Friday, 28 February 2014

ரெட்லைட் ஏரியாவுக்கு ஈ.சி.ஆர் ரோடு தான் பெஸ்ட் : புதுமுக டைரக்டர் சொன்ன ‘பகீர்’ ஐடியா!



‘மதுரை சம்பவம்’ படத்தை டைரக்ட் செய்த யுரேகா அதன் பிறகு எந்தப் படத்தையும் டைரக்ட் செய்யவில்லை. பக்கா கமர்ஷியல் படமான இந்தப்படத்துக்குப் பிறகு அவரைத்தேடி பல பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதன்பிறகு எந்தப்படத்தையும் டைரக்ட் செய்யாமல் அமைதியாக இருந்தார்.

இப்போது திடீரென்று பாலியல் தொழிலாளர்களின் பிரச்சனைகளை சொல்லும் ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ என்ற டைட்டிலில் ஒரு படத்தை தயாரித்து, டைரக்ட் செய்திருக்கிறார்.

சின்னத்திரை புகழ் சாண்ட்ரா எமி ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப்படம் பாலியல் தொழிலாளர்களின் எல்லாவிதமாக பிரச்சனைகளையும் அதற்கு இந்த அரசு என்ன தீர்வை தர வேண்டும் என்கிற செய்தியையும் படமாக்கி வந்திருக்கிறார்.

இதுபற்றி நேற்று பேசிய யுரேகா இது ஒரு ஆபாசமான படம் என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் படத்தில் துளி கூட அந்த மாதிரியான விஷயங்கள் இருக்காது என்றவர், இதற்காக பல மாதங்கள் கள ஆய்வுகளை செய்தாராம். அதுமட்டுமில்லாமல் பல பாலியல் தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடைய அனுபவங்களையும் கேட்டிருக்கிறார்.

அதில் அவர்கள் சொல்லும் முக்கியமான பிரச்சனை போலீஸ்காரர்கள் மற்றும் ரெளடிகளின் தொல்லை தான் அதிக அளவில் இருப்பதாக சொன்னார்கள். ஒரு பாலியல் தொழிலாளி ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதித்தால் அவள் வீட்டுக்கு வெறும் 100 ரூபாயைத்தான் கொண்டு போகிறாள். மீதி பணத்தை போலீஸ் அதிகாரிகளும், ரெளடிகளும் பிடுங்கிக் கொள்வதாக தெரிவித்தார்கள்.

அதனால் அவர்களுக்கு சென்னையில் முறையாக அனுமதி கொடுத்து விட்டால் இந்த மாதிரியான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தப்படம் வந்தபிறகு பாலியல் தொழிலாளி என்கிற பெயர் பாலியல் போராளி என்று மாறும். என்றவரிடம் சென்னையில் எந்த ஏரியாவில் ரெட்லைட் ஏரியாவை வைக்கலாம் என்று ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் ரெட்லைட் ஏரியாவை வைக்கலாம் என்றார்.

0 comments:

Post a Comment