Tuesday, 18 February 2014

ஆகாஷ்-4 டேப்லட் கம்ப்யூட்டர் ஜஸ்ட் ரூ.3,999 - கபில்சிபல் தகவல்..!



ஆகாஷ் டேப்லட் இந்திய மொபைல் சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை குறைவாக இருப்பதால் இந்த டேப்லெட் வங்குவதற்காக பலர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஆகாஷ், ஆகாஷ்-2 டேப்லட்டுகளுக்கு அடுத்து மேம்படுத்தப்பட்ட ஆகாஷ்-4 டேப்லட் வெளிவர உள்ளது.இந்த அரசின் மலிவு விலை டேப்லட் கம்ப்யூட்டரான “ஆகாஷ் 4” இன்னும் ஒன்றரை மாதங்களில் சந்தைக்கு வரும் என்றும் இதற்கான தயாரிப்பு ஒப்பந்தங்களுக்கு வினியோகத்துறை இயக்குநர் அனுமதி அளித்துள்ளதாகவும் மத்திய தொலைதொடர்பு மந்திரி கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் 4 டேப்லட் 7 அங்குல ஸ்கிராட்ச் ரெசிஸ்டெண்ட் தொடுதிரை, பிரண்ட் கேமரா, 4 ஜி.பி அகநிலை சேமிப்பு அளவுடன் வெளிவருகிறது. வைஃபை இணைப்புடன் 2ஜி, 3ஜி மட்டுமின்றி 4ஜி இண்டர்நெட் வசதி உட்பட நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும். மேலும் 32 ஜி.பி வரையிலான மெமரி கார்டையும் உள்ளீடு செய்து கொள்ளலாம்.

மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக வழங்கப்படும் அரசின் மலிவு விலை கம்ப்யூட்டரான ஆகாஷ் 4 டேப்லட்டின் விலை ரூ.3,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கபில்சிபல் தெரிவித்தார்.கபில்சிபல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் “ஆகாஷ் திட்டம்” மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தண்டனை சட்டமும், குழந்தைகள் பாதுகாப்பும்..!



நம்முடைய அரசியல் அமைப்பு சாசனம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. அதில் குழந்தைகளும் அடக்கம்.  ஒரு  குழந்தைக்கான அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மனநலம் மற்றும் உடல் நலத்திற்கான போதிய பாதுகாப்பு  அனைத்தையும் கோர அவர்களுக்கு கண்டிப்பாக உரிமையுள்ளது.

 நம் நாட்டில் குழந்தைகளுக்கான சட்டங்கள் என்பது தனி சட்டமாக இன்று வரை  இயற்றப்படவில்லை. எனினும், நமது அரசியல் சாசனத்தின் ஷரத்து 15(3) பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான சிறப்புச் சட்டங்களை இயற்ற  வழிவகை செய்துள்ளதால், இந்தியாவில் இருக்கும் பல்வேறு பொதுச் சட்டங்களில் குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு சட்ட திருத்தங்களாகவும்,  குழந்தைகளுக்கான சிறப்பு சட்டங்களாகவும் அவ்வப்போது இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஒரு  குழந்தையின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளன.

ஒரு சிசு அன்னையின் கருவறையில் ஜனிக்கும் நிமிடத்திலிருந்து சட்டப்படி 18 வயது பூர்த்தியாகும் வரை - அதாவது, மேஜராகும் வரை - குழந்தையாகவே சட்டம் பாவிக்கும். இன்றைய சமூகத்தில் ஆண் குழந்தைகளை  விடவும் பெண் குழந்தைகளே பெரிதும் இன்னல்களை சந்திக்கிறார்கள். பெண் சிசு கருக்கலைப்பு, பெண் சிசு கொலை, குழந்தை திருமணம்,  ஆட்கடத்துதல், வயது வரம்பில்லாமல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்துதல், பட்டாசு, கண்ணாடி வளையல், கார்பெட், வைரம் பட்டை தீட்டுதல்  ஆகிய பல தொழிற்சாலைகளில் இன்றும் சட்டத்தை மதிக்காமல், அதன் உரிமையாளர்கள் கல்வி மறுக்கப்பட்ட அந்தப் பிஞ்சு கைகளை  கொத்தடிமைகளாக்கி படுத்தும் பாடு பார்ப்போரின் நெஞ்சை பிளந்துவிடும். இது அனைத்து நாடுகளும் எதிர் கொள்ளும் ஒரு சவாலாகவே உள்ளது.

 அதனால் உலக அளவில் குழந்தை பராமரிப்புக்கான Conventionல் இந்தியாவும் கையொப்ப மிட்டுள்ளது. சட்டத்தின் பார்வையில் நாம்  குழந்தைகளை இரு வேறு கோணங்களில் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று, சராசரியாக சட்டத்தின் கீழ் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு.   மற்றொன்று சந்தர்ப்ப வசத்தால் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிற்கும் குழந்தைகளின் நிலைப்பாடு.

The commissions for Protection of Child Rights Act,, 2005

தேசிய மற்றும் மாநில அளவிலான குழந்தைகளுக்கான ஆணையம் இந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவரும் 6  உறுப்பினர்களும் 3 வருட காலத்துக்கு ஒருமுறை அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். குழந்தை உடல்நலம், பாதுகாப்பு, வளர்ச்சி, கல்வி போன்ற  பல்வேறு நிலைகளில் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யவும், குழந்தைகளின் நலனை பெருக்கவும் இந்த ஆணையங்கள்  உருவாகியுள்ளன.  எனினும் நடைமுறையில் பல மாநிலங்களில் இந்த ஆணையங்கள் இன்னும் அமைக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய  விஷயம்.

கருவிலிருக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கான சட்டங்கள்

1. The Preconception and PreNatal Diagnostic Techniques (Prohibition of Sex  Selection) Act, 1994
2. Medical Termination of Pregnancy Act, 1971
3. The Maternity Benefit   Act, 1961

இச்சட்டங்கள் அனைத்துமே கருவிலிருக்கும் சிசுவின் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் இயற்றப்பட்டவையே. பெண் சிசுவை கருவிலேயே கலைக்கும்  கொடுமையான ஒரு செயல், இன்றைய நாகரிக சமுதாயத்திலும் நடைபெறுவது மறுக்க முடியாத ஒரு உண்மை.  ஒரு பெண் இன்று பல்வேறு  துறைகளில் கால்பதித்து தன் திறமையை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், நம் சமுதாயத்தில் ஒரு ஆணுக்குக் கொடுக்கும் உரிமையையும்  அந்தஸ்தையும்  ஒரு பெண்ணுக்கு கொடுக்க பலர் முன்வருவதில்லை.

பெண் குழந்தையை பாரமாகவே நினைப்பதால் அதனை கருவிலேயே  கலைக்கும் கொடுமையும் நிலவுகிறது.  கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் பிரச்னைகளைக் கண்டறிவதற்காக பயன்படுத்தும் மருத்துவ  முறையினை குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்க பயன்படுத்துவது The Preconception and PreNatal Diagnostic Techniques   (Prohibition of Sex Selection) Act, 1994  சட்டத்தின் கீழ் சட்டவிரோதம். மீறிச் செயல்படுபவர்யாராக இருந்தாலும் இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவராவார்.

ஒரு பெண்ணின் கருவை கலைப்பது என்பதை ஒரு சில தருணங்களைத் தவிர மற்ற நேரங்களில் குற்றமாகவே கருதுகிறது சட்டம்.  இந்திய தண்டனை சட்டம் 1860ன் கீழ் பல பிரிவுகள் கருக்கலைப்பை தண்டனைக்குரிய குற்றமாக வகுத்துள்ளது.   Medical Termination  of Pregnancy Act, 1971 என்ற சிறப்புச் சட்டத்தின் கீழ் 12 வாரத்துக்கு உட்பட்ட கரு எனில் மருத்துவ கவுன்சில்  அங்கீகரித்த ஒரு மருத்துவரின் உதவியுடனும், 12 வாரத்திலிருந்து 20 வாரத்துக்கு உட்பட்ட கரு எனில் மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த 2 மருத்துவர்களின் உதவியுடனும் கருக்கலைப்பு செய்யலாம்.

கருவுற்றிருக்கும் பெண்ணின் உடல்நலத்துக்கோ, மனநலத்துக்கோ பாதிப்பிருக்கும் பட்சத்தில் கருக்கலைப்பை சட்டம் அனுமதிக்கிறது. கருவிலிருக்கும் குழந்தை பிறந்தால் அதன் உடல்நலத்துக்கோ மனநலத்துக்கோ பெருமளவில் பாதகம் ஏற்படும் என்று தெரியும் பட்சத்தில் சட்டம் அந்த கருக்கலைப்பை அனுமதிக்கிறது.

உதாரணமாக பாலியல் வன்புணர்ச்சியினால் ஒரு பெண் கருவுற்றிருக்கும் பட்சத்தில், அந்தக் கருவின் வளர்ச்சி அந்தப் பெண்ணின் மனநலத்தை  பாதிக்கும் எனில் அந்தக் கருக்கலைப்பு சட்டத்தால் அனுமதிக்கப்படும்.  ஒரு தம்பதி அளவான குடும்பத்தை விரும்பி, அவர்களுக்கு ஏற்கனவே  இருக்கும் குழந்தையே போதும் என்ற எண்ணத்தில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி, அதன் செயல்பாட்டில் குறை இருந்து ஒரு கரு  உண்டாகுமெனில், அது அவர்களின் மனநலத்தை பாதிக்குமெனில், அந்த கருக்கலைப்பை சட்டம் அனுமதிக்கிறது.

