித்து வருகிறார் சந்தோஷ் சிவன்!


உலகிலேயே இந்த கேமராவை பயன்படுத்தும் முதல் திரைப்படம் ‘அஞ்சான்’


 என்பது குறிப்பிடத்தக்கது!


 ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும்


‘பென்சில்’ படத்திலும் இந்த கேமராவை பயன்படுத்துகிறார்கள்!


முதலில் வேறு கேமராவை பயன்படுத்தி ‘பென்சில்’


படத்தின் படப்பிடிப்பை துவங்கிய படக்குழுவினர் இப்போது


 ‘ரெட் டிராகன்’ கேமராவை வைத்து பென்சிலை படம் பிடித்து வருகிறார்கள்!

லிங்குசாமிக்கு வந்த ரூ.200 கோடி மர்ம பணம்...! திடுக்கிடும் பின்ன்னி...!




ஒரே சமயத்தில் கமல்ஹாசனின் உத்தமவில்லன், சூர்யாவின் அஞ்சான், மற்றும் விஜய் சேதுபதி, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உள்பட பல படங்களை தயாரித்து வருகிறார் லிங்குசாமி.

ஒரு நேரத்தில் ஒரு படம் தயாரிப்பதே ஒரு தயாரிப்பாளருக்கு பெரிய விஷயம்.

அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்கும் முன்னர் கடுமையாக நிதி நெருக்கடியை சந்திப்பார்கள்.

ஆனால் ஒரே தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் எப்படி இத்தனை பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கின்றார் என்பதே இப்போதைய கோலிவுட்டின் உச்சபட்ச டாக்.

இதுகுறித்து கோலிவுட்டில் பலவித கிசுகிசுக்கள் கசிந்து வருகிறது. மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி லிங்குசாமிக்கு சுமார் 200 கோடி ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை வைத்துதான் லிங்குசாமி இத்தனை படங்களையும் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இன்னொரு தரப்பினரோ மதுரை அன்புவிடம் மொத்தமாக 50 கோடிக்கும் மேல் லிங்குசாமி கடன் வாங்கி ஒவ்வொரு மாதமும் கரெக்டாக வட்டி கொடுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்த இரண்டு கிசுகிசுக்களும் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அம்பூட்டு நல்லவனாய்யா நீ......? - வியக்க வைத்த நடிகர்..!




சமீப நாட்களாக திரைத்துறையிலும் சமூகவலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்(விமர்சிக்கப்பட்டவர்) சிவகார்த்திகேயன். தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ‘மான் கராத்தே திரைப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.


அப்போது ‘உங்களது ஒவ்வொரு படத்திலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றதே?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய சிவகார்த்திகேயன் “சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் கதைக்கு தேவைப்படுவதால் என் படங்களில் இருக்கிறதே தவிர, 


என் சொந்ஹ முயற்சியால் புகுத்தப்பட்டவை அல்ல. அப்படி இருந்தும் பெரும்பாலும் சிகரெட் பிடிப்பதை நான் படங்களில் தவிர்த்து விடுவேன். படத்திற்காகத்தான் நான் புகைப் பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை செய்கிறேன். 


சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது.(சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது)” என்று கூறினார்.

 மேலும் அவர் அடுத்ததாக நடிக்கும் இரு படங்களின் கதாபாத்திரங்களின் தனிச்சிறப்பே குடிக்காதவன், புகை பிடிக்காதவன் என்பது தானாம். ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை குடித்ததுமில்லை,


 சிகரெட் பிடித்ததுமில்லை என்று கூறியதைக் கேட்ட அனைவரும் அம்பூட்டு நல்லவனாய்யா நீ.... என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 


சிவகார்த்திகேயன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை படங்களில் மட்டும் இதுபோன்ற காட்சிகளை தவிர்த்தால் போதும் என்கிறது ரசிகர்களையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் திரையுலகம்.

கமல் படத்தில் ரஜினி நடிக்கிறாராமே..! - வதந்தியா இருக்குமோ...?




ஆரம்ப காலங்களில் கமல் நாயகனாக நடித்த படங்களில்தான் ரஜினி நடித்து வந்தார். அதன்பிறகு அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவான பிறகுதான் தனித்துவமாக நடிக்கத் தொடங்கினார்.


இதற்கு கமலும் ஒரு முக்கிய காரணம். நாம் இருவரும் இணைந்து நடிப்பதால் ஒரு சம்பளத்தைதான் இருவருக்குமே பிரித்து தருகிறார்கள்.


அதுவே தனித்தனியாக நடித்தால் இருவருக்கும் தனி சம்பளம் கிடைக்கும் என்று அப்போது ரஜினிக்கு ஐடியா கொடுத்தார்.


