Monday, 17 March 2014

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக கட்டுகிறோம்..?




அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்....

"அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம் னு சொல்லுவாங்க ....

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை ....

அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது

முதலாவது பலன்

அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராஜ தந்திரி அது.. விடம் கொண்ட பூச்சிகள், பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை.

எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விடத்தின் கடிவாய்க்கும் இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.

கையினால், விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.

மருத்துவ பலன்

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு.

அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாகமாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள்.

 இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.

இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....

நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல்சிறு சிறு விடயங்கலளையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....

வாழ்க தமிழ் வளர்க தமிழர் பாரம்பரியம்

சிம்பு - ஹன்சிகா காதல் ஒரு திட்டமிட்ட நாடகமா...? அதிர்ச்சி தரும் உண்மைகள்




கடந்த வருடம் சிம்புவும் ஹன்சிகாவும் காதலிப்பதாக அதிகாரபூர்வமாக தங்கள் டுவிட்டர் பக்கங்களில் அறிவிப்பு செய்தார்கள்.

அதன்பின்னர் அவர்கள் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி தங்கள் காதலை வளர்த்துக்கொண்டதாகவும், பின்னர் நயன்தாரா வருகையால் திடீரென காதலை முறித்துக்கொண்டதாகவும் மீண்டும் இருவரும் ஆளுக்கொரு அறிக்கை கொடுத்து பிரிந்துவிட்டனர்.

இதில் எந்த உள்குத்தும் இல்லை என்பது போல் தெரிந்தாலும், இந்த காதலே ஒரு நாடகம்தான் என்று செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது பிரபல ஆங்கில புலனாய்வு பத்திரிகை ஒன்று.

கடந்த வருடத்தில் சிம்புவுக்கு படம் ஒன்று செட் ஆகவில்லை. வாலு, வேட்டை மன்னன் இரண்டுமே படப்பிடிப்பை முடிக்க முடியாமல் திணறிவந்தது. இரண்டாம்தர இயக்குனர்கள் கூட சிம்புவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க யோசித்தனர்.

 கொன்சம் கொஞ்சமாக சிம்புவை திரையுலகம் மறக்க தொடங்கியது.

இந்த நேரத்தில்தான் ஒரு சீனியர் நடிகரின் அட்வைஸ்படி ஏதாவது ஒரு முக்கிய நடிகையிடம் காதல் என்று செய்தியை பரப்பிவிட்டால், உன்னை பற்றி செய்தி பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் பரபரப்பாக வரும். அந்த பப்ளிசிட்டியை வைத்து மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற ஐடியாவை கொடுத்துள்ளார்.

எனவே வாலு படத்தில் நடித்த நட்பு காரணமாக இந்த செட்டப் காதலுக்கு கைகொடுத்துள்ளார் ஹன்சிகா. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக பொய்ச்செய்தியை அவர்களே கிளப்பிவிட்டனர்.

இருவரும் நெருக்கமாக இருப்பதுபோன்று ஒருசில போஸ்களையும் கொடுத்து பத்திரிகைகளையும், இணையதளங்களையும் பரபரப்பு ஏற்படுத்தினர்.

 இந்த ஐடியாவிற்கு உடனே பலன் கிடைத்தது. சிம்புவின் மார்க்கெட் உயர்ந்தது. அதுவரை சிம்புவை வைத்து படமெடுக்க தயங்கியவர்கள் வலிய வந்து வாய்ப்பு கொடுத்தனர்.

கவுதம் மேனன், பாண்டிராஜ், ஆகியோர்களிடம் இருந்து வந்த வாய்ப்புகள் எல்லாம் ஹன்சிகா காதல் மேட்டர் பப்ளிசிட்டியால் கிடைத்ததுதான். தாங்கள் நினைத்தது நிறைவேறியவுடன் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக மீண்டும் ஆளுக்கொரு அறிக்கை கொடுத்து நாடகத்தை யாருக்கும் தெரியாமல் முடித்துவிட்டனர்.

இதுதான் உண்மையில் நடந்தது என்று அந்த ஆங்கில புலனாய்வு பத்திரிகை தெரிவித்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று சம்மந்தப்பட்ட இருவருக்கு மட்டுமே தெரியும்.

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான 25 வழிகள்..!




இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.


  • தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.
  • உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-
சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.
  • அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.
  • அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-
ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.
  • சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். 

  • அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-
 உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.

  • பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-
பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.
  • சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-
சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
  • நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-
குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

  • மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.
  • க்ரீன் டீ பருகுங்கள்:-
தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.
  • யோகாவை தேர்ந்தெடுங்கள்:-
யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
  • வீட்டில் உண்ணுங்கள்:-
வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

  • உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-
சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.
  • வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-
நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.
  • உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-
உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.
  • உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-
வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.
  • உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.
  • உணவிற்கு முன் பழங்கள்:-
உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

  • தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-
கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.
  • மாமிசத்தை குறைக்கவும்:
அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
  • 100 கலோரிகளை எரிக்கவும்:-
தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.
  • இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-
இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.
  • உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-
தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.
  • கொண்டாட்டம்:-
சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

மானாட மயிலாட அவர் முன்னாடி நான் ஆட இப்போ அரசியலில் ஆடப்போறேன் மச்சான்...!




நடிகை நமீதா தேர்தலில் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நமீதா அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

அவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.

இது குறித்து நமீதா கூறியதாவது:–

நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். 3 கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிட எனக்கு விருப்பம் உள்ளது. எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை இப்போது சொல்ல முடியாது.

அரசியல் கட்சியில் இணைந்த பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அதை விரைவில் எதிர் பார்க்கலாம்.

நான் அரசியலில் ஈடுபடுவதால் சினிமா வாழ்க்கை பாதிக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை.

காரணம் இப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கவில்லை. நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் நடிப்பேன்.

தமிழக மக்கள் என் மீது நிறைய அன்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதேனும் திருப்பி செய்யும் நோக்கில் தான் அரசியலுக்கு வருகிறேன்.

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். மக்களிடம் நிறைய அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த தேர்தலில் நிறைய ஓட்டுகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு நமீதா கூறினார்.

என்கூட நடிக்க 2 கோடியா வேணும்..? காத்து வறட்டும் நீ கெளம்புமா..! - கடுப்பான கமல்





கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தை பற்றிய சில புதிய விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார். ஒரு வேடத்தின் பெயர் உத்தமன்.

8ஆம் நூற்றாண்டின் நாடககலைஞராக நடிக்கும் இவருக்கு ஜோடியாக ஊர்வசி நடிக்கிறார்.

மேலும் நாடகக்கலைஞரான உத்தமனை விரட்டி விரட்டி காதலிக்கும் அரசி வேடத்தில் பூஜா குமாரும், பூஜா குமாரின் தந்தையாக நாசரும் நடிக்கின்றனர்.

இன்னொரு கமல் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மனோரஞ்சன். இவருக்கு குருவாக கே.பாலசந்தர் நடிக்கிறார்.

 மனோரஞ்சனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

மேலும் மனோரஞ்சனையும் ஒரு பெண் ஒருதலையாக விரட்டி விரட்டி காதலிக்கிறார். அவர்தான் பூ பார்வதி.

இரண்டு வேடங்களுக்கும் உள்ள ஒற்றுமையை அற்புதமான கிளைமாக்ஸில் விளக்க உள்ளார்களாம்.

முதலில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது.

ஆனால் அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டதால், தயாரிப்பு தரப்பு அவரை நீக்கிவிட்டு, ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆண்ட்ரியா ஏற்கனவே விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களிலும் கமல்ஹாசனுடன் நடித்ததால், சம்பளம் குறித்து பேரம் பேசவில்லை. எனவே ஆண்ட்ரியாவையே இந்த படத்திலும் ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

நடிக்கிற எல்லா படமும் ஊத்திக்கிச்சுனா இப்படித்தா பேசனும் - அரசியலுல இதெல்லாம் சாதரணமப்பா..!


எனக்கு நடிக்கவே பிடிக்கல, பணம் பிடிக்கல - சொல்வது நம்ம சிம்பு...!


தனக்கு இப்பொழுதெல்லாம் படத்தில் நடிக்கவே பிடிக்கவில்லை என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடிகை சங்கீதா நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் போது சிம்பு மனம் திறந்து சில விஷயங்கள் பற்றி பேசினார். அதில் சிலவற்றை பார்ப்போம்.

சினிமாவின் அனைத்து நிலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அது தானாக அமைந்த ஒன்று. ஒரு சில படப்பிடிப்புகளின்போது சினிமா பற்றி தெரிந்திருக்காமல் இருக்கக் கூடாதா என்று தோன்றும்.