கருவுற்றிருக்கும் பெண்ணின்  அனுமதியுடன்தான் கருகலைக்கப்பட வேண்டும்.   கருவுற்றிருக்கும் பெண் 18 வயதுக்குட்பட்டவராயிருப்பின் காப்பாளரின் அனுமதியுடனே கரு  கலைக்கப்பட வேண்டும். பணிக்குச் செல்லும் கருவுற்ற பெண்ணுக்கும் அவர் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சட்டம் கொடுக்கும் பாதுகாப்பு என்ன  என்பதனை குறிப்பிடும் சட்டமே The Maternity Benefit  Act, 1961. இச் சட்டம் பற்றி ஏற்கனவே நம் தொடரில் விரிவாக பார்த்து  விட்டோம்.

இந்திய தண்டனை சட்டம் 1860  

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 7 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை செய்யும் எந்த ஒரு செயலும் குற்றமாக கருதப்படமாட்டாது. 7 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தை செய்யும் செயல் அக்குழந்தை புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லாத பட்சத்தில் குற்றமாக  கருதப்படமாட்டாது.

18 வயதுக்குக் கீழ் இருக்கும் ஒரு நபர் செய்யும் குற்றத்தை வயது வந்த நபர்களுக்கு இணையாக பொதுச்சட்டத்தின் கீழ் விசாரிக்க  சட்டம் அனுமதிப்பதில்லை.  குழந்தை குற்றவாளிகளை The Juvenile Justice (Care and Protection of  Children) Act, 2000ன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் முறையிலேயே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பெற்றோரின் பராமரிப்பிலிருந்தோ, காப்பாளரின் பராமரிப்பிலிருந்தோ அவர்களின் அனுமதியின்றி ஒரு குழந்தையை அழைத்து செல்வது கூட ஆட்கடத்தல் குற்றத்துக்குச் சமமான செயலே.

குழந்தை கடத்தல் என்பது பெரும்பாலும் பணத்துக்காகவோ, சொந்த பகை தீர்ப்பதற்காகவோ, நரபலி கொடுப்பதற்காகவோ செய்யப்படுகின்ற குற்றம்.  இது இந்திய தண்டனை சட்டம் 1860ன் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையை பாலியல் வன்முறைக்கு  உட்படுத்துபவர் இந்தச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரியவராகிறார்.

இந்திய சாட்சிய சட்டம் 1872ன் கீழ் குழந்தை என்ற ஒரே  காரணத்துக்காக குழந்தை சாட்சியங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க இயலாது. ஒரு இளம் குழந்தை சாட்சி பிரமாணத்தின் கீழ் சாட்சியம் அளிக்க  முடியாது. எனினும் ஒரு குற்றத்தை நேரில் பார்த்த குழந்தை அல்லது அந்த குற்றத்துக்கு ஆளான குழந்தை ஓரளவுக்கு அந்தக் குற்றத்தின்  தன்மையினை உணர்ந்து சொல்லும் சாட்சியம் சட்டம் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகவே உள்ளது.

செல்போன் கட்டணம் உயர்கிறது..!



 மொபைல் போன் அழைப்பு கட்டணங்களை அதிகரிக்க தனியார் தொலைதொடர்பு  நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு  மறு ஏலம் தொடர்ந்து 10  நாட்களாக நடந்தது. ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் போட்டி  போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தன.

 அரசுக்கு மொத்தம் ரூ.61,162 கோடி வருவாய் கிடைத்தது.  இதுகுறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஒருவர் கூறுகை யில்,  ‘ஏலத்தில் பெருமளவு தொகை சென்றதாலும், நிறுவன வருவாய் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல  நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.

 அதன் ஒரு பகுதியாக, மொபைல் போன் கட்டணத்தை  உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை‘ என்றார்.

ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரிப்பால் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் பயன்பாடு குறைகிறது..!



பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் மட்டும் சுமார் 90 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். ஸ்மார்ட்போன் பயன்படுத் துவோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இதனால் ஸ்மார்ட் போன்  விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிலும் மலிவுவிலை ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு, சாமானிய  மக்கள் கூட சாதாரண போன்களை விட ஸ்போர்ட் போன்கள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துவருகிறது.
 ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையத ளங்களையும், வாட்ஸ்அப் போன்ற உடனடி தகவல் தொடர்பு ‘ஆப்‘களையும் பயன்படுத்துகின்றனர்.

இதனால், கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவதை விட, ஸ்மார்ட் போன்கள் மூலம் இன்டர்நெட்  பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். இவர்களை மையமாக வைத்து தனியார் தொலை தொடர்பு  நிறுவனங்கள் மாதாந்திர இன்டர்நெட் பேக்கேஜ்கள் வைத்துள்ளனர்.

 நிறுவனத்துக்கு தகுந்தபடி 24 ரூபாயில் இருந்து தொடங்கி ரூ.700, ரூ.800 என 2ஜி, 3ஜி இன் டர்நெட் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது வாடிக்கையாளர்களை கவரும்  விதமாக 2ஜி, 3ஜி இரண்டில் எதை பயன்படுத்தினாலும் ஒரே கட்டண விதிகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தனியார் நிறுவனம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர்  எண்ணிக்கை 400 மில்லியனாக இருக்கும் என, மொபைல் ‘ஆப்ஸ்‘கள் உருவாக்கும் நிறுவனம் ஒன்று  கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் போன் ஆப்ஸ்கள் மூலம் கணிசமான வருவாய் வருவது கு றிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் போன்கள் மூலம் டுவிட்டர், பேஸ்புக் பயன்படுத்துவது அதிகரித்து வந்தாலும், வங்கிகளும்  சேவையை எளிதாக்கும் வகையில் தங்கள் ஆப்ஸ்களை வெளியிட்டுள்ளன. இருப்பினும், பாதுகாப்பு த ன்மையை கருத்தில் கொண்டு இதை பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை. இருப்பினும் ஸ்மார் ட்போன் மூலமான பேஸ்புக், டுவிட்டர் பயன் பாடு அதிகரித்திருப்பது,  ஸ்மார்ட் போன் விற்பனை  அதிகரித்திருப்பதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.

இருப்பினும், ஸ்பெக்ட் ரம் அலைவரிசை ஏலத்தில் அரசுக்கு ரூ.61,162 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  ஏலத்துக்கு அதிக தொகை ஒதுக்கியதால், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை  உயர்த்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கட்டண உயர்வு உடனடியாக இல்லாவிட் டாலும், வருங்காலத்தில் அதிக அளவு நிர்ணயிக்கப்பட்டால் ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக், டுவிட்டர்  பயன்படுத்துவோர், இன்டர்நெட் பயன்படுத்துவோர் அதிக பணம் செலவிட வேண்டி வரும்.

ஆறுதல் சொல்ல ஆளில்லையே..!



டி.ராஜேந்தர் படம் என்றாலே செண்டிமென்டுக்கு பஞ்சமிருக்காது. அம்மா செண்டிமென்ட், தங்கை செண்டிமென்ட் என பிழிந்து ஊற்றி விடுவார்.

 தனக்கு 10 வயதாக இருக்கும்போதே குழந்தையாக இருக்கும் தங்கையை சீராட்டி, சோறூட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்குபவர், பின்னர் தங்கைக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைப்பார்.

அந்த ஒவ்வொரு சூழலுக்கேற்ப தங்கைக்கோர் கீதம் பாடி, தான் செண்டிமென்ட்டான அண்ணனாக உயர்ந்து நிற்பார்.

அப்படி டி.ஆர்., தான் இயக்கிய படங்களில்தான் பாசமான அண்ணனாக உயர்ந்து நின்றார் என்றால், இப்போது அவரது மகனான சிம்புவோ நிஜத்தில் பாசமான அண்ணனான உயர்ந்து நிற்கிறார்.

அதாவது, சமீபத்தில்தான் சிம்புவின் ஒரே தங்கையான இலக்கியாவின் திருமணம் நடைபெற்றது.

 அதையடுத்து அவர் புகுந்த வீட்டுக்கு சென்று விட்டார்.

அதனால் சிறு வயதில் இருந்தே கூடவே வளர்ந்த அன்பு தங்கச்சியின் பிரிவு தன்னை வாட்டியெடுப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சிம்பு.

மேலும், நான் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் நாட்களில், இலக்கியாவுடன்தான் அரட்டையடித்தபடி விளையாடிக்கொண்டிருப்பேன்.

ஆனால் இப்போது தங்கை இல்லாமல் வீடே வெறிச்சோடிக்கிடக்கிறது.

அதனால், என்னையுமறியாமல் அழுகை வருகிறது.

அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று டுவிட் செய்து தான் ஒரு பாசமான அண்ணன் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சிம்பு.

நட்பின் பெயரால் நடிகைக்கு கல்தா...!



வந்தனா குப்தாவின் வாய்ப்பை பூனம் பஜ்வா பறித்தார்.தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வந்தனா குப்தா.

 இவர் அடுத்ததாக பிரேம் ஜோடியாக மஸ்த் மொஹப்பத் என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் திடீரென அவர் நீக்கப்பட்டு பூனம் பஜ்வா நடிக்க தேர்வாகியுள்ளார்.

பிரேமுடன் பூனம் பஜ்வாவுக்கு ஏற்பட்ட திடீர் நட்பே இந்த மாற்றத்துக்கு காரணம் என சான்டல்வுட்டில் பேசப்படுகிறது.சமீபத்தில் ஒரு பார்ட்டியில் பூனம்- பிரேம் சந்தித்தார்களாம்.

 அப்போதுதான் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. தொடர்ந்து அவ்வப்போது செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது பிரேமின் அடுத்த படத்தில் நடிக்க பூனம் வ¤ருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக மஸ்த் மொஹப்பத் படத்திலிருந்து வந்தனா நீக்கப்பட்டிருக்கிறார்.

பூனம் இதற்கு முன் 2 கன்னட படங்களில் நடித்துள்ளார்.

 தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழியிலும் அவருக்கு வாய்ப்பில்லை.

சமயம் பார்த்து பிரேமின் நட்பு மூலம் அவர் இந்த வாய்ப்பை பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து பிரேம் கூறுகையில், வந்தனாதான் முதலில் ஒப்பந்தமானார்.

அவரது கால்ஷீட்டில் சில பிரச்னைகள் இருந்தது.

அதனால் அவரால் தேதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

 அதனால்தான் ஹீரோயினை மாற்றினோம். மற்றபடி எந்த விஷயமும் கிடையாது என்றார்.

இயக்குனரையே இயக்கும் சித்தார்த்...!



லூசியா கன்னட படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சித்தார்த்.

 இதில் அவருக்கு ஜோடி தீபா சந்திதி. பிரசாத் மரர் இயக்குகிறார்.

கன்னட படத்தின் திரைக்கதையை அப்படியே எடுக்காமல் பல மாற¢றங்களை செய்ய டைரக்டருக்கு சித்தார்த் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது.

இருந்தாலும் சித்தார்த் கூறியுள்ள மாற்றங்களை திரைக்கதையில் புகுத்தி வருகிறார்களாம்.

படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது பற்றி இயக்குனர் பிரசாத் கூறுகையில்,

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படம் என்பதால் பொறுப்பு கூடியுள்ளது.

தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இதன் திரைக்கதையை மாற்றி வருகிறோம் என்றார். -

(பிரம்மன்) சசிகுமாரால் ஆண்டியான தயாரிப்பாளர்...!



சினிமாவில் கடன் வாங்குவது சகஜம். அதே போல, படம் படுத்துவிட்டால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை வரை போவதும் சகஜம்.

 முன்னணி தயாரிப்பாளர்களே கூட இதற்கு விலக்கில்லை. அதுவும் மதுரையின் 'அன்பான' பைனான்சியர் மாதிரியானவர்களிடம் கடன் வாங்கிவிட்டு பட்ட பாடுகளை தேவயானிகள், ரம்பாக்கள் கதை கதையாக சொல்வார்கள்.

அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி சசிகுமார் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்!

இப்போது இதே அன்பானவரிடம் பெரும் தொகை ஒன்றை கடனாகப் பெற்றிருக்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

 அவர்தான் பிரம்மன் படத் தயாரிப்பாளர்.

(பிரம்மன்) சசிகுமார் ஒரு நல்ல இயக்குநர், தயாரிப்பாளராக இருக்கலாம். ஆனால் நடிகராக? அவருக்கென்று பெரிய சந்தை மதிப்பு இல்லாதது புரிந்தும், அளவுக்கு அதிகமான பட்ஜெட் பிரம்மன் படத்தை தயாரித்துவிட்டார் தயாரிப்பாளர்.

விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் விலை சொன்னபோது வாங்க மறுத்துவிட்டார்களாம்.

இதனால் அன்பானவரிடம் ரூ 14 கோடி கடன் வாங்கி இந்தப் படத்தை தானே சொந்தமாக வெளியிடுகிறாராம்.

அஞ்சு வட்டிக்கு இந்தக் கடனை வாங்கியிருக்கிறாராம்.

மதுரை - ராமநாதபுரம் ஏரியாவை மட்டும் சசிகுமாருக்கு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர்.

அதை நல்ல விலைக்கு விற்கும் முயற்சியில் உள்ளார் சசியின் தம்பி.

எப்படிப் பார்த்தாலும் சசிகுமாருக்கு லாபம்தான். தயாரிப்பாளருக்கு?!

அன்டாகா கஸம் – அபுகா ஹுகும் – திறந்திடு சீஸேம்…!



என்னடா அலிபாபா குகை பாஸ்வோர்ட்டை நான் இன்னைக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க – நாம 58 வருஷத்துக்கு முன்னாடி ஆடியோ வடிவிலான பாஸ்வொர்ட்டை இன்று டெக்னாலஜி என்ற பெயரில் இஸ்ரேல் கம்பெனியான “ஸ்லிக் லாகின்” என்னும் நிறுவனம் 5 மாதத்துக்கு முன் லான்ச் செய்ய இதை பல கோடி கொடுத்து வாங்கியிருக்கு நம்ம கூகுள் க்ம்பெனி.


ஏற்கனவே இரண்டு அடுக்கு பாஸ்வோர்ட்டை கொண்ட் ஒரே ஈமெயில் நிறுவனம் கூகுள் – இப்ப மூன்று அடுக்குனு நினைக்கும் போது – வியப்பாத்தான் இருக்கு. உங்கள் ஆடியோ பாஸ்வோர்ட் உங்கள் குரலின் ஒற்றுமையை வைத்து ஈமெயில் திறக்குமாம் – Cool Buddy

வீடியோ பார்க்க பொறுமை இருப்பவர்கள் இங்கே சொடுக்கவும். http://www.youtube.com/watch?v=cFFAu00mJmc#t=493

சமையலறையில் ஒளிந்திருக்கும் சில தலைமுடி பராமரிப்பு இரகசியங்கள்..!



ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஓடுங்கள் உங்களுடைய சமையலறைக்கு! ஏனெனில் சமையலறையில் தலை முடியைப் பராமரிப்பதற்கு ஏற்றவாறு பல பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு தலை முடியைப் பராமரித்தால், முடிக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் பாதுகாப்புடன் இருக்கும்.

அதிலும் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலோ அல்லது அலமாரியிலோ உள்ள பொருட்களை வைத்து நான்கு வகையான தலைமுடி மாஸ்க்குகளை உங்களால் இயற்கையான முறையில், பலனளிக்கும் வகையில் தயாரிக்க முடியும். இங்கு எந்த வகையான முடிக்கு, எந்த மாதிரியான மாஸ்க் போட்டால், நல்ல பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

வறண்ட முடி: ஆலிவ் எண்ணெய் மற்றும் பால்

 உங்களுக்கு பெரிய அளவில் TLC தேவைப்படுகிறதா? மூன்று தேக்கரண்டி சுத்தமான ஆலிவ் எண்ணெயுடன், இரண்டு முட்டைகளை கலந்து, அந்த கலவையை 20 நிமிடங்களுக்கு உங்களுடைய தலைமுடியில் வைத்திருங்கள்.

எல்லா முடிகளுக்கும்: வெண்ணெய் பழம் மற்றும் தேன்

 நன்கு வளர்ந்த வெண்ணைய் பழத்துடன், இரண்டு தேக்கரண்டிகள் சுத்தமான தேனை கலந்து அந்த கவையை முடியில் தடவி 20 நிமிடங்கள் பொறுமையாக காத்திருங்கள். பின்னர் முடியை அலசுங்கள். வைட்டமின்களும், ஊட்டச்சத்துக்களும் நிரம்பியிருக்கும் இயற்கையின் கொடை தான் வெண்ணைய் பழம். குறிப்பாக இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் புரதங்கள் முடியை மிகவும் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இதற்கிடையில், தேன் ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு கருவியாக செயல்படுகிறது.

பிசுபிசுப்பான முடிக்கு: ஆப்பிள் சாறு காடி மற்றும் எலுமிச்சை

 ¼ கோப்பை ஆப்பிள் சாறு காடியை, எலுமிச்சை தோலுடன் கலந்து 15 நிடங்களுக்கு கலக்கி வைக்கவும். இந்த கலவை சரியாக செட் ஆனவுடன், மண்டைத் தோலில் உள்ள பிசுபிசுப்பான எண்ணெயை இந்த கலவை உறிஞ்சியவுடுன், தலையை அலசுங்கள். அழகு சாதனப் பொருட்கள் விட்டுச் செல்லும் பிசுபிசுப்புகளை ஆப்பிள் சாறு கடி நீக்கிவிடும். இந்த கலவை முடிக்கால்களை உறுதிப்படுத்தி, மென்மையாக்குவதல், உங்கள் தலைமுடி பளபளப்பாகிறது. மேலும், இது தலைமுடியின் pH அளவை சமனப்படுத்தி, பாக்டீரியாக்களை அழிப்பதால் பொடுகுகளையும் நீக்க முடியும். Show

வறண்ட, சீரற்ற முடி: வாழை, தேன் மற்றும் பாதாம்

 நன்கு வளர்ந்த வாழைப்பழத்தையும், 2 தேக்கரண்டிகள் தேனையும் எடுத்துக் கொண்டு, பாதாமுடன் சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை தலைமுடியில் போட்டு, 20 நிமிடங்களுக்குப் பின்னர் அலசுங்கள். முடியின் ஈரப்பதத்தை வாழைப்பழம் அதிகரிப்பதுடன், முடியை மென்மையாக வைத்து, அரிப்புடைய தலைச்சருமத்தை சரி செய்கிறது.

