Wednesday, 5 March 2014

உத்தம வில்லன் படத்தில் பார்வதி..!




மரியான் படத்தில் பனிமலர் கதாபாத்திரம் நடித்தற்காக நிறைய பாராட்டுகளை பெற்றவர் பார்வதி. இவர் எடுக்கும் கதாபாத்திரங்களை மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுக்கிறார்.

இந்நிலையில் உத்தம வில்லன் படத்தின் 3 நாயகிகள் யார் என்ற அறிவிப்பு இல்லாமல் இருந்த நிலையில் மரியான் படத்தில் நடித்த பார்வதி தேர்வாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 3ஆம் தேதி பெங்களூரில் தொடங்கியுள்ளது.

இது பற்றி பார்வதி கூறுகையில், இந்த படத்தில் நான் நடிக்கவுள்ளதாகவும், கமல்  சாருடன்  ஒரு  படம் நடிப்பதில்  சந்தோசப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த  படத்தை  கமல்  ஹாசனின்  நண்பர்   ரமேஷ்  அரவிந்த்  இயக்க,  இயக்குனர்  லிங்குசாமி  தயாரிக்கிறார்.

சமீபத்தில்  உத்தம  வில்லன்  படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டர்  மற்றும்  டீஸர்  வெளியாகி  ரசிகர்கள்  மத்தியில்  நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

செக்ஸ் பற்றி தோழிகளிடம்தான் அதிகம் பேசிக் கொள்கிறார்களாம் பெண்கள்..!




ஒவ்வொரு ஜீவனுக்கும் புத்துணர்வு தரக் கூடிய ஒரே சிந்தனையான செக்ஸ் குறித்த சிந்தனை இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதே சமயம் செக்ஸ் குறித்த சிந்தனைகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் மூழ்குகிறார்கள் என்றும் . ஒரு நாளைக்கு 19 முறையாவது ஆண்களுக்கு செக்ஸ் குறித்த சிந்தனை வந்து போகும் எனவும் அதுவே பெண்களுக்கு தினமும் 10 முறை வருகிறது என்றெல்லாம் உறுதிப்படுத்தி வந்த நிலையில் .பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விஷயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

இது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவு தகவலில்,” மற்ற பெண்களுடன் இருக்கும்போது பல விஷயங்களை பெண்கள் பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும் பெண்கள் அவர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதுடன் பெரும்பாலும் செக்ஸ் குறித்த விஷயத்தையே ஆர்வமுடன் பேசுகின்றனர். இவ் வகையை சேர்ந்த பெண்கள் 34 சதவீதத்தினர் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேலும், 16 சதவீத பெண்களே தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்கையில் செக்ஸ் தொடர்பான பேச்சை தொடங்குகின்றனராம்.ஆனால் இரவு கொண்டாட்டத்தில் இருக்கும் பெண்களில் 57 சதவீதத்தினர் தங்கள் குடும்பம் குறித்த விவரங்களை அலசி ஆராய்கின்றனர் என்றும் 54 சதவீதத்தினர் தங்களது விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து பேசுகின்றனர் என்றும் இதே ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.

அத்துடன் பொதுவாக பெண்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அவர்கள் பல விஷயங்களையும் அலச ஆரம்பித்து விடுவார்கள். அந்த வரிசையில் பெண்களின் பேச்சில் முதல் இடம் வகிப்பது ஆண்கள் குறித்த பேச்சுதானாம் அவர்களில் 64 சதவீதத்தினர் தங்களது கணவர்மார்களை குறித்தே பேசுவதாக ஒப்பு கொண்டுள்ளனர்.

மேலும், பாதிபேர் மற்றவர்களின் உறவுமுறைகள் குறித்த விஷயங்களை ஆர்வமுடன் பேசுவதாக கூறியுள்ளனர். 12 சதவீதம் பேர் பொதுவான விஷயங்கள் குறித்து விவாதிப்பதாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்ரி பெண்கள் இரவு நேரத்தில் தோழிகளுடன் வெளியே செல்வதற்காக அதிகமான முயற்சிகளை எடுக்கின்றனர். 3ல் ஒருவர் தோழிகளுடன் வெளியே சென்று புது ஆடைகளை வாங்கி உடுத்துகின்றனர். 5ல் ஒருவர் தங்கள் கணவருடன் மாலை நேரத்தில் வெளியே செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக 50 நிமிடங்களை அவர்கள் அர்ப்பணிக்கின்றனர். 9 சதவீதத்தினர் மெல்லிய உள்ளாடைகளை அணிந்து கொள்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வு குறித்து அதன் செய்தி தொடர்பாளர் லெஸ்லி கிளிப்போர்டு என்பவர் கூறுகையில், ”பெண்கள் இரவு பொழுதை தங்களின் நெருங்கிய நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். மிக சிறப்புடன் பொழுதை கழிப்பதற்கு தேவையான அனைத்து விசயங்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.அதற்கான தலைமை ஏற்று நடத்தல், தயார்படுத்துதல், ஒருங்கமைத்தல் மற்றும் மகிழ்ச்சியுடன் இருத்தல் ஆகிய அனைத்தையும் அது கொண்டிருக்கிறது என கூறுவதுடன் ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் சுட்டி காட்டியுள்ளார்.

அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம்..!




உலகெங்கும் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருவதாகவும், சரியான பழக்கவழக்கங்கள் மூலம் மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 1.40 கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும்,

ஆனால் இந்த எண்ணிக்கை 2035-ம் ஆண்டுவாக்கில் 2.40 கோடியாக உயரும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது. மனிதகுலத்தைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

புகை பிடித்தல், கிருமித்தொற்று, மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாதிருத்தல், சூரிய ஒளி மற்றும் மருத்துவ ஸ்கேன்களால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பு, காற்று மாசு, மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள், தாய்மைப் பேறு தாமதமாவது,

தாய்ப்பால் தராமலிருப்பது ஆகியவை தடுக்கப்படக் கூடிய புற்றுநோய்க் காரணிகள் என்று 2014-ம் ஆண்டுக்கான புற்றுநோய் அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறும் அந்நிறுவனம், ஆனால் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில்,

பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கிறது. அரசாங்கங்களும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் புற்று நோய்க்கு பெருமளவில் தடை போட்டு விட முடியும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

பசி எடுக்கவில்லையா..? இதைப்படிங்க...............!




சாப்பாட்டுக்கு வழியின்றி வாடுவோர் ஒருபுறம் என்றால், விதவிதமான சாப்பாடு இருந்தாலும் பசியின்றித் தவிப்போர் இன்னொரு புறம். ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் பசியின்மை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பிச் சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இதோ...

* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே வகை உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாகச் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

* சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பிச் சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகள் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

* ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொதுவாகச் சாப்பிடப்படும் உணவு நமக்கு ஒத்துக்கொள்ளுமா என்று யோசித்தபிறகே சாப்பிட வேண்டும்.

* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களைச் சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையைப் பராமரிப்பதே உடல் நலத்துக்கும், உணவுப் பழக்கவழக்கத்துக்கும் நல்லது.

* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாகச் சாப்பிடுவதுதான் சரியான நேரத்துக்குப் பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாகச் சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்குத் தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளைச் சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசியெடுப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான செரிமானத்துக்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

* சேர்க்க வேண்டிய உணவுகளைச் சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளைத் தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளைச் சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளைக் குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

* எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்துக்கு உங்கள் ஆரோக்கியத்துக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமல்லவா?

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற வேண்டுமா..?




மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.

இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்.

தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.

நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.

அழைக்க வேண்டிய எண் - 155223

இலங்கை செல்ல என்னை வற்புறுத்தினார்கள் - சூப்பர் சிங்கர் திவாகர்...!




ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை.


இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.


நாம் தமிழர்கள்,  யாருக்கும் எதிரானவர்கள் அல்ல,  என்றும் தமிழர்களுக்கு அநீதி செய்ய நான் தயாரில்லை,  தமிழக இயக்குனர் கௌதமன் மற்றும் உணர்வாளர்களின் வேண்டுதலில் என் நிகழ்ச்சியை ரத்துச் செய்தேன் என  சூப்பர்  சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் தெரிவித்தார்.


நாம் தமிழர்களை என்றும் எதிர்த்ததில்லை நானும் தமிழருக்காகப் போராடுவேன் என இலங்கையில் ஏற்பாடாகியிருந்த சுப்பர் சிங்கர் இசைநிகழ்ச்சிக்காக கொழும்பு சென்று  தமிழ் உணர்வாளர்களின் தூண்டுதலினால் அந்நிகழ்ச்சி ரத்தாகி மீண்டும் சென்னை திரும்பிய சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் லங்காசிறி வானொலியின் செவ்வியில் தெரிவித்தார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் இலங்கையில் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக உலகத் தமிழர்கள் வை.கோ விற்கு நன்றி தெரிவித்துள்ளனர்

நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம்..!




ஜாதிக்காய்......

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயாகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும், ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து காலை மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சி குடிக்கலாம். இது நரம்புத்தளர்ச்சியை போக்கும்.

மாதுளம் பூ.......

* மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது.

* தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

* மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

* மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

முருங்கையின் மகத்துவம்.......

* பாலியல் குறைபாடு தொடர்பான மருத்துவத்தில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

* முருங்கைப்பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கை பூ சிறுநீர்ப் போக்கிகளை தூண்டு பவை, பித்த நீர் சுரப்பினை அதிகரிக்கும். முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நரம்புகள் பலப்படும். உடல் வலுப்பெறும் உடல் சூடு தணியும்.

இதை இயற்கையின் வயாகரா என்று கூறலாம். முருங்கை கீரை, முருங்கை பூ இரண்டையும் சம அளவில் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்கடலையை வறுத்துப் பொடி செய்து தூவி உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை தன்மை அதிரிக்கும். கீரையும், பூவையும் சமஅளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.