Saturday 8 February 2014

பேய்களும், பிசாசுகளும் கூட டைம் ஸ்லிப் (Time slip) ல் சேருமோ..!

டைம் ஸ்லிப் (Time slip)


நீங்கள் உங்கள் வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். சட்டென்று தெரு திரும்பியதும் ஓட்டு வீடுகள் தென்படுகின்றன. உங்களுக்கு சற்று அசௌகரியமாக இருக்கிறது. புழுதி நிறைந்த தெருவைக் கடந்து போகும் போது வித்தியாசமாய் எதையும் உணராமல் நடக்கிறீர்கள். எதிரில் ஒருவர் வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக் கொண்டு மாட்டை ஓட்டிச் செல்கிறார். அந்த தெருவைக் கடந்த பின் தான் மனதை நெருடுகிறது அந்த காட்சி. திரும்பச் சென்று பார்த்தால் அப்படி ஒரு தெருவே உங்கள் கண்ணில் தென்படவில்லை.

இதை டைம் ஸ்லிப் என்கிறார்கள். அதாவது நீங்கள் காலம் கடந்து பின்னோக்கி சென்று வந்ததாகச் சொல்கிறார்கள்.

Charlotte Warburton என்பவர் தன் கணவரோடு கடைத் தொகுதிக்குச் சென்றார். காப்பி கொட்டை வாங்குவதற்காக கணவரை விட்டு விட்டு வழக்கமாய் வாங்கும் சூப்பர் மார்கெட்டுக்குச் சென்றவர் கண்ணில், கடையின் இடது பக்க சுவரில் ஒரு சின்ன Cafe ஒன்றின் கதவு தெரிந்தது. இதற்கு முன்பு அப்படி ஒரு Cafeயை அவர் அங்கு பார்த்ததில்லை. அதனுள் நுழைந்த போது அந்த Cafe முற்றிலும் பழைய பாணியில் மரச்சுவர்களையும் விளக்குகளையும் கொண்டிருந்ததை உணர்ந்தார். அந்த நேரம் அவருக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை.
நீண்ட ஆடை அணிந்த இரு பெண்கள் ஒரு மேசையின் எதிரெதிரே அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தார்கள். மற்ற மேசைகளில் பழங்கால உடையணிந்த ஆடவர்கள் அமர்ந்திருந்தார்கள். அது ஒரு சாதாரண காட்சியாகவே அவருக்குத் தோன்றியது. அவர்கள் அங்கே பேசிக் கொண்டிருந்தாலும் தனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை என்பதோ, அவர்கள் அருந்திக் கொண்டிருந்த காபியின் மணம் தனது நாசியை எட்டவில்லை என்பதோ கூட அந்த நேரம் அவரது மூளைக்கு எட்டவில்லை.

இது எதைப் பற்றிய யோசனையும் இன்றி அவர் அந்த Cafeயை விட்டு வெளியேறி தன் கணவருடன் வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த முறை அந்த பக்கமாய் வந்த போது, அந்த Cafeக்கு செல்ல நினைத்து தேடிய போது தான் அப்படியொன்று அங்கே இல்லாதது தெரிந்தது. விசாரித்ததில் அந்த சூப்பர் மார்கெட் வருவதற்கு முன் அப்படி ஒரு Cafe இருந்தது தெரிய வந்தது. அவர் காலத்தின் பின்னோக்கி பயணித்து, அந்த சூழ் நிலையுடன் ஒன்றியிருந்திருக்கிறார். இது நடந்தது ஜீன் 1968ல்.

பொதுவாக இது போன்ற டைம் ஸ்லிப்பிற்கு உட்படுபவர்களுக்கு

o தங்களைச் சுற்றி இருக்கும் இடம் தட்டையாவது போல அதாவது ஒரு சித்திரத்திற்குள் இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது.

o சுற்றியிருக்கும் சப்தங்கள் சட்டென்று குறைகிறது.

o சற்றே அசௌகரிய உணர்ச்சி ஏற்படுகிறது.

o அந்த சூழலில் உள்ள மற்றவர்களுடன் கலந்து பழக முடிகிறது

மேலே இருக்கும் நிகழ்ச்சியில் அனைத்தும் இல்லையென்றாலும் சப்தம் குறைந்திருக்கிறது, அந்த சூழ்நிலை மனிதர்களுளின் ஊடாக இயல்பாக சென்று வர முடிந்திருக்கிறது. சென்ற இடத்தில் சாப்பிட்டு தூங்கி எழுந்து வந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.

சற்றே வித்தியாசமான சில டைம் ஸ்லிப்புகளும் உண்டு.

Harry Ross என்ற 64 வயது ஆடவர் தன் குடும்ப புகைப்படத்தின் பின்னே தெளிவற்ற வேறொரு முகம் தெரிவதைக் கண்டார். அதை உற்று பார்த்த்தில் அது 42 வருடங்களுக்கு முன்பு இருந்த, இளமையான அவர் தான், என்பது தெரிந்தது. புகைப்படத்தை மனவியல் நிபுணரிடம் காட்டிய போது அவரும் அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதாவது பல வருடங்களுக்கு முன்பு இருந்த அவர் மறுபடி காட்சியளித்திருக்கிறார். ஏற்கனவே நடந்த ஒரு காட்சி அங்கே மறுபடி அரங்கேறி இருக்கிறது. இதை வைத்துப் பார்த்தால் பேய்களும், பிசாசுகளும் கூட டைம்ஸ்லிப்பில் சேருமோ!

0 comments:

Post a Comment