குறிப்பு 

ஆகவே உங்களுடைய தலைமுடிக்கு மிகவும் ஏற்ற வழிமுறையை தேர்ந்தெடுத்து பயன் பெறுங்கள். மிகவும் விலை உயர்ந்த கண்டிஷனர்களை வாங்கி பயன்படுத்துவதை விட, உங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தி பாக்கெட் காலியாவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

விஜய் சேதுபதியின் திருட்டுத்தனத்தால்.. மனைவி தாய் வீட்டிற்கு சென்றார்...



ஐஸ்வர்யாவுடன் காதல் கிசுகிசுப்பில் சிக்கியுள்ளாராம் விஜய் சேதுபதி.

கொலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி பற்றி லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய இரண்டு படங்களிலும், அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருக்கிறாராம் விஜய்சேதுபதி.

அதனால் இவருடைய மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்னும் வதந்தி கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது.

இதுபற்றி விஜய்சேதுபதியின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது, யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது என்று கூறியுள்ளனராம்.

பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த தனுஷுக்கு சவாலான படம்...!



பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன், ஷாருக்கான் நடிக்க வேண்டிய மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்

அமிதாப்புடன் நடிப்பதற்கு இயக்குநர் பால்கி தனுசுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தனுஷ் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.

இப்படத்தில் முதலில் அமிதாப்புடன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்ததாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் ராஞ்சனாவில் தனுஷின் நடிப்பை பார்த்த பால்கின், ஷாருக்கானுக்கு பதிலாக தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளார்.

இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை வேடம் போடும் கமல்...!



ராஜாராணி’ என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘குக்கூ’. இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக புதுமுகம் மாளவிகா நடிக்கிறார். ராஜமுருகன் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படம் பார்வையற்ற இருவரின் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நாயகன், நாயகி இருவருக்குமே இப்படத்தில் கண் பார்வை தெரியாது.

இவர்களுக்குள் உள்ள காதலை சொல்லும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில், நடிகர்கள் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, இயக்குனர்கள் பாண்டிராஜ், லிங்குசாமி, சேரன் அட்லி, பா.ரஞ்சித், கார்த்திக் சுபாராஜ், நவீன், தயாரிப்பாளர்கள் கேயார், சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் ஆடியோ சிடியை கமல் வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் சூர்யா பேசும்போது, ‘குக்கூ’ மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும்.

இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும். கமல் எனக்கு அண்ணன். நான் வித்தியாசமான படங்கள் எல்லாம் பண்ணுகிறேன் என்றால் அதற்கு காரணம் அவர்தான்.

 நான் என்ன பண்ணுகிறேன் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவரை பின்பற்றித்தான் நான் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றார்.

கமல் பேசும்போது, சூர்யா என்னை அண்ணன் என்று சொன்னார்.

அவரை நான் கவனித்து வருகிறேன் என்றும் சொன்னார்.

அது எல்லாமே உண்மைதான். ஆனால், சூர்யா தனிமையில் இருக்கும்போது மட்டும்தான் அவருக்கு நான் அண்ணன்.

அவருடைய அப்பா சிவகுமாருடன் அவர் இருக்கும்போது நான் அவருக்கு சித்தப்பாவாகத்தான் இருப்பேன்.

பொதுவாக எனக்கு இரட்டை வேடங்களில் நடிக்க ரொம்பவும் பிடிக்கும். சூர்யா விஷயத்தில் நான் இரண்டு வேடத்தில் இருப்பது ரொம்பவும் மகிழ்ச்சி என்று பேசினார்.

மேலும், குக்கூ படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், இது நல்ல படமாக இருக்கும் என நம்பிக்கை கொள்வதாகவும் கூறினார்.

அஜித் - கௌதம்மேனன் படப்பிடிப்புகள் தள்ளிப்போவதாக தகவல்...!



வீரம் படத்திற்குப் பிறகு தல அஜித் நடிக்கவுள்ள தனது 55 படத்தினை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார்.

இயக்குனர் மணி ரத்னம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.

கௌதம் மேனன் இயக்கவுள்ள இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்.

 இப்படத்தில் நடிப்பதற்காக அஜித் தனது அறுவை சிகிச்சையைத் தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் அஜித் நடிக்கவுள்ள பாத்திரத்திற்காக தனது உடல் எடையைக் குறைக்க

வேண்டியிருப்பதால் அஜித் தற்பொழுது கடுமையான உடற்பயிற்சி செய்துவருவதாகவும், இதனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் அறிவித்த நாளில்
துவங்காது எனவும் கூறப்படுகிறது.

மங்காத்தா திரைப்படத்திலிருந்து தொடர்ந்து 4 படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றிவரும் அஜித் இப்படத்தில் புதிய ஹேர்
ஸ்டைலில் தோன்றுவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

மார்ச் 7ல் வெளியாகிறது விஷாலின் மதகஜராஜா!



தமிழ் சினிமாவின் நகைச்சுவைத் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி மற்றும் வரலக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதகஜராஜா திரைப்படம் வருகிற மார்ச் 7ல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே படம்பிடிப்பு துவங்கப்பட்ட இப்படம் 2013 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் பொங்கல் தினத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருந்த சமர் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டதால் இப்படம் 2013 ஏப்ரலில் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக
அறிவிக்கப்பட்டது. மீண்டும் சிற்சில பிரச்னைகளால் இப்படத்தின் வெளியீடு தாமதமானது.

தற்பொழுது இப்படத்தின் வெளியீடுகள் பெரும்பாலும் உறுதியாகியிருப்பதாகவும், மார்ச் 7ல் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரகாஷ்ராஜ், சந்தானம், நிதின் சத்யா, மணிவண்ணன், சடகோபன் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர்யா மற்றும் சதா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில்
நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படமென்பதால் நிச்சயம் மிகச் சிறந்த நகைச்சுவைக் கொண்டாட்டமாக இருக்கும் என்று ரசிகர்கள்
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பெண் தன் வாழ்நாளில் வெறும் 100 சிகரெட் புகைத்தாலே - மார்பக புற்றுநோய்...



ஒரு பெண் தன் வாழ்நாளில் வெறும் 100 சிகரெட் புகைத்தாலே போதும், மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் Fred Hutchinson Cancer Research Centre என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் Dr Christopher Li, தலைமையில் ‘பெண்கள் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்தது.

இவர்கள் கடந்த 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில், இவர்கள் அனைவரும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பது தெரியவந்தது.

ஆயினும் இவர்களில் பலர் செயின் ஸ்மோக்கர்கள் அல்ல. தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு சமயத்தில்தான் புகைபிடிப்பவர்கள் என்பது தெரியவந்தது.

நேற்று இந்த ஆராய்ச்சிக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் பெண்கள் தங்கள் வாழ்நாளில் வெறும் 100 சிகரெட் புகைத்தாலே மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்றும், அதுமட்டுமின்றி புகைப்பவர்கள் அருகில் அதிக காலம் இருந்தாலும் இந்த நோய் தாக்ககூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

778 புகைபிடிக்கும் பெண்களிடம் இவர்கள் செய்த ஆராய்ச்சியில் 182 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 227 பெண்களில் ஒருவருக்கு 40 வயதுக்கு முன்பே மார்பக புற்றுநோய் தாக்குகிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்த விருது...!



எடிசன் திரைப்பட விருதை வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார் சிவ கார்த்திகேயன். அடுத்து ‘மான் கராத்தே’ படத்தை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம்.

நீங்கள் நடித்த எல்லா படங்களுமே ஒரே வகைப்படங்களாகவே இருக்கின்றதே?

‘எதிர்நீச்சல்’ மாறுபட்ட படம் என்று நினைக்கிறேன். சவாலான பாத்திரங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.

ஆனால் அதற்கு சிறிது கால அவகாசம் தேவை. எனக்கு நகைச்சுவை நன்றாக வரும் என்ற பிம்பத்தை தொலைக்காட்சி கொடுத்திருக்கிறது.

அதை உடைத்துக்கொண்டு வெளியே வர சிறிது காலம் பிடிக்கும். எனது படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் எனது நகைச்சுவையில் கலகலப்பான நடிப்பைத்தான் பார்க்க வருவார்கள்.

இன்னொரு விஷயம், திரையில் கலகலப்பாக நடிக்கும் நாயகர்கள் தான் இன்றும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ரஜினி சாரை பாருங்கள்.” தனுஷுடனான ஆழமான நட்பு எப்படி சாத்தியமானது? “முன்பு ‘3’ படத்தில் என்னை நடிக்கச் சொன்னதே அவர் தான்.

இவன் பெரிய நடிகனாக வருவான் என்ற நம்பிக்கை அவருக்கு அப்போதே இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் என்னை வைத்து ‘எதிர்நீச்சல்’ படம் தயாரித்தார்.

சொந்த அண்ணனுடன் பழகுவது போல பயம் கலந்த மரியாதையுடன் தான் பழகுவேன்.

உடன்பிறவா அண்ணனாக அவர் இருந்தாலும், சார் என்று தான் அழைப்பேன்.

அது அவரது திறமைக்கு நான் கொடுக்கும் மரியாதை. அவருடனான நட்பை வைத்து என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நான் என்றுமே நினைத்ததில்லை.

 சில உறவுகள் அதுவாக அமையும். தனுஷ் சார் எனக்கு அப்படி.”

ஹன்சிகாவை சமாதானப்படுத்த சிம்பு செய்த காரியம்...!



வாலு போய் கத்தி வந்துச்சு டும்… டும்.. டும்” என்பது மாதிரியே ‘வாலு’ பட விவகாரங்களை அணுகி வருகிறார் சிம்பு.

அவர் எந்த நேரத்தில் கால்ஷீட் கொடுப்பார், எந்த நேரத்தில் கைவிடுவார் என்பதை புரிந்து கொள்ளவே முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர். இந்த நேரத்தில்தான் ஓர் இனிப்புச் செய்தி.

சிம்பு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு தந்த கால்ஷீட்டுகளை அப்படியே எடுத்து ‘வாலு’ படத்திற்கு கொடுத்துவிட்டாராம்.

அவர் ஏன் இப்படி செய்தார் என்பது அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜுக்கே புரியாத புதிராக இருக்கிறது.

இத்தனைக்கும் ‘இது நம்ம ஆளு’, சிம்புவின் சொந்தப்படமும் கூட. ‘வாலு’ படத்தில் ஹன்சிகாதான் நாயகி.

ஒருவேளை இது ராணி கட்டளையோ என்னவோ?

அஜீத்தை போல ஹேர் ஸ்டைலை மாற்றிய விஜய் - முருகதாஸ் கட்டளை..!



கெட்டப் சேஞ்ச் என்று உடலை வருத்திக்கொள்வது அல்லது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொள்வது என சமீபகாலமாக படத்துக்குப்படம் தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் முன்னணி ஹீரோக்கள்.

அந்த வகையில், மங்காத்தா தொடங்கி வீரம் வரைக்கும் சால்ட் அண்ட் பெப்பபர் ஹேர் ஸ்டைலில் நடித்தார் அஜீத்.

அதையடுத்து இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக, தனக்கு சீரியல் கில்லர் வேடம் என்பதால், கெட்டப்பை அதிரடியாக மாற்றுகிறார்.

அதற்காக தனது ஹேர் ஸ்டைலை இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

அவரையடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய்யும் தனது ஹேர் ஸ்டைலை இதுவரை தான் நடிக்காத புதிய பாணிக்கு மாற்றியிருக்கிறார்.

அப்படத்தில் இரண்டு வேடம் என்பதால், அழகிய தமிழ் மகனைப்போன்று சாதாரணமாக இல்லாமல், தன்னை முற்றிலுமாக வேறுபடுத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக பாடி லாங்குவேஜ் மட்டுமின்றி, ஹேர் ஸ்டைலை அதிக வித்தியாசப்படுத்திக்காட்டுகிறாராம்.

முன்னதாக, பாலிவுட்டில் இருந்து ஒரு ஹேர் டிரஸ்ஸரை வரவைத்து அவர் கொடுத்த சில டிப்ஸைக்கொண்டு விஜய்யை பக்காவாக மாற்றியிருக்கிறார் முருகதாஸ். தற்போது முதல் கெட்டப்பில் நடித்து வரும் விஜய், அடுத்து இன்னொரு கெட்டப்புக்காகவும் வேறொரு பாணியில் ஹேர் ஸ்டைலை மாற்றி நடிக்கிறாராம்.

நம் உடலை அறிவோம்..!

நம் உடலை அறிவோம்


பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.

மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

ட்விட்டரில் மொக்கை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்...!



உளறல் மன்னன் என்ற பெயர் உதயநிதி எடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை, சில  மாதங்களவே ட்விட்டரில் ஆர்வகோளாறு காரணமாகவே சில தேவை இல்லை கருத்துக்களை சொல்லி பலரிடம் மொக்கை வாங்கியுள்ளார் உதயநிதி.

என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை அவரிடம் வருபவர்கள் எல்லாம் அவர்  வாயை கிண்டி கிளரி ஏதாவது ஒரு விஷயத்தில் தள்ளி விடுகிறாகள், சமிபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு ஏடாகூடமாக பதில் அளித்து உள்ளார்.

நீங்கள் தயாரித்த படங்களில் உங்களுக்கு பிடிக்காத படம் என்ன என கேட்டதற்க்கு குருவி, மன்மதன் அம்பு என கூறியுள்ளார் உதயநிதி.

 என்ன  தான் தன்னுடைய கருத்தை மட்டுமே சொல்லி இருந்தாலும் அது மற்றவர்களுக்கும் சாரும் என்று அவருக்கு தெரியவில்லை போல.

மேலும், அஜித்துடன் தனக்கு அதிக பழக்கம் இல்லை என கூறி அஜித்தை கூறிப்பிட்டிருக்கிறார் உதயநிதி.

எல்லோரும் இது போன்ற நிகழ்ச்சியின் மூலமா படத்தை பப்ளிசிட்டி செய்வார்கள் ஆனால் அங்கேயும் இப்படி வாயவிட்டு மாட்டிகிறாரே நம்ம உதயநிதி.

விஜய்க்கும் அவர் தந்தைக்கும் மோதலால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள்...!



நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் மோதல் முற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் விளைவாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன் நீலாங்கரை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்திய விஜய், இனி மன்றம் குறித்து தன் தந்தை எஸ்ஏசியிடம் யாரும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கறாராகக் கூறிவிட்டாராம்.

 இனி எங்கப்பா படத்தை போட்டு கிங்மேக்கர்னெல்லாம் எழுதக்கூடாது.. புரிஞ்சுதா?

 விஜய் கஷ்டப்பட்டு சினிமாவில் பெரிய இடத்தைப் பெற்றுள்ள விஜய்யை அரசியலில் பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்பது அவர் தந்தை எஸ் ஏ சியின் கனவு.

 அதற்காக மெல்ல மெல்ல காய் நகர்த்தி வந்த அவருக்கு பெரும் அடியாக விழுந்தது தலைவா விவகாரத்தில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு.

அரசியல் பற்றிய பேச்சை எடுப்பதையே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் விஜய். தலைவாவுக்குப் பிறகு விஜய்யின் சினிமா மற்றும் ரசிகர் மன்ற நடிவடிக்கைகள் அனைத்திலும் ஒதுங்கியே நிற்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.

இந்த நிலையில் சமீபத்தில் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது நீலாங்கரை இல்லத்துக்கு அழைத்த விஜய், 'இனி மன்றத்தின் பேனர்கள், போஸ்டர்களில் எஸ்ஏசி பெயரை, படத்தைப் போடக்கூடாது..

குறிப்பாக கிங்மேக்கர் என்றெல்லாம் எழுதக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளாராம். வழக்கமாக இதுபோன்ற கூட்டங்கள், விஜய்யின் வடபழனி கல்யாண மண்டபத்தில்தான் நடக்கும்.

ஆனால் இனி அங்கு யாரும் போக வேண்டாம்... நீலாங்கரை வீட்டுக்கே வந்துவிடுங்கள் என்று விஜய் கூறிவிட்டாராம்.

தந்தையும் மகனும் இப்படி மோதிக் கொள்ளக் காரணம் என்று மன்றத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்தைக் குறிப்பிடுகிறார்கள்.

இவர் புதுவை மாநில புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ. அவரோ, இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையுமே விஜய்தான் எடுத்தார்.

ஒருவேளை அவர் தன் தந்தையுடன் கலந்து பேசிக்கூட இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம், என்கிறார் ஒரேயடியாக‍!

ஐபேட், லேப்டாப், டேப்ளட், ஐபேட் ஏர் மற்றும் டேப்ளட் - வித்தியாசங்கள் மற்றும் செயல்பாடுகள்..!

இங்கு சுருக்கமாக இவற்றின் தன்மை குறித் தும், செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் காணலாம்..!


முதலில் லேப்டாப் மற்றும் டேப்ளட் பி.சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைக் காணலாம். லேப்டாப் பி.சி. அல்லது நோட்புக் கம்ப்யூட்டர் என்பது, கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய முழுமையான பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடுகளைத் தரக்கூடிய சாதனமாகும். இதில் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர் வகையும் உண்டு. விண்டோஸ் மற்றும் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இவை முழுமையாக இயக்கும். இவற்றை இணை யத்துடன் இணைத்தோ, இணைக்காமலோ இயக்கலாம். இவற்றில் டச் ஸ்கிரீன் இயக்கம் இருக்கலாம். இல்லாமலும் இவை செயல்படும்.


