மெகா இயக்குநர், மெகா இயக்குநர், சிறந்த நடிகர் மூவரும் சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் அது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில், படம் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.
காரணம்... வேறு யாருமில்லை. படத்தின் நாயகனேதானாம். படத்தின் பட்ஜெட் நூறு கோடிகளை விழுங்கி, மேலும் கேட்டு நிற்கும் தருணம் இது. இருப்பதையெல்லாம் பீறாய்ந்து படத்துக்கு முதலீடு செய்து வருகிறார் தயாரிப்பாளர்.
சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டே பழக்கப்பட்ட அவர், இரு படங்களை சொல்லாமல் கொள்ளாமல் ஒத்திப் போட்டுவிட்டார்.
இதை உணர்ந்த இயக்குநர் தன் சம்பளம் பற்றிக் கூட கவலைப்படாமல், சொந்தக் காசையும் கடனாகக் கொடுத்துள்ளாராம்.
'நான்தான் படம் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன். எனவே அந்தப் பணம் உங்களுப் பயன்படட்டும்' என்று கூறிவிட்டாராம்.
இப்படியொரு சூழலில், எனக்கு சம்பளத்தை எடுத்து வையுங்க என முரட்டுப் பிடிவாதம் காட்டுகிறாராம் ஹீரோ..
முதல் முறையாக அவரைப் பற்றி இப்படியொரு செய்தி வருவதால், நம்புவதா வேண்டாமா என யோசிக்கிறார்கள் மீடியாக்காரர்கள்.
0 comments:
Post a Comment