பெண் இயக்குனர் என்றால் கமர்ஷியல், த்ரில்லர் படங்கள் இயக்கக் கூடாதா என்று சீறினார் சிவானி. சோன்பப்டி என்ற படத்தை இயக்குகிறார் சிவானி. அவர் கூறியதாவது: சோன்பப்டி என்று தலைப்பு வைத்தது ஏன்? என்கிறார்கள். நகரம் முதல் கிராமம்வரை உள்ள அனைவருக்கும் தெரிந்த பெயர் என்பதால் இதை வைத்தேன்.
நகரத்து பின்னணியில் காமெடி, கிரைம் த்ரில்லர் கதையாக இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ ஹீரோ. இவர் வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்தவர். நிரஞ்சனா ஹீரோயின். மனோபாலா, பட்டிமன்றம் ராஜா, சோனியா, நீது, பிரியா, ஷாஹில் என 55 நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார், தனு பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். கோல்டன் மூவி மேக்கர் தயாரிப்பு. நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லையென்றாலும் சினிமாவில் நிறைய ஆர்வம் உண்டு. ஐ.டி.கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்த நான் அதை ராஜினாமா செய்துவிட்டு இயக்குனராகி இருக்கிறேன்.
பெண்களை மையப்படுத்திய கதையை ஏன் இயக்கவில்லை என்கிறார்கள். பெண் இயக்குனர் என்றால் இப்போதைய டிரெண்டுக்கு படம் எடுக்க முடியாது என்று சிலர் புகார் சொல்கிறார்கள். அது தவறான வாதம். ஏற்கனவே சில பெண் இயக்குனர்கள் மாறுபட்ட படங்களை இயக்கி பேசப்பட்டிருக்கிறார்கள். இது கமர்ஷியல் படம்தான். இவ்வாறு சிவானி கூறினார்.
0 comments:
Post a Comment