Wednesday, 2 April 2014

அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்! அட உண்ம தாங்க...!




நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை வெகு சீக்கிரத்திலேயே தொட்டுவிட்டார் சிவகார்த்திகேயன்!


 வசூலில் பல வருடங்களாக முறியடிக்கப்படாத ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த கரகாட்டக்காரன் படத்தின் வசூலை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முறியடித்ததும்...


அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் மான் கராத்தே படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பும்.. அடுத்தடுத்து அவர் ஒப்புக்கொண்டிருக்கும் படங்களும்... இப்படி பல விஷயங்கள் ஒன்றாக சேர்ந்ததினால்,


திரையுலகில் சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்த்து ஜிவ்வென உயர்ந்து கொண்டே இருக்கிறது. எந்தளவுக்கு?


சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் நாலரை கோடிக்கு விலைபோனது. தற்போது அவர் நடித்து வரும் மான் கராத்தே படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் ஒன்பது கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.


சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் டானா படம் இன்னும் தொடங்கப்படவே இல்லை. அதற்குள் அந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை பதிமூணு கோடிக்கு விற்று, காசை கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டார் டானா படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ்.


இந்த அசுரத்தனமான வளர்ச்சி சிவகார்த்திகேயனுக்கு தலையில் வெயிட்டை ஏற்றாமல் இருக்கணும்..!

புரதம் நிறைந்த... வேர்க்கடலை....! - அரியத் தகவல்கள்......




சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் (நிலக்கடலை) தான் இருக்கிறது.

முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.

இந்த வேர்க்கடலை நமது உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை வழங்குகின்றது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.


கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது.

 வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.


வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

மஞ்சளை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் - உங்களுக்காக...!




இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான் மஞ்சள். இத்தகைய மஞ்சளானது உணவிற்கு நிறத்தை மட்டும் கொடுப்பதில்லை. மாறாக பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது.

இத்தகைய மஞ்சளானது அக்காலத்தில் இருந்து இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் பலவற்றில், மஞ்சளில் உள்ள நோயெதிப்பு அழற்சி தன்மையினால், மஞ்சளானது காயங்களை சரிசெய்ய உதவுவதுடன், புற்றுநோய் முதல் அல்சைமர் வரை பல உடல்நல பிரச்சனைகளையும் குணப்படுத்த பெரிதும் உதவியாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

ஆகவே அத்தகைய பொருளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அனைவரும் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து இனிமேல் தவறாமல் மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

கல்லீரலை சுத்தப்படுத்தும்

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரலில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, கல்லீரலானது சுத்தமாக இருக்கும்.

அல்சைமர் நோயைத் தடுக்கும்

மஞ்சள் தூளில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், அதனை உணவில் சேர்த்து வந்தால், மூளையில் அமிலாய்டு என்னும் பிளேக் உருவாவது தடுக்கப்பட்டு, இதனால் மறதி நோயான அல்சைமர் நோய் ஏற்படுவது தடுக்கப்படும்

புற்றுநோயை தடுக்கும்

மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, பல வகையான புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

நாள்பட்ட மூட்டு வலி

மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், நாள்பட்ட மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் மூட்டு வலியைக் குணப்படுத்த மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.

எடை கட்டுப்பாடு

மஞ்சளானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மன இறுக்க நிவாரணி

சீன மருத்துவத்தில் மஞ்சளை மன இறுக்கத்தை சரிசெய்யும் சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பொருளை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அது மன இறுக்கத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

கீல்வாதம்

மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மையானது இருப்பதால், இது கீல்வாதம் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே கீல்வாதம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

எலும்புப்புரை

மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, பிற்காலத்தில் எலும்புப்புரை போன்ற முதுகு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடம்பு இளைக்குமா..? இதப்படிங்க...!




உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

அதனால்தான், அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

 இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.