சிங்கப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதற்கான காரணத்தை அவரோ, கட்சித் தரப்போ வெளியிடவில்லை.
இந்த நிலையில் அவர் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்குதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.
விஜயகாந்த்துக்கும் சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும், அதுகுறித்து மருத்துவர்கள் அவருக்கு முக்கிய ஆலோசனைகள் கூறியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேமுதிக அலுவலகத்தில் விசாரித்தபோது, 'எதுவும் சொல்வதற்கில்லை' என்று கூறிவிட்டனர்.
0 comments:
Post a Comment