நடிகை ஹன்சிகா, ஒரு தெலுங்கு படத்தில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் கட்டுகிறார்.
தத்து குழந்தைகள்
ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அவருக்கு இப்போது 25 வயது ஆகிறது. அவரால் 25 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டு, அவருடைய பராமரிப்பில் உள்ளனர்.
இவர்களுக்காக, மும்பையில் ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்பது ஹன்சிகாவின் நீண்ட கால ஆசை. அந்த ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.
தெலுங்கு படம்
ஹன்சிகா இப்போது, ‘துர்கா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக நாகார்ஜுன் மகன் நாக சைதன்யா நடிக்கிறார்.
இந்த படத்தில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் ஹன்சிகா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் கட்டுவதற்கு செலவிடுகிறார். இதற்காக அவர் முதலில் ஒரு நிலத்தை வாங்குகிறார். பின்னர், அந்த நிலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் கட்டுவது என்று ஹன்சிகா திட்டமிட்டு இருக்கிறார்.
எடை குறைப்பு
தமிழ்–தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் அவர் இப்போது இளம் கதாநாயகர்களின் ஜோடியாகவே நடித்து வருகிறார். அவர்களுக்கு பொருந்துவது போல் தனது உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக, அவர் சாப்பாட்டின் அளவை குறைத்து விட்டார்.
0 comments:
Post a Comment