சினிமாவின் பலதரப்பு பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால் சில படப்பிடிப்புகளில் நடக்கும் தவறுகள் எனக்கு தெரிந்துவிடும். என்ன செய்ய முடியும்.

தற்போது எல்லாம் எனக்கு படம் பண்ணவே பிடிக்கவில்லை. சினிமாவை தாண்டி வேறு ஏதாவது செய்தால் என்ன என்று தோன்றுகிறது.

சின்ன வயதில் ரஜினி சார் மாதிரி ஆக வேண்டும். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் 29 வயதுக்கு மேல் வாழ்க்கை வேற மாதிரி இருக்கின்றது.

சினிமா என்கிற ஒரு வட்டத்திற்குள் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதில் இருந்து வெளியேற வேண்டும். சினிமாவை தாண்டி உலகிற்கு ஏதாவது செய்ய வேண்டும்.

எனக்கு பணம் என்றாலே பிடிக்கவில்லை. பணத்தால் மனிதாபிமானம் போய்விட்டது என்று நினைக்கிறேன். பணத்தால் நல்லவர்கள் கூட தீயவர்கள் ஆகிறார்கள். சமூகம் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. பொறாமை அதிகரித்துவிட்டது. இதற்கு எல்லாம் பணம் தான் காரணம். உலகத்தில் பணம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

யாராவது வந்து உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதா என்று கேட்டால் எனக்கு அப்படி ஒரு ஆசையே இல்லை என்பேன். என்னிடம் போட்டி, பொறாமை, கோபம் இல்லை. படத்தின் வெற்றி, தோல்வி என்னை பாதிக்காது என்றார் சிம்பு.

இரட்டை வெடம் போடுவதில் புத்திசாலி ....உலகநாயகன்...!




'உத்தம வில்லன்' படத்தில் கமல் டபுள் ரோலில் நடிக்கிறார். உத்தமன் என்ற எட்டாம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கேரக்டரிலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரம் கேரக்டரிலும் நடிக்கிறார்.


மனோரஞ்சனின் குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார்.மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசி நடிக்கிறார்.


எட்டாம் நூற்றாண்டில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார். 21ம் நூற்றாண்டில் சினிமா ஸ்டார் கமலின் காதலியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.


சர்வாதிகாரி கேரக்டரில் நாசரும், ஜேகப் ஜக்காரியா கேரக்டரில் ஜெயராமும், ஜேயராம் வளர்ப்பு மகளாக பார்வதி மேனனும் நடிக்கிறார்கள்.


எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

கதை தேடும் ரஜினியுடன் ஒரு சந்திப்பு...!





'கோச்சடையான்’ படத்துக்காகத் தான் எழுதிய பாடல் வரிகளை வாசிக்கக் கொடுக்கிறார் 'கவிப்பேரரசு’ வைரமுத்து. வாசித்து முடித்து நிமிர்ந்ததும், 'எப்படி இருக்கு?’ என்று ஆர்வமாக, அக்கறையாக விசாரிக்கிறார். எத்தனை உயரம் தொட்டாலும், அந்த ஆர்வமும் துடிப்பும் வைரமுத்து ஸ்பெஷல்!

''கோச்சடையான் என்கிற படைத்தலைவன், ஒரு பெரிய போரில் வெற்றிவாகை சூடித் திரும்புகிறான். அவனுக்குப் பொதுமக்கள் மத்தியில் அவ்வளவு நல்ல பெயர். அவன் வீரன். அதே நேரத்தில் ஞானம் நிறைந்தவன். மக்கள் அவனைப் புகழ்ந்து பாடுகிறார்கள். நடுநடுவே கோச்சடையான், மக்களுக்கு நல்மொழிகளைச் சொல்கிறான். இதுதான் காட்சி.

பாடலை ரஜினியையே பாட வைத்தோம். ஒலிப்பதிவு முடிந்து பாடலைக் கேட்டபோது, காந்தமாக ஈர்த்தது ரஜினியின் குரல். இத்தனைக்கும் அவர் பாடவில்லை. தன் கணீர் குரலில் அந்த வரிகளைத் துணிவும் கனிவுமாக வாசிக்கத்தான் செய்தார். அதற்கே அப்படியொரு வசீகரம்!'' - பாடல் உருவாக்கம் பற்றிய அறிமுகத்துக்குப் பிறகு அந்தப் பாடல் வரிகளை தனது குரலிலேயே வாசிக்கிறார் வைரமுத்து.

''மக்கள் குழு:

உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம் முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ

உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்

தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

ரஜினி:

எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

மாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமைகொள்
தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையைவிட
நண்பனின் பகையே ஆபத்தானது.

சூரியனுக்கு முன் எழுந்துகொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா... உயிரா... பெயரா?
மூன்றும் இல்லை - செயல்

'நீ போகலாம்’ என்பவன் எஜமான்
'வா போகலாம்’ என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா... எல்லாம் கொஞ்ச காலம்!

இப்படி, ஒவ்வொரு பாடலையும் புது ட்யூன், எழுதாத மொழி எனக் கலவையாக உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு ரசிகனும் இசைக்கு ஒரு காதும், மொழிக்கு ஒரு காதும் கொடுப்பான் என்று நம்புகிறேன்!''

''பொதுவா பாடல் எழுதும்போது இசையமைப் பாளருக்கும் பாடலாசிரியருக்கும் நிறைய சண்டை வருமே... ரஹ்மான்கூட நீங்க அப்படி சண்டை போட்டிருக்கீங்களா?''

''சண்டை, சர்ச்சைகள் ஆரோக்கியமான விஷயம். சண்டை இல்லாமல் கலை வராது; வளராது. ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கும் ரஹ்மானுக்கும் பெரிய சர்ச்சைகள் வரவில்லை. ரஹ்மானோட  ரொம்ப சண்டை வந்தா, நான் அவர் வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து டீ சாப்பிடப் போயிடுவேன். அதை அவரும் புரிஞ்சுப்பார். 'கவிஞர், டீ சாப்பிடுறாரா?’னு விசாரிப்பார்.

ரஹ்மான், ஒரு ஜப்பானியர் மாதிரி. அவருக்குக் கோபம் வந்தா, ரொம்பத் தீவிரமா வேலை பார்க்க ஆரம்பிச்சிருவார். ஏன்னா, ஜப்பானியத் தொழிலாளர்கள் கோபம் வந்தா ஸ்ட்ரைக் பண்ண மாட்டங்க. அதிகமா உற்பத்தி பண்ணிட்டு, அதை விற்க முடியாதபடி பண்ணிருவாங்க.

எங்களுக்குள் பெரிய சண்டை வந்தது 'ரட்சகன்’ படத்தின் 'சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?’ பாடல் பதிவில்தான். அதில் அவர் 'ஆம்ஸ்ட்ராங்’கிற வார்த்தை ரொம்பக் கடுமையா இருக்கு. ட்யூன்ல ஒட்டலை. அதை எடுத்திரலாம்’னு சொன்னார். 'நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, அந்த வார்த்தை இல்லைன்னா அந்தப் பல்லவியில் புதுமை இல்லையே...’னு நான் சண்டை போட்டேன். ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்கலை. 'சரி பாடுறதுக்கு ஹரிஹரன் வந்துட்டு இருக்கார். அவர் பாடும்போது இடிக்குதுனு சொன்னா எடுத்துருவோம்’னு நான் சொன்னேன். ஹரிஹரன் வந்தார். பாட்டு வரியைச் சொன்னதும், 'ஸோ பியூட்டி!’னு சொல்லிட்டுப் பாடினார். பாடும்போது 'ஆம்ஸ்ட்ராங்’கிற வார்த்தையில் 'ஸ்ட்ராங்’கை மென்மையாப் பாடிட்டார். ட்யூன் இடிக்கலை. பாடல் இன்றும் பெரும் ஈர்ப்புடன் ரசிகர்களைத் தக்கவைத்திருக்கிறது!

அதேபோல 'மின்சார கனவு’ படத்தின் 'ஊலல்ல்லா...’ பாடல் ட்யூனை ரஹ்மான் வாசித்தார். எனக்கு அது பிடிக்கவே இல்லை. 'நான் இந்த ட்யூனுக்கு பாட்டு எழுதலை’னு சொல்லிட்டு வந்துட்டேன். பிறகு, ரஹ்மானும் ராஜீவ் மேனனும் வந்து பேசினாங்க. 'பிரமாதமான ட்யூன் அது. நீங்க நிச்சயம்  பாட்டு எழுதணும்’னு சொன்னாங்க. எனக்கு அப்போ புரியலை. அரை மனசோட எழுதிக் கொடுத்தேன். ஆனா, இசையும் வரிகளுமா பாடல் கம்போஸ் ஆகி வந்தப்போ, அற்புதமா இருந்தது. அந்தப் பாட்டு பிரமாண்ட ஹிட் ஆனதோட, பாடகி சித்ராவுக்கு தேசிய விருதையும் பரிசளித்தது. எங்களுக்குள் நடக்கிற இந்த ஆரோக்கியமான சண்டைகள்தான், நல்ல நல்ல பாட்டுகளை ஊற்றெடுக்க வைக்குது!''

