Tuesday, 18 February 2014

நட்பின் பெயரால் நடிகைக்கு கல்தா...!



வந்தனா குப்தாவின் வாய்ப்பை பூனம் பஜ்வா பறித்தார்.தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வந்தனா குப்தா.

 இவர் அடுத்ததாக பிரேம் ஜோடியாக மஸ்த் மொஹப்பத் என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் திடீரென அவர் நீக்கப்பட்டு பூனம் பஜ்வா நடிக்க தேர்வாகியுள்ளார்.

பிரேமுடன் பூனம் பஜ்வாவுக்கு ஏற்பட்ட திடீர் நட்பே இந்த மாற்றத்துக்கு காரணம் என சான்டல்வுட்டில் பேசப்படுகிறது.சமீபத்தில் ஒரு பார்ட்டியில் பூனம்- பிரேம் சந்தித்தார்களாம்.

 அப்போதுதான் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. தொடர்ந்து அவ்வப்போது செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது பிரேமின் அடுத்த படத்தில் நடிக்க பூனம் வ¤ருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக மஸ்த் மொஹப்பத் படத்திலிருந்து வந்தனா நீக்கப்பட்டிருக்கிறார்.

பூனம் இதற்கு முன் 2 கன்னட படங்களில் நடித்துள்ளார்.

 தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழியிலும் அவருக்கு வாய்ப்பில்லை.

சமயம் பார்த்து பிரேமின் நட்பு மூலம் அவர் இந்த வாய்ப்பை பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து பிரேம் கூறுகையில், வந்தனாதான் முதலில் ஒப்பந்தமானார்.

அவரது கால்ஷீட்டில் சில பிரச்னைகள் இருந்தது.

அதனால் அவரால் தேதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

 அதனால்தான் ஹீரோயினை மாற்றினோம். மற்றபடி எந்த விஷயமும் கிடையாது என்றார்.

0 comments:

Post a Comment