Tuesday, 18 February 2014

ஆகாஷ்-4 டேப்லட் கம்ப்யூட்டர் ஜஸ்ட் ரூ.3,999 - கபில்சிபல் தகவல்..!



ஆகாஷ் டேப்லட் இந்திய மொபைல் சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை குறைவாக இருப்பதால் இந்த டேப்லெட் வங்குவதற்காக பலர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஆகாஷ், ஆகாஷ்-2 டேப்லட்டுகளுக்கு அடுத்து மேம்படுத்தப்பட்ட ஆகாஷ்-4 டேப்லட் வெளிவர உள்ளது.இந்த அரசின் மலிவு விலை டேப்லட் கம்ப்யூட்டரான “ஆகாஷ் 4” இன்னும் ஒன்றரை மாதங்களில் சந்தைக்கு வரும் என்றும் இதற்கான தயாரிப்பு ஒப்பந்தங்களுக்கு வினியோகத்துறை இயக்குநர் அனுமதி அளித்துள்ளதாகவும் மத்திய தொலைதொடர்பு மந்திரி கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் 4 டேப்லட் 7 அங்குல ஸ்கிராட்ச் ரெசிஸ்டெண்ட் தொடுதிரை, பிரண்ட் கேமரா, 4 ஜி.பி அகநிலை சேமிப்பு அளவுடன் வெளிவருகிறது. வைஃபை இணைப்புடன் 2ஜி, 3ஜி மட்டுமின்றி 4ஜி இண்டர்நெட் வசதி உட்பட நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும். மேலும் 32 ஜி.பி வரையிலான மெமரி கார்டையும் உள்ளீடு செய்து கொள்ளலாம்.

மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக வழங்கப்படும் அரசின் மலிவு விலை கம்ப்யூட்டரான ஆகாஷ் 4 டேப்லட்டின் விலை ரூ.3,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கபில்சிபல் தெரிவித்தார்.கபில்சிபல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் “ஆகாஷ் திட்டம்” மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment