Saturday, 8 February 2014

பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி + பணி வாய்ப்பு..!



தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப வேலையற்ற இளைஞர்கள் மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 150

01. Probationary Officers பயிற்சிக்கு -50

02. Clerk பயிற்சிக்கு – 50

பயிற்சியின்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும்.

வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு பணியமர்த்தப்படும் பணியிடங்கள் விவரம்:

01. Probationary Officers – 25

02. Clerk – 25

சம்பளம்: Probationary Officers பணிக்கு ரூ. 14,500 – 25,700 + DA, HRA ,CCA

Clerk பணிக்கு ரூ. 7,200 – 19,300 + DA,HRA மற்றும் இதர சலுகைகள்.

வயதுவரம்பு: 01.02.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PC/Ex-Servicemen பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Online/Offline தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iob.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2014

மேலும் தேர்வுகள், பாடத்திட்டங்கள் தேர்வு தேதிகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iob.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

0 comments:

Post a Comment