Saturday, 8 February 2014

ஜெட் வேகத்தில் நயன்தாராவின் மார்க்கெட்..!



படத்திற்கு படம் நயன்தாராவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் பறக்கிறது.
நயன்தாரா தமிழில் நடித்த படம் ‘ராஜா ராணி’ படம் சூப்பர் ஹிட்டானது, இதனை தொடர்ந்து அவர் அஜித்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் நல்ல வெற்றியை பெற்றது.

இந்தப் படத்தை தொடந்து உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படம், காதலர் தினமான பிப்ரவரி 14ம் திகதி வெளியாகிறது.

இந்நிலையில், பாண்டிராஜ் சிம்புவை வைத்து இயக்கும் படத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய பாண்டிராஜ், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசி நயனை தனது படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக்கி இருக்கிறார்.

அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்திற்கும் நயன்தாராவிடம் பேசியிருக்கிறார்கள். இந்த படத்திற்காக அவருக்கு 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் ஹீரோக்களை எல்லாம் மிஞ்சும் வகையில் படத்துக்கு படம் சம்பளத்தை கூட்டிக்கொண்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா.

0 comments:

Post a Comment