நெட்புக் என்பது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் ஒரு சிறிய சாதனம். இதில் இணைய இணைப்பு பெற்று இயக்க ஒரு கீபோர்ட் இணைந்தே கிடைக்கும். குரோம்புக் (Chromebook) என்பது கூகுள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெற்று செயல்படுத்தும் சிஸ்டம் ஆகும். இது கூகுள் தளத்திலிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களைக் கொண்டே பெரும்பாலும் செயல்படுவதால், இணைய இணைப்பில் இருந்தால் தான், முழுமையான இயக்கமும் பயனும் கிடைக்கும்.

குரோம் புக்கிலும் கீ போர்ட் ஒன்று இணைக்கப்பட்டே கிடைக்கும்.
டேப்ளட் பி.சி. என்பது டச் ஸ்கிரீன் கொண்ட ஒரு சாதனமாகும். இதில் கீ போர்டை இணைத்துச் செயல்படுத்த வசதி தரப்பட் டுள்ளது. டேப்ளட் பி.சி.க்கான பிரபலமான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களாக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களைக் கூறலாம். நெக்சஸ், கிண்டில் பயர் மற்றும் நூக் கலர் (Nexus, Kindle Fire and Nook Color) ஆகிய வற்றை, பலவகையான ஆண்ட்ராய்ட் டேப்ளட்களாகக் காணலாம்.


நீங்கள் ஓர் ஆண்ட்ராய்ட் டேப்ளட்டினைப் பயன்படுத்துகையில், இதற்கான அப்ளி கேஷன்கள் அல்லது புரோகிராம்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் காணலாம். கிண்டில் மற்றும் நூக் ஆகியவை, இவற்றிற்கென வடிவமைக்கப் பட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கு கின்றன.

இவற்றில் இயங்கும் வகையில், அப்ளிகேஷன்கள், நூல்கள், இசை மற்றும் வீடியோ கோப்புகள் முறையே அமேஸான் மற்றும் பார்னஸ் அண்ட் நோபிள் ஸ்டோர் தளங்களில் கிடைக்கின்றன. டேப்ளட் இணைய இணைப்பில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல வகைகளில் பார்த்தால், இது ஒரு வை-பி இயக்க சாதனமாகும். உங்களால், ஒரு வை-பி இணைப்பு, அல்லது 3ஜி அல்லது 4ஜி இணைப்பினைப் பெற முடியாது என்றால், டேப்ளட் பயன்படுத்தும் எண்ணத் தினை விட்டுவிடலாம்.

ஐபேட் சாதனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதற்கான ஆடியோ, விடியோ மற்றும் புத்தகங்களுக்கான பைல் களை, ஆப்பிள் நிறுவனத் தின் ஐ-ட்யூன் ஸ்டோரில் பெறலாம்.


ஐபேட் ஏர் என்பது, அண்மைக் காலத்தில் வெளி வந்த சாதனமாகும். இது எடை குறைவாகவும், இயக்க வேகம் விரைவாகவும் கொண்டது. ஆண்ட்ராய்ட் டேப்ளட் போல, இதனுடனும் கீ போர்ட் ஒன்றை இணைத்துப் பயன்படுத்தலாம். டேப்ளட் பி.சி.க்களின் வரிசையில், அதிக விலையுள்ளவை ஐபேட் சாதனங் களாகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் ஆர்.டி. என்ற பெயரில் டேப்ளட் பி.சி.க்களை வழங்குகின்றன. இவை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் புரோகிராம்களை ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் மற்றும் கு@ராம் புக் ஆகிய வற்றில் இயக்க முடியாது. ஆனால், விண்டோஸ் ஆர்.டி.யில் இயக்கலாம். டேப்ளட் மற்றும் லேப்டாப்களுக்கு இடையேயான சாதனமாக இது கருதப்படுகிறது. விண்டோஸ் ஆர்.டி. மற்றும் விண்டோஸ் டேப்ளட்கள் வித்தியாசங்கள் அதிகம் கொண்டவை. ஆர்.டி. விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோரில் கிடைக்கும் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறது. ஆனால், விண்டோஸ் புரோகிராம்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. ஆபீஸ், போட்டோ ஷாப் அல்லது இது போன்ற விண்டோஸ் புரோகிராமின் முழு பதிப்பும் பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களிடம் விண்டோஸ் 8.1ல் இயங்கும் டேப்ளட் தேவை.

வில்லியாக புது அவதாரம் எடுத்த தமன்னா..!




வாழ்நாளில் ஒரு முறையாவது வில்லி வேடத்தில் நடிக்க வேண்டும் என்றார் தமன்னா. தமன்னாவுக்கு இது மந்த காலம்தான். தமிழில் நீண்ட இடைவெளிக்குபிறகு வீரம் படத்தில் நடித்தார். வேறு தமிழ்படம் எதுவும் கைவசம் இல்லை.

படுபிஸியாக இருந்த டோலிவுட்டிலும் தற்போது ஆகடு என்ற படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடிக்கிறார். அனுஷ்கா நடிக்கும் பாஹுபாலி படத்தில் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார். இந்தியில் சாஜித் கான் இயக்கும் ஹம்ஷகல் என்ற காமெடி படத்திலும், அக்ஷய் குமார் நடிக்க ஃபராத் சாஜித் இயக்கும் மற்றொரு காமெடி படத்திலும் நடித்து வருகிறார்.

ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி டூயட் பாடி தமன்னாவுக்கு அலுத்துவிட்டதாம்.

இனிமேல் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். இதுபற்றி அவர் கூறும்போது, ஹீரோயினாக பலவித கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். வாழ்நாளில் ஒரு படத்திலாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.

ராஜீவ்காந்தி கொலையின் மர்மங்கள்..!



பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி   தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளால் படுகொலை செய்யப் பட்டார். தமிழக அரசியலில் அழுத்தமான ஒரு திருப்பத்தை உருவாக்கிய நிகழ்ச்சி அது. இருபதாண்டுகள் ஆனபின்னரும்கூட தமிழ் மக்கள் அச்செயலை மறக்கவோ, மன்னிக்கவோ இல்லை என்பதைச் சென்ற தேர்தலில் டீக்கடைகள், பேருந்துகளில் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலைகள் கூட தமிழர்களில் பெரும்பாலானவர்களின் மனதை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக திருப்ப முடியவில்லை.


அத்தகைய முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்ச்சியைக் குறித்து தமிழில் எழுதப் பட்ட நூல்கள் எவை என்று பார்த்தால் ஏமாற்றம்தான். என் கவனத்துக்கு வந்தவை ஏதுமில்லை. அதிகமாக பேசப்பட்ட நூல் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவரான கார்த்திகேயன் அவர்கள்  ஆங்கிலத்தில் எழுதியது. அந்நூலை நான் அப்போதே வாசித்திருக்கிறேன். கார்த்திகேயனின் நூல் தொழில்முறை இதழியலாளர் உதவியுடன் உருவாக்கப் பட்டது.

ஏராளமான தகவல்களுடன், மேலைநாட்டில் இவ்வகை நூல்கள் எழுதப்படும் அமரிக்கையான நடையில் அமைந்தது ஆனால் அந்நூல் பல இடங்களை மழுப்பிச் செல்கிறது, பல விஷயங்களை விட்டு விடுகிறது, பல இடங்களை துல்லியமாகச் சொல்லவில்லை என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படும். குறிப்பாக இந்தப் படுகொலையின் அரசியல் பின்னணி குறித்த ஆழ்ந்த மௌனம் அந்நூலில் உண்டு. ஆனால் அந்நூலை விட்டால் அந்த புலனாய்வைப் பற்றிய வேறு நூல்கள் இல்லை.

அக்குறையை நீக்குவது ராஜீவ்காந்தி கொலைவழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியான திரு ரகோத்தமன் எழுதிய ‘ராஜீவ்காந்தி படுகொலை’ என்ற இந்நூல். சிறிய நூல் இது. ஒரே மூச்சில் வாசித்து விடத்தக்கது.

கார்த்திகேயனின் நூலைப் போல அல்லாமல் விரிவான தகவல்களும், சித்தரிப்புகளும் இல்லாமல் நேரடியாக சுருக்கமாக எழுதப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த நேரடித் தன்மையே இந்நூலை கார்த்திகேயனின் நூலை விட முக்கியமானதாக ஆக்குகிறது என்று எனக்குப் படுகிறது.

ராஜீவ்காந்தி கொலை நடந்த அன்று காலை பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து இறங்குகிறார் ரகோத்தமன். அவரை அலுவலகத்திற்கு அழைத்து  ராஜீவ் காந்தி கொலையை துப்பறியும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். இந்த விறுவிறுப்பான நூல் அங்கே ஆரம்பிக்கிறது.


