Saturday, 8 February 2014

அதுக்கு ரெடியாகிறார் மனோசித்ரா..!



‘அவள் பெயர் தமிழரசி’ யில் அறிமுகமான காஞ்சிபுரத்து தமிழ்ப் பெண் மனோசித்ரா, நந்தகி என்ற பெயரையும், மனுமிகா என்ற பெயரையும் தூக்கி எறிந்து விட்டார். இனி ஒரிஜினல் பெயரில்தான் நடிப்பாராம். இப்போது அஜீத் தம்பியாக விதார்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில், விதார்த் ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே ‘மைனா’ படத்தில் இவர்கள் ஜோடி சேர்ந்திருக்க வேண்டியது. காலம் செய்த கோலம், அமலா பால் ஹீரோயினாகி விட்டார்.

இப்போது ஐதராபாத்தில் நடந்து வரும் அஜீத் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் மனோசித்ரா, ‘ஒருமுறை பார்த்தேன்’, ‘நேற்று இன்று’, ‘தாண்டவக்கோனே’ படங்களின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். தவிர, மலையாளத்திலும் நடிக்கிறார்.

தெலுங்கு, கன்னடத்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறதாம். பாலிவுட்டுக்கு செல்ல என்ன வழி என்றும் கேட்கிறார். இப்படி எல்லா மொழிகளிலும் திறமை காட்டத் துணிந்துவிட்ட அவர், ‘நான் அக்மார்க் தமிழ்ப் பொண்ணு என்ற ஒரே காரணத்தினால தான் பெரிய அளவுல முன்னுக்கு வர முடியலயோ என்னவோ.

வேற மாநிலத்துல இருந்து வரும் ஹீரோயின்களுக்கு தரும் முக்கியத்துவத்தை எனக்கும் கொடுத்தா, நானும் ஒரு திறமையான நடிகையா ஜெயிச்சுக் காட்டுவேன்’ என்கிறார். கதைக்கு தேவைப் படும் என்றால், ஓரளவு கவர்ச்சியாக நடிக்கவும் பச்சைக்கொடி காட்டும் மனோசித்ராவுக்கு நடிப்பு தவிர, ஃபேஷன் டிசைனிங்கில் ஆர்வம் அதிகம்.

வீட்டை ஒழுங்குபடுத்துவது, புடவைகளை புதிய டிசைன்களில் வடிவமைப்பது என்று, ஓய்வு நேரத்தையும் உருப்படியாகக் கழிக்கிறார்.

0 comments:

Post a Comment