''ரஜினி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டாரா?''

''புகைபிடிப்பதைச் சுத்தமா விட்டுட்டார்; மதுவும் தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்துட்டார். முன்னாடி எல்லாம் அவர் நினைச்ச நேரத்துக்குச் சாப்பிடுவார். இப்போ குறித்த நேரத்துக்குச் சாப்பிடுகிறார். மிக அமைதியாக இருக்கிறார். கடந்த 30 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைத்த மனுஷன், இப்போது ஒரு நாளில் 15 மணி நேரம் எந்த வேலையும் செய்யாமல் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது துன்பமான காரியம். அந்தத் துன்பத்தையும் அவர் ஏத்துக்கிட்டார்.

சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து வந்தவரை நான் சந்தித்தபோது, ஒரு விஷயம் சொன்னார். 'சென்னை மருத்துவமனையில் எனக்கு எந்தத் துன்பமும் இல்லை; சிங்கப்பூர் மருத்துவ மனையில்தான் நான் ரொம்பத் துன்பப்பட்டேன். அவ்வளவு கடுமையான சிகிச்சை.'மத்தவங்களைப் போல நீங்களும் ஒரு நோயாளி. ட்ரீட்மென்ட் கடுமையா இருக்கும். தாங்கித்தான் ஆகணும்’னு சிங்கப்பூர் மருத்துவர்கள் சொல்லிட்டாங்க’ என்றார் சிரித்துக்கொண்டே.

ஏன்னா, சென்னையில் அவர் நோயாளி அல்ல... ரஜினிகாந்த். சிங்கப்பூரில் அவர் ரஜினிகாந்த் அல்ல... நோயாளி. அந்தக் கடுமையான சிகிச்சை மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக இப்போ பழைய ரஜினியா, ஆரோக்கியமா, புயல் வேகத்துக்குத் திரும்பிட்டார். பழைய ரஜினியா நடிக்கிறதுக்கான நல்ல கதையைத் தேடிட்டு இருக்கார்!''

நவீன யுக பாசமலர்கள் இவங்க தான்...!




காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் தற்போது வாயை மூடி பேசவும் என்ற படத்தை எடுத்துமுடித்துவிட்டார். அடுத்ததாக ஒரு ஜாலியான காதல் கதை ஒன்றை தயார் செய்து தனுஷிடம் சென்று கதையை சொல்லி கால்ஷிட் கேட்டுள்ளார்.


கதையை கேட்டதும் மிகவும் ஆர்வமான தனுஷ், இதுமாதிரியான கதையைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். திரைக்கதையை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.


இதனால் மிகவும் குஷியான பாலாஜி மோகன் தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கின்றார். இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியிருக்கிறார் பாலாஜி மோகன்.


கதையையும், ஹீரோவையும் கேட்ட காஜல் அகர்வால் தன்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. ஆனால் தனுஷுக்கு ஜோடியாக நான் நடித்தால் கெமிஸ்ட்ரி செட் ஆகாது. தனுஷையும் என்னையும் அருகில் வைத்து பார்த்தால் தனுஷ் என் தம்பி மாதிரி இருபார். அதனால் ஹீரோவை மாற்றிவிடுங்கள்.


அப்படி மாற்றினால் கண்டிபாக இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது காஜல் அகர்வால்தான் என்றும் திடீரென அப்போது காஜலை அந்த படத்தில் இருந்து தூக்கிவிட்டதற்கு தனுஷ்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதற்கு பழிவாங்கவே இவ்வாறு சொன்னாரா காஜல் அகர்வால்?


இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி மோகன் செய்வதறியாது திகைத்து உள்ளார். தனுஷ் அல்லது காஜல் இவர்களில் யாரையாவது ஒருவரை மட்டும் ஏற்றுக்கொண்டு இன்னொருவரை படத்தில் இருந்து நிக்கவேண்டும். என்ன செய்யப்போகிறார் பாலாஜி மோகன் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.