டாப் இயக்குனர்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் அஜீத், விஜய் இடையே போட்டி எழுந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் தொடங்கியது. இப்படத்தையடுத்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார்.
சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை சொன்னார் ஷங்கர். அவர் கதையை கேட்டு இப்படத்துக்கு அஜீத் பொருத்தமாக இருப்பார் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அஜீத்திடம் ஷங்கர் பேசினார். அவரும் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் ஷங்கர், அஜீத் இருவரும் முதன்முறையாக இணைய உள்ளனர்.
கிரீடம் விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் நடித்த விஜய் அடுத்து நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து மீண்டும் துப்பாக்கி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கடந்த வாரம் இதன் ஷூட்டிங் கொல்கத்தாவில் தொடங்கியது.
சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். அனிரூத் இசை அமைக்கிறார். இப்படத்துக்காக விஜய் சொந்த குரலில் பாடிய ஒரு பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஷங்கர், முருகதாஸ் என டாப் இயக்குனர்கள் படத்தில் நடிக்க அஜீத், விஜய் தயாராகிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
0 comments:
Post a Comment