லண்டனில் விடுதலைப் புலிகளின் செய்தி பொறுப்பாளராக இருந்த கிட்டு, ராஜீவ் காந்தியை நாங்கள் கொலை செய்யவில்லை என்று மறுத்ததுடன் ‘முடிந்தால் யார் கொலை செய்தார்கள் என்று கண்டு பிடிக்கட்டுமே’ என்றும் சொல்கிறார். அதில் ஏளனமும், அறைகூவலும் இருந்தது. அந்த தன்னம்பிக்கைக்குக் காரணம் ஒன்றே, புலிகளின் திட்டங்கள் எப்போதுமே மிக, மிகக் கச்சிதமானவை. ஆகவே துப்பறிவது அனேகமாக சாத்தியமே அல்ல என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் துப்பறிவதற்கான பாதைகள் முக்கியமான ஒரு தற்செயலால் திறந்து கொண்டன. ராஜீவ் காந்திக்கு கொலையாளி தணு மாலை போடும்போது புலிகளுக்காக அதைப் படமெடுக்க அனுப்பப் பட்ட ஹரிபாபு ஆர்வத்தால் சற்று நெருக்கமாகச் சென்று விட்டார். ஆகவே அவர் குண்டு வெடிப்பில் சிக்கி மரணம் அடைந்தார். அவரது காமிராவில் பதிந்த புகைப்படங்கள் போலீஸ் வசம் சிக்கின.

அந்தப் படங்களில் இருந்து மேலும் துப்புத் துலக்க உதவியாக அமைந்தவை இருவரின் பதற்றங்கள். ஹரிபாபுவை அனுப்பிய புலி ஆதரவாளரான சுபா சுந்தரம் தன்னுடைய பதற்றம் காரணமாக பலரிடம் அந்தக் காமிராவைப் பற்றி விசாரித்து மாட்டிக் கொண்டார். அவரிடமிருந்தே சிவராஜன், தணு போன்ற பலரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன.

இரண்டாவதாக ஹரிபாபுவின் தந்தை தன் நிரபராதித்துவத்தை மேலும் உறுதிப் படுத்த ஒரு காமிரா ஸ்டாண்டை கொண்டு வந்து காட்டினார். அவரது சிறிய குடிசையை போலீஸ் பலமுறை ஏற்கனவே சோதனை போட்டிருந்தது. ஆகவே அந்த ஸ்டாண்ட் அந்த வீட்டில் இருந்திருக்கவில்லை என எண்ணும் ரகோத்தமனும் குழுவினரும் மேலும் துருவி விசாரிக்கிறார்கள். அருகே இன்னொரு குடிசை அவர்களுக்கு இருப்பது தெரிய வருகிறது. அதில் ஹரிபாபுவின் டைரி சிக்குகிறது. அத்துடன் பலவகையான குறிப்புகள் கடிதங்கள்.
அங்கிருந்து சிவராஜன் பிடிபட்டு தற்கொலை  செய்து கொள்வது வரையிலான நிகழ்ச்சிகளை அபாரமான பரபரப்புடன் விளக்குகிறது இந்த முக்கியமான நூல். அவற்றில் பல நிகழ்ச்சிகள் அப்போது நாம் செய்தித்தாளில் வாசித்தவை. இந்நூல் அச்செய்திகளுக்குள் சென்று அவற்றை கோர்த்துக் காட்டி பின்னணியை விளக்குகிறது.

பல குறிப்பிடத்தக்க விஷயங்கள் இந்நூலை முக்கியமானதாக ஆக்குகின்றன. அவற்றில் முதன்மையானது சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் கார்த்திகேயனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்தான். கார்த்திகேயன் இந்த கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய, ஐயப்பட வேண்டிய அரசியல்வாதிகளை முழுக்க விசாரிக்காமலேயே விட்டு விடுகிறார். அவர்களை இதில் சம்பந்தப் படுத்தவே அவர் விரும்பவில்லை.

உதாரணமாக, வைகோவுக்கு இக்கொலைத்திட்டம் முன்னரே தெரிந்திருந்திருக்கலாம் என ரகோத்தமன் கிட்டத்தட்ட வெளிப்படையாகவே சொல்கிறார். அவரது தம்பி ரவிச்சந்திரன் போன்ற ஒருவர் சிவராஜனை முன்னரே வந்து சந்தித்ததாக குற்றவாளி சாந்தன் சொல்கிறான். ஆனால் அதைப் பற்றி விசாரிக்க கார்த்திகேயன் ஒத்துக் கொள்ளவில்லை
அதே போல அதிகாரிகளின் தவறுகளை விசாரிக்கவும் கார்த்திகேயன் ஒத்துக் கொள்ளவில்லை. பல அதிகாரிகள் எந்த வகையான பொறுப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ராஜீவ் காந்திக்கு மாலை போடுபவர்களின் பெயர் அடையாளம் விலாசத்தை குறித்து வைக்க பணிக்கப் பட்ட அதிகாரி ஒரு கசங்கிய துண்டுத்தாளில் சில பெயர்களை மட்டுமே குறித்து வைத்திருக்கிறார்!

அதைவிட ஆச்சரியமானது ராஜீவ்காந்தி ஆந்திராவில் இருந்து எப்போது கிளம்புவார் ஏன் தாமதம் என்பதெல்லாம் இங்கே உள்ள போலீஸ¤க்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. காங்கிரஸ்காரர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் சிவராசனிடம் இருந்து கிடைத்த ஒரு குறிப்பில் அவர் எல்லாவற்றையும் துல்லியமாக குறித்திருந்ததை ரகோத்தமன் காண்கிறார்.  அவர்கள் இன்னும் துல்லியமான உளவமைப்பை வைத்திருந்தார்கள்.

இந்நிலையே உச்சத்திலும். ராஜீவ் காந்தி கொலை நடந்ததும் நடந்த உள்துறை உச்ச ஆலோசனைக் கூட்டத்தில் உளவுத் துறை தலைவர் புலிகள் ஒருபோதும் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்றார். ஏன் என்றால் புலி அமைப்புக்குள் தனக்கு ஓர் உச்ச உளவாளி இருக்கிறார் என்றும் அவரிடமிருந்து தகவல் கிடைத்தது என்றும் சொல்கிறார். அந்த உளவளி கிட்டுதான். அதாவது கிட்டு நம் உளவுத் துறையின் தலைவரை அவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.அது பின்னர் தெளிவாகியது.

இருமுறை புலிகள் சுற்றி வளைக்கப்பட்ட போதும் கார்த்திகேயன் அதிரடிப்படை உள்ளே போக அனுமதியளிக்காமல் காலம் தாழ்த்தினார். அதன் மூலம் அவர்கள் சயனைட் அருந்தி சாகக் காரணமாக அமைந்தார் என்று சொல்கிறார் ரகோத்தமன். குறிப்பாக சிவராஜன் இருந்த வீட்டை வளைத்த போலீஸ் ஒரு இரவு முழுக்க பேசாமல் காத்திருக்க நேரிட்டது என்கிறார். உரிய தருணத்தில் உள்ளே சென்றிருந்தால் அவர்களை உயிருடன் பிடித்திருக்கலாம் என்று சொல்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்திய அரசுக்கும், புலனாய்வு அதிகாரிகளுக்கும் நடுவே உள்ள ஒருங்கிணைப்பாளராகவே கார்த்திகேயன் இருந்தார். இந்திய அரசு, அதன் சர்வதேச உறவுகள், உள்நாட்டு அரசியல் என எத்தனையோ விஷயங்களை கணக்கில் கொண்டே எதையும் செய்ய வேண்டியிருக்கிறது. அத்துடன் இந்திய அரசமைப்பு என்பது ஒத்திசைவில்லாத கொழகொழப்பான ஒரு யந்திரம் போன்றது. அதன் இயல்பே தாமதம்தான். ஆக என்ன நடந்திருக்கும் என எவரும் ஊகிக்கலாம்.

இந்த நூல் ராஜீவ் காந்தி கொலையை முகாந்திரமாகக் கொண்டு இரு விஷயங்களைச் சொல்கிறது. ஒன்று இந்திய நிர்வாக, காவல் அமைப்பு என்பது பொறுப்பேற்க மறுக்கக் கூடியவர்களால் ஆனது. எத்தனை மாபெரும் கவனப் பிழைக்கும் இங்கே அரசாங்கத்தில் உள்ள எவரும் தண்டிக்கப் படுவதில்லை. அவர்கள் அவர்களைப் போன்றவர்களால் தப்ப விடப் படுவார்கள். ஆகவே இந்த நிர்வாக அமைப்பு திறனற்றது, கவனமற்றது, தாமதமானது, பெரும்பாலும் முட்டாள்தனமானது.

ஆனால் தனிமனிதர்களாக நம் அதிகாரிகளில் பலரும் அர்ப்பணிப்புள்ளவர்கள் ,  வியக்க வைக்கும் மதிக் கூர்மையும் தைரியமும் கொண்டவர்கள். இத்தனையையும் மீறி நம் அமைப்பு இன்னமும்  இயங்கிக் கொண்டிருக்க அதுவே காரணம்...
http://nhm.in/shop/978-81-8493-311-6.html

லாரியில் (Lorry) மோதிய பெண்..!



பேய்களின் நடமாட்டத்தை அதிகளவில் வாகன சாரதிகளுக்கே காண்கின்றனர். காரணம் அவர்கள் தான் ஒவ்வொரு நாளும் வேறுப்பட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு செல்கின்றனர்.

இப்படி ஒவ்வொரு சாரதிக்கும் பல்வேறு அனுபவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே!

இப்படி எனது நண்பரொருவர் வாகன சாரதியாக கடமையாற்றி வருகின்றனர்.

இவர் அதிகளவில் வெளி மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.

அநுராதபுரத்தில் தனது வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்த எனது நண்பன், இரவு நேரத்தில் மற்றுமொருவருடன் லொறியில் வந்து கொண்டிருந்துள்ளார்.

ஒரு இடத்தில் வைத்து எனது நண்பனுக்கு அருகிலுள்ள நபர் தீடிரென கத்தியுள்ளார்.

வாகனத்திற்கு முன்னால் பெண்ணொருவர் நிற்பதாகவும், வாகனத்தை நிறுத்துமாறும் கூறி சத்தமிட்டுள்ளார்.

ஆனால் சாரதிக்கு ஒன்றும் தெரியவில்லை. வாகனத்திற்கு முன்னால் யாரும் நிற்பதுவும் தெரியவில்லை.

இவர் வாகனத்தையும் நிறுத்தாது வேகமாக வந்து விட்டார்.

அப்போது அருகிலிருந்த நபர் எனது நண்பனை பார்த்து.

நான் சொன்ன நேரமே லொறியை நிறுத்தியிருந்திருக்கலாம் தானே. இப்போ பெண்ணை மோதிவிட்ட தானே. அவள் இறந்திருப்பா என கூறியுள்ளார்.

இதை கேட்ட எனது நண்பனுக்கு ஒரே ஆச்சரியம். யாரும் இருக்கவில்லையே. இவன் ஏன் இப்படி சொல்லனும். என பல கேள்விகள் மனதில்.

அப்போது ஒன்றுமே புரியவில்லை எனது நண்பனுக்கு.

லொறியை வேகமாக செலுத்திய எனது நண்பனுக்கு மற்றுமொரு ஆச்சியமான செயல் அப்போதே நிகழ்ந்துள்ளது.

என்ன தெரியுமா. வாகனம் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கு வந்துக் கொண்டே உள்ளதாம். ஆனால் அந்த பாதை எனது நண்பனுக்கு நன்றாக பரீட்சீயமான பாதை.

அப்படி இருந்தும் மீண்டும் மீண்டும் அந்த பெண் மோதுண்டதாக கூறப்பட்ட இடத்திற்கே வாகனம் எப்படியோ வருதாம். புரியவில்லை எனது நண்பனுக்கு.

ஏதோ நடக்கின்றது என மனதில் எண்ணம். வாகனத்தை அப்படியே ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு தூங்கி விட்டார்களாம்.

மீண்டும் காலையில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் எனது நண்பனும் அவனுடைய நண்பனும்!

குங்குமம் இட்டுக் கொள்வதால் சுயக் கட்டுபாட்டை பெறலாம்...!



1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.


3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

இன்வெர்ட்டர் வாங்குபவர்களும்,ஏற்கெனவே வைத்திருப்பவர்களும்-கவனிக்கவேண்டியவை...!



 புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து என்பதை பார்போம்.

''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250வாட்ஸில்ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.

இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும்,சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன்படும். இன்றையநிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.

பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர்,பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' என்றவர், இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.

மூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.

இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.

நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.

இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில்,சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவுமின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம்வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.

பராமரிப்பது எப்படி?

இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும்மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தைபயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.

பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகைஇருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்''.

எப்போதெல்லாம் ‘ஸாரி’ சொல்லணும் தெரியுமா...?



ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சண்டைகள் கண்டிப்பாக இருக்கும். அதே போல ஒவ்வொருவரும் தவறும் செய்வதும் உண்டு. அவ்வாறு சண்டைகள், தவறுகள் என்பது இருக்கும் போது, அதை நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது. மேலும் ஏதேனும் தவறு செய்தாலோ அந்த நேரத்தில் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையென்றால் அந்த ஈகோ உங்கள் காதல் வாழ்க்கையையே பாழாக்கிவிடும். இத்தகைய மன்னிப்பு என்னும் ‘ஸாரி’ என்ற வார்த்தையை எந்தெந்த நேரத்தில் மறக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

1. “7 மணி சினிமாவிற்கு 8 மணிக்கு வீட்டிற்கு வருதல்” – அனைத்து வீடுகளிலும் பெரும்பாலும் இந்த காரணத்திற்காகத் தான் சண்டையே ஆரம்பமாகும். இவ்வாறு சண்டை ஏற்படும் போது கோபமாக இருக்கும் உங்கள் துணையிடம் முதலில் ‘ஸாரி’ என்று மறக்காமல் கூறி, பிறகு அவர்களது கோபத்தை முற்றிலும் போக்க, அவர்களிடம் அடுத்த ஷோவிற்கான டிக்கெட் கிடைத்தால் கண்டிப்பாக போகலாம் என்று சொல்லி டிக்கெட் வாங்கிவிட்டால், நீங்கள் செய்த தவறு அவர்கள் மனதில் இருக்காமல் மறைந்துவிடும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் பிறகு என்ன நடக்கும்? வீடு தான் இரண்டாகும்.

2. வெளியே செல்ல மனைவி அழைக்கும் போது, நண்பர்களது வேண்டுகோளுக்கிணங்க மனைவியிடம் வேலை இருக்கிறது என்று பொய் சொல்லி, நண்பர்களுடன் வெளியே சென்று ‘கிரிக்கெட் மேட்ச்’ விளையாட சென்று இருப்பீர்கள். இந்த விஷயம் மனைவிக்கு வேறு வழியில் தெரிந்தால், பிறகு நீங்கள் அவ்வளவு தான். ஆகவே வீட்டிற்கு வந்ததும் அவர்கள் நல்ல மனநிலையில், மகிழ்ச்சியாக இருக்கும் போது நடந்ததை சொல்லி, அந்த நேரத்தில் ‘ஸாரி’ கேட்க வேண்டும். அதுவும் அப்படி கேட்கும் போது முகத்தை ‘ஹட்ச் டாக்’ போல் சுருக்கி கேளுங்கள். கண்டிப்பாக அவர்கள் சிரித்து நீங்கள் செய்ததை மறந்துவிடுவார்கள்.

3. மனைவி வீட்டில் ஆசையாக, சுவையாக சமைத்து வைத்திருக்க, கணவன் நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும் போது வீட்டில் சண்டை வெடிக்கும். ஆமாம் பின்னர் என்ன, மனைவி காலையிலேயே சொல்லி அனுப்பியும் சாப்பிட்டு வந்தால் கோபம் வராதா? என்ன? ஆகவே அந்த சமயத்தில் மறக்காமல் அவரிடம் செய்த தவறை உணர்ந்து ‘ஸாரி’ என்று கேட்டு, பிறகு அவர்களிடம் பசிக்கிறது என்று கூறி அவர்கள் சமைத்த உணவை, அவர்கள் முன்னே வயிறு வெடிக்கும் அளவு உண்பது போல் சிறு நாடகம் நடித்து பாருங்கள், அவர்கள் கண்டிப்பாக சமாதானமாவார்கள்.

4. ஊரில் இருந்து மனைவி வரும் போது, அவர்களை அழைத்து வருவதை மறந்துவிட்டு நேரம் போவது தெரியாமல், ஆபிஸில் வேலை செய்து கொண்டிருப்பீர்கள். பிறகு நேரத்தை பார்க்கும் போது தான் அவர்கள் காத்துக் கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வரும். ஆனால் மனைவி வீட்டிற்கு எப்படியாவது சென்றிருப்பாள் என்பது தெரியும். அந்த நேரத்தில் வீட்டிற்கு சென்று வெறும் ‘ஸாரி’ மட்டும் கேட்டால் கோபம் போகாது, ஐஸ் வைக்க அவர்களுக்கு ஒரு மலர் கொத்துகளை வாங்கிக் கொண்டு, அதோடு ‘ஸாரி’ சொல்லுங்கள். சற்று நேரம் கோபம் இருக்கும், ஆனால் நீங்கள் கொஞ்சம் பேசி புரிய வைத்தால் போய்விடும்.

ஆகவே இந்த நேரங்களில் எல்லாம் மறக்காமல் ‘ஸாரி’ சொல்லினால், வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.

 உங்கள நல்லா புருஞ்சுகுற துணையா  இருந்தா எதுக்கு சாரி சொல்லணும்!

தனது ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா இளையதளபதி...!



பிரபல தயாரிப்பாளரும், வளர்ந்துவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இளையதளபதி விஜய் நடிக்கும் படத்தினைத் தயாரிக்க விருப்பம்
தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் பிரபல ஹீரோக்களை வைத்துப் படம் தயாரிக்க முடிவெடுத்தால் முதலில் எந்த ஹீரோ நடிக்கும் படங்களைத் தயாரிப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் விஜய், சூர்யா, அஜித், சிம்பு மற்றும் தனுஷ் என்று கூறியுள்ளார்.

இளையதளபதி விஜயின் ரசிகரான உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே தரணி இயக்கத்தில் விஜய் நடித்த குருவி திரைப்படத்தினைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான இது கதிர்வேலன் காதல் திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது. உதயநிதி நடிப்பில் உருவாகவுள்ள மூன்றாவது திரைப்படமான நண்பேன்டா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று துவங்கவுள்ளன.