தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தாளிக்க
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
செய்முறை :
• கோதுமை ரவையை உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து 10 நிமிடம் இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும்.
• தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து வேக வைத்துள்ள கோதுமை மாவில் சேர்த்து நன்றாக கிளறி உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
• இந்த உருண்டைகளை மீண்டும் இட்லி தட்டில் வைத்து 8 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை ரவை உருண்டை ரெடி.
0 comments:
Post a Comment