Friday 28 February 2014

பாஜக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 12 + 1...!



பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜயகாந்த் இன்று மாலை அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது -விஜயகாந்துக்கு மொத்தம் 12 தொகுதிகளையும், மாநிலங்களவை சீட் ஒன்றையும் தருவதாக பா.ஜ.க தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பாமக வுக்கு 8 அல்லது 9 தொகுதிகள்தான் ஒதுக்குவோம் என்று பாஜக கூறியுள்ளது. ஆனால் தே மு தி க-வை விட குறைவான திகுதிகள் என்பதால் அதை பாமக இதுவரை ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது

இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் வலுவான கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலையில் மதிமுக, ஐஜேகே, பாமக கொங்கு நாடு மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் பாஜ கூட்டணியில் இணையும் முடிவை தெரிவித்துள்ளன. அதே சமயம் பாமக தவிர மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது என்றாலும் தேமுதிகவை சேர்த்தால் கூட்டணி வலுவானதாக இருக்கும் என பாஜக கணக்கு போட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக விஜயகாந்தை பாஜக அணுகிய போது, விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் தொண்டர்களிடம் கருத்து கேட்டு கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறினார். ஆனால்,வழக்கம் போல் அந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முடிவை விஜயகாந்த் அறிவிக்கவில்லை.

அத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் கட்சி எம்எல்ஏக்களுடன் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை பேச்சு எழுந்தது. ஆனால், சோனியா, ராகுல் ஆகியோர் விஜயகாந்தை சந்திக்க முன்வரவில்லை என கூறப்பட்டது. இதனால், தேமுதிகவினர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.

இந்த அப்செட்டைப் பயன்படுத்தி மறுபடியும் விஜயகாந்தை, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது இக்கூட்டணியில் சேர வேண்டுமானால் 18 தொகுதிகள் வழங்க வேண்டும் என்று தேமுதிக கோரிக்கை விடுத்தது.ஆனால் 12 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தேமுதிகவினர் சம்மதிக்காத நிலையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே விஜயகாந்த் ஏதோ மெடிக்கல் செக்கப்புக்காக சிங்கப்பூர் சென்று விட்டார். ஆனாலும் தேமுதிகவில் விஜயகாந்த் சார்பில் செயல்படும் அவ்ர் மச்சான் சுதிஷ் உள்ளிட்ட தலைவர்களுடன் பாஜவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடைசியில் 12 தொகுதிகளையும், மாநிலங்களவை சீட் ஒன்றையும் தருவதாக பா.ஜ.க தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்று பாஜகவுடனான கூட்டணி உடன்பாடு குறித்த அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்தபடியே இன்று மாலை 5 மணியளவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. தற்போது கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவித்தாலும், எத்தனை சீட், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அக்கூட்டணியின் மற்றொரு கட்சியான பாமக வுக்கு 8 அல்லது 9 தொகுதிகள்தான் ஒதுக்குவோம் என்று பாஜக கூறியுள்ளது. ஆனால் தே மு தி க-வை விட குறைவான தொகுதிகள் என்பதால் அதை பாமக இதுவரை ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நேற்று ஒரு பா ம க எம் எல் ஏ முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்ததையடுத்து அவ்ர்கள் சொல்லும் தொகுதிகளுடன் ஒரு மேலவை எம்.பி. சீட் கேட்டு இணைய வாய்ப்பிருக்கிறதாம்.

அத்துடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே, கொங்குநாடு மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கவும் பாஜ முடிவு எடுத்துள்ளது. பேச்சுவார்த்தைகளை முடித்து வரும் 1ம் தேதி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட பாஜக மும்முரமாக இறங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment