தமிழ் சினிமாவின் நகைச்சுவைத் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதகஜராஜா திரைப்படம் வருகிற மார்ச் 7ல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே படம்பிடிப்பு துவங்கப்பட்ட இப்படம் 2013 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் பொங்கல் தினத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருந்த சமர் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டதால் இப்படம் 2013 ஏப்ரலில் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக
அறிவிக்கப்பட்டது. மீண்டும் சிற்சில பிரச்னைகளால் இப்படத்தின் வெளியீடு தாமதமானது.
தற்பொழுது இப்படத்தின் வெளியீடுகள் பெரும்பாலும் உறுதியாகியிருப்பதாகவும், மார்ச் 7ல் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரகாஷ்ராஜ், சந்தானம், நிதின் சத்யா, மணிவண்ணன், சடகோபன் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர்யா மற்றும் சதா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில்
நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படமென்பதால் நிச்சயம் மிகச் சிறந்த நகைச்சுவைக் கொண்டாட்டமாக இருக்கும் என்று ரசிகர்கள்
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
0 comments:
Post a Comment