Saturday, 8 February 2014

எங்கும் எதிலும் கோச்சடையான் - போட்ட பணத்தை எடுப்பதில் தீவிரம்..!



ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான். இது அனிமேஷன் படமாக இருந்தாலும், தமிழக ரசிகர்களைப்பொறுத்தவரை புதுமையான விசயம் என்பதால், ரஜினியை எப்படித்தான் காட்டப்போகிறார்கள் என்பதையும்தானே பார்ப்போமே என்று ரசிக வட்டம் ஆவல் கொண்டு நிற்கிறது.

இந்தநிலையில், ஏப்ரல் 11ந்தேதி படம் வெளியாகிறது என்று அறிவித்தவர்கள், இதுவரை ரஜினி படங்களுக்கு இல்லாத வகையில் வித்தியாசமான விளம்பர யுக்திகளை கையாளப்போகிறார்களாம். அதாவது, 10 லட்சம் கோச்சடையான் கார்பன் மொபைல்களை தென்னிந்தியாவிலுள்ள 27 ஆயிரம் ஷோரூம்களில் இறக்குமதி செய்கிறார்களாம்.

மேலும், இந்த மொபைல்களை விளம்பரப்படுத்தும் பொருட்டு, தொலைக்காட்சிகள் 6000 வினாடிகள், எப்எம்மில் 60 ஆயிரம் வினாடிகள், மற்றும் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களை கொடுத்தும் பெரும் பரபரப்பு கூட்டுகிறார்களாம்.

இதனால் எங்கும் எதிலும் கோச்சடையான் என்கிற ரேஞ்சுக்கு வித்தியாசமான வினோதமான பப்ளிசிட்டிகளை ஆரம்பிக்கப்போகிறார்கள். பல வருடங்களையும், பல கோடிகளையும் தின்றுவிட்ட கோச்சடையானை எப்பாடுபட்டாவது ஓடவைக்க வேண்டும் எனபதில் படு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது படக்குழு!

0 comments:

Post a Comment