வீரம் படத்திற்குப் பிறகு தல அஜித் நடிக்கவுள்ள தனது 55 படத்தினை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார்.
இயக்குனர் மணி ரத்னம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.
கௌதம் மேனன் இயக்கவுள்ள இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிப்பதற்காக அஜித் தனது அறுவை சிகிச்சையைத் தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் அஜித் நடிக்கவுள்ள பாத்திரத்திற்காக தனது உடல் எடையைக் குறைக்க
வேண்டியிருப்பதால் அஜித் தற்பொழுது கடுமையான உடற்பயிற்சி செய்துவருவதாகவும், இதனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் அறிவித்த நாளில்
துவங்காது எனவும் கூறப்படுகிறது.
மங்காத்தா திரைப்படத்திலிருந்து தொடர்ந்து 4 படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றிவரும் அஜித் இப்படத்தில் புதிய ஹேர்
ஸ்டைலில் தோன்றுவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
0 comments:
Post a Comment