பாரத ரிசர்வ் வங்கி, நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க அனுமதி அளித்துள்ளது.
தனியார் நிறுவனங்கள்:-
டாட்டா கம்யூனிகேஷன்ஸ் பேமண்ட் சொல்யூஷன்ஸ், முத்தூட் பைனான்ஸ், பிரிசம் பேமண்ட்ஸ் மற்றும் வக்ராங்கி ஆகிய நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெற்றுள்ளன. இதில் வக்ராங்கி நிறுவனத்தை தவிர இதர மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே ஒயிட் லேபிள் ஏ.டி.எம்.களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிறுவனம் விரைவில் களமிறங்க உள்ளது.
பெரும்பாலான தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்) வங்கிகளுக்கு சொந்தமானவை. அதேசமயம், வங்கி சாரா நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் அவற்றால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஏ.டி.எம். இயந்திரங்கள் ஒயிட் லேபிள் ஏ.டி.எம். என்று அழைக்கப்படுகிறது.
முன்பு வங்கிகள் மட்டுமே ஏ.டி.எம்.களை நிறுவ பாரத ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. வங்கிகளால் நாட்டில் உள்ள எந்த இடத்திலும் ஏ.டி.எம். மையங்களை அமைக்க முடியும். இருப்பினும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏ.டி.எம். மையங்கள் மிகவும் குறைவாக உள்ளன.
இதற்கு தீர்வு காணும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் ஏ.டி.எம். மையங்களை அமைக்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில், 2012 ஜூன் மாதம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஒயிட் லேபிள் ஏ.டி.எம். மையங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டது.
கிராமப்புறங்களில்...
ஒயிட் லேபிள் ஏ.டி.எம். மையங்கள் தொடங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையங்களை சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்டாயம் அமைக்க வேண்டும்.
0 comments:
Post a Comment