அதையடுத்து இருவருமே அதை பின்பற்றி தங்களுக்கென ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனால், பின்னர் எந்தவொரு படத்திலும் ரஜினி-கமல் இருவரும இணையவே இல்லை.


அப்படி இணைந்தால் அந்த படங்களின் பட்ஜெட் 100 முதல் 150 கோடி ஆகும் என்பதால் எந்த படாதிபதியும் ரிஸ்க் எடுக்க துணியவில்லை.


இந்த நிலையில், தற்போது கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தில் ஒரு காட்சியில் ரஜினி தோன்றுவதாக கூறப்படுகிறது.


அதாவது 21ம் நூற்றாண்டை சேர்ந்தவராக கமல் நடிக்கும் காட்சிகளில் அவரை நடிகனாக உருவாக்கும் வேடத்தில் அவரது குருநாதரான கே.பாலசந்தரே நடிக்கிறார்.


 கமலை அவர் உருவாக்கிய காலத்தில் ரஜினியும் நடித்தவர் என்பதால், ஒரு வீடியோ கான்பரன்சிங் காட்சியில் ரஜினியும் தோன்றுகிறாராம்.

இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ரஜினி ஓ.கே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரச்னைகளால் நின்று போன பிரபல நடிகர்களின் படங்கள்..!




தமிழில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்களின் பட ஷூட்டிங் சில நாட்கள் நடக்கும். பிறகு பல காரணங்களால் நின்றுவிடும்.

 ஓரிரு படங்களின் ஷூட்டிங், இறுதிக்கட்டத்தை நெருங்குவதற்கு முன்பே கைவிடப்படும். அப்படி நாம் கேள்விப்பட்ட சில படங்களின் தொகுப்பு இங்கே.


ரஜினியின் ராணா, கமல்ஹாசனின் மருதநாயகம், மர்மயோகி, கார்த்திக் நடித்த மனதில், அத்தை மகன், லிவிங்ஸ்டன் நடித்த லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், பிரபு நடித்த ஆயிரம் பொய் சொல்லி, சத்யராஜ் நடித்த திருநாள், பேட்டை முதல் கோட்டை வரை, குலசேகரனும் கூலிப்படையும், உதயா நடித்த டில்லி, பூங்குயிலே, காதல் சாதி போன்ற படங்களில் ஓரிரு படங்களின் ஷூட்டிங் முழுமையாக முடிந்து விட்டது.


ஆதி, ராஜ்கிரண் நடித்த சரித்திரம், சிம்பு நடித்த கெட்டவன், தனுஷ் நடித்த டாக்டர்ஸ், விக்ரம் நடித்த சிந்துபாத், கரிகாலன், சூர்யா நடித்த சென்னையில் ஒரு மழைக்காலம், பிரபுதேவா நடித்த களவாடிய பொழுதுகள், மயூர் நடித்த சத்தமின்றி முத்தமிடு, பலே, சரத்குமார் நடித்த புகழ், விடியல், பிரசாந்த் நடித்த விண்ணோடும் முகிலோடும், என்ன விலை அழகே, பிரகாஷ்ராஜ் நடித்த பிறந்த நாள், நெப்போலியன் நடித்த பரணி, விவேக் ஹீரோவாக நடித்த சொல்லி அடிப்பேன், ஜெய் நடித்த அர்ஜுனன் காதலி, வெங்கட் பிரபு மற்றும் சங்கீதா அறிமுகமான பூஞ்சோலை, விஜய் சேதுபதி நடித்த சங்குதேவன், ரம்பா நடித்த விடியும் வரை காத்திரு போன்ற படங்களில், ஓரிரு படங்களின் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே பிரச்னை ஏற்பட்டு நிறுத்தப்பட்டன.


சில படங்கள் ரிலீசுக்கு தயாரான நிலையில், தவிர்க்க முடியாத பிரச்னை காரணமாக முடக்கப்பட்டுள்ளன. விஷால் நடித்த மதகஜராஜா படத்துக்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளன. ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

ஒரு வழியா முடிவுக்கு வந்த பிரசன்னாவால் நொந்த சினேகா...!




இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது’ என்று கணவர் பிரசன்னா திடீர் ரெட்கார்டு போட்டதால் நடிகை சினேகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் சினிமாவில் நடிப்பதை பெரும்பாலும் அவர்களது கணவர்கள் விரும்புவதில்லை. ஒரு சில நடிகைகள் தான் இதில் விதிவிலக்கு. மற்றபடி நடிகைகளுக்கு அவர்களது கணவர்கள் ‘ரெட்கார்டு’ போட்டு விடுவார்கள். அதிலும் சில நடிகைகளை அவரது கணவன்மார்கள் ஹீரோயினாக நடிக்க விடுவதில்லை. மாறாக அக்கா, அண்ணி, அம்மா போண்ற கேரக்டர்களுக்கு மட்டுமே பெர்மிஷன் கொடுப்பார்கள்.

நடிகை சினேகாவை காதல் திருமணம் செய்த நடிகர் பிரசன்னாவும் இப்போது சினேகாவின் நடிப்பாசைக்கு திடீர் தடை போட்டிருக்கிறாராம். ஏற்கனவே ஜவுளிக்கடை திறப்பு, நகைக்கடை திறப்பு, ரியல் எஸ்டேட் என எல்லாத் திறப்பு விழாக்களுக்கும் போய் பணம் சம்பாதிக்கிறார் சினேகா. கூடவே தேடி வருகிற விளம்பரப்படங்களையும் விட்டு வைப்பதில்லை. எந்த பப்ளிசிட்டியாக இருந்தாலும் கூடவே பிரசன்னாவையும் துணைக்கு அழைத்துச் செல்லும் அவர் பிரசன்னாவுக்கும் சேர்த்து தான் வசூல் செய்கிறார்.

இதற்கிடையே சினேகா தற்போது பிரகாஷ்ராஜ் தயாரித்து வரும் ‘உன் சமையலறையில்’ உட்பட ஒரு தெலுங்கு, ஒரு கன்னடப் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரின் இந்த ஹீரோயின் தரிசனத்துக்குத்தான் திடீர் தடை போட்டிருக்கிறார் பிரசன்னா. ஆனால் சினேகாவோ என்னால் நடிக்காமல் இருக்க முடியாது என்று பிரசன்னாவின் பேச்சை மீறி அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார்.

அப்புறமென்ன, ”நான் எவ்ளோ சொல்லியும் கேக்க மாட்டேங்கிறா” என்பது தான் பிரசன்னாவின் ஒரே புலம்பலாக இருக்கிறதாம்

அஜீத் மற்றும் ரஜினியுடன் மோத முடிவு செய்தது ஏன்..? விஷாலின் விறுவிறு பேட்டி




”தீபாவளிக்கு அஜித் நடிச்ச ‘ஆரம்பம்’ படத்தோட ‘பாண்டிய நாடு’ படமும் ரிலீஸ் ஆச்சு. இப்போ ‘நான் சிகப்பு மனிதன்’னு ரஜினி பட டைட்டில் வெச்சுக்கிட்டே ‘கோச்சடையான்’ படத்தோட மோதுறீங்களே! இது புது கேம் பிளானா?”

”நான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும்போதே, பட பூஜை போடும் அன்னைக்கே ரிலீஸ் தேதியை அறிவிச்சிடணும்னு உறுதியா இருந்தேன். ‘பாண்டிய நாடு’ தீபாவளி ரிலீஸ்னு நாங்க முடிவு பண்ணபோது, வேற என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும்னு தெரியாது. ‘ஆரம்பம்’ ரிலீஸ் உறுதியானதும், ‘வீம்புக்காகப் படத்தை ரிலீஸ் பண்ணணுமா? ரெண்டு வாரம் கழிச்சு வெளியிடலாமே’னு பலரும் சொன்னாங்க. நல்லதோ, கெட்டதோ, எடுத்த முடிவில் உறுதியா இருப்போம்னு ‘பாண்டிய நாடு’ ரிலீஸ் பண்ணேன். நல்ல பேர்தான் கிடைச்சது. இப்போ ‘நான் சிகப்பு மனிதன்’ ஏப்ரல் இரண்டாவது வாரம் ரிலீஸ்னு முடிவெடுத்திருக்கேன். ஏன்னா, சம்மர் ஹாலிடேஸ் ஆரம்பிக்கிறப்போ நான் நடிச்ச படம் வெளிவர ணும்கிறது, என் ரொம்ப நாள் கனவு!”

”ஏன்… ஏப்ரல் 14-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?”

”அது ஒரு மேஜிக் நாள். ஏன்னா, ஏப்ரல் மாசம் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு நல்ல ரீச் கிடைக்கும். செமத்தியா ஹிட் ஆகும். ‘அயன்’, ‘பையா’, ‘கோ’, ‘ஓ.கே. ஓ.கே.’னு பல படங்கள் ஏப்ரல் மாசம் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. அந்த பாசிட்டிவ் வைபரேஷன் என் படத்துக்கும் கிடைக்கணும்!”

” ‘நான் சிகப்பு மனிதன்’ டிரெய்லர்ல தூக்க வியாதியால் அவதிப்படும் கேரக்டர்னு ஆர்வம் உண்டாக்கிறீங்க. பஸ் ஏறி வந்து ரவுடிகளை வெளுக்கும் விஷாலுக்கு பிரேக் கொடுத்துட்டீங்களா?”

” ‘பாண்டிய நாடு’வில் சாதுவா அடக்கி வாசிச்சதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அந்தத் தைரியத்தில்தான் ‘நார்கொலெப்ஸி’ வியாதி பாதிக்கப்பட்டவனா நடிக்கிறேன். இயக்குநர் திருவுக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு நார்கொலெப்ஸி வியாதி இருக்கு. ‘அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவங்க, ரொம்பக் கோபம் வந்தா தூங்கிடுவாங்க’னு திரு சொன்னார். ஆனா, அந்த கேரக்டருக்கு எந்த ரெஃபெரன்ஸும் இல்லை. யூ-டியூப்ல நார்கொலெப்ஸி பாதிக்கப்பட்டவங்க வீடியோ பார்த்துதான், ஹோம்வொர்க் பண்ணேன். அந்த வியாதி காரணமா எனக்கு யாரும் வேலை தர மாட்டாங்க. ஆன்லைன்ல வேலை பார்ப்பேன். அந்த வியாதி பாதிக்கப்பட்டவன் அடிச்சா எப்படி இருக்கும்னு உங்களை யோசிக்க வெக்கிற திரைக்கதை. ரொம்பப் புதுசா இருக்கும் படம்!”

”உங்ககூட நடிக்கிறதுனா லட்சுமி மேனன் கிளாமரா நடிக்கிறாங்க, பாலா படத்துல வரலட்சுமி நடிக்க நீங்க சிபாரிசு பண்றீங்க, ஸ்ருதிக்குக் கதை சொல்லப்போறீங்கனு… பல ஹீரோயின்களோட உங்களைச் சம்பந்தப்படுத்தி செய்தி வந்துட்டே இருக்கே!”

”ஓ… லட்சுமி மேனன்கூட தண்ணிக்கு அடியில் இருக்கிற மாதிரி ஸ்டில் பார்த்துக் கேக்கிறீங்களா? அந்த கேரக்டர்ல சின்ன சர்ப்ரைஸ் இருக்கு. நிச்சயம் பரபரப்புக்காகவோ, கிளாமருக்காகவோ அந்த சீன் வெக்கலை. படம் பார்க்கும்போது அது எவ்வளவு அவசியம்னு உங்களுக்குப் புரியும்.

பாலா சார் படத்தில் யாராச்சும் சிபாரிசு பண்ணா, நடிச்சுட முடியுமா என்ன? ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்துதான் வரூவை ஓ.கே. பண்ணாங்க. பாலா சாரின் எல்லாப் படங்களிலும் நான் ஹீரோவா நடிக்கணும். அது மட்டும்தான் என் ஆசை.

6 கோடியில் பிரம்மாண்ட செட் - இது விக்ரமின் ஐ..!




தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையிலும் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர்தான். அவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இருந்து இன்று வரையிலும் அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்துமே பிரம்மாண்டமான காட்சியமைப்புக்களைக் கொண்டவையாகவே இருந்துவருகின்றன.

சியான் விக்ரம், எமிஜேக்சன் நடிப்பில் அவர் இயக்கிவரும் ஐ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கி.

அந்த ஒரு பாடல் காட்சியினை தமிழ் சினிமா இதுவரை கண்டிராத மஹா பிரம்மாண்டமான பாடல்காட்சியாக உருவாக்கக் கடுமையாக உழைத்துவருகிறது ஐ படக்குழு. பாடல்காட்சியின் பட்ஜெட்டைக் கேட்டு, இளம் இயக்குனர்கள் வாய்பிளந்து நிற்கின்றனர்.

விக்ரம், எமிஜேக்சன் நடனமாடவுள்ள இப்பாடல் காட்சிக்காக சுமார் 6 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுவருவதாகவும், விரைவில்
இப்பாடல்காட்சி படமாக்கப்படும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

தற்போதைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எடுக்கும் மொத்தப் படத்தின் செலவே ஒன்று அல்லது இரண்டு கோடிகளைத் தாண்டாத நிலையில் ஒரு பாடல்காட்சிக்கு மட்டுமே 6 கோடியென்றால் யார்தான் ஆச்சர்யப்படமாட்டார்கள்?

ஐ திரைப்படம் வருகிற மே மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’மான் கராத்தே’வுக்கு நாள் குறிச்சாச்சி...!




‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் 'மான் கராத்தே'.


இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க,


படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இரு மடங்காகி உள்ளது.


 ரசிகர்களிடையே இப்போது எழுந்துள்ள கேள்வி படம் எப்போது ரிலீஸ்?


என்பதுதான்!


இந்த கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக இப்படக்குழுவினரும் ரிலீஸ் தேதிதியை அறிவித்திருக்கிறார்கள்!


வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்!


அதற்கு முன்னதாக வருகிற 26-ஆம் தேதி படம் சென்சார் செய்யப்படவிருக்கிறது.


ஆக, ’மான் கராத்தே’வின் ’கவுண